எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 04, 2017

ஹூஸ்டனில் தினசரி வாழ்க்கை!

இங்கே வந்ததிலிருந்து ஒவ்வொரு நாள் போவதும் பெரிய விஷயமாக இருக்கிறது. காலை எழுந்து காஃபி மேக்கரில் காஃபி போட்டுச் சாப்பிட்டு வீடு சுத்தம் செய்தல், கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்தல், (இந்தியாவில் இரவு ஏழரை மணி எனில் இங்கே காலை எட்டு மணி! ஆகவே நேரடி அலைவரிசையிலேயே தொலைக்காட்சி பார்க்கிறோம்) அது முடிஞ்சு காய்கள் நறுக்கிட்டுக் குளிச்சுட்டு வந்தால் பத்து மணி ஆகி இருக்கும். உடனே சமைச்சால் சாப்பிட முடியாது என்பதால் பதினோரு மணி வரை குழந்தை முழிச்சிட்டு இருந்தால் விளையாட்டு! பின்னர் சமையல், சாப்பாடு, சமையல் சீக்கிரம் முடிஞ்சுட்டால் கொஞ்ச நேரம் நடை! அதுவும் இங்கே உள்ள காலநிலையை ஒட்டித் தான் போக முடியும்.

இன்னிக்கு வெயில் அடிச்சா நாளைக்குக் குளிர் அடுத்த நாள் மின்னல், மழை, மோகினினு இருக்கும்! நல்ல வெயில் அடிக்குதேனு நேத்திக்கு மத்தியானமா பதினோரு மணி அளவில் சமைச்சு வைச்சுட்டு வெளியே போனால் ஒரே குளிர்காத்து! சுழற்றிச் சுழற்றி அடிக்குது! நல்லவேளையா ஷால் கொண்டு போயிருந்தேன். இருந்தாலும் வெளியே குளிர் இன்னமும் இருக்கத் தான் செய்கிறது! சாயந்திரம் வழக்கம் போல் சமையல், சாப்பாடு, படுக்கை! ஶ்ரீரங்கத்திலாவது அக்கம்பக்கம் மனிதர்களைப் பார்க்க முடியும். இங்கே யாரையும் பார்க்க முடியலை! எல்லோரும் பிசியோ பிசி! நேரம் குறிச்சுட்டு என்னிக்கானும் ஒரு நாள் வந்துட்டுப் போவாங்க! தோட்டத்திலும் இப்போ எதுவும் போட முடியாது. தொட்டியில் வைச்சிருக்கிற கருகப்பிலையைக் காப்பாத்தறதே பெரிய விஷயமா இருக்கு! :)

கடந்த பத்து நாட்களாக மறுபடியும் (கிட்டத்தட்ட லக்ஷத்து ஒன்றாவது முறை) "சிவகாமியின் சபதம்" நாவலும், "பார்த்திபன் கனவு" நாவலும் படிச்சேன். எத்தனை முறை படிச்சாலும் அலுக்காமல் மறுபடி மறுபடி புதுசாப் படிக்கிறாப்போல் படிக்கிறேன் என்பதைப் பார்த்து ரங்க்ஸுக்கு ஆச்சரியம். எப்போவும் புத்தக வடிவில் தான் படிச்சிருக்கேன்.  இந்தியாவில் என்னுடைய கலெக்‌ஷனில் கல்கியிலிருந்து கிழிச்சு எடுத்தது பேப்பர் பேப்பராக (பைன்டிங் இல்லாமல்) இருக்கும். ஒவ்வொரு பேப்பராக எடுத்துப் படிப்பேன். அதில் பத்மவாசன் ஓவியமோனு நினைக்கிறேன். ஆனால் இங்கே படிச்சது ஐபாடில்!

ஐபாடில் தமிழ்ப் புத்தகங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. ஆனால் தினசரிகள் எல்லாமும் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் கிடைக்கின்றன. விகடன் புத்தகங்கள் எல்லாமும் கிடைக்கின்றன.  சக்தி விகடன், அவள் விகடன் போன்றவை கிடைக்கின்றன. மங்கையர் மலர் கிடைச்சது. ஆனால் பின்னால் அது தேடினாலும் கிடைக்கவில்லை. கல்கி குழுமத்தின் வெளியீடான நாவல்களும் இன்னும் பல ஆன்மிகப் புத்தகங்களும் கிடைக்கின்றன. அநேகமாக எல்லாமும் படிச்சாச்சு!   சீதா ரவியின் "ஸ்வர ஜதி" (முழுக்க முழுக்க இசை, சங்கீதம் சம்பந்தப்பட்ட கதைகள்), கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அருண் சரண்யாவின் "தீராத விளையாட்டு விட்டலன்" ஆகியவையும் சித்தர்கள் வரலாறும். இன்னும் சிலவும் இருக்கின்றன. அநேகமாக எல்லாத்தையும் முடிச்சுட்டேன். ஒரு சில மாத, வார இதழ்கள் கிடைக்கின்றன. என்றாலும் எல்லாமும் கிடைப்பதில்லை. வண்ணநிலவனின் "உள்ளும் புறமும்"  நாவலும் அதில் இருக்கிறது.  ஏற்கெனவே விகடனில் வந்தப்போப் படிச்சது தான். இப்போ  மறுபடி புத்தக வடிவில் படிக்கிறேன். இன்னும் முடிக்க நேரம் வரலை. இத்தனைக்கும் சின்ன நாவல்!

கணவனைச் சந்தேகப்படும் மனைவி! அதுவும் வேலைக்குச் செல்லும் மனைவி! இம்மாதிரிக் கதைகள் நிறையப் படிச்சாலும் இதன் அணுகுமுறை யதார்த்தமாக இருக்கிறது. முடிவு வழக்கம்போல் சுபம் என்றாலும் கதையின் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லை. தனுஷ் நடிச்ச "கொடி" படத்தைத் திரும்பத் திரும்ப இருமுறை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருமுறை மருமகள் போட்டார். அப்போ வேறே வேலை இல்லாததால் உட்கார்ந்திருந்தேன். மறுமுறை பையர் போட்டார். அப்போவும் வேலை எல்லாம் முடிஞ்சு சாவகாசமாக இருந்த நேரம்.  இம்முறை அதிகம் படங்கள் பார்க்கலை. என்னவோ மனம் அதில் பதியவில்லை. கோயில்களுக்கும் போக முடியாத சூழ்நிலை! ஆகவே மீனாக்ஷி கோயில் நூலகம் செல்லமுடியாத குறையை மிகவும் உணர்கிறேன்.  நூலகம் போயிருந்தால் புத்தகங்களாவது வாங்கி வந்திருக்கலாம். இந்தியாவிலிருந்து வரும்போது இம்முறை புத்தகங்கள் ஏதும் கொண்டு வரவில்லை. நண்பர் ஒருவர் கிளம்பும்போது பரிசாக அளித்த ஒரே ஒரு புத்தகமும் மற்றபடி ஸ்லோக புத்தகங்களும் தான் கொண்டு வந்தேன்.  அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். எனினும் விமரிசனம் செய்ய யோசனை! :)

"கொடி" வழக்கமான அரசியல் படம்! இரட்டை வேடத்தில் தனுஷ்! "கொடி" என்று பெயர் வாங்கின அரசியல்வாதி தனுஷ் இறந்து போக அவர் இடத்தில் தம்பியான மெத்தப்படித்த தனுஷ் வந்து எப்படித் தன் அண்ணன் இறந்தான் என்பதைக் கண்டு பிடிக்கிறார். கடைசியில் வில்லியான திரிஷாவைத் தப்பிக்க விட்டாலும் அண்ணனின் கையாள் அவரைக் கொல்வது சற்றும் எதிர்பார்க்காதது அல்ல! அந்தக் கதாபாத்திரம் அறிமுகம் ஆனதிலிருந்தே அதற்கு ஏதோ முக்கியத்துவம் என்று புரிந்து விட்டது. ஹிஹிஹி, வழக்கம் போல் நடிகர் யார்னு தான் தெரியலை. இந்தப் படத்திலே தனுஷ், திரிஷா, விஜயகுமார்(? இருக்கார்னு நினைக்கிறேன்.) தனுஷின் அம்மாவாக சமீப காலங்களில் அம்மா வேடத்தில் தொடர்ந்து நடிக்கும் சரண்யா!  இயல்பான நடிப்பு எப்போவுமே!

கொடி படம் க்கான பட முடிவு


கதைக்களம் வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் பாணி! தனுஷின் தலைவராக நடிப்பவர் முகம் எங்கேயோ பார்த்தாப்போல் இருக்கேனு நினைச்சாக் கடைசியிலே அது விஜயின் அப்பா டைரக்டர் சந்திரசேகராம்!படித்து வேலை பார்க்கும் தனுஷின் ஜோடியாக நடிக்கும் நடிகை யாரோ புதுமுகம் போல!  அதிகம் அவருக்கு வேலையில்லை! திரிஷாவும் குறிப்பிட்ட சில காட்சிகளிலேயே வருகிறார். பொதுவாக இது தனுஷின் படம்! மற்றபடி குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. அடுத்து இன்னொரு படம் "அதே கண்கள்" என்னும் பெயரில்! படம் பாதி தான் பார்த்தேன். தன் காதலி தீபாவைக் காப்பாற்றச் செல்லும் கதாநாயகன் கொலைப்பழிக்கு ஆளாவது வரை , நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்கும் வரை பார்த்தேன். அப்புறமாப் பார்க்கலை. ஏவிஎம்மின் அதே கண்களை இரண்டு மூன்று முறை பார்த்தாச்சு! ஆகவே அதே பெயருள்ள இந்தப் படத்தை ஏன் பார்க்கணும்னு நினைச்சேனோ! :)

பானுமதி வெங்கடேஸ்வரன் துருவங்கள் பதினாறு படம் குறித்து எழுதி இருந்தார். அதையும் பார்க்கணும் முடிஞ்சால்! ஹிஹிஹி என்னமோ எல்லாத்தையும் முழுசாப் பார்த்துட்டாப்பல தான்னு யாருப்பா அங்கே கூவறது? இப்படிப் பார்க்கிறதுக்கே நம்ம விமரிசனத்தைத் தாங்க முடியலை! இன்னும் ஒழுங்காப் பார்த்துட்டால்! நல்லவேளையாப் பையர் ஜிவாஜி, எம்ஜார், உலக்கை நாயகர் படமெல்லாம் போடலையோ பிழைச்சேன்! :)

24 comments:

  1. பரவாயில்லை. நல்ல ரெஸ்ட் கிடைக்குது போலிருக்கு. கல்கி பதிப்பக புத்தகங்கள் எந்த சைட்ல கிடைக்குது? சூரியன் பதிப்பகம் நிறைய நல்ல புத்தகங்களை வெளியிடுது. போனமுறை மைலாப்பூரில் பதிப்பகத்துக்குச் செல்ல முடியலை.

    கொடி படம் விமரிசனத்தைத் தொடர்ந்து மற்ற பழைய படங்களின் விமரிசனங்களையும் எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழன், இந்த மூணு மாசத்திலே நான் வலுக்கட்டாயமாப் பார்க்க நேர்ந்த ஒரே படம் கொடி! நேத்துக்கூட ஒரு புது ஹிந்திப் படம் போட்டிருந்தாங்க! போய்ப் படுத்துட்டேன். :) ஆகவே விமரிசனங்களை எதிர்பார்க்காதீங்க! நான் இன்னமும் "பாலும் பழமும்" படமே பார்த்ததில்லை. ரஜினியோட "படையப்பா"வோ உலக்கை நாயகரின் "இந்தியன்" படமோ இன்னும் பார்க்கலை. எல்லோரும் என்னை என்னமோ ஜூவிலிருந்து வந்தாப்போல் பார்க்கிறாங்க! :)

      Delete
  2. புதுப்பட விமர்சனக்களை இனி உங்கள் தளத்தில் அறியலாம் என்று நினைக்கிறேன்...!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, பார்க்க நேர்ந்தால் எழுதிடுவோமுல்ல! :)

      Delete
  3. கவலை ஏதுமில்லாமல் வாழ்க்கை போகிறது என்று நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உண்மை கானல் நீரா, பொய் கானல் நீரானு தெரியலை! :) நீங்க எப்படி வேணா நினைச்சுக்கலாம். தடையே இல்லை! :)

      Delete
  4. தெய்வத்தின் குரல் படியுங்கள். சீக்கிரம் தீராது. சில சமயம் நல்ல தூக்கமும் வரும். நெட்டில் இருந்து இலவச டௌன்லோட் செய்து கொள்ளலாம்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. என் கிட்டேயே இருக்கு! அதோடு காமகோடி தளத்திற்கு அடிக்கடி போவதால் இணையத்தில் கிடைப்பது என்ற தகவலும் பல வருடங்கள் முன்னேயே தெரியும்! நன்றி. :)

      Delete
  5. கொடி பாத்ததுக்கு பேசாம அதே கண்கள் பாத்திருக்கலாம். நல்ல படம். . :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க டாக்டர் சார்! அதே கண்கள் பார்த்திருக்கலாம் தான்! ஆனால் மனம் லயிக்கணும்! நேரம் வரட்டும் அப்போ நானாவே உட்கார்ந்து பார்ப்பேன்! :)

      Delete
  6. என்னவானாலும் நம்ம ஊரு நம்ம ஊருதான் இல்லையா! நெட்டில் புத்தகங்கள் படிக்கலாம். ப்ராஜெக்ட் மதுரை உட்பட நிறைய இடங்கள் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இங்கேயும் நெட்டில் படிக்கத் தடை இல்லை. ப்ராஜெக்ட் மதுரை மட்டுமின்றி மற்றும் சில தளங்களிலும் புத்தகங்கள் கிடைக்கின்றனவே. ஒரத்தநாடு கார்த்திக்கின் தளம் அடிக்கடி போவேன். :) பல புத்தகங்கள் தரவிறக்கி ஶ்ரீரங்கத்தில் பழைய மடிக்கணினியில் வைச்சிருக்கேன். :))

      Delete
  7. கற்றார்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு! blog எழுதத் தெரிந்தவர்களுக்கு ஹூஸ்டன் ஆனால் என்ன, செவ்வாய் கிரகம் ஆனால் என்ன, பிழைத்துக்கொள்வார்கள். வாழ்த்துக்கள்!
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, புகழ்ச்சியா, வஞ்சப் புகழ்ச்சியா! எப்படியா இருந்தாலும் நம்மவரை ஓகே தான்! :)

      Delete
  8. நல்ல விஷயம். நிறைய நேரம் கிடைக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. அப்படீங்கறீங்க! சரி! :)

      Delete
  9. மாறவே இல்லை

    ReplyDelete
    Replies
    1. எது? ஹூஸ்டனா? ஆமாம், 2011 ஆம் வருஷம் வந்த அதே வீடு தான், சொந்த வீடு என்பதால் மாறவே இல்லை! :) நீண்ட வருடங்கள் கழித்து வருகை தந்தமைக்கு நன்றி.

      Delete
  10. Magzter Gold எனும் தளம் உள்ளது . subscription site. USD or INR இரண்டிலும் கட்டலாம். பல நூற்கள் உள்ளன. முயன்று பாருங்கள் .
    https://www.magzter.com/magztergold
    - பொன்மலை பாபு

    ReplyDelete
    Replies
    1. Magzter site இல் இருந்து தான் படித்து வருகிறேன். வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

      Delete
  11. இது ஒரு நல்ல சேஞ்ச் என்றே படுகிறது சகோ/கீதாக்கா..

    புத்தகம் வாசிக்கவும் ரிலாஸ்டாக இருக்கவும், குழந்தையுடன் விளையாடுவது என்றும், புதிய சூழலில் ஒரு நல்ல சேஞ்ச் இடையிடையே தேவைப்படும்தான் இல்லையா...

    எங்கு சென்றாலும் ப்ளாக் எழுத முடியுமே..அதுவும் அங்கு நெட் பிரச்சனை அவ்வளவாக இராது என்று நினைக்கிறோம். அதில் கொஞ்சம் பொழுது போகுமே!! நீங்கள் அங்கு பார்ப்பது அனுபவிப்பது எல்லமே எழுத்து வடிவில் தரலாமே!!

    ReplyDelete
    Replies
    1. ஒரு விதத்தில் மாறுதல் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் ருசிகரமான மாறுதல்னு சொல்ல முடியலை! குழந்தையுடன் விளையாடுவது ஒன்றே மனதுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருகிறது. நெட் பிரச்னை அவ்வப்போது வரும்! இங்கேயும் வோல்டேஜ் பிரச்னை இருக்கு என்பதும் கொஞ்சம் மகிழ்ச்சி! :))))

      Delete
  12. சலிப்பைச் மிகச் சரியாகச்
    சொல்லிப்போனாலும் எழுத்தில் சலிப்பில்லை
    படிக்க மிகச் சுவாரஸ்யமாகவே இருக்கிறது
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவையும் வந்து படிச்சதுக்கு நன்றி.

      Delete