எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 19, 2017

jolly LLB --2

ஜாலி எல்.எல்.பி என்னும் படம் இன்னிக்குப் பார்க்க நேர்ந்தது. சாப்பாடெல்லாம் ஆகி மதியம் ஒன்றரை மணிக்குப் போட்டதால் எனக்கும் வசதியாக இருந்தது. ஏற்கெனவே ஜாலி எல்.எல்.பி. பகுதி 1 வந்திருக்காம். அதெல்லாம் தெரியாது. ஹிந்திப் படங்களில் பகுதி 1, பகுதி 2 என்று போடும் சீசன் போல! கஹானி 1, கஹானி 2 என இரண்டு வந்திருக்கு. இரண்டிலும் வித்யா பாலன் தான் நடிச்சிருக்காங்க. இரண்டுமே சஸ்பென்ஸ் த்ரில்லர். அதே போல் இதுவும் இருக்குமோனு நினைச்சேன். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம் யதார்த்தமாகவும் எடுத்திருக்காங்க! ஆனாலும் விறுவிருப்புக்குக் குறைச்சல் இல்லை.

jolly llb 2 க்கான பட முடிவு

ஜாலி எல்.எல்.பி. ஒன்றில் நடிச்சவர் இதிலே நடிக்கலை. ஏன்னு தெரியலை!இதிலே அக்ஷய் குமார் தான் ஜாலி எல்.எல்.பியாக நடிச்சிருக்கார். அக்ஷய்குமார் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. அவ்வளவாப் பிடிக்காது. ஆனால் இதில் அவர் நடிப்பு மட்டுமல்லாமல் திரைக்கதையும் நன்றாகவே இருந்தது. சமீபத்தில் தான் வெளி வந்திருக்கிறது இந்தப் படம். சுபாஷ் கபூர் என்பவரால் எடுக்கப்பட்ட படம். அக்ஷய்குமாருக்கு ஜோடியாக ஹ்யூமா குரேஷி என்னும் நடிகை அவர் மனைவியாக வருகிறார். வருகிறார்னா வருகிறார் அவ்வளவு தான்! :) அதிகம் வேலை இல்லை அவருக்கு!

ஜாலி என்றழைக்கப்படும் ஜகதீஸ்வர் மிஸ்ரா என்னும் வக்கீல் லக்னோவில் வக்கீல் தொழில் செய்து வருகிறார். கான்பூரைச் சேர்ந்தவர், வக்கீல் தொழிலுக்கு நல்ல பிரபலமான வக்கீலான ரிஸ்வி சாஹேப் என்பவரிடம் பயிற்சி வக்கீலாகப் பணிபுரிகிறார். ஜாலிக்குத் தானும் சொந்தமாகத் தானும் ஓர் அலுவலகம் திறக்கவேண்டும் அதுவும் அந்த ஹைகோர்ட் வளாகத்திலேயே என்பது வாழ்நாள் கனவு! அதற்காகவும் வேலை செய்து வருகிறார். அவர் வக்கீலான ரிஸ்வி சாஹேப் மிகப் பெரிய வக்கீல் என்பதால் அதிகம் பணம் கொடுக்கும் பணக்காரர்களின் வழக்குகளை மட்டுமே பார்ப்பார். மற்றச் சின்னச் சின்ன வழக்குகளைத் தன்னிடம் பயிற்சி செய்பவரிடம் கொடுத்து விடுகிறார்.

ரிஸ்வி சாஹேபின் அலுவலக வாசலில் தினமும்  கர்ப்பிணியான ஒரு இளம்பெண் வந்து காத்திருக்கிறாள். அவள் ரிஸ்வி சாஹேப் தன்னுடைய வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்று விரும்புகிறாள். அதற்காக ஜாலியை சிநேகிதம் பண்ணிக் கொண்டு அவர் சிபாரிசின் பேரில் ரிஸ்வி சாஹேபைச் சந்திக்க வேண்டும் என முயல்கிறாள். ஜாலிக்கு ஹைகோர்ட் வளாகத்தில் ஓர் அறையை அவரின் நண்பரான பீர்பல் என்னும் வக்கீல் ஏற்பாடு செய்து கொடுக்கிறார். ஆனால் அதற்கு அடுத்த நாளைக்குள்ளாக இரண்டு லக்ஷம் கொடுக்க வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என யோசிக்கும் ஜாலியிடம் அந்தப் பெண் வந்து  உன் பெரிய வக்கீல் என் கேஸை எடுத்துக் கொள்ளச் சம்மதித்துவிட்டாரா என்று கேட்க, இதான் சமயம் என நினைக்கும் ஜாலி அவர் சம்மதித்து விட்டார் எனக் கூறி விடுகிறான். எவ்வளவு அவருக்குச் சம்பளம் என அந்தப் பெண் கேட்க 2 லக்ஷம் என்று ஜாலி சொல்லவும் அந்தப் பெண் மறுநாளைக்குள்ளேயே 2 லக்ஷம் தயார் செய்து கொடுத்து விடுகிறாள்.

அந்தப் பணத்தை வைத்துத் தன் தந்தை, மனைவி, குழந்தையுடன் ஜாலி தன்னுடைய அலுவலகத் திறப்பு விழாவை ஆடல், பாடல், களியாட்டங்களுடன் கொண்டாடுகிறான். அப்போது அங்கே வந்த அந்தப் பெண் ஜாலி தன்னை ஏமாற்றியதை எல்லோர் முன்னிலையிலும் வெளியிடுகிறாள். பின்னர் தன் வீட்டுக்குச் சென்று வயதான தையற்காரர் ஆன தன் தந்தை முன்னிலையிலேயே மாடியிலிருந்து குதித்து வயிற்றில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறாள். பழி ஜாலி மீது விழுகிறது. அவன் வக்கீல் அவனை இந்தக் குற்றத்துக்காக அறைந்து விட்டு 30 வருஷமாக அவரிடம் வேலை செய்யும் ஜாலியின் தந்தையை வேலையை விட்டே நீக்கி விடுகிறார்.

ஜாலிக்குத் தன் தப்புப் புரியத் தன் நண்பன் பீர்பலுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் வழக்கு விபரங்களைச் சேகரிக்கிறான். இக்பால் காசிம் என்னும் அந்த இளைஞனுக்கு இந்தத் தையற்காரரின் பெண்ணான ஹினா சித்திக்குடன் திருமணம் நிச்சயமாகி இருந்த சமயத்தில் போலீஸால் தவறாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறான். திருமணத்திற்காக பரோலில் வெளி வரும் காசிம் திருமணம் முடிந்து முதலிரவும் முடிந்து மறுநாள் சிறைக்குச் செல்லும் சமயம் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகச் செய்தி வருகிறது. ஏற்கெனவே தன் கணவன் நிரபராதி,அப்பாவி என்று புரிந்து கொண்டிருந்த ஹினா தன் கணவனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்துக்கு நடையாய் நடக்கிறாள்.

மேலும் மேலும் தோண்டத் தோண்ட ஜாலிக்கு இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதும், தீவிரவாதி ஒருவனைப் பணம் வாங்கிக் கொண்டு போலீஸ் தப்ப விட்டதையும் அதை எதிர்த்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர் பணி ஓய்வு பெற 20 நாட்களே இருந்த நிலையில் அவரையும் கொன்றதையும் கண்டு பிடிக்கிறான். பின்னர் என்ன செய்கிறான் எப்படி இந்த வழக்கு முடிகிறது என்பதை வெள்ளித் திரையிலோ, சின்னத் திரையிலோ, யூட்யூபிலோ காண்க! கடைசி வரை படம் விறுவிறுப்பு.

நீதிபதியாக நடித்திருக்கும் சௌரப் சுக்லா மிக அருமையாக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர் சூரியவீர் சிங்காக நடிக்கும் குமுத் மிஸ்ராவின் வக்கீலான அன்னு கபூர் நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதியை அவதூறாகப் பேசிவிட்டு அங்கேயே தர்ணாவில் ஈடுபட நீதிபதியும் தர்ணாவில் ஈடுபடுகிறார். அவர் கூடவே ஹினாவின் தந்தை வயதான தையற்காரர், ஜாலியின் வயதான தந்தை ஆகியோரும் தர்ணாவில் உட்காருகின்றனர். இரவு பனிரண்டு மணி வரை நீதிபதியை எதிர்த்து வக்கீல் பிரமோத் மாதுராக நடிக்கும் அன்னு கபூர் உட்கார்ந்திருக்க, பனிரண்டு மணிக்குப் பின்னர் நீதிமன்றம் மீண்டும் செயல்பட ஆரம்பிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே தப்பு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரியவீர்சிங்கின் பக்கம் வாதாடிய பிரமோத் மாதுர் உண்மை வெளிப்படாமல் தடுக்கச் செய்யும் வேலைகள், வாதாடுதல் அனைத்தும் நன்றாகப் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன.

jolly llb 2 க்கான பட முடிவு

நீதிமன்றம் செயற்கையாக இல்லாமல் உண்மையான நீதிமன்றம் போலவே அமைத்திருக்கின்றனர். கடைசிக்காட்சியில் உண்மைக்குற்றவாளியைக் கொண்டு வந்து நிறுத்தினாலும் அதில் செயற்கைத் தனமே கலக்காமல் இயல்பாகச் செய்திருக்கின்றனர். நீதிபதி சுந்தர்லால் திரிபாதியாக வரும் சௌரப் சுக்லாவின் கோமாளித் தனங்கள் தான்கொஞ்சம் சகிக்க முடியாமல் பானகத் துரும்பாக இருந்தது. அதே போல் தனி சேம்பர் திறந்ததை ஜாலி கொண்டாடிய காட்சியும் கொஞ்சம் அதிகப்படி தான்! என்றாலும் கதையில் கொஞ்சமானும் கவர்ச்சி இருக்கணும்னு செய்திருக்காங்க. அதோடு புஷ்பாவாக (ஜாலியின் மனைவி) நடிக்கும் ஹ்யூமா குரேஷிக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கணுமே!

நீதிபதி பிடிவாதமாக சாட்சியிடம் வாக்குமூலம் வாங்கிப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று திடமான முடிவு எடுத்தது ஒரு நீதிபதி உண்மை வெளிவர எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டியது. குற்றவாளியின் வக்கீலான பிரமோத் மாதுர் எப்படியெல்லாம் தகிடுதத்தங்கள் செய்து தன் கட்சி ஜெயிக்கப் பாடு படுகிறார் என்பதைக் காட்டியதோடு அல்லாமல் கடைசியில் உண்மை வெளிப்படும் நேரம் அதை வெளிவராமல் தடுக்க மாதுர் நீதிபதியிடம் வாதாடும் கட்டத்தில் வயதான அவர் தந்தையால் தடுக்கப்படும் காட்சியும் அருமை!

jolly llb 2 க்கான பட முடிவு

இந்தப் படத்தை எதிர்த்து மும்பை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. அதோடு பாடா ஷூ கம்பெனியும் அவங்க ஷூவை இந்தப் படத்தில் காட்டுவதாகச் சொல்லி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். பாகிஸ்தானில் இந்தப் படத்தைக் காட்டக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 2017  ஃபெப்ரவரி 10 ஆம் தேதி வெளிவந்த இந்தப்படத்தில் எவ்விதமான நீக்கங்களும் செய்யப்படவில்லை என்று விக்கி கூறுகிறது. படம் நல்ல வசூல் அடைந்ததாகவும், இதன் மூன்றாம் பாகம் விரைவில் வெளிவரும் என்றும் தெரிய வருகிறது. 

16 comments:

  1. பாக்கலாம் அப்ப

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே. அவ்வப்போது வருகை புரிவதற்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு முறை பார்க்கலாம். :)

      Delete
  2. ஹிந்திப் படம், தமிழ் டிராக்கில் வரும்போது பார்த்துக்கொண்டால் ஆச்சு. படம் பார்க்கும்போதும், சாப்பாடு ஞாபகம் வந்துவிட்டதா? (பானகத் துரும்பாக) - பானகத்துல ஏலக்காய் தோல்தான் துரும்புபோல் அகப்படும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. இதன் முதல் பகுதி ஏற்கெனவே "மனிதன்" என்னும் பெயரில் தமிழில் வந்தாச்சாமே! விக்கி சொல்கிறது.

      அப்புறம் இந்தப் பானகத் துரும்பு! அது துரும்பே தான்! வெல்லத்தில் கிடைக்கும். சுத்தம் செய்து
      வடிகட்டாமல் பானகம் கரைத்தால் வாயில் அகப்படும்!20,25 ஏலக்காய்களைத் தோல் நீக்கி (அந்தத் தோலைத் தேயிலைத்தூளுடன் சேர்த்துடுவேன்) சர்க்கரை கொஞ்சம் சேர்த்து மிக்சி ஜாரில் பொடி பண்ணி ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுவேன். அவ்வப்போது தேவைப்படும்போது பயனாகும். அந்த நேரம் பொடி பண்ணிக் கொண்டிருக்க வேண்டாம் பாருங்க. ஸ்ராத்தம் தவிர்த்து மற்ற நாட்களில் பாயசம் போன்ற இனிப்புவகைகள் எது செய்தாலும் பயன்படுத்திக்கலாம்.

      Delete
    2. ஏலக்காய்த் தோல் பானகத்தில் அகப்படாது!

      Delete
  3. முழுபடத்தையும் ஓட்டி விட்டீர்கள் செலவு மிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அப்படீங்கறீங்க? முடிவு என்னனு தெரிஞ்சுடுச்சா? ஙே!

      Delete
  4. திரைப் படங்களைப் பார்த்து நாட்களாகி விட்டது

    ReplyDelete
    Replies
    1. நானும் எப்போவானும் தான் ஐயா பார்ப்பேன். அதிலும் படம் ஆரம்பிக்கையில் பார்க்க நேர்ந்து கதை மனதில் பதிந்தால் தொடர்ந்து பார்ப்பேன். பார்க்கும் நேரத்தையும் பொறுத்தது! இரவில் என்றால் அதிக நேரம் உட்கார்ந்து பார்ப்பதில்லை.

      Delete
  5. இந்தப் படத்திற்கு நல்ல ரெவ்யூ மட்டுமே படித்தேன். பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு வெங்கட்! :)

      Delete
  6. பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அதே போல உங்களுக்கு நான் இரண்டு ஹிந்திப்படங்களை பலமாக சிபாரிசு செய்கிறேன். ஒன்று பிங்க். அடுத்தது டங்கல். ஒருவேளை நீங்கள் பிங்க் ஏற்கெனவே பார்த்து விட்டிருக்கலாம். பார்க்கவில்லை என்றால் டவுன்லோட் செய்து பார்க்கலாம். அரசு வழக்குரைஞர், நீதிபதி உட்படஎல்லோருமே நன்றாக நடித்திருக்கும்படம். அமிதாப், டாப்ஸி எல்லாம் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பிங்க் படமும் டங்கல் படமும் பையர் பார்த்துட்டார்னு நினைக்கிறேன். நானாகத் தான் என்னிக்காவது போட்டுப் பார்க்கணும்! பார்ப்போம்! :) இன்னிக்கு ஒரு படம் பார்த்துட்டேன்! :) அதுவும் தமிழ்ப்படம்!

      Delete
  7. நல்ல விமர்சனம்....ஸ்ரீராம் சொல்லியிருக்கும் இரு படங்களும் அருமைஅயன படங்கள்...பிங்க் அண்ட் டங்கல்...செம படம்...முடிந்தால் பாருங்கள். தற்போதைய புது படம் மாநகரம் த்ரில்லர் மிக மிக அருமையாக இருக்குனு விமர்சனம் எல்லாம் சொல்லுது...நான் இனிதான் பார்க்கணும். அதே போல நிசப்தம் னு படம். கொரியன் படத் தழுவல்னு சொல்றாங்க அப்படினாலும் நல்லாருக்காம்...ஆனால் மாநகரம் ரொமப்வே நல்லாருக்குனு...முடிஞ்சா பாருங்க...அங்கல்லாம் வந்துருக்கும் டிவிடி....

    கீதா

    ReplyDelete