நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு! களிமண்ணை அலகால் கொத்திக் கொத்தி
கொத்துவேலை தெரியும். அதான் நல்லாக் கொத்திக் கொத்திப் பூசறேன்.
நீங்களே பாருங்க குஞ்சுங்களுக்கு இந்த இடம் போதுமா போதாதா? என்ன, இன்னும் பெரிசா இருக்கணுமா? ம்ம்ம்ம்ம்ம் சரி.
தனியாத் தான் செய்தாகணும். நம்ம வீட்டு வேலை; நான் தானே செய்யணும். அவர் வரட்டும், பார்த்து அசந்துடுவார்.
அடப் பாவமே, நீ ஏன்மா தனியாக் கஷ்டப்படறே, இந்த ஓரமெல்லாம் கொத்த உன் மெல்லிய அலகால் முடியுமா? நான் சரி பண்ணிடறேன் பார்த்துட்டே இரு.
பாவம், தனியா முடியலை. வரதுக்குள்ளே நாமே சரி செய்துடுவோம். பாலிஷிங் நடக்கிறது. அடடா வந்துட்டாளா? என்ன எப்படி இருக்கு?
அலங்கார வளைவுகள் பாக்கி இருக்கே.
இந்த அலங்காரம் எல்லாம் அவராலே முடியாது. நான் தான் பண்ணணும்.
அப்பாடா, இது தான் சொர்க்கம்.
வெளியே போனாரே காணோமே இன்னமும், என்ன ஆச்சு? கவலையா இருக்கு.
இவ்வளவு நேரமாச்சு, இன்னும் வரலியே? எங்கே போயிருப்பார்?
அப்பாடா, வந்துட்டார். போய்ப் படுத்துத் தூங்கலாம். குஞ்சுகளெல்லாம் நல்லபடியாப்பொரிச்சாகணும். அது வேறே கவலை. காலையிலே பார்க்கலாம். இப்போத் தூங்கப்போறேன். வீடு எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?
தெரியாதவங்க சொல்லுங்கப்பா.
இப்படிக் கொண்டு வந்து வட்ட வடிவமாகச் சுவர் எழுப்பி
தனியாத் தான் செய்தாகணும். நம்ம வீட்டு வேலை; நான் தானே செய்யணும். அவர் வரட்டும், பார்த்து அசந்துடுவார்.
அடப் பாவமே, நீ ஏன்மா தனியாக் கஷ்டப்படறே, இந்த ஓரமெல்லாம் கொத்த உன் மெல்லிய அலகால் முடியுமா? நான் சரி பண்ணிடறேன் பார்த்துட்டே இரு.
பாவம், தனியா முடியலை. வரதுக்குள்ளே நாமே சரி செய்துடுவோம். பாலிஷிங் நடக்கிறது. அடடா வந்துட்டாளா? என்ன எப்படி இருக்கு?
அலங்கார வளைவுகள் பாக்கி இருக்கே.
இந்த அலங்காரம் எல்லாம் அவராலே முடியாது. நான் தான் பண்ணணும்.
அப்பாடா, இது தான் சொர்க்கம்.
வெளியே போனாரே காணோமே இன்னமும், என்ன ஆச்சு? கவலையா இருக்கு.
அப்பாடா, வந்துட்டார். போய்ப் படுத்துத் தூங்கலாம். குஞ்சுகளெல்லாம் நல்லபடியாப்பொரிச்சாகணும். அது வேறே கவலை. காலையிலே பார்க்கலாம். இப்போத் தூங்கப்போறேன். வீடு எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?
தெரியாதவங்க சொல்லுங்கப்பா.
இப்பொழுது படம் தெரிகிறது. அற்புதமாக இருக்கு வீடு.அழகான படங்கள்.
ReplyDeleteஎனக்கு கண்ணு தெரியுது.. எனக்கு கண் பார்வை கிடைச்சு.. டாக்டர்.. டாக்டர்..
ReplyDeleteஇப்போது எந்தப்பிரச்சனையுமில்லை...
ReplyDeleteஅப்பாதுரை அவர்களின் கருத்து : ஹா...ஹா...
தெரியுது தெரியுது அருமையாக உள்ளது கட்டிடக்
ReplyDeleteகலைஞிகள் கலைஞர்கள் குருவிப் பட்டாளம் வாழ்க வாழ்க
என வாழ்த்தினேன் !:)
ராம்வி, நேத்திக்குப் போட்டதிலேயும் தெரியுது. சிலருக்கு என்னமோ வரலை. :(
ReplyDeleteஹாஹா அப்பாதுரை, நேத்திக்கும் நல்லாவே தெரிஞ்சது. இன்னிக்கும். :)))) நாங்க யாரு? தொழில் நுட்ப நிபுணியாக்கும்! :))))
ReplyDeleteடிடி, என்ன காரணம்னே புரியலை; நேத்திக்குச் சிலருக்குத் தெரிஞ்சது; பலருக்குத் தெரியலை. :)))
ReplyDeleteநன்றி அம்பாளடியாள், எத்தனை பொறுமைனு பாருங்க! :))))
ReplyDeleteஅழகா இருக்கு வீடு...:) புதுமனை புகுவிழாவெல்லாம் இல்லையா...:))
ReplyDeleteமுன்பு ஓரிரு வருடங்களுக்கு முன்பு வேறு ஒரு பதிவர் பகிர்ந்திருந்தார்.
GOOD...! எல்லோரும் காணமுடிந்தமைக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇப்ப தெரியுது.
ReplyDeleteநேத்து போட்டது வெறும் url.
இன்னிக்கு போட்டது படம்!
வாங்க கோவை2தில்லி, அதுக்கென்ன, புதுமனை புகு விழா நாம கொண்டாடிடலாம். :))))நானும் முன்னர் பார்த்திருக்கேன். ஆனால் பகிரவில்லை. :))))
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், நேத்திக்கும் பார்க்க முடிஞ்சது! :))))
ReplyDelete//Vasudevan Tirumurti said...
ReplyDeleteஇப்ப தெரியுது.
நேத்து போட்டது வெறும் url.
இன்னிக்கு போட்டது படம்!//
வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நேத்திக்குப் போட்டதிலே இப்போக் கூட நல்லாத் தெரியுதாக்கும், நான் அதே பக்கத்திலே தான் பார்க்கிறேன். புது tab எதுவும் திறந்துக்கலை. உங்களுக்குத் தொழில் நுட்பமே தெரியலை போங்க! :)))))))))))))))
இன்று படங்களுட்ன் அருமையான விளக்கம் . வெளியே போனவரை தேடும் குருவி அருமை.
ReplyDeletePostla varalai. have to open in new window. checked in firefox and chrome
ReplyDeleteநான் நேற்றைக்கு இந்தப் பக்கம் வாவில்லை. இன்றுதான் வந்தேன். சூப்பர் பதிவு. சூப்பர் படங்கள்.
ReplyDeleteவாங்க கோமதி அரசு, ரசித்தமைக்கு நன்றி. அது என்ன கவலையா வெளியே எட்டிப் பார்த்துட்டு இருக்கு பாருங்க. சிட்டுக்குருவிங்களும் இப்படித்தான் ஒண்ணு வரலைனா இன்னொண்ணு கூட்டுக்குள்ளே போகாது. வெளியேவே உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கும்.
ReplyDeleteராஜஸ்தானிலே இருந்தப்போ ஒரு சமயம் இப்படித்தான் குருவிங்க எல்லாம் உள்ளே வந்தாச்சானு கவனிக்காமக் கதவைச் சாத்திட்டோம். குளிர்நாட்களின் ஆரம்பம் வேறே. ஒரு குருவி ஜன்னல் கம்பியிலேயே சோகமா உட்கார்ந்திருந்தது. கூட்டிலே குஞ்சுகளோட சத்தம் வேறே தாங்கலை. என்னனே புரியலை. வெளியே வெகு தூரம் போன குருவி திரும்பி வரச்சே நேரமாயிருக்கு.
அது வெளியே இருந்து குரல் கொடுக்க, சோர்ந்து உட்கார்ந்திருந்த இந்தக் குருவியார் சுறுசுறுப்பா நிமிர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே கதவின் பக்கம் போல் அலகால் கொத்த ஆரம்பித்தது. முதல்லே புரியலை. அப்புறமா திடீர்னு ஒரு பொறி பளிச்சிடக் கதவைத் திறந்தோம். வெளியே இருந்த குருவியார் உள்ளே வந்தார். அப்புறமா ஒரே ஆனந்தக் கூச்சல் தான் கொஞ்ச நேரத்துக்கு. எங்களுக்கும். :)))))
எல்கே இன்னிக்குமா தெரியலை???? என்ன போங்க! :(((( இன்னிக்கு நல்லாவே வந்திருக்கே.
ReplyDeleteவாங்க கெளதமன் சார், நேத்தைய பதிவிலும் போய்ப் பார்த்து தெரியுதா இல்லையானு பார்த்துச் சொல்லுங்க. :)))))
ReplyDeleteஇன்னிக்கு அருமையா தெரியுது!
ReplyDeleteஇவைகளையா நாம் ஐந்தறிவு என்கிறோம்?
எங்கள் வீட்டு குளியலறை வழியே ஒரு புறாவின் கூடு தெரியும். தினமும் மணிக்கணக்கில் அதை பார்ப்பதுதான் என் வேலை. முட்டை பொரிந்து குஞ்சு வெளிவருவதைப் பார்த்து உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது எனக்கு!
ஆனால் புறாக்களின் கூடு திறந்தே தான் இருக்கும்.
இந்தக் குருவிகள் எத்தனை அழகாக கூடு கட்டியிருக்கின்றன! ஆச்சரியம் தாங்கவில்லை.
ரொம்ப ரொம்ப ரசித்தேன்!
நேற்றையப் பதிவில், ஆங்கில வரிகளும், பொட்டி(நெற்றி)களுக்குள்ளே பொட்டு இருக்கின்றது. நீலப் பொட்டைத் தட்டினால், படம் வருகின்றது. ஆனால், இந்தப் பதிவில்தான் படமும், விளக்கங்களும் வரிசையாக வருகின்றது.
ReplyDeleteநேற்று படங்கள் தெரிந்தது பார்த்தேன் என்று சொன்னேன். எங்கு தெரிந்தது என்று சொல்லவில்லையே..... எனக்கும் தனி விண்டோவில்தான் திறந்தது. அதனால் என்ன, படங்கள் பார்த்து மகிழ முடிந்தது. இன்றும் பார்க்க முடிகிறது. இன்று இங்கேயே பார்க்க முடிகிறது. நாளை வேறு பதிவு போடுவீர்கள்தானே...! :))
ReplyDeleteThank you for posting...
ReplyDeleteஅழகான அலகாலே அற்புதமான வீடு ...
ReplyDeleteThank you posting this, nice pictures..
ReplyDeleteWow...
ReplyDeleteநேற்று தனி விண்டோவில் திறந்து பார்த்தேன்.
ReplyDeleteஇன்று இங்கேயே, அதுவும் உங்கள் அருமையான கருத்துகளோடு! :)
மீண்டும் ரசிக்கத் தந்தமைக்கு நன்றி!
அட இதையேன் பார்க்காமல் விட்டேன். காமிரா வுமன் ப்ரொஃபெஷனலா ஆயாச்சு. என்ன அழகு. நேர்த்தி. இப்படிக் கூடப் பகவான் படைச்சிருக்கரே.
ReplyDeleteமிக மிக நன்றி கீதா. சிட்டுக் குருவி இப்படிக் கூடுகட்டும்னே தெரியாது.
மெனக்கெட்டு பொறுமையாப் படம் எடுத்திருக்கீங்களே. மனம் நிறைந்த பாராட்டுகள்.
வாங்க ரஞ்சனி, புறாக்களைப் பத்தியும் நானே படம் எடுத்துப் போட்டிருக்கேனே. இருங்க சுட்டி கொடுக்கிறேன். :)))))
ReplyDeleteபுறாக்கள்
அது என்னமோ தெரியலை, சுட்டி பின்னூட்டத்திலே வேலை செய்யுது. பதிவிலே கொடுத்தால் போகவே இல்லை. :( யாருங்க அது தொ.நு.நி???? கொஞ்சம் ஆலோசனை கொடுங்க. :)))))
ReplyDeleteகெளதமன் சார், உங்களுக்குத் தொழில் நுட்பமே தெரியலை போங்க! எனக்கு இன்னிக்குக் கூட அந்தப் பதிவு, இந்தப் பதிவு ரெண்டிலேயும் தெரியுதே! :))))
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், இப்படியா போட்டு உடைக்கிறது? :))))
ReplyDeleteரத்தீஷ் குமார், முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteதினேஷ்குமார், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete@ cstechie , நன்றி.
ReplyDeleteஅகிலா, முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவெங்கட்,நன்றிப்பா.
ReplyDeleteவாங்க வல்லி, தாமதமா வந்ததாலே முதல் பதிவைப் பார்க்கலை. இது எனக்கு வந்த மடலில் இருந்து எடுத்துப் பகிர்ந்தேன். நானெல்லாம் இவ்வளவு நல்லா ஃபோட்டோ எடுக்க ஆரம்பித்தால் சூரியன் மேற்கே உதிக்கும். :))))))
ReplyDeleteஆகா! அதிசயம் என்ன பொறுமை.
ReplyDeleteரொம்ப அழகிய வீடு.
மறுபடியும் ரசித்தேன்...
ReplyDeleteநன்றி --->http://ranjaninarayanan.wordpress.com/2013/03/20/துளசி-டீச்சரின்-சிட்டுக்/
எவ்வளவு அழகான வீடு. பார்த்து பார்த்து கட்டியிருக்கு. ஸொந்த வீடு அவசியம் என்று வேறு உணர்த்துகிரது. அழகான வர்ணனை. இப்படியுமா என்று ஆச்சரியப்பட வைத்து விட்டது. அழகான அருமையான பகிர்வு. நன்றி
ReplyDeleteவாங்க மாதேவி, ரசனைக்கு நன்றி.
ReplyDeleteடிடி, மறுபடி வந்து ரசித்தமைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க காமாட்சி அம்மா, முதல் வரவுக்கு முதலில் நன்றி, நமஸ்காரங்கள். ரசனைக்கு நன்றி. நீங்கள் வந்து பார்த்து ரசித்துப் பின்னூட்டம் கொடுத்தது எனக்குப் பெருமையாய் இருக்கு. முடிஞ்சப்போல்லாம் வாங்க.
ReplyDeleteஇவ்வளவு பொறுமையாக படம் பிடித்தமைக்கு நன்றி.
ReplyDelete