கோமதி அரசு எனக்கு மேற்கண்ட விருதைக் கொடுத்திருக்கிறார்கள். அவங்க என் பதிவுக்கு வந்து படித்துக் கருத்துச் சொல்லும் அளவுக்கு நான் அவங்க பதிவுக்குப் போனதில்லை! எப்போவோ போவேன். படிப்பேன். கருத்தெல்லாம் சொன்னதில்லை. என்றாலும் அவங்க என்னையும் உயர்வாக மதிச்சு அவங்களுக்குக் கிடைத்த விருதை என்னோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உயர்வான எண்ணம். உயர்ந்த உள்ளம் படைத்த மனுஷியிடமிருந்து கிடைத்த அன்பான விருது.
மிக்க நன்றி கோமதி அரசு. அவ்வப்போது உங்கள் பயணக்கட்டுரைகளைப் படித்து வருகிறேன். முக்கியமாய்த் திருக் கயிலை யாத்திரைப் பயணக்கட்டுரை. சென்னை அன்னபூர்ணா ட்ராவல்ஸ் மூலம் நாங்களும் 2006-ஆம் வருஷம் சென்று வந்தோம். என்னோட ஆன்மீகப் பயணம் பதிவுகளில் ஓம் நமச்சிவாய என்னும் தொடராக எழுதியுள்ளேன். நேரம் இருந்தால் பாருங்கள். என்னைப் பதிவுலகுக்கு அடையாளம் காட்டிய பதிவு இந்தக் கயிலை யாத்திரைக் கட்டுரையும், சிதம்பர ரகசியம் தொடரும் தான். ஆகவே நீங்கள் கொடுத்திருக்கும் வெர்சடைல் ப்ளாகர் விருது எனக்குத் தகுதியில்லை எனினும் உங்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு வாங்கிக் கொள்கிறேன். மீண்டும் நன்றி.
எனக்குப் பிடித்த ஐந்து:
முதல்லே பிள்ளையாரோட சண்டை போடுவதும், சமாதானம் ஆவதும்.
சாப்பாடு ரசம் சாதம்-சுட்ட அப்பளம் வித் நெய்!(அப்பளத்தில் நெய்)
புத்தகங்கள் படிப்பது
விதவிதமாய்ச் சமைப்பது; பசியோடு இருப்பவர்க்கு அவங்க போதும் போதும்னு சொல்றவரைக்கும் உணவு பரிமாறுவது
மெலிதான கர்நாடக இசை கேட்டுக்கொண்டே வேலை செய்வது
நான் கொடுக்க விரும்பும் ஐவர். அநேகமாய் எல்லாருமே மிகத் திறமையோடு அலுவலகவேலைகளையும் கவனித்துக்கொண்டு பதிவுகளும் போட்டு வருகின்றனர். ஆதலால் நானெல்லாம் ஒண்ணும் இல்லைனு சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. அப்படி உள்ள சிலரில் முதலில்
எங்கள் ப்ளாகின் அனைத்து ஆ"சிரி"யர்களுக்கும்
உண்மையாகவே versatile blogger என்னும் பட்டத்துக்குத் தகுதியுடையவர்கள் இவங்க எல்லாருமே. பலவிதமான பதிவுகள், பல்வேறு விதமான பார்வைகள். கோணங்கள். ஏற்கெனவே அநன்யா மூலம் 2 வருஷம் முன்னர் அறிமுகம் ஆனாலும் எப்போவோ நேரம் இருக்கையில் படிப்பேன். ஒருமுறை கல்லுரல், இயந்திரம் எல்லாம் அவங்களும் போட்டிருந்தாங்க. நானும் அப்போ அது குறித்து எழுதி இருந்தேன். ஆனாலும் பின்னூட்டம் போட்டது இல்லை. சமீப காலமாகத் தான் தவறாமல் போகிறேன். ஐந்து ஆ"சிரி"யர்களும் தகுந்தவர்களே.
எங்கள் ப்ளாக், கண்ணு படப் போகுது! சுத்திப் போட்டுக்குங்க. :))))))
ஐந்து பேர்னு சொன்னதாலே மேலே கொடுக்கலாமானு தெரியலை. அப்படி இருந்தால் நான் கொடுக்க விரும்பும் மற்ற நபர்கள்.
எல்கே, http://lksthoughts.blogspot.com
பாகீரதி வலைப்பக்கத்தின் சொந்தக்காரர். இவரும் கடந்த இரு வருடங்களில் தான் அறிமுகம். கதை எழுதுவதில் மன்னர்! அதிலும் த்ரில்லர் எழுதறதில்.
அப்பாவி தங்கமணி http://appavithangamani.blogspot.com/
எல்கே மூலம் அறிமுகம் எனக்கு. இவங்க வலைப்பக்கம் போனால் வயித்துவலியோடுதான் திரும்பணும். இயல்பான நகைச்சுவை. கொஞ்சம் இல்லை நிறையவே நீளமான பெரிய பதிவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாக இருந்தாலும் சிரிக்க விஷயம் சகஜமாக வரும்.
லக்ஷ்மி http://echumi.blogspot.com
இவங்க எல்கே பதிவுகள் மூலம் அறிமுகம். இவங்க அனுபவக் கட்டுரைகள் எல்லாம் இயல்பா நேரே பேசறாப்போல் இருக்கும். கிட்ட உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்குமோ அந்த உணர்வு வரும். இப்போ நல்லதொரு தோழி.
ப்ரியா http://parvathapriya.wordpress.com/2012/01/01/2011-in-review
திருப்பூர் தொழிலதிபர். இவங்களும் அப்பாவி மூலம் பழக்கம். ஆன்மீகத்தில் ஈடுபாடு. இவங்களோட பல கேள்விகள் மூலம் எனக்குள்ளேயே தெளிவு கிடைக்கிறது. ஆனால் தியானத்தில் இவங்க எங்கேயோ போயிட்டாங்க. அந்த நிலையை என்னால் எல்லாம் எப்போது எட்ட முடியும்? காதிலே, மூக்கிலே புகையோடு பார்ப்பேன் இவங்களை!
அப்பாதுரை http://moonramsuzhi.blogspot.com/
இவருக்கு விருதெல்லாம் ஜுஜுபி. எல்லா விஷயத்தையும் சர்வ சகஜமாக அலசுகிறார். ஒருவிதத்தில் இவரிடம் பொறாமையும் உண்டு எனக்கு. கதை எழுதினாலும் நெஞ்சைத் தொடும். வாதத் திறமை இயல்பாகவே இருக்கிறது. ஆனால் அது வாதம் எனத் தெரிய வராது. மனதைப் புண்ணாக்காத வண்ணம் தன் கருத்துக்களை, நகைச்சுவை கலந்த மென்மையாகவும் அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும் சொல்கிறார். பார்க்கப் போனால் இவர் வட துருவம் என்றால் நான் தென் துருவம். ஆனாலும் இவர் கருத்துக்கள் எதுவும் என்னைப் புண்படுத்தியதில்லை.ஆன்மீகம், பக்தி, கடவுள் குறித்த பல உள்ளார்ந்த ஆழமான கருத்துக்கள் உள்ள மனிதர். எனினும் இவரின் பல கேள்விகளுக்கு விடை இவரிடமே கிடைக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
அன்பின் விருதுக்கு (கூச்சத்துடன்) நன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி! (ஐந்து நன்றி இருக்கு இல்லே...ஒன்று..இரண்டு.......ஐந்து...ஓகே!)
ReplyDeleteஎல்கே, புவனா, லக்ஷ்மி அம்மா எல்லோருமே நாங்களும் படிச்சு ரசிக்கறவங்கதான்.
அப்பாதுரை சான்சே இல்லை.
//இவரின் பல கேள்விகளுக்கு விடை இவரிடமே கிடைக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை//
நான் அபபடி நினைக்கவில்லை. இவரிடம் விடை ஏற்கெனவே இருக்கிறது. நம்மை கேள்வி மூலம் தூண்டி விடுவது இவர் பாணி. வெண்பா எழுதுவார். விஞ்ஞானக் கதை எழுதுவார். சரித்திரக் கதை தொடங்கி இருக்கிறார். நசிகேத வெண்பாவில் சிந்தையைக் கொள்ளை கொண்டார். அபிராமி அந்தாதி விளக்கம் எழுதுவார். ஆன்மீகத்தில் இவர் எண்ணங்கள் என்று நாம் நினைப்பது அவர் அபபடி நம்மை நினைக்க வைத்திருப்பது என்று தோன்றும். முஹம்மத் ரஃபியையும் ரசிப்பார் டி எம் எஸ்ஸையும் ரசிப்பார்.
/இவரின் பல கேள்விகளுக்கு விடை இவரிடமே கிடைக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை//
ReplyDeletesriram, ennoda meaningum ithuve than. enakku sariya solla theriyalai. :)))) avarukku theriyum, anal katikirathillai. ithai avaroda pathivai muthal murai padichapove purinthu konden.
வாழ்த்துக்கள் மாமி.
ReplyDeleteநீங்க விருது கொடுத்தவங்களைப்பற்றி சிறு குறிப்பு எழுதியிருக்கீங்களே, அது ரொம்ப சுவாரசியமாக இருக்கு.
விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களிடம் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteதலைவிக்கும் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)
ReplyDeleteசான்சே இல்லை என்பது வேறு அர்த்தம் தந்திருக்குமோ என்று தோன்றுவதால் விளக்கம்!
ReplyDeleteஅப்பாதுரை பெயரைப் பார்த்ததுமே இந்த மாதிரி ஒரு திறமையான ஆளை வேறு எங்கும் பார்க்க சான்சே இல்லை என்று மனதில் தோன்றியதை அப்படியே தொடங்கி விட்டேன். அவரைப் பற்றிய என் சந்தோஷச் சிலாகிப்பாக அதை எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் சொன்ன எதையும் மறுத்து அந்த வார்த்தை இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
விருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெறுப்வர்களுக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteகல்யாணமாம் கல்யாணம் 4 பகுதிகள் படித்து விட்டேன். பாக்கியும் படித்து விடுகிறேன். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா. சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது...
வாங்க ராம்வி, வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றிம்மா.
ReplyDeleteநன்றி ராஜராஜேஸ்வரி
ReplyDeleteநன்றி கோபி
ReplyDeleteஶ்ரீராம், நான் சரியாகவே புரிந்து கொண்டேன். அப்பாதுரையோட தவளைப் பெண் கதையில் இதே வார்த்தையை மீனாக்ஷி பிரயோகம் செய்திருந்ததையும், அதற்கு நான் அளித்த விளக்கத்தை அவர்கள் ஆமோதித்ததையும் நினைவு கூரவும். :)))))
ReplyDeleteஆகவே நான் சரியாகவே புரிந்து கொண்டேன். :))))))))))))
அது சரி, உங்க மத்த ஆ"சிரி"யர்களெல்லாம் எங்கே காணோம்???????
வாங்க கோவை2தில்லி, முதல்வரவுக்கு நன்றி. பாராட்டுக்கும் நன்றி.
ReplyDeleteமுதலில் உங்களுக்கு, அப்புறம் 'எங்கள்..' அப்புறம் திரு. அப்பாத்துரையின் 'மூன்றாம் சுழி' என்று மனத்தில் நான் லிஸ்ட் போட்டு வைத்திருந்தால் நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்களே! விருதைப் பகிர்ந்து கொண்ட விதம் அருமை!
ReplyDelete@ ஜீவி சார்,
ReplyDeleteநானும் உங்கள் பெயரைச் சேர்த்திருந்தேன். :))))
பின்னர் சக்திப்ரபாவின் பின்னூட்டம் மெயிலில் வந்ததும், மாற்றினேன். :)))) நன்றி பகிர்வுக்கு.
முதலில் உங்களுக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteஅப்புறம் கூட இருக்கற லிஸ்ட் ... எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் தள்ளி நின்னு ரசிப்பேன்
அப்பாதுரை பிரமிப்பு
அப்பாவி - அவசியம் சொல்லனுமா
ப்ரியா - சகலகலாவல்லி
லக்ஷ்மி - நேரில் சொல்வது போல் இருக்கும் இவர் எழுதுவது...
விருதுக்கு நன்றி ( ரெண்டு வருஷத்தில் எட்டு மாசம் பக்கமா ஒன்னும் எழுதலைன்னு நினைக்கிறேன் )
விருதுக்கு நன்றி கீதா.
ReplyDeleteவிருதுக்கு எங்கள் நன்றி,நன்றி,நன்றி,நன்றி.
ReplyDeleteஇப்படிக்கு
மற்ற நால்வர்!
வாழ்த்துகள் - உங்களுக்கும், உங்களிடமிருந்து விருதினைப் பெற்றவர்களுக்கும்....
ReplyDeleteகல்யாணமாம் கல்யாணம் படித்துக் கொண்டு இருக்கிறோம் - நானும் ஆதியும்...
முழுவதும் படித்ததும் கருத்தினைப் பகிர்கிறேன்...
ஐ... எனக்குமா? நன்றி டு தி பவர் ஆப் நூறு... ஏன்னா நீங்க ஒரு விருது குடுத்தா நூறு விருது குடுத்த மாதிரி இல்லையா அதான்...:) விருது வாங்கின உங்களுக்கும் உங்ககிட்ட இருந்து வாங்கின மத்த எல்லாருக்கும் வாழ்த்துக்கள் மாமி
ReplyDeleteHonestly, very happy to be one of the 5
எல்கே, வருகைக்கு நன்றி, பாருங்க உங்களை விருது கொடுத்து வரவழைக்க வேண்டி இருக்கு. அரசியலிலே இதெல்லாம் ஜகஜம்ங்கறீங்களா? :))))
ReplyDeleteலக்ஷ்மி, உங்கள் புதிய பதிவுகளை இன்னமும் படிக்கவில்லை. கொஞ்சம் வேலை அதிகம். வரேன்.
ReplyDeleteநீங்களும் விருதை அங்கீகரித்ததோடு இல்லாமல் உங்களுக்குத் தெரிந்த நல்லா எழுதற பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுங்கள். நன்றிம்மா.
விருதுக்கு எங்கள் நன்றி,நன்றி,நன்றி,நன்றி.
ReplyDeleteஇப்படிக்கு
மற்ற நால்வர்!//
அநியாயம், அக்கிரமம், உங்களுக்குக் கொடுத்தது போக மிச்சம் பொற்காசுகளை நானே வச்சுக்கறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ், மெதுவாப் படிச்சுட்டுக் கருத்தைச் சொல்லுங்க. பல பழக்கங்களும் இப்போது கிடையாது. அதனால் அனைவரும் அறிய வேண்டியே நடந்தவைகளை விபரமாகப் பதிவிட்டேன். அந்தக் கால வாழ்க்கை முறையும் தெரியுமே. :))))
ReplyDeleteவாங்க ஏடிஎம், விருதை வாங்கினால் போதாது, உங்களுக்குத் தெரிந்த ஐந்து பேரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். :))
ReplyDeleteதங்களிடம் விருது பெற்றவர்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவிருதுக்கு நன்றி கீதாமா!
ReplyDeleteதங்களிடம் இருந்து விருது வாங்கிய ஐந்து ஸ்ரீ களுக்கும் மற்றும் LK ,லட்சுமி ,அப்பாவி ,அப்பாதுரை மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ...
தனி மனுசியா,நீங்க இங்கே இல்லைங்கற குறையை தவிர நம்ம கட்சியியை காப்பாத்திட்டு வர்றேன் கீதாமா!
ReplyDeleteஅடுத்து முதலமைச்சரா நீங்க வர்றதுக்கு ஏகபட்ட சான்ஸ் இருக்காம் ன்னு எல்லோரும் பேசிக்கறாங்க ன்னா பார்த்துக்கோங்களேன் :))
வாங்க குமார், முதல்வரவா? வாழ்த்துக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ப்ரியா, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅது சரி, நான் தான் கட்சியோடு தலைவிப் பதவியையும் சேர்த்துத் தானே இங்கே தூக்கிண்டு வந்திருக்கேன்?? உங்க கிட்டே எப்போச் சொன்னேன்? பார்த்துக்க?? :)))))))
ரொம்ப நன்றி.. விருதுநகர் கவனிக்கவேயில்லை.. கவனிச்சதும் வார்த்தை வரமாட்டேங்குது.
ReplyDeleteசுட்டப்ளாத்தில் நெய் - கடைசியா பத்து வயசுல சாப்பிட்டதுனு நினைக்கிறேன். ஆகா.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅப்பாவியின் (புவனா?) எழுத்து எனக்கும் மிகவும் பிடிக்கும். பிரமிப்பை அவ்வப்போது தூசி தட்டிக் காண்பித்துவிட்டு ஒளிந்துவிடுகிறார்.
ரொம்ப நன்றி ஸ்ரீராம். (தேர்தல்ல நின்னா எனக்கு ரெண்டு ஓட்டு நிச்சயம்னு தோணுது :)
ReplyDeleteபன்முகம்னு சொன்னா 'எங்கள்', கீதா சாம்பசிவம், இந்த லிஸ்டுல என்னை சேத்திருக்கிறது கொஞ்சம் என்ன நிறையவே flattering.
ரொம்ப நன்றி ஜீவி sir!
ReplyDeleteLK யின் abject honesty பிடித்திருக்கிறது. (அதுக்காக விருதை விடாதீங்க எல்கே)
ReplyDeleteநன்றி + வாழ்த்துக்கள் priya.r.
சேர்ந்து வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. very flattered.
விருது வழங்கியவருக்கும் வாங்கியவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteசுட்டப்ளாத்தில் நெய் - கடைசியா பத்து வயசுல சாப்பிட்டதுனு நினைக்கிறேன். ஆகா.//
ReplyDeleteஇன்னைக்கு மத்தியானம் கூட அதான். ரசம் சாதத்துக்குத் தொட்டுக்க.:))))))
பன்முகம்னு சொன்னா 'எங்கள்', கீதா சாம்பசிவம், இந்த லிஸ்டுல என்னை சேத்திருக்கிறது கொஞ்சம் என்ன நிறையவே flattering.//
ReplyDeleteflattering??? grrrrrrrrrrrrrrrrrrrr ஜீவி சார் கூடச் சொல்லி இருக்காரே? :P:P:P
சுட்ட அப்பளாம்(மிளகு) வித் நெய்.
அன்பு கீதா, பல்வேறு திறமைகள் உள்ளவர்கள் நீங்கள்.
ReplyDeleteஉங்கள் திருக்கயிலை பதிவு படிக்கிறேன்.
நீங்கள் விருது வழங்கிய விதம் அருமை.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@ @ அப்பாதுரை - //அப்பாவியின் (புவனா?) எழுத்து எனக்கும் மிகவும் பிடிக்கும். பிரமிப்பை அவ்வப்போது தூசி தட்டிக் காண்பித்துவிட்டு ஒளிந்துவிடுகிறார்//
ReplyDeleteஆஹா... ரெம்ப நன்றி சார்... விரைவில் ரீ-என்ட்ரி செய்ய முயற்சிக்கிறேன் சார்...:)
@ LK - //அப்பாவி - அவசியம் சொல்லனுமா//
வேண்டாம் சாமி... நீ சொல்லாத வரைக்கும் எனக்கு safe ...:))
வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் மிக்க நன்றி...:)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெர்சடைல் ப்ளாகர் விருது எனக்குத் தகுதியில்லை எனினும் உங்கள் அன்புக்குக் கட்டுப்பட்டு வாங்கிக் கொள்கிறேன். மீண்டும் நன்றி.//
ReplyDeleteஎவ்வளவு அருமையான திறமைகள் உங்களுக்கு, சமயம், சமூக சிந்தனை, ஆன்மீகம், நகைச்சுவை,புகைப்படம் எடுத்தல், நாட்டுப்பற்று, தமிழ் பற்று என்று உங்களின் திறமைகள் என்னவென்று சொல்வது! நீங்கள் தான் பல்வேறு திறமைக்கு சரியான நபர்.
எனக்கு தான் இராஜராஜேஸ்வரி அவர்கள் அன்பால் கொடுத்து விட்டார்கள். பதிவு உலத்தில் தத்தி தவழும் குழந்தை நான், எனக்கு கொடுத்து விட்டார்கள்.நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
என்னையும் உயர்வாக மதிச்சு அவங்களுக்குக் கிடைத்த விருதை என்னோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். உயர்வான எண்ணம். உயர்ந்த உள்ளம் படைத்த மனுஷியிடமிருந்து கிடைத்த அன்பான விருது. //
ReplyDeleteஎன்னை மிகவும் புகழ்ந்து நீங்கள் உயர்ந்த உள்ளம் படைத்த மனுஷி என்று உணர்த்தி விட்டீர்கள்.
நான் அப்போது கோவையில் என் மாமியார் வீட்டில் இருந்தேன்.
உறவினர்கள் வந்த வண்ணம் இருந்ததால் இணையத்தில் நேரம் செலவிட முடியவில்லை.
இப்போது தான் நிதானமாய் படித்து பதில் அளிக்கிறேன்.
உங்கள் அன்புக்கு நன்றி.