http://ilavarasijohnson.blogspot.com/2010/01/chidambara-ragasiyam.html//சிதம்பர ரகசியம் தொடரைத் திருடியவர். இன்று வரை அதற்காக மன்னிப்பும் கேட்கவில்லை. அந்தப் பதிவுகளை அழிக்கவும் இல்லை.
http://tinyurl.com/732s45h//மழலைகளில் வரும் என்னுடைய பிள்ளையார், பிள்ளையார்
[Open in new window]
தொடரை இவரின் இந்த வலைப்பக்கத்தில் அப்படியே பார்க்க முடிகிறது. என்ன ஒரே ஒரு ஆறுதல், நான் கேட்டப்புறம் {?} என்னுடைய பெயரைப் போட்டிருக்கிறார். ஆகையால் கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
http://tinyurl.com/7qewxh2 இது யாரோ திருப்பாவை விளக்கம், ராதானு போட்டிருக்கு.
[Open in new window]
உள்ளே போனால் அப்படியே நான் எழுதிய ராமாயணத் தொடர். ஆர்ஷியா சத்தார் பற்றிய குறிப்புகளை மட்டும் நீக்கி விட்டுப் போட்டிருக்கார். மற்றபடி கோசலை பாடின தாலாட்டுப்பற்றி நான் எழுதி இருந்த வாக்கியம் கூட எழுத்துக்கு எழுத்து அப்படியே. அந்தப் பாடலை திரு விஎஸ்கே அனுப்பி நான் பப்ளிஷ் பண்ணி இருந்தேன். அதைப் போடவில்லை. மற்றபடி ராமாயணத் தொடர் காப்பி, பேஸ்ட் ஆகி இருக்கு! என் பெயரைப்போடவில்லை. ஆனால் மழலைகளில் இருந்து எடுத்திருக்காங்க போல. படங்கள் கூட நான் தொடரில் போட்டு வந்த அதே படங்கள் தான். இவங்க ப்ரொஃபைலும் இல்லை; பெயரும் இல்லை. பின்னூட்டம் கொடுக்கும் வசதியும் இல்லை.
ஏன் இப்படித் திருடணும்? கர்ணன் பத்தி நான் எழுதினதையும் இப்படித்தான் ஒருத்தர் காப்பி பண்ணிப் போட்டிருந்தார். ஒரே விஷயம் எல்லாருக்கும் தெரிவது சகஜமே. ஆனால் எழுத்துக்கு எழுத்து அப்படியேவா வரும்? என் எழுத்து நடை பழக்கப்பட்டவங்களுக்குச் சில இடங்களில் நான் பயன்படுத்தும் வார்த்தைகள் தெரியும். மேலும் என் எழுத்து எனக்குத் தெரியாதா? என்னோட பதிவுகளோடும் ஒப்பிட்டுப் பார்த்தாச்சு.
இந்தத் தொந்திரவு தாங்காமலேயே கண்ணன் கதையையும்,செளந்தரிய லஹரியையும் இடம் மாத்தினேன். :((((( ஒரு சிலர் படிச்சால் போதும்.
இன்றைய புலம்பல் இது! :((((((
இதனால் வலை உலகில் உள்ள பதிவுத் திருடும் நண்பர்களுக்குச் சொல்லுவது என்னவெனில் என்னுடைய படைப்புக்களைத் திருடுவதற்கு முன்னர் சொல்லிவிட்டுத் திருடவும். அவை என்னுடைய உரிமை. யாரும் திருட முடியாது.
பதிவுத் திருட்டு.... நிறைய நடக்குது....
ReplyDeleteஎதாவது செய்யணும்.... என்ன செய்வது என்றுதான் புரியவில்லை....
இது என்னங்க நியாயம் நாம கஷ்டப்பட்டு முயற்சிசெய்து ஒருபதிவு போட்டால் ரொம்ப ஈசியா காபி பண்ணிடுராங்களே/ கேக்கவே நல்லால்லே
ReplyDeleteஎனது வருத்தத்தை இப்பதான் இங்கே பகிர்ந்திருந்தேன்:(. ஒன்றும் செய்ய முடியாது போல!
ReplyDeleteஸாரிம்மா! பதிவுகள் மிக நன்றாக இருப்பதால் கை துடிச்சிருக்குமோ?
ReplyDeleteஇதை தடுப்பதற்கு வழிகள் தேட வேண்டும்.
ஆல் தி பெஸ்ட்.
உங்கள் வருத்தம் நியாயமானது.உங்கள் பதிவினை ஒருவர் திருடுகிறார் என்றால் அந்தப் பதிவு ரசிக்கும்படி உள்ளதுதான் என்றுதானே அர்த்தம்.படிப்பவர்களுக்கு நிச்சயம் புரியும் இது கீதாவின் எண்ணங்கள் என்று.
ReplyDeleteஉங்கள் வருத்தம் புரிகிறது. அதுவும் அந்த 'சிதம்பர ரகசியம்' எழுத எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கையில்..
ReplyDeleteசம்பந்தப்பட்டவர்களுக்கு இதெல்லாம் புரிய வேண்டும் என்பது தான் முக்கியம்.
எழுதியவரின் பெயரைப் போட்டு, அவர் பதிவுக்கான சுட்டி கொடுப்பதே, எந்த விதத்தில் பார்த்தாலும் நியாயமாகப் படுகிறது.
என்னடா சில ப்லாக் மட்டுந்தான் ப்ரோபைல்ல தெரியுதேன்னு பார்த்தேன்.. இதானா விஷயம்?
ReplyDeleteஎன் திருடணும்னு கேக்கறீங்களே? (இது ஒரு கேள்வியா? ஹ்ஹி :))
உங்க எழுத்தை அப்படியே அபேஸ் பண்ணினவங்க கை விளங்காமப் போக.
அந்த திருட்டு வெப்சைட்டை நம் பதிவுகளில் மறுபடியும், பல தடவைகள் குறிப்பிட்டால், தேடலில் எல்லாரும் அறிய வாய்ப்புள்ளதா? தெரியவில்லை.
ReplyDeleteஅட அநியாயமே....இதெல்லாம் வேறயா....விடுங்க...மற்றவர்கள் காபி அடிக்கும் அளவு உங்கள் எழுத்து இருக்குன்னு பெருமையா ஆறுதலடைய வேண்டியதுதான்...வேறென்ன செய்ய...
ReplyDeleteசில வலைப் பக்கங்களில் புத்தகமாக தயாரிக்க செய்து வரும் பகுதி இது. காபிரைட் சட்டத்தின் படி இவற்றைத் திருட யாருக்கும் அனுமதி இல்லை' என்று குறிப்பு பார்த்திருக்கேன். அப்படிப் போடலாம்.
ரைட் கிளிக், காபி ஆப்ஷனையும், செலெக்ட் ஆப்ஷனையும் நிறுத்த முடியும் என்றும் ஒரு தொழில்நுட்பப் பதிவில் படித்தேன்.அதுவும் செய்யலாம். (ஆனாலும் காபி அடித்தே தீருவேன் என்றால் அதே தொழில் நுட்பத்தில் அதற்கும் இடமிருக்கு :))))]
வாங்க வெங்கட், என்ன செய்யறதுனு எனக்கும் புரியலை. :((((
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, இப்படி அடிக்கடி நடக்குது. :(
ReplyDeleteராமலக்ஷ்மி, பார்த்தேன், ஒண்ணும் செய்யமுடியலை.
ReplyDeleteவாங்க வெற்றிமகள், என்ன செய்யறதுனு புரியலை.
ReplyDeleteவிச்சு, ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஜீவி சார், அநேகமாச் சரித்திரம்/ புராணங்களையே எழுதுவதால் சரியான ஆதாரங்களுக்காக நிறையவே உழைக்க வேண்டி இருக்கு. காப்பி, பேஸ்ட் பண்ணறவங்க சுலபமாப் பண்ணிடறாங்க. :((((((
ReplyDeleteஅப்பாதுரை, உங்க கமென்ட் படிச்சதும் கொஞ்சம் இறுக்கம் தளர்கிறது. :))))))அதுவும் கடைசியில் கொடுத்தீங்களே சாபம்! அதை நினைச்சு! :P:P:P:P
ReplyDeleteவெற்றிமகள், அந்த எண்ணத்தில் தான் திரும்பத் திரும்பச் சொல்றேன். பார்க்கலாம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், குறிப்புத் தான் போடணும். காப்பிரைட் இருக்குனு அழுத்தம் திருத்தமாச் சொல்லணும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஆனாலும் நீங்க சொல்றாப்போல் திருடறவங்க எப்படியும் திருடுவாங்க. :)))))
பகவான் பத்தி எழுதினது இன்னும் பரவட்டுமே, என்ன இப்ப?
ReplyDeleteநடவடிக்கை எடுக்கத்தோணினா இங்கே பாருங்க: http://tinyurl.com/8x84l4l
உங்க பதிவுகளைத் திருடறாங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.என்ன அநியாயம்? சுயமாக எழுதுவதில்தான் சுகமே இருக்கு.
ReplyDeleteaahaa, comment box ingeyum mari iruke? ithu ennoda comment box thana?
ReplyDeleteToo bad... they don't understand how much time and effort we spend to write a post... hope there will be a rememdy soon :(
ReplyDelete