நேற்றுச் சிரிப்பு தினமாகப் போனது. முதல் சிரிப்பு மேரே பாப், பஹ்லே ஆப் படம் பார்த்ததின் விளைவு. ஓம்புரியைக் காமெடியனாகப் பார்த்த வருத்தம் என்னமோ தீரலை. :( நல்ல தியேட்டர் ஆர்டிஸ்ட். கெடுத்துட்டாங்க. வேறே யாரும் கிடைக்கலையா? ஓம்புரி, ஜெனிலியா, அக்ஷய் கன்னாவைத் தவிர மத்தவங்க எல்லாம் சீரியல் நடிகர்கள். அர்ச்சனா புரன்சிங்கை அடையாளமே கண்டுபிடிக்க முடியலை. ஒரு காலத்தில் சீரியலில் கொடிகட்டிப் பறந்தார். அதோடு, அட??? நம்ம ஷோபனா! துக்கினியூண்டு ரோலில்; கடைசியில் தான் கொஞ்சம் கொஞ்சம் வரார். எப்போ ஒடிந்து விழுவாரோனு பயம்ம்மாவே இருந்தது! நல்லவேளையா விழலை! :))))
அடுத்துச் சிரிப்புப் பூவெல்லாம் கேட்டுப் பார். ஒரு சினிமாவே அதிகம்; இன்னொண்ணானு நினைச்சேன். ஆனால் நேற்று என்னமோ வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த சினிமாவைப் பார்க்கறாப்போல் ஆச்சு. இங்கே தொலைக்காட்சியைச் சமைத்துக்கொண்டே பார்க்கும்படியா வேறே வைச்சிருக்கா. வசனங்கள் காதில் வந்து விழுது. கோவை சரளா ஞாபக மறதி டாக்டரா வந்து குழப்படி பண்ணறது அருமை. நினைச்சு நினைச்சுச் சிரிக்க முடிந்தது. இம்மாதிரியான ஆரோக்கியமான சிரிப்புக்கள் நிறைந்த காட்சிகளைப் பார்த்தே எத்தனை நாளாச்சு! அதுக்காகவே பார்க்கலாம். மற்றபடி சூர்யா, ஜோதிகாவுக்கு முதல்படமாமே? அப்படியா?????????? இங்கே வந்தால் தான் சினிமா பார்க்க வேண்டி இருக்கு. இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் பாதியிலே அணைச்சுட்டுப் போயிடுவேன். அது ஏன்????????????????????????
கடைசியில் கேட்டிருக்கீங்களே, அது கேள்வி! Supply versus demand principle காரணமாக இருக்குமோ?
ReplyDeleteஓம்பூரி இப்பல்லாம் காமெடியிலும் கலக்கறாரு கீத்தா மாத்தா.. :-))
ReplyDeleteச்சாச்சி சார்சௌ பீஸ் பார்த்திருக்கீங்களா. அருமையான நடிப்பு அதில்.
\\இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் பாதியிலே அணைச்சுட்டுப் போயிடுவேன். அது ஏன்????????????????????????\\
ReplyDeleteஏன்னா அது உங்க வீடு ;-))
முதல் படம் பார்த்ததில்லை. இரண்டாவது படம் பார்த்திருக்கிறேன். கோவை சரளா காமெடி நன்றாக இருக்கும். மாது பாலாஜி திரைக்கு வந்தும் எடுபடாமல் போனார். அவர் மேடை நாடகங்களுக்குதான் ராஜா போலும்!
ReplyDeleteபொருமையா படங்கள் பாக்க முடியுதா? ஆச்சர்யம் தான் நான் மொழி படம் மட்டும் பூராவும் பொறுமையா உக்காந்து பாத்தேன் மத்தபடி பாதிலயே ச்விட்ஸ் ஆஃப் தான்
ReplyDelete//இந்தியாவிலே பார்க்கவும் மனசிருக்காது. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் பாதியிலே அணைச்சுட்டுப் போயிடுவேன். அது ஏன்????????????????????????//
ReplyDeleteநம்ப ஊருல இருந்தா பக்கத்துல மனுஷா நிறைய இருப்பா.அப்பப்ப பேசிக்கலாம். ஆனா,
அங்க அக்கம்பக்கத்துல யார் தமிழ் பேசரா? சினிமால பேசரத்தான் கேட்க வேண்டும்!! என் மாமியார் இப்படித்தான் சொல்லுவார்.நீங்க என்ன நினைக்கிறீங்க மாமி??
ஆரோக்கியமான சிரிப்புக்கள் நிறைந்த காட்சிகளைப் பார்த்தே எத்தனை நாளாச்சு! அதுக்காகவே பார்க்கலாம்.//
ReplyDeleteசரளாவின் சிரிப்புகள் அந்த படத்தில் மிக நன்றாக இருக்கும்.
நல்ல படம்தான்.
ReplyDeleteவாங்க கெளதம் சார், ஹிஹிஹி, நன்னி ஹை!
ReplyDeleteஆனாலும் இந்தியாவில் சானல்களில் உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல்முறையாகக் காட்டுவதைத் தான் ஆயிரமாவது முறையாகப் பார்க்க வேணடி இருக்கே; இங்கே படங்களை நாம செலக்ட் பண்ணிக்க முடியுது. :))))) அங்கேயும் ஒரு சில பே சானல்கள் இருக்குத் தான். வாங்கிக்கலை. :))))))
அமைதி, அப்படியா?? கீத்தா மாத்தா?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநன்யா அக்கா?? இது என்ன? உங்களைப் பார்த்து அமைதி காப்பி அடிக்கிறாங்க! ராயல்டி கேட்க வேண்டாமோ? :)))) நாராயணா! நாராயணா!
ReplyDeleteநிஜம்மா நாராயணனைத் தான் கூப்பிடறேனாக்கும்.
ஏன்னா அது உங்க வீடு ;-))//
ReplyDeleteஹிஹிஹி, கோபி, கொன்னுட்டீங்க! இதுவும் நம்ம வீடுதான்; இங்கே பையரும் மருமகளும் ஏற்கெனவே பார்த்துட்டு ரெகமன்ட் பண்ணறதைத் தான் பார்க்கிறோம்; வேணாம்னா எழுந்து போயிடலாம். ஆனாலும் என்னமோ தெரியலை; பார்க்கிறேன்! அதான் புரியறதில்லை! :)))))))
வாங்க ஶ்ரீராம், ஹிந்திப் படம் ஓகே ரகம் தான் ஶ்ரீராம். மாது பாலாஜி அதிலே நடிச்சதே எனக்கு மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :))))) அவர் நாடகங்களிலே தான் சோபிக்கிறார் என்பது உண்மை தான்.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, பார்க்கிறோம். கணினியில் நேரம் செலவழித்தாலும், இங்கே வீடு மெயின்டெனன்ஸ் அவங்க ரெண்டு பேரும் செய்துடறதாலே நமக்குச் சில சமயம் வேலையே இல்லாதமாதிரி இருக்கு. அதிலும் மத்தியானம் 2 மணியிலிருந்து நாலு மணிக்குள் ரொம்பவே போரடிக்கும் . எனக்கு மதியத் தூக்கம் வராது. அந்த நேரம் பார்ப்பேன்.
ReplyDeleteவாங்க ராம்வி, உண்மைதான், இந்தியாவிலே இருந்தா, யாரானும் வருவாங்க; விலாசம் விசாரிச்சுட்டு வருவாங்க. உறவினர், நண்பர்னு வருவாங்க. அதோடு வீடு சொந்த வீடு என்பதாலே மெயின்டனன்ஸ் இருந்துட்டே இருக்கும். தினம் பெருக்கித் துடைக்கவே எனக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்; அதுக்கு ஆள் வச்சுக்கலை. உடல்பயிற்சியா இருக்கும்னு நானே தான் செய்வேன். இங்கே அதெல்லாம் இவங்க ரெண்டு பேரும் செய்யறாங்க. நாளை எண்ணிட்டு இருக்கோம். :)))))
ReplyDeleteவாங்க கோமதி அரசு, உண்மைதான். கோவை சரளாவின் ஹாஸ்யம் இந்தப் படத்தில் விரசமே இல்லாமல் மனம் விட்டுச் சிரிக்கும்படியாக இருந்தது.
ReplyDeleteவாங்க விச்சு. வரவுக்கு நன்றி.
ReplyDeleteபூவெல்லாம் கேட்டுப் பார்த்தீங்களா??? என்ன சொன்னது பூக்கள் - உங்களிடம் தனியாக!
ReplyDeleteவாங்க வெங்கட் நாகராஜ், பூக்களிடம் கேட்டேன்; சீக்கிரமாய் இந்தியா வந்துடுனு சொல்லி இருக்கு! :))))))
ReplyDeleteபக்தியுள்ள ரொட்டி இன்னுமா நடிச்சிட்டிருக்காரு? ம்ம்ம்.
ReplyDeleteமதியத் தூக்கம் வராதா.. அடடே.. அதுக்காக ட்ரை பண்ணாம விட்டுறலாமா? ஒரு அரை மணி மதியத் தூக்கம் போடற சுகம் அலாதியில்லையோ?
முடிந்தால் King's speech பாருங்களேன் . இப்ப சமீபத்துல பாத்ததுல ரொம்ப பிடிச்ச படம் ரியல் story . Colin Firth , Geoffrey Rush, Helena Bonham carter நடிப்பும் அட்டகாஸம்! இந்த மாதிரி படத்துக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்காது!!deserving தான்
ReplyDeleteபக்தியுள்ள ரொட்டி இன்னுமா நடிச்சிட்டிருக்காரு? ம்ம்ம்.//
ReplyDeleteவரார், வரார்; ஆனால் பணத்துக்காக காம்ப்ரமைஸ்! :))))))
அமைதிச்சாரல் சொல்லி இருக்காங்களே சாச்சி சார்ஸெள பீஸ் அவ்வை சண்முகி அதன் ஹிந்தி வெர்ஷனிலும் ஏதோ கோமாளித்தனம் பண்ணுவார்; பார்த்திருக்கேன்.
மதியத் தூக்கம் வராதா.. அடடே.. அதுக்காக ட்ரை பண்ணாம விட்டுறலாமா? ஒரு அரை மணி மதியத் தூக்கம் போடற சுகம் அலாதியில்லையோ?//
நீங்க வேறே ராத்திரி தூங்கினாலே பெரிய விஷயம். பகல்லே அரை மணி தூங்கினால் இரவு குறைந்த பக்ஷமாக இரண்டு மணி நேரம் தாமதமாய்த் தூக்கம் வரும். படுக்க என்னமோ போயிடுவேன்; ஆனால் தூக்கம் வராது. :))))))))
வாங்க ஜெயஶ்ரீ, பார்க்கிறேன். பார்த்தால் நிச்சயம் கருத்துச் சொல்றேன்.
ReplyDelete