இரண்டு நாட்களாக டாக்டர் அவதாரம். அதிக வேலை காரணமாகச் சீக்கிரமாய்ப் படுத்துடுவேன். படுத்தால் சிறிது நேரம் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டும். அதை நான் அழறேன்னு நினைச்சுட்டு அப்பு ஏன் அழறேனு கேட்டது. அழலை; கண்ணிலே இருந்து தண்ணீர் கொட்டுது; அதோட ரொம்பக் களைப்பா இருக்கு; கை, காலெல்லாம் வலினு சொன்னேனா! உடனே தன்னோட டாக்டர் கிட்டை எடுத்துட்டு வந்தாச்சு.
ரெண்டு நாள் முன்னே தான் தாத்தாவுக்கு மெடிகல் செக்கப் நடந்திருக்கு. அதிலே முட்டியைத் தட்டிப் பார்க்கிறேன்னு ஓங்கி ஒண்ணு வைச்சிருக்கா தாத்தாவுக்கு. அதனாலே எனக்குக் கொஞ்சம் பயம்! :)) முதல்லே பிபி செக்கப். பிபி நார்மல்; வெரி நைஸ். அடுத்து தெர்மாமீட்டராலே ஜுரம் இருக்கானு பார்த்தாச்சு. ஜுரம் கொஞ்சம் இருக்கு; ஓகே?
ஓகே. அடுத்து ஸ்டெத்தை எடுத்துப் பார்க்கணுமே: ஸ்டெத்தை எடுத்துக் கொண்டு mmm breathe! னு சொல்லிட்டு மூச்சை விட்டும் காட்டியாச்சு. அப்படியே நாமளும் மூச்சை விடணும். அடுத்து ஒரு டார்ச்சை எடுத்துண்டு வந்து காது, மூக்கு, வாய் ( say, ஆ) எல்லாம் பார்த்தாச்சு. அப்படியே கண்களையும் பார்த்தாச்சு. நல்லவேளையா முட்டியைத் தட்டுகையில் ரொம்பவே மெதுவா லேசா வைச்சுட்டு எடுத்தது. பிழைச்சேன்.
you have red eyes and they are watering. I'll recommend you to an eye surgeion. OK? Now I will give you a shot. don't cry.
No, I will cry. Mommy, Mommy, I do not need a shot.
No, baby, No. see, see, I will give you a lollipop.
No, I want a choclate. chocklate only.
டாக்டருக்கு என்ன செய்யறதுனு புரியலை. உடனே போய் அவங்க அம்மா கிட்டே கேட்டுட்டு நிஜம்மாவே ஒரு சாக்லேட்டோட வந்தாச்சு.
அப்பு ஆஸ்பத்திரிக்குப் போனா அங்கே அதுக்கு டாக்டர் லாலிபாப் கொடுக்கிறச்சே என்னோட அக்காவுக்குனு கேட்டு இரண்டு வாங்கிட்டு வருவா.
ஆகவே இந்தக் குழந்தையும் கேட்டாச்சு. எங்க அக்காவுக்கும் சாக்லேட்.
நடுவிலே நம்ம ரங்க்ஸ் குறுக்கே புகுந்து, ஏய், உனக்கு ஏது அக்கா? னு போட்டுக்க் கொடுக்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர அதான் பெரியப்பா பொண்ணுங்க இருக்காங்களே; சும்மா இருங்கனு அதட்டிட்டு, சாக்லேட்டுக்கு அழ, உடனே
where is your sister? I cannot see her.
She is in India. ஒரு நிமிஷம் யோசித்த அப்பு, அப்போ சரி, சாக்லேட்டை இங்கே இருந்தே தூக்கிப் போட்டுடறேன். உங்க அக்கா எடுத்துக்கட்டும்னு சொன்னது. அதோடயா? முட்டை முட்டையா எழுதின பிரிஸ்கிருப்ஷனும் கொடுத்திருக்கு. அதைச் சொல்ல விட்டுட்டேனே! அதைப் பத்திரமா வச்சுக்கச் சொல்லி வேறே அட்வைஸ். :)))))
:P:P:P:p
இப்போ அடுத்து எனக்குக் கண் டெஸ்ட் இருக்கு இன்னிக்கு. வர்ட்ட்டா????????
நல்ல டாக்டர்.
ReplyDeleteசுவாரஸ்யம்தான். போன தரமே தலைப்பைப் பாராட்ட நினைத்து, விட்டுப் போய் விட்டது! அந்த பிரிஸ்க்ரிப்ஷனை ஸ்கேன் செய்து போட்டிருக்கலாமே....! :))
ReplyDeleteஹிஹி... ஆனந்தத் தருணங்கள்
ReplyDeleteவாங்க விச்சு, நல்ல டாக்டர் தான். ஆனால் நாம மாட்டோம்னு சொன்னா ஒரு கத்துக் கத்தும் பாருங்க! :)))))))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், பாராட்டுக்கு நன்னி ஹை. ப்ரிஸ்கிருப்ஷனை ஸ்கான் பண்ணிப் போட இங்கே ஸ்கானர் இல்லை. ஹூஸ்டன் வந்ததும் தான் போடணும். :))))))
ReplyDeleteவாங்க எல்கே, உங்களை ப்ளாக் பக்கம் வரவைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு! அப்புவை டாக்டர் அவதாரம் எடுக்கச் சொல்லி................:)))))))
ReplyDeleteகுட்டீஸ் குட்டீஸ்தான்
ReplyDeleteநல்லா இருக்கு. கடைசி பாரா வரை அவசரமாகப் படித்து, பிறகு மீண்டும் ஒருமுறை, முழுவதும் ரசித்துப் படித்தேன்.
ReplyDeleteநல்ல டாக்டர்தான். கண்ல தண்ணி வந்தா கரெக்டா ஐ சர்ஜன் கிட்ட அனுப்பி வைக்கரங்க...
ReplyDeleteபிரிஸ்கிரிப்ஷனை பத்திரமா வைச்சுக்கோங்கோ.
குழந்தைகளுடன் இருக்கும் போது நாமும் குழந்தையாகவே மாறி விடுகிரோம். ஆனந்தமான நேரங்கள்.
ReplyDeleteவாங்க புதுகை, ரசனைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க கெளதம் சார், என்னிக்கோ வரீங்க. ரசிச்சு நிதானமாப் படிக்க வேண்டாமோ? :))))
ReplyDeleteவாங்க ராம்வி, ப்ரிஸ்க்ரிப்ஷன் சூட்கேஸிலே வைச்சாச்சு. :)))))
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, உண்மைதான். ஆனந்தமான தருணங்கள்.
ReplyDeleteகலக்கல் டாக்டர் ;-))
ReplyDeleteஇது என்ன கண் காலமா:)
ReplyDeleteஅப்பு சமத்தோ சமத்து.
தாத்தாவுக்கு நல்ல அடியா:)
கிருஷ்ணாவுக்கு ஊசி போடுவதில் ஒரே ஜாலி. நேஹாவுக்கு ஊசி போட மனசாகாது. தச்சி மம்மு சாப்பிடு . எல்லாம் சரியாயிடும்னு சொல்லும்:)
கண் டாக்டர் என்ன சொன்னார்னு எழுதவும். சைனஸ்?
ரொம்ப சுவாரசியம். தலைப்பு அட்டகாசம். little blessings.
ReplyDeleteகுழந்தைகள் உலகம் அற்புதமானது.
ReplyDeleteஅந்தக் கொண்டாட்டத்தில் கிறங்கடிக்கும் பதிவு.
எனக்கும் கூடத்தான். தூக்கம் தொடங்குவதற்கு முன்பு சில நேரங்களில் கண்களிலிருந்து நீர் புறப்பட்டு, கொட்டாவியும் கூட வரும். அப்புறம் அசந்திடும். களைப்பு எல்லை மீறிப் போய், "தூங்கப்போ.." என்று சொல்லுகிற அறிகுறி என்று நினைக்கிறேன்.
பகிர்தல் அருமை!
ReplyDeletesuper doctor... vaalththukkal..nadai vekam kuttuvathaaka ullathau arumai..
ReplyDeleteவாங்க கோபி, கலக்கல் தான். :)
ReplyDeleteதாத்தாவுக்கு நல்ல அடியா:)//
ReplyDeleteதாத்தா தாங்கிப்பார். பாட்டியால முடியலை! :))))
கண் டாக்டர் என்ன சொன்னார்னு எழுதவும். சைனஸ்?//
கண்ணுக்கா? நிஜமா இங்கே எந்த டாக்டர் கிட்டேயும் போகலை. சைனஸ் மட்டுமா? வேறே தொந்திரவும் இருக்கு. :))))
அப்பாதுரை, வரவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஜீவி சார், ரசனைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி சார், ரொம்ப நன்றி. ரொம்ப நாள் ஆச்சு வந்து. நல்லா இருக்கீங்களா?
ReplyDeleteவாங்க சரவணன், நன்றிங்க. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஇனிய பொழுதுகள் :))
ReplyDeleteகுட்டி டாக்டரின் அரவணைப்பில் மகிழ்ந்திருங்கள்.
கீதா, உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விருது .
ReplyDeleteவாருங்கள் ,வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
வந்து பெற்றுக் கொண்டால் மகிழ்வேன்.
ஹா ஹா ஹா... இந்த டாக்டர்'கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கவே சிக் ஆகலாம் போல இருக்கே... too smart kid, அப்பாவி அத்தைக்கு ஒரு சாக்லேட்னு அடுத்த வாட்டி கேட்டு பாருங்க, கண்டிப்பா கிடைக்கும்...;)
ReplyDelete-
ReplyDelete. இந்த டாக்டர்'கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கவே சிக் ஆகலாம் போல இருக்கே... too smart kid, அப்பாவி அத்தைக்கு ஒரு சாக்லேட்னு அடுத்த வாட்டி கேட்டு பாருங்க, கண்டிப்பா கிடைக்கும்...;)//
ReplyDeleteஅதெல்லாம் கேட்க மாட்டோமாக்கும். :P
அடடே ..உடம்பை பார்த்துக்கோங்க கீதாமா
ReplyDeleteஉடல்நிலை குறித்து கவலை இருப்பினும்
குட்டி டாக்டர் அப்புவின்
கவனிப்பு ஆறுதலளிக்கிறது !
எங்களுக்கு மட்டும் சாக்லேட் அனுப்பறீங்க!
ReplyDeleteபாவம் அப்பாவி ;அவளுக்கும் ஒரு சாக்லேட் அனுப்புங்களேன் :)