Wednesday== நிறையப் பார்த்திருந்தாலும் மறுபடியும் பார்த்தேன். ஹாட்ஸ் ஆஃப் டு அனுபம் கேர், நஸ்ருதின் ஷா. அதிலும் நஸ்ருதின் அப்படியே மும்பையின் சாமானியனை, தினம் தினம் லோகல் ட்ரெயினில் வேலைக்குச் சென்று வரும் மனிதனாக வாழ்ந்து காட்டி இருப்பார். அனுபவித்துப் பார்த்தேன். நஸ்ருதின் ஷாவின் நடிப்பை, நடிப்பா அது! இல்லை. அவர் தான் தினம் தினம் சந்திக்கும் இளைஞனுக்குத் திருமணம் நிச்சயம் ஆகி இருந்ததையும், சம்பவ தினத்தன்று தான் மட்டும் அந்த ரெயிலில் பயணிக்க முடியவில்லை, உடல்நலக்கோளாறால் விடுமுறை எடுத்ததையும், அந்த இளைஞன் ரெயிலில் பயணம் செய்தவன் இல்லாமல் போனதையும் ஒரு வறட்சியான குரலில் வர்ணிக்கையில் மனம் பதறும்.
Dar = பார்த்ததில்லை; பார்த்தேன். கொஞ்சம் செயற்கையான காட்சிகள் இருந்தாலும் படம் பரவாயில்லை. ஷாருக் கானுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த படமாமே. :)))
Rab Ne Bana di Jodi = இதுவும் ஒரு ஷாருக் கான் படம் தான். படத்தைப் பார்க்கறச்சே சிப்பு சிப்பா வந்தது. அந்தப் பெண் நடனம் ஆடப் பழகப் போறச்சே கூடத் தன்னோட ஜோடியா ஆடுவது தன் கணவன் தான் என்றே தெரியலையாம். என்ன தான் அவங்களுக்குள்ளே சரியான உறவு இல்லைனாலும் நடை, பாவனை, பேச்சில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சொற்கள், ம்ஹும், இன்னும் எத்தனையோ இருக்கு. கண்டு பிடிச்சிருக்கலாம். கண்டு பிடிக்க முடியலையாம். தலையை மாத்தி வாரிக்கொண்டு ஜீன்ஸ் போட்டுக்கொண்டு மீசை வைச்சுக் கொண்டு வந்தால் ஏமாந்துடுவாளாம் வேறே யாரோனு. முக ஜாடை கூடவா மாறும்! பேத்தலோ பேத்தல்!
Dilvale Dulhaniya Le Jayenge = simply implausible! :(
Bhoot = OK. ஆனாலும் என்னவோ இடிக்குது. அது என்ன????
Fanaa = இதுவும் அப்படித்தான், கண்ணே தெரியாமல் இருக்கும் பெண் முதல் முறையா டெல்லி போறாளாம். அப்பா, அம்மா கூட வரலை. நண்பர்களோடு(பெண்கள் தான்) போகிறாள். போற இடத்தில் டூர் கைடின் பேச்சையும், அவனுடைய ஷாயர் பாடும் திறமையைக் கண்டும் மயங்கிடறாளாம். அவனோட சுத்துவதோடு காந்தர்வ முறைப்படி கல்யாணமே பண்ணிக்கிறா. திரும்பி ஊருக்கு வருகையில் பாதியிலேயே காதலர் ரெயிலில் இருந்து தூக்கிட்டு வந்துடறார். அவர் சொன்னதாலே கண் ஆபரேஷனும் பண்ணிக் கண் தெரிகையில் அப்பா, அம்மா வராங்க. ஆனால் இவர் குண்டு வெடிப்பில் இறந்துட்டதாச் சொல்றாங்க. மிச்சம் கதை தான் அப்புறமா. படம் அறுவை. இந்தப் படத்தைப் பாரத்துட்டு எனக்கு எங்கே தேசபக்தி அதிகம் ஆயிடப் போகுதேனு நம்ம ரங்க்ஸ், மருமகள் ரெண்டு பேரும் பயந்தாங்க. நல்லவேளையா இருந்ததும் குறைஞ்சுடுமோனு தோணிப் போச்சு! :P :P:P:p அத்தனைக்குச் செயற்கையான சம்பவங்கள்.
நல்ல சினிமா எப்போ, என்னிக்குப் பார்க்க முடியும்?? கடைசியாப் பார்த்தது காஞ்சிபுரம்.
http://www.youtube.com/watch?v=ojHe-jdzsRw&feature=related
ReplyDeleteஃபனா ல வர இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு .உர்து, ஹிந்தி ரொம்ப beautiful and poetic language தான்.
அந்த அழகான படத்திற்கு எத்தனை அவார்ட் என்று பார்த்தால் , .... ஒரு முறையாவது பெஸ்ட் பிக்சர் -பிலிம் பேர் அவார்ட் நல்ல படத்துக்கு கிடைக்குமா என்று எதிர் பார்த்து.... ம் ..
ReplyDelete//இந்தப் படத்தைப் பாரத்துட்டு எனக்கு எங்கே தேசபக்தி அதிகம் ஆயிடப் போகுதேனு நம்ம ரங்க்ஸ், மருமகள் ரெண்டு பேரும் பயந்தாங்க. நல்லவேளையா இருந்ததும் குறைஞ்சுடுமோனு தோணிப் போச்சு!//
ReplyDeleteஹா..ஹா.. ஹா.. மாமி, நல்லாயிருக்கு விமர்சனம்.
வாங்க ஜெயஶ்ரீ, உண்மைதான். ஷாயர் எல்லாமே நல்லா இருக்கும். அதை விட்டால் இந்தப் படத்தில் வேறொன்றும் சிறப்பாய்த் தெரியலை. :))))))
ReplyDeleteவாங்க வெற்றிமகள், அப்படி ஒரு படம் இன்னமும் வரலைனு நினைக்கிறேன். எங்கே! எல்லாம் பணம் பண்ணத்தான் பார்க்கிறாங்க.
ReplyDeleteஆனாலும், "பிஞ்சர்" நல்லா இருக்கும்.
பாதி எழுதும்போது சாப்பிடப் போயிட்டேன். பிஞ்சர் படத்தில் ஊர்மிளாவின் நடிப்பும் மனோஜ் பாஜ்பாய் நடிப்பும் அருமையா இருக்கும். ஒரு வேளை ஊர்மிளாவைத் தவிர மத்தவங்க தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்தவங்க என்பதாலோ என்னமோ, படம் வெகு இயல்பாக நகரும். மனதில் பாரம் குறைய வெகு நாட்களானது. :(((((
ReplyDeleteஅதே போல் ஊர்மிளா நடித்த இன்னொரு படம் பனாரஸ்(மலையாளத்திலும் ஒரு படம் வந்திருக்கு; அது இல்லை) ஹிந்திப்படம் அதிலும் ஊர்மிளா நடிப்பு நல்லா இருக்கும்.
ReplyDeleteஹா..ஹா.. ஹா.. மாமி, நல்லாயிருக்கு விமர்சனம்.//
ReplyDeleteரசனைக்கு நன்றி ராம்வி.
ஃபனா பார்த்த ஞாபகம் இருக்கிறது. ரங் தே பசந்தி பார்த்த பாதிப்பில் பார்த்தது. கவரவில்லை! மற்ற படங்கள் பார்த்ததில்லை. ஆனால் ஷாரூக் படத்தில் 'குச் குச் ஹோத்தா ஹை' சுமாராக இருக்கும். இந்தப் படத்தின் டைட்டில் 'சாங்'கும் நன்றாக இருக்கும்!
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், A Wednesday படம் கட்டாயம் பாருங்க. நல்லா இருக்கும்.
ReplyDeleteரங் தே பசந்தி படம் என்னை அவ்வளவாக் கவரவில்லை. ஷாருக்கின் குச் குச் ஹோத்தா ஹை பார்க்கலைனு நினைக்கிறேன்.
படவரிசை ரொம்ப இம்ப்ரஸ்ஸிவா இருக்கே. ஃபனா நான் பார்க்கவில்லை. ரங் தே பசந்தி ரொம்பப் பிடித்தது.
ReplyDeleteநல்ல விமர்சனங்கள்... :) நஸ்ருதின் ஷா... நடிப்பில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன் - நல்ல நடிகர்....
ReplyDelete