இன்று காலை ஸ்ரீரங்கத்துக்கு செளகரியமாக வந்து சேர்ந்தோம். மைத்துனர் டிஸ்சார்ஜ் ஆகி வந்து நாலைந்து நாட்களுக்குப் பின்னர் ஏற்கெனவே ரிசர்வ் செய்து வைத்திருந்த டிக்கெட்டில் கிளம்பினோம். தற்சமயம் கொஞ்சமாக திட உணவு எடுத்துக்கொள்கிறார். என்றாலும் இன்னமும் கட்டுப்பாடுகள், மருந்துகள், ஒருநாள் விட்டு ஒருநாள் ரத்தப் பரிசோதனை என இருக்கின்றன. வீட்டுக்குள்ளாகத் துணையுடன் நடமாடுகிறார். அதிகம் நடக்க முடியவில்லை. ஓய்வில் இருக்கிறார். ஆஸ்பத்திரியில் வென்டிலேஷனில் இருந்த நாட்களைத் தவிர மற்றவை நினைவில் இருக்கின்றன. எல்லாம் வல்ல இறைவன் கிருபையால் அனைவரின் அன்பான பிரார்த்தனையாலும், மருத்துவர்களின் விடா முயற்சியாலும், மைத்துனரில் போராட்ட குணத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாய்த் தேறி வருகின்றார்.
எல்லாவற்றுக்கும் மேல் அங்கே இருக்கையில் என் கணவருக்குத் திடீரெனக் குளிர் சுரம் வந்து உடம்பெல்லாம் தூக்கிப் போட்டு, மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு எப்படியோ போய்க் காட்டிட்டு வந்தோம். அது வேறே ஒரு வாரம் அனைவருக்கும் டென்ஷன், மன வருத்தம். பின்னர் வயிற்றுக்கோளாறு வந்து அதுவும் சரியாச்சு, (கை மருத்துவத்தினால்). டில்லிக்குத் தொலைபேசி விசாரித்த நண்பர்களுக்கும், இ- மெயில் மூலம் விசாரித்த நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. இங்கே பதினான்கு மணி நேரம் மின் வெட்டு. காலை ஆறு மணிக்கு வந்ததும் போன மின்சாரம் பத்து மணிக்கு வந்து, பனிரண்டுக்குப்போய்ட்டு இப்போத் தான் நாலு மணிக்கு வந்திருக்கு. எத்தனை நிமிடம் இருக்கும்னு தெரியலை. அதுக்குள்ளே எல்லாம் முடிச்சுக்கணும். பார்ப்போம். :))))
எல்லாவற்றுக்கும் மேல் அங்கே இருக்கையில் என் கணவருக்குத் திடீரெனக் குளிர் சுரம் வந்து உடம்பெல்லாம் தூக்கிப் போட்டு, மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு எப்படியோ போய்க் காட்டிட்டு வந்தோம். அது வேறே ஒரு வாரம் அனைவருக்கும் டென்ஷன், மன வருத்தம். பின்னர் வயிற்றுக்கோளாறு வந்து அதுவும் சரியாச்சு, (கை மருத்துவத்தினால்). டில்லிக்குத் தொலைபேசி விசாரித்த நண்பர்களுக்கும், இ- மெயில் மூலம் விசாரித்த நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. இங்கே பதினான்கு மணி நேரம் மின் வெட்டு. காலை ஆறு மணிக்கு வந்ததும் போன மின்சாரம் பத்து மணிக்கு வந்து, பனிரண்டுக்குப்போய்ட்டு இப்போத் தான் நாலு மணிக்கு வந்திருக்கு. எத்தனை நிமிடம் இருக்கும்னு தெரியலை. அதுக்குள்ளே எல்லாம் முடிச்சுக்கணும். பார்ப்போம். :))))
வாங்க, வாங்க! சோதனை மேல் சோதனைதான் உங்களுக்கு. எப்படியோ எல்லாம் நல்லபடியா சரியா போச்சு. நீங்க நலம்தானே!
ReplyDeleteஎல்லா கடமையும் முடிஞ்சு வயசான அப்பறம் கொஞ்சம் நிம்மதியா இருகாலாம்னு நெனச்சா அப்ப இந்த மாதிரி உடம்பு படுத்தல் எல்லாம் ஒன் பை ஒண்ணா வரும் போல இருக்கு. ஆனா, அந்த காலத்து மனுஷங்களுக்கு அறுபது வயசுல வரதெல்லாம் இந்த காலத்துல நாப்பது வயசுலேயே வந்துடறது. என்ன பண்றது. :) நிம்மதி, சந்தோஷம் எல்லாம்
கிடைக்கற போதே அனுபவிச்சுக்க வேண்டியதுதான் போல இருக்கு.
உடம்பு படுத்தறது கூட சரியா போய்டும் போல இருக்கு ஆனா இந்த பவர் கட் இப்படி படுத்தறதே!!!!!! இனி கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம் போல இருக்கு. :))
எல்லாரும் அல்வா குடுக்க வெயிட் பண்ணுவாங்க. நான் மட்டும் உங்ககிட்டேந்து அல்வா வாங்க வெயிட் பண்ணிண்டு இருக்கேன். :)))
மேடம், நீங்க நிதானமாவே ரெசிபி எழுதுங்க. எனக்கு ஒண்ணும் அவசரமே இல்லை.
இத்தனை அவதி அவசரத்திலும் எங்களையும் நினைவு வச்சிண்டு வந்தீங்களே
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. டெல்லியில் மின்சார நிலை எல்லாம் எப்படி?
ReplyDeleteநல்வரவு மீனாக்ஷி, சோதனை எல்லாம் ஒண்ணும் இல்லை; பொதுவா எல்லாக் குடும்பங்களிலேயும் நடக்கும் விஷயங்கள் தானே! :)))) நான் வெளியே சொல்லிக்கிறேன். பலரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக்கிறதில்லை. அதான் வித்தியாசம்.
ReplyDeleteபவர் கட் பத்தி ஒண்ணும் நிச்சயமாச் சொல்ல முடியலை. ஆங்காங்கே மக்கள் வெறியிலே மின்வாரிய அலுவலகங்களையும் துணை மின் நிலையங்களையும் தாக்கற அளவுக்குப் போயிருக்கு. :((((
அல்வா சீக்கிரமாக் கொடுக்கிறேன். :)))
வாங்க லக்ஷ்மி, சொந்தங்களை எல்லாம் எப்படிங்க மறப்பேன்?
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், டெல்லியில் சென்னை மாதிரிக் கொஞ்சம் பரவாயில்லை ரகம். :))) நாங்க இருந்தது குர்காவ், ஹரியானா மாநிலம். அங்கே பவர் இருந்தாத் தான் அதிசயம். இது இப்போ மட்டும் இல்லை; நாங்க குறைந்தது பத்துப் பதினைந்து வருடங்களாய்ப் பார்த்துக் கொண்டிருக்கோம். வீட்டுக்கு வீடு ஜெனரேட்டரும், ஹை பவர் இன்வெர்டரும் தான். எப்போ மின்சாரம் வரும்னு சொல்ல முடியாது. ஆனால் கரெக்டா மின்சார பில் மட்டும் வந்துடும். அதான் எப்படினு எனக்கு ஆச்சரியம். :)))))
ReplyDeleteநல்லவேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது, ரங்கனாதன் அருளால் இனி நல்லது நடக்கும். இது மாதிரி சமயங்களில் மன உறுதிதான் தேவை.
ReplyDeleteநல்லவேளை எல்லாம் நல்லபடியாக முடிந்தது, ரங்கனாதன் அருளால் இனி நல்லது நடக்கும். இது மாதிரி சமயங்களில் மன உறுதிதான் தேவை.
ReplyDeleteதிருவரங்கம் திரும்பியாச்சா?
ReplyDeleteகுளிர் ஆரம்பிக்க கட்டியம் கூறிவிட்டது. மாறுவது ஒத்துக்கொள்ள வில்லை போல! இப்போது மாமா நலமா....
உங்கள் மைத்துனர் உடல் நலம் தேறிவிட்டது தெரிந்து மகிழ்ச்சி.
உங்கள் எண்ணிற்கு தில்லி வந்ததும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். முடியவில்லை [கிடைக்கவில்லை!]
பவர் கட்.... தில்லியில் நிச்சயம் தமிழகம் அளவு இல்லை!
செய்திகள் அறிந்தேன். மகிழ்ச்சி.
ReplyDeleteசெய்திகள் அறிந்தேன். மகிழ்ச்சி.
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு தமிழகத்தை விட மோசமான மாநிலங்கள் இருக்கு . இங்க நிலை மோசமானாலும் அதுக்கு உண்மை காரணம் என்னன்னே தெரியாமா அரசாங்கத்தை திட்டறோம்.
ReplyDeleteஎத்தனை பேரு ஏ சியை உபயோகத்தை நிறுத்தி இருக்காங்க
இப்ப மாமா எப்படி இருக்கார். உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லையே
ReplyDeleteவாங்க திராச. அண்ணா, ரொம்பநாளாச்சு பார்த்து! :))வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteவாங்க வெங்கட், ஸ்ரீரங்கம் திரும்பியாச்சு. உங்க நம்பரைக் குறிச்சு வைச்சுக்க மறந்துட்டேன். அங்கே இருந்த இறுக்கமான சூழ்நிலையில் பேச முடியலை. :)))) இங்கே வரும்போது பார்ப்போம்.
ReplyDeleteகுளிர்னால எல்லாம் இல்லை. -டெம்பரேச்சரில் எல்லாம் இருந்திருக்கோம். இது ஏதோ வைரல் ஜுரம். அங்கே ஆஸ்பத்திரியில் எல்லாருக்கும் வந்திருக்கு. நல்லவேளையா நான் பிழைச்சேன். :))))
வாங்க ஜீவி சார், நன்றி.
ReplyDeleteவாங்க எல்கே, மத்தியத் தொகுப்பு மின்சாரம் ஆயிரம் மெகாவாட்டுக்கும் மேல் குறைச்சுட்டாங்க. அதோட குஜராத் தரதாச் சொல்றதையும் வாங்க விடாமல் மத்திய அரசு நன்மை பண்ணிட்டு இருக்கு. என்ன செய்யறது! :(
ReplyDeleteமாமாவுக்கு இப்போது உடல்நலம் தேவலை. சர்க்கரை அளவுதான் குறைஞ்சு போச்சு! :)))) சரி பண்ணிடலாம்.
உங்க மைத்துனர் உடல்நலம் தேறி வருவது குறித்து மகிழ்ச்சி.
ReplyDeleteமாமாவுக்கு இப்போ பரவாயில்லையா....
மின்சாரம் ரொம்பத் தான் படுத்தறது.என்ன பண்றதுன்னு தான் தெரியலை.
அப்புறம் முடியும் போது வந்து பார்க்கிறேன் மாமி.
மைத்துனர் நலம் பெற்று வருது அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteமின்சாரம்தான் படுத்துகிறது என்று தெரிகிறது.:(