நான் என்னமோ ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும் போகப் போறதாத் தான் நினைச்சேன். ஆகவே கையில் ஒரே ஒரு கைத்துண்டு மட்டும் வைச்சிருந்தேன். என்னை அழைச்சுட்டுப் போனவங்கஒரு ஆட்டோவைக்கூப்பிடவும் எனக்குத் திக்குனு இருந்தது. பைசா கூடக் கிடையாதே கையில். சரி அப்புறமாக் கணக்குப் பார்த்துக் கொடுத்திடலாம்னு மனசைத் தேத்திட்டு ஆட்டோவில் ஏறினோம். ஏறும்போது நாங்க மூணு பேர் இருந்தோம். எங்க காலனியிலேயே இருந்த பெண்மணி, நாங்க போன வீட்டுப் பெண்மணி, நான் ஆகிய மூணே பேர்தான். அவங்க போன வீட்டிலே இருந்தவங்க ஜாம்நகரிலேயே டிக்ஜாமில் வேலை செய்யறவங்க. பல வருடங்களாக ஜாம்நகரிலே இருக்காங்க. அவங்க வீட்டிலே மாமியார், மாமனார், பையர், மாட்டுப்பொண்ணு இருந்தாங்க. மாமனார் ஜாம்நகர் அருகே உள்ள ஹாப்பா என்னும் ஊரில் ரயில்வேயில் இருந்து ரிடையர் ஆனவர். எல்லாருமே அவரை ஹாப்பா மாமானு கூப்பிட்டாங்க. அங்கே வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு கிளம்பும்போது மாமியாரும், மருமகளும் கூடவே வந்தாங்க. சரி, வழியனுப்பறாங்கனு நினைச்சால், அவங்களும் நாங்க வந்த ஆட்டோவில் ஏறினாங்க. நம்ம வீட்டுக்குத் தான் வராங்களோனு நினைச்சால் இல்லையாம்.
அந்த மாமியாரின் தங்கையும் அதே ஊரிலே இருக்கிறதாலே அங்கே போறோமாம். அங்கிருந்து இன்னொரு மாமி டிக்ஜாமில் வேலை செய்யறவங்க வீட்டுக்குப் போறோமாம். அங்கிருந்து இன்னொருத்தர், இன்னொருத்தர்னு கிட்டத்தட்டப் பத்து வீடு ஆயிடுச்சு. ஆட்டோவிலே முதல்லே நாங்க மூணு பேர் இருந்தது அப்புறமா எட்டுப் பேர் ஆகவே எனக்கு முழி பிதுங்கியது. ஆனாலும் அதுவும் ஒரு ஜாலியாத் தான் இருந்தது. டிரைவர் பக்கத்திலே இரண்டு பேர் உட்கார, பின்னாடி மூணு பேருக்கு நடுவே இரண்டு பேர் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு உட்கார, கம்பியிலேஇரண்டு பேர் தொங்க, சாமியோவ்!!!!!!!!!!!!!! நல்லவேளையா எனக்கு நான் புதுசுங்கறதாலேயோ என்னமோ ஓர சீட் கொடுத்துட்டாங்க.
அதான் அப்படின்னா போற ஒவ்வொரு இடத்திலேயும் தேங்காய், வெற்றிலை,பாக்கு, பழம், பரிசுப் பொருள்னு சேர்ந்து போய் நான் பையும் கொண்டு போகாம அங்கேயே ஒருத்தர் வீட்டிலே பையை வாங்கிக் கொண்டு அதுவும் பத்தாம கையிலேயும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வரச்சே இரவு ஒன்பதரை மணி. வீட்டிலே எல்லாரும் நான் எங்கே போனேன்னு தெரியாமல் காலனியில் இருக்கும் வீட்டில் போய்ப் பார்த்துத் தேடி இருக்காங்க. அவங்களும் வரலைனு தெரிஞ்சதும் கொஞ்சம் ஆறுதல். அப்புறமா ஆட்டோவிலே நான் வந்து இறங்கினதும், கையிலேயும், பையிலேயும் சாமான்களைப் பார்த்ததும், நான் ஏதோ அவங்களோட ஷாப்பிங் போயிட்டு வந்திருக்கேன்னு நினைச்சுட்டு, இப்போ எதுக்கு இத்தனை சாமான்கள் வாங்கிட்டு வந்திருக்கேனு கேட்டாங்களே பார்க்கலாம்!
ஹிஹிஹிஹி

உங்க மடியில யாரும் உக்காரலியா லக்கிதான்
ReplyDeleteஓ இதுதான் காரணமா.நல்லதுதான்.
ReplyDeleteஇன்ங்ஆ ஃபோன் செய்து வாங்கோன்னாலும் மழை போடோ போடு என்று போட்டு அனைவரையும் அலைக்கழித்துவிட்டது.
உங்கள் அன்புவம் வெகு சுவாரஸ்யம்.
சரஸ்வதி பூஜை வாழ்த்துகள் கீதாமா.
Collection trip good
ReplyDeleteSuper collection pola Geetha maami. This time I went to Valli maa's home for kolu....:)) As usual urgent visit from office and back to office...:((
ReplyDeleteஜாம் நகரில் ஜாம் ஜாமென்று சுற்றி விட்டீர்கள் என்று தெரிகிறது.
ReplyDeleteஹா! ஹா! உங்க ஆட்டோ ரிக்க்ஷா சவாரி மாதிரி நானும் ஹைதிராபாத் லஷேர் ஆட்டோ ல போய் பாக்கலாம் நு போனோம் நானும் என் தோழியும், ஒரே சிரிப்பு. எல்லாம் ஐ டி காரங்க, சின்ன பசங்க எங்களை தவிர. தோழியை அம்மாஜி ஆக்கி என்னை ஆண்டிஜி ஆக்கிட்டார் ஆட்டோகாரர். 2 பேர் ஆட்டோக்கு பின் பக்கம் இருக்கற பொந்துல வேற !.போதாததுக்கு கூட்டம் சேர்ந்த உடன் ஆண்டிஜி அம்மா மடில உட்கார்ந்துக்கோங்கநாரே பாக்கணும். ஏன் நான் அவங்க மடில உட்கார நீ சொல்லலன்னு தோழி கேட்க அவ அவ்வளவு தான் சட்னி ஆகி காலியாயிடுவா என்றார். வீட்டுக்கு வந்தா எங்க ரெண்டு பேருக்கும் சரியான டோஸ் . சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சது. அது ஒரு அனுபவம் :))
ReplyDeleteகொலு ஷாப்பிங் ??!!!
ReplyDeleteஇங்கே தில்லியிலும் நல்ல கலெக்ஷன் தான்... ஒவ்வொரு வீட்டிலும் எதையாவது கொடுத்து விடுவார்கள். முதல் வருடம் தான் பை எடுக்காமல் போய் திண்டாட்டம். அடுத்த வருடத்திலிருந்து பை எடுத்துக்கொண்டே போய்விடுவார்! [தூக்கிக்கொண்டு வர நானும் கடைசியாய் போவேன்! :)]
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, நல்லவேளையா என்னோட மடியிலே யாரும் உட்காரலை. :))))) ஆனால் இந்த அனுபவத்தைக் கேட்ட என்னோட பொண்ணு அடுத்த வருஷம் எங்களோட வர ஆரம்பிச்சாளா! அவளை மடியிலே உட்கார்த்தி வைச்சுக்க வேண்டியதாச்சு. :))))
ReplyDeleteவாங்க வல்லி, நான் புதுசா வந்திருக்கேன்னு தெரிஞ்சும் அவங்க எல்லாரும் எனக்கும் அன்போடு வரவேற்புக் கொடுத்து அதே மாதிரி எல்லாரும் எங்க வீட்டுக்கும் வந்தாங்க. இரண்டு ஆட்டோக்களில், பதினாறு, பதினெட்டுப் பெண்கள் வந்தனர். :)))))) குழந்தைகள் தனி.
ReplyDeleteவாங்க திராச அண்ணா, கலெக்ஷன்னு சொன்னதும் ஆடிட் பண்ண கரெக்டா வந்துட்டீங்களே!:P:P:P:P
ReplyDeleteவாங்க சுபா, சூப்பர் கலெக்ஷன் தான். :)))) எங்க வீட்டுக் கொலுக்கு நீங்க வந்ததை நாங்களும் பேசிப்போம்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், அங்கே இருந்த ஆறு வருடங்களும் சூப்பர் கலெக்ஷன் தான். சூப்பர் ஊர் சுற்றல் தான். முதல் வருஷம் ஏற்பட்ட அனுபவத்திலே வீட்டை விட்டுக் கிளம்பும்போதே சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைச்சுட்டுப் போயிடுவேன். வந்ததும், எல்லாச் சுண்டலையும் போட்டு நவரத்தினக் குருமா! :))))) என்னோட சாப்பிடலாம் வாங்க பதிவிலே பாருங்க. இது நிஜம்மா நடந்தது.
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, இங்கேயும் அப்படித்தான். சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். பாடத் தெரிஞ்சவங்க பாடிட்டும் வருவாங்க. ஜாலியாத்தான் இருந்தது. சென்னை வந்ததுக்கு அப்புறம் அந்த நாட்களுக்காக ஏங்கி இருக்கோம்.
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, கொலு ஷாப்பிங்கெல்லாம் இல்லை. அங்கெல்லாம் மண் பொம்மைகளும் கிடைக்காது. எல்லாம் பேப்பர் மெஷ் பொம்மைகள் தான். அவற்றைத் தான் வாங்கி வைத்திருந்தேன். தண்ணீர் படாமல் ஜாக்கிரதையாக இருக்கணும். :))))
ReplyDeleteவாங்க வெங்கட், உங்களுக்குப் பொறுமை ஜாஸ்தி தான். கலெக்ஷனைத் தூக்கிட்டு எல்லாம் வர உதவி செய்திருக்கீங்களே. ஹூம், நம்ம ரங்க்ஸோ இல்லைனா பையரோ அதெல்லாம் வர மாட்டாங்க. நாங்களே தான் தூக்கிட்டு வருவோம். அதிலும் வீட்டு மெயின் கேட்டிலிருந்து வீட்டுக்குள்ளே வர அரை ஃபர்லாங் நடக்கணும். :)))
ReplyDeleteகீதா மாமி, சொளக்கியமா? ரொம்ப நாளாச்சு நான் பதிவு பக்கம் வந்து. கொலுக்கு நல்ல கலெக்ஷனா??
ReplyDeleteவாங்க ராம்வி, ரொம்ப மாசங்கள் ஆச்சே உங்களைப் பார்த்து. மற்ற நண்பர்கள் பதிவிலும் பார்க்க முடியலை. உடம்பு செளகரியமா இருக்கீங்க தானே! மற்றபடி வரவுக்கு நன்றி.
ReplyDeleteஇங்கே சில வீடுகளிலே கூப்பிட்டிருந்தாங்க. ஆனால் பெரிய கலெக்ஷன் எல்லாம் ஒண்ணும் இல்லை. :)))))
நல்ல விழாதான்.
ReplyDeleteஇங்கு கடைசிநாள் மட்டும் அயலில் நெருங்கிய வீடுகளுக்கு பிரசாதம் அனுப்புவோம்.