எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, October 17, 2012

பொம்மைகளைக் காணோமே!

எனக்கு ஆரம்பிச்ச கொலுவை நிறுத்த மனமில்லை.  அம்மா வீடு, மாமியார் வீடு இரண்டிலும் கொலு உண்டு.  வைச்சே ஆகணும்னு இருந்தேன்.  அங்கே, இங்கே விசாரிச்சு பொம்மைகள் கிடைக்கும் ஒரு கடையைப் பத்தி அலுவலக ஊழியரிடம் விசாரித்து வந்தார் நம்ம மறுபாதி.  சாயந்திரமா இரண்டு பேருமாக் கடைத்தெருவுக்குப் போனோம்.  ஒரே வீதி தான் கடைத்தெரு.  ஆனால் அங்கே கிடைக்காத சாமானே இருக்காது.  நண்பர் சொன்ன கடைக்குப் போய் பொம்மைகளைப் பார்த்தால் எல்லாம் குழந்தைங்க விளையாடற மாதிரியான பொம்மைங்க.  சப்ப்னு போய்த் திரும்பலாம்னு இருக்கிறச்சே என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம், எதிரே நடைபாதையில் ஒரு நடைபாதைக்கடையில் பலவிதமான பொம்மைகள்.  தெருவின் குறுக்கே பாய்ந்து ஓடினேன்.  அந்த பொம்மைக்கடையில் முதலில் என் கண்ணில் பட்டது யார்னு நினைச்சீங்க?

நம்ம நண்பர் தான்.  அவரைப் பார்த்ததுமே குதூகலம் பொங்கி வழிய எடுத்துத் தனியா வைச்சுட்டேன்.  பின்னர் ஒரு ராதா, கிருஷ்ணன் விக்ரஹம், அம்பாஜி(நம்ம ஊர் அம்மன் தான் அங்கேயெல்லாம் மரியாதையோட அம்பாஜி ஆயிட்டாங்க) விக்ரஹம் ஒண்ணு, பள்ளி கொண்டவர் இவை கிடைத்தன. எனக்குப் புதையலே கிடைச்சாப்போல இருந்தது.  எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு வந்தோம்.  எங்க பொண்ணு விளையாடத் துணியால் பஞ்சு அடைக்கப்பட்ட பொம்மைகள் பல உருவங்களில் பெரிதும், சிறிதுமாக இருந்தன.  எல்லாமே ஆண் பொம்மைகள்.  அதோடு ஒன்றிரண்டு மரப்பாச்சிகளும் கிடைத்தன.  இந்த ஆண் பொம்மைகளில் எல்லாம் டிரஸ் தைத்து அலங்கரிக்கப் பட்டு இருக்கும்.  அதிலே ஒரு பொம்மைக்குப் புடைவை கட்டிப் பெண்ணாக மாற்றினேன்.  மற்ற பொம்மைகளில் சின்னது ஒண்ணு எங்க பொண்ணு தூங்கறச்சே கூடப் பக்கத்திலே இருக்கும்.  அதை வைத்துக்கொண்டு வாயில் விரல் போட்டுப்பாள்.  அதை அவளிடமிருந்து பிரிக்க முடியாது.  அதை விட்டுட்டு, நல்லதனமாச் சொல்லி மற்ற பொம்மைகள், இன்னும் அவள் வைத்திருந்த, கார், ஏரோப்ளேன் போன்ற விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டன.

ஊரிலிருந்து சாமான்கள் கொண்டு வந்திருந்த கள்ளிப்பட்டி, ஜாதிக்காய்ப் பெட்டிகள் படியாக மாறின.  கடைசிப் படிக்கு ஒரு சின்ன பெஞ்ச் உதவியது.  நம்ம மறுபாதியோட ஜரிகை வேஷ்டியைப் போட்டுப் படிகளை மூடியாச்சு.  பொம்மைகளை வைச்சாச்சு.  கலசம் வைக்கவில்லை.  கலசம் வைத்தால் கொலுப்படியைத் தொட முடியாது.  அதோடு பூஜையும் செய்து தினம் இருவேளை நிவேதனமும் பண்ணணும். சின்னக் குழந்தையை வைச்சுக்கொண்டு எதுவும் முடியாது.  மேலும் நான் பொம்மையைப் படியில் வைக்க, எங்க பொண்ணு அதைக் கீழே வைக்கனு மாறி மாறிச் செய்து கொண்டிருந்தோம்.  அவள் கிட்டே (இரண்டு வயசு முடிஞ்சிருந்தது) எப்படிப் புரிய வைப்பது.  எல்லாம் உம்மாச்சி, உம்மாச்சினு சொல்லி நான் படியில் வைக்க, அவளும் உம்மாச்சி, உம்மாச்சினு சொல்லிக் கொண்டே கீழே இறக்கிடுவாள்.  எப்படியோ சமாளித்துக்கொண்டு வைத்துவிட்டு அந்த ஸ்டோர் ரூம் கதவைச் சமையலறைப்பக்கமாய்ச் சார்த்தித் தாழ்ப்பாளிட்டேன்.  குழந்தை திறந்து கொண்டு போகாமல் இருக்கணுமே;  அதுக்குத் தான்.  ஆனால் குழந்தையைத் தான் என்னால் தடுக்க முடிந்தது.  இன்னொரு விருந்தினர் அழையா விருந்தாளி அவரைத் தடுக்க முடியவில்லை.

மறுநாள் காலையில் ஸ்டோர் ரூமிலிருந்து காப்பிக் கொட்டை வறுத்து அரைத்து எடுக்கணுமேனு கதவைத் திறந்து உள்ளே போனேன்.  குழந்தையும், அவ அப்பாவும் நல்ல குறட்டை.  உள்ளே போன நான் கத்தின கத்தலில் இரண்டு பேரும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர்.  நானோ அதன் பின்னர் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனேன்.  பொம்மைகள் ஒன்றைக்கூட காணோம்.  பிள்ளையார் மட்டும் கடைசிப்படிக்குக் கீழே உருண்டு கிடந்தார்.  மற்றவை???

21 comments:

  1. பழைய நினைவுகள்?!

    எலிதானே? அனேகமா பெருச்சாளியா இருக்கணும்!! அல்லது பூனை!

    ReplyDelete
  2. !!!???korangu??? peruchaali??

    ReplyDelete
  3. சஸ்பென்ஸ் தாங்க முடியலை.... மாமி என்ன ஆச்சு கொலு பொம்மைகளுக்கு வடை சுண்டல் எனக்கு தான்

    ReplyDelete
  4. மற்றவை???

    இப்படியா சஸ்பென்ஸ் கொடுப்பீங்க!!!!

    ReplyDelete
  5. மர்மக் கதையா?
    அம்பாஜிஹிஹிஹிஹி.
    காபிக்கொட்டை வறுத்து அரைத்து... ஏதோ ஒரு யுகத்துல அப்படி நடந்தது ஞாபகம் வருது.

    ReplyDelete
  6. அடடா.... என்ன ஆச்சு பொம்மைகள்... சீக்கிரம் சொல்லிடுங்க!

    ReplyDelete
  7. ஆஹா, ஸ்ரீராம்! :))))

    ReplyDelete
  8. ஹிஹிஹி, ஜெயஸ்ரீ, :D

    ReplyDelete
  9. சுபாஷிணி, இல்லைனா வந்திருப்பீங்களா? :P

    ReplyDelete
  10. ராஜராஜேஸ்வரி, ஹிஹிஹி

    ReplyDelete
  11. அப்பாதுரை, அதே, அதே!

    அது சரி, அது ஏன் அம்பாஜிக்கு ஹிஹிஹி? :P:P:P:P

    காப்பிக்கொட்டையை வறுத்து அரைத்தது 95 வரை தொடர்ந்தது. அப்புறமாத் தான் விட்டோம். மெஷினையும் இப்போ ஸ்ரீரங்கம் வரதுக்கு முன்னாடி தான் விலைக்குக் கொடுத்தோம். ஒரு ஃபோட்டோ எடுத்து வைச்சுக்கிறேன்னு சொல்லி இருந்தேன். அதுக்குள்ளே அவசரமாப் போட்டுட்டார். :P:P:P:P

    ராஜஸ்தானிலே இருக்கிறச்சே எழுபதுகளில் சாம்பார் பொடி கூட இந்த மாதிரித் தான் கையால் அரைச்சிருக்கேன். :))))

    ReplyDelete
  12. ஏமாந்தா ஜி போடும் வடக்கத்தி வழக்கம் சிரிப்பு தான். என்னோட வளர்ந்த ஒரு சேட்டுப் பொண்ணு எங்க பாட்டியை பாட்டிஜினு தமிழ்ல கூப்பிடும் போது நிறைய கிண்டல் செஞ்சிருக்கேன்.

    கிராமங்களில் (திருக்கருகாவூர், வாசுதேவநல்லூர், கீழத்தஞ்சாவூர் :-) பார்த்தது தான் காபிக்கொட்டை வறுத்து அரைக்கும் பழக்கம். நிறைய நினைவுகளைக் கிளறியது. படு அதிகாலையில் கொல்லையில் ஆள் பால் கறந்து கொண்டு வர, ஸ்டோர் ரூம் (இதுக்கு ஒரு பெயர் உண்டு, சட்டென்று தோன்றவில்லை, ரேழி?) பக்கம் கர்ர்ர்ரென்ற கைப்பிடியைச் சுற்றி அரைக்கும் சப்தம், தொடரும் கமகமவென்று காபி வாசனை.. ஹ்ம்ம்ம்.

    சரி, பிள்ளையார் மர்மம் கண்டுபிடிக்க சிஐடி வந்தாச்சா?

    ReplyDelete
  13. பொம்மைகளை யாரு தூக்கிண்டு போவார்கள். ஜன்னல் வச்ச ரூமா. இல்ல கதௌ வழியக் குரங்கு வந்தாலும் எப்படி அத்தனையையும் எடுத்துண்டு போகும்.சரியான சஸ்பென்ஸ்:)

    ReplyDelete
  14. //ஏமாந்தா ஜி போடும் வடக்கத்தி வழக்கம் சிரிப்பு தான்.//

    நீங்களே அப்பாஜி தானே பலருக்கும்! :))))))

    ReplyDelete
  15. //படு அதிகாலையில் கொல்லையில் ஆள் பால் கறந்து கொண்டு வர, ஸ்டோர் ரூம் (இதுக்கு ஒரு பெயர் உண்டு, சட்டென்று தோன்றவில்லை, ரேழி?) பக்கம் கர்ர்ர்ரென்ற கைப்பிடியைச் சுற்றி அரைக்கும் சப்தம், தொடரும் கமகமவென்று காபி வாசனை.. ஹ்ம்ம்ம். //

    ம்ம்ம்ம் காமிரா உள்னு சொல்வாங்கனு கேள்விப் பட்டிருக்கேன். சரியா? கீழத்தஞ்சாவூரிலே நானும் பார்த்திருக்கேன். எழுபதுகளிலே. :))))))

    ReplyDelete
  16. வாங்க வல்லி. இன்னிக்குத் தெரிஞ்சு போயிடும். அப்பாதுரை சொன்னாப்போல சி.ஐ.டி. வைச்சுக் கண்டு பிடிச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் :)))))

    ReplyDelete
  17. காமிரா உள். exactly! thanks.

    ReplyDelete
  18. பாலாஜி என்று என் டீமில் ஒருவன் வேலை பார்த்தான். அவனை வடக்கத்திகள் பாலாஜிஜி என்பார்கள்; நாங்க அதை பாலோ பண்ணி பாலாசீசீனு கூப்பிட ஆரம்பிச்சோம்.

    ReplyDelete
  19. கதவு வழியா குரங்கு வருமா? என்னங்க வல்லிசிம்ஹன் இப்படி பயமுறுத்துறீங்க?

    ReplyDelete
  20. மறு வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி அப்பாதுரை. :))))

    ReplyDelete
  21. யாரு எடுத்தார்கள் குரங்கா? அடுத்ததில் தெரிந்து கொள்வோம் :))

    ReplyDelete