திருச்சியிலே பெய்தாலும் ஶ்ரீரங்கத்திலே அதிகமாய் மழை பெய்யாது என வெங்கட் நாகராஜ் கூறினார். இன்னொருத்தரும் இந்தப் பெரிய பெருமாள் எல்லாக் கோயில் மூர்த்திகளையும் விடவும் அதிகம் மூத்தவர் எனவும், மிகவும் வயதாகிவிட்டதால், (ஹிஹிஹி), பெருமாளுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கும்னு சொன்னாங்க. சென்னையிலே மழை சக்கைப் போடு போடுதுனு கேள்விப் பட்டேன். மற்ற இடங்களிலும் பெய்யுது. ஆனால் இங்கே நேற்று வரைக்கும் அத்தனை மழை இல்லை. சும்மா, ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பெய்யும், அப்புறமா விட்டுடும். இப்போ நேத்திக்கு ராத்திரியிலே இருந்து விடாமல் தூற்றலா இருக்கு. ரங்கநாதர் என்ன செய்யறார்னு தெரியலை. ஏற்கெனவே தண்ணீருக்கு நடுவே இருக்கார். இப்போக் குளிர் தாங்காமக் கம்பளி போர்த்திட்டுப் படுத்திருப்பாரோ? தீபாவளிக்கு ஜாலி அலங்காரம்னு பண்ணிப்பாராம். அன்னிக்குப் போக முடியுமானு தெரியலை. பார்க்கலாம். இப்போத் திருவெள்ளறைக் கோயிலின் முடிவுப் பகுதியைப் பார்க்கலாம்.
ஒரு முறை மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் பேசிக்கொண்டிருக்கையில் லக்ஷ்மி தேவியின் கருணையை மிகவும் பாராட்டிய விஷ்ணு, லக்ஷ்மிக்கு வேண்டிய வரங்களைக்கேட்டுப்பெறலாம் எனச் சொன்னார். லக்ஷ்மி மஹாவிஷ்ணுவின் மார்பில் நித்யவாஸம் செய்வதே தனக்குப் பெரும்பேறு எனவும், வேறு வரம் தேவையில்லை எனவும் கூறுகிறாள். பின்னர் பாற்கடலில் தான் பிறந்ததால் தேவர்களைக் காட்டிலும் தனக்கே அதிக உரிமை தர வேண்டும் என்கிறாள். பெருமாளோ, பாற்கடலில் தனக்கு மட்டுமே சர்வ அதிகாரம் எனவும் தற்சமயம் பாற்கடலில் மட்டுமில்லாமல் எங்குமே மகாலக்ஷ்மிக்கு அதிக உரிமையைத் தர இயலாது எனக் கூறிவிடுகிறார். ஆனாலும் பூமிக்குச் செல்லும்படியும் அங்கு சிபிச் சக்கரவர்த்திக்கு விஷ்ணு தரிசனம் கொடுக்க இருப்பதாகவும் அப்போது லக்ஷ்மியின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் கூறுகிறார். இப்போது சிபிச் சக்கரவர்த்தியைப் பார்ப்போமா?
சிபிச் சக்கரவர்த்தி ஆண்டு வந்த காலத்தில் ஒரு சமயம் ராக்ஷஸர்களின் தொல்லை மிக அதிகமாக இருக்க அவர் தன் படைகளோடு அவர்களை அழிக்கக் கிளம்புகிறார். அப்போது ஒரு வெள்ளைப் பன்றி அவர்கள் முன் தோன்றிச் செல்லும் வழியில் பெரும் தொந்திரவு கொடுத்தது. படைவீரர்களை அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்ல எவராலும் அது இயலாமல் போகவே மன்னன் தானே சென்று அதைப் பிடிக்க முற்பட்டான். பன்றி இவருக்குப் போக்குக் காட்டிவிட்டு ஒரு மலை மீதுள்ள புற்றில் மறைந்து விட்டது. அரசன் மலையைச் சுற்றிச் சுற்றி வந்தான். அப்போது ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் தவம் செய்வதைக் கண்டான். அவரை வணங்கி அவரிடம் விஷயத்தைக் கூறினான் சிபிச் சக்கரவர்த்தி. மன்னன் கூறியதைக் கேட்ட மார்க்கண்டேய மஹரிஷி, "மன்னா, நீ மிகவும் அதிர்ஷ்டக் காரன். சாக்ஷாத் அந்த மஹாவிஷ்ணுவே உ;னக்கு சுவேத வராஹமாகக் காட்சி அளித்திருக்கிறார். அந்த நாராயணனின் தரிசனத்திற்கு நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். நீ எளிதாக அடைந்து விட்டாய். பன்றி மறைந்த புற்றுக்குப்பாலால் அபிஷேஹம் செய்வாய்!" என ஆலோசனை கூறினார்.
மன்னனும் அவ்வாறே அபிஷேஹம் செய்ய மஹாவிஷ்ணுவும் தோன்றி அனைவருக்கும் அருள் பாலித்தார். பின்னர் அப்போது வந்த மஹாலக்ஷ்மியிடம் நீ விரும்பியபடி இந்தத் தலத்தில் சர்வ அதிகாரத்தையும் பெறுவாய். நான் அர்ச்சாரூபத்தில் இருந்து அருள் பாலிப்பேன் எனக் கூறுகிறார். பின்னர் சிபிச் சக்கரவர்த்தி ராவணன் முதலான அரக்கர்களையும் அழிக்க எண்ணிப் படை திரட்ட மார்க்கண்டேயரும், பெருமாளும் மஹாவிஷ்ணுவே ராம அவதாரம் எடுத்து இந்தக் காரியத்தை நிறைவேற்றப் போவதாயும் சிபிச் சக்கரவர்த்தியைப் பெருமாளுக்குக் கோயில் கட்டி சேவை செய்யும்படியும் கூறுகின்றனர். மன்னனும் அவ்வாறே பெருமாளுக்குக் கோயில் கட்டிவிட்டு அவருக்கு நித்ய சேவை செய்வதற்காக 3,700 குடும்பங்களையும் அங்கே கொண்டு வந்து குடியேற்றுகிறான். ஆனால் அந்த ஊருக்கு வரும் வழியிலேயே ஒருவர் இறந்துவிட, பெருமாள் அவனிடம், இறந்தவருக்குப் பதிலாகத் தானே அந்தக் குடும்பத்தில் ஒருவராக இருப்பதாய் வாக்குக் கொடுக்கிறார். 3,700 குடும்பங்களுக்கும் குறைவு இல்லாமல் பார்த்துக் கொள்வதாகவும் சொல்கிறார். இப்போது இந்தக் குடும்பங்களில் பத்து அல்லது பதினைந்து குடும்பஙக்ளுக்குள்ளாகவே இருக்கின்றனர். நாங்கள் சென்ற போது ஜேஷ்டாபிஷேஹம் நடந்திருந்த மறுநாள். பெருமாள் தைலக்காப்புச் சார்த்தப்பட்டு நாங்கள் போன அந்தப் பதினோரு மணிக்கே பொது தரிசனம் கொடுக்கத் தயாராக ஆகி இருந்தார். நிவேதனமாகப் பெரிய பெரிய அளவில் அன்னப்பாவாடைகள் சார்த்தப்பட்டு எல்லாருக்கும் விநியோகம் செய்தார்கள். பொதுவாகப் பெருமாள் கோயில்களிலேயே பட்டாசாரியார்கள் கோயிலின் வரலாற்றையும், கோயிலின் பூர்வ கதைகள் இருந்தால் அதையும் சொல்வதோடு தரிசனம் பண்ணி வைக்கையிலும் சிரசு முதல் திருவடி வரை நன்கு காட்டித் தரிசனம் செய்து வைப்பார்கள். இந்தக் கோயிலும் அது போல் என்றாலும் அதைவிடவும் மேலாக வரவேற்புக் கிடைத்தது. நல்ல சுகமான தரிசனம். அப்போது தான் இந்தக் கதையையும் கூறி இப்போது அவர்கள் பத்துப் பதினைந்து பேர் தான் இருப்பதாகவும் கூறினார்கள். சிதம்பரம் தீக்ஷிதர்கள் போல் இவர்களும் தனிக் குடும்பமாக அவர்களுக்குள்ளேயே எல்லாவிதமான சம்பந்தங்களும் வைத்துக்கொள்வதாகவும் கூறினார்கள்.
இங்கே தாயார் செங்கமலவல்லித் தாயார் மூலஸ்தானத்திலேயே காட்சி கொடுக்கிறார். திருவிழாக் காலங்களில் பெருமாளுக்கு முன்பாகப் பல்லக்கில் எழுந்தருளுவார். இந்தக் கோயில் பிரகாரத்தின் தெற்குப் பக்கம் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி கேட்கும். கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளதும் ஒரு விந்தையான செய்தி. கோபுரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டாம் எனக் கட்டளை எனவும் கூறுகின்றனர். இத்தோடு ஊர் சுற்றல் முடிந்தது. :)))
கோயிலை பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.
ReplyDeleteஆஹா... இன்னிக்கு உங்க பதிவில் என் பெயரும்! :)
ReplyDeleteநிறைய தகவல்கள் பகிர்ந்ததற்கு நன்றி.
நிரைய தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
ReplyDeleteபல தகவல்கள்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...
நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…
வாங்க கோவை2தில்லி, வருகைக்கு நன்றி.
ReplyDeleteவாங்க வெங்கட், உங்க சந்தோஷம் எனக்கும் மகிழ்ச்சியைத் தருது. இந்தப் பதிவில் தான் வாய்ப்புக் கிடைத்தது உங்களைச் சொல்ல.:)))))))
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, வரவுக்கு நன்றி.
ReplyDeleteவாங்க திண்டுக்கல் தனபாலன், உங்க பதிவுக்குக் கட்டாயமாய் வரணும். கிடைக்கும் நேரத்துக்குள் நாளைக்குள்ளாக வரேன். வலைச்சரம் அறிமுகம் செய்ததை எனக்குத் தெரியப் படுத்தியதுக்கு நன்றி. உங்களோட முதல் வருகைக்கும் நன்றி.
ReplyDeleteகோவிலைப்பற்றிய அருமையான தகவல்கள்.நல்ல விஷயங்களை தெரியப்படுத்தியதற்கு நன்றி மாமி.
ReplyDeleteகோவில் போட்டோ ஏதோ பாதிதான் பிரசுரம் ஆகியிருக்கு போல இருக்கே என்று நினைஹ்த்துப் படித்தால் அப்புறம்தான் தெரிகிறது. என்ன DD இப்போதான் முதல் முறை இங்கு வருகிறாரா? ஆன்மீகப் பயணப் எல்லாம் வந்து கொண்டிருக்கிறாரே...! ஆச்சர்யம். நேற்று முழுதும் மின்வெட்டு!
ReplyDeleteOMG...! எப்படியும் இம்போசிஷன் எழுதவேண்டி இருக்கும்.. நினைத்து நினைத்து நினைத்து நினைத்து...!
ReplyDeleteவாங்க ராம்வி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றிம்மா.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், கோபுரத்தை மட்டும் தனியா எடுத்த படம் அது! :)))
ReplyDeleteடிடி இந்த எண்ணங்கள் பதிவுக்கு இப்போத் தான் வரார்னு நினைக்கிறேன். ஆன்மிகப் பயணத்திலே பார்த்த நினைவு இல்லை. கண்ணனைக் காணத்தான் வருவார். :)))))
OMG...! எப்படியும் இம்போசிஷன் எழுதவேண்டி இருக்கும்.. நினைத்து நினைத்து நினைத்து நினைத்து...!//
ReplyDeleteஅது!!!! அந்த பயம் இருக்கட்டும். :)))
ஆன்மீகப் பயணம் கூட இம்பொசிஷன் எழுதணும். என்ன எழுதி இருக்கீங்கனு பாருங்க. :)))))
கோயிலைப்பற்றி நிறையத் தெரிந்துகொண்டோம்.
ReplyDeleteசிதம்பரம் தீக்ஷிதர் - என்ன கதை?
ReplyDeleteவாங்க அப்பாதுரை, புரியலை, உங்க கேள்வி. குழப்பம். :)))
ReplyDeleteதீக்ஷிதர்களின் வரலாறு என்றால் ஆன்மீகப் பயணம் பக்கத்தில் சிதம்பர ரகசியம் தொடரில் தீக்ஷிதர்கள் குறித்த பதிவைப் பார்க்கவும். இல்லைனா கொஞ்சம் விளக்கமாய்க் கேளுங்கள்.
ReplyDeleteஅந்தப் பதிவைப் படித்த நினைவு. திரும்பத் தேடிப் படிக்கிறேன். தீக்ஷிதர்களும் சிவசேவை செய்வதற்காக நியமிக்கப்பட்டவர்களா? பெருமாள் போல் சிவனும் தீக்ஷிதர் வம்சத்தில் சேர்ந்து கொண்டாரா.. இப்படியாகக் கேட்க நினைத்துச் சரியாகக் கேட்கவில்லை. மன்னிக்கவும்.
ReplyDelete//சென்னையிலே மழை சக்கைப் போடு போடுதுனு கேள்விப் பட்டேன். //
ReplyDeleteவெளியே இடி, மின்னல் எல்லாம் எக்ஸ்ட்ரா வேறே! அம்பத்தூரில் எப்படியோ, தெரிலே!
Interesting information! It's a pity it rains so less in Srirangam... Thanks to Rangan!
ReplyDeleteவாங்க ஜீவி சார், ஆவடி, அம்பத்தூரிலே நல்ல மழைனு தொலைக்காட்சி செய்தி. அதோட அண்ணா வேறே வரதா இருந்தது. மழைகாரணமா ட்ரிப் கான்சல் பண்ணினார். :))))
ReplyDeleteவாங்க மாதங்கி, நீங்க இந்த ஊர்க்காரர். நீங்க தான் செய்தியை உறுதி செய்யணும். :))))
ReplyDelete