எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, November 10, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது! தொடர்ச்சி


லதாவின் கல்யாணத்திற்காகப் பார்த்துப் பார்த்து சீர் வரிசைகளை வாங்கி  இருந்தாள் ராதா.  ஆனாலும் அவை அனைத்தும் ராதாவின் தூண்டுதலால் வாங்கியது என்பதை லதா ஒத்துக்கொள்ளாததோடு அகிலாண்டத்திடமும் சொன்னாள்.  அண்ணா பார்த்து வாங்கினால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும் என்றோ அண்ணா தான் இதை வாங்கணும்னு சொல்லி இருப்பார் என்றோ ஏதேனும் சொல்லி ராதாவின் முக்கியத்துவத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்தாள்.   ராதா கல்யாண வேலைகளை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ததுக்குக் கூட அவள் மத்தவங்க கிட்டே நல்ல பேர் வாங்கறதுக்காக இப்படி எல்லாம் நடந்து கொள்வதாய்க் கூறினாள்.  மொத்தத்தில் ராதாவுக்கு எவ்விதத்திலும் நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக இருந்தாள்.  ரம்யாவைக் கண்டாலே ஆகவில்லை அவளுக்கு.  ஏனோ இனம் தெரியாத பொறாமை வந்தது அவளைக் கண்டால்.  ஆகவே தன் கல்யாணத்தில் ரம்யாவிற்குப் பட்டுப்பாவாடை எடுப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தாள்.  ஆனால் அகிலாண்டம் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்துவிட்டாள்.  இந்த அம்மா ஏன் ராதாவின் பெண்ணிடம் இத்தனை பாசமாக இருக்கிறாள் என லதாவுக்குக் கோபம் வந்தது.  இவள் பிறக்கலை என்றால் எனக்கு இன்னமும் கிடைத்திருக்குமே என்ற எண்ணத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.

கல்யாணம் ஆகிப் போன லதா தன் புக்ககத்து மனிதர்களிடமும் மன்னியான ராதாவைப் பற்றி நல்ல வார்த்தையாகக் கூறவில்லை என்பது அங்கே போன இரண்டொரு முறைகளிலேயே ராதாவுக்குப் புரிந்து விட்டது.  ஆகவே அங்கே செல்வதையே தவிர்த்தாள் அவள்.  ரம்யாவும் வளர்ந்து வந்தாள்.  ஓரளவு நன்றாகவே படித்தாள் என்று சொல்லலாம்.  அவள் படித்து முடித்ததும் வேலைக்குப் போக முயன்ற போது அகிலாண்டத்துக்கு அது இஷ்டம் இல்லை.  தன் பெண் பேருந்திலும், ரயிலிலும் அடிபட்டு வேலைக்குச் செல்லவேண்டுமா!  அவள் சம்பாதித்துத் தான் குடும்பம் நடக்கணுமா!  இந்த ராதாவுக்கு ஏன் இப்படிபுத்தி போகிறது என்றெல்லாம் யோசித்தாள்.  அதைத் தடுக்கவும் முயன்றாள்.  ஆனால் ரம்யாவுக்கு நல்ல வேலையாகக் கிடைக்கவே சந்துருவுக்கு அதை விட இஷ்டமில்லாமல் அவளை வேலைக்குப் போகச் சொன்னான்.  வேலைக்குப் போய் முதல் மாதச் சம்பளத்திலும் கூடப் பாட்டி என நினைத்த அகிலாண்டத்துக்கே முன்னுரிமை தந்தாள் ரம்யா.  ரத்தபாசம் என்பதால் இயல்பாக வந்துவிடும் போலிருக்கு;  நாம் என்ன ஆனாலும் இந்த வீட்டில் தனி தானே என்ற எண்ணம் தோன்றியது ராதாவுக்கு.

நாள் ஆக, ஆக, தனக்கென ஒரு குழந்தை இல்லையே என்ற எண்ணம் ராதாவை உருக்கியது.  அவள் உடலும், உள்ளமும் உருகிக் கொண்டு ரம்யாவின் மேல் உள்ள வளர்த்த பாசத்தைக் காட்டினாலும் அவள் எதிர்ப்பைக் கண்டு மனம் நொந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டி வந்தாள்.  அப்போது தான் ரம்யா தன் உடன் வேலை பார்க்கும் ஒரு இளைஞனை விரும்புவது அவள் தோழி வனிதா  மூலம் தெரிய வந்தது.  உடனே அந்தத் தோழியையே அவள் அம்மா மூலம் விசாரிக்கச் சொல்லிச் சந்துருவின் காதுக்கும் தெரியப் படுத்தினாள் ராதா.  ராதா தனக்காக இத்தனையும் செய்தும் அவளை உதாசீனம் செய்தாள் ரம்யா.  சின்ன வயசிலே என்னைப் பாடாய்ப் படுத்தி காலங்கார்த்தாலே எழுப்பி உட்கார வைத்து......ஹூம் இவளும் ஒரு அம்மாவா!  எல்லா அம்மாக்களும் இப்படித்தான் இருக்காங்களா என்ன! என்னைப் பெத்த அம்மாவானா என்னை எத்தனை செல்லமா வளர்த்திருப்பாள்!  எனக்கு நல்லதுனு நினைச்சு அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் பண்ணச் சொல்றாளே!  இப்போக் கூட என்னைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணி அனுப்பிட்டா  அவளுக்கு வசதினு தானே நினைக்கிறா.  இருக்கட்டும், இந்தக் கல்யாணத்தைச் சாக்காக வைத்தே இவளை நான் ஒரு வழி பண்ணிடறேன்.  எல்லார் முன்னாலேயும் என் அம்மா யார்னு சொல்ல வைக்கிறேன்.  ரம்யாவுக்கு ஆத்திரம் பொங்கியது.  எனக்கு ஏன் இந்த நிலைமைனு மனம் கலங்கிப் போனாள்.

ஆனால் அதற்காகத் தான் காதலித்த நபரை விட்டு விட்டு வேறுஒருத்தனை மணக்கவும் இஷ்டப் படவில்லை.  ஆகையால் கல்யாண ஏற்பாடுகளுக்கு எல்லாம் வாய் மூடிச் சம்மதம் தெரிவித்தவள்.  கல்யாண நாள் நெருங்க, நெருங்க ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள்.  அது தான் ராதா தனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க அம்மா என்ற முறையில் மணமேடையில் இருக்கக் கூடாது என்பதே.  அதற்குப் பதிலாக சித்தப்பா, சித்தி இருக்கட்டும்.  இல்லைனா அப்பாவான சந்துருவே தனியாகக் கல்யாணம் பண்ணி வைக்கட்டும்.  என்ன ஆனாலும் ராதா அந்தக் கல்யாணத்தில் பங்கெடுக்கக் கூடாது.  அப்படிப் பங்கெடுத்தால் தான் தன் காதலனோடு ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக் கொள்வதாய்ச் சொல்லி விட்டாள்.  ராதாவுக்குக் கண்ணீர் பொங்கியது.  என்ன தான் மனோதிடம் இருந்தாலும் ரம்யாவின் வாயிலிருந்து இப்படி ஒன்று வரும் என எதிர்பார்க்கவில்லை.  அகிலாண்டத்திடம் ஓடினாள்.  ரம்யாவின் விருப்பத்தைச் சொல்லி அவளைச் சமாதானம் செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். ஆனால் அகிலாண்டமோ உள்ளூர சந்தோஷம் கொண்டவளாகவே தெரிந்தது.

"ஆமாம், அவள் சொல்றது சரிதானே, நீ தான் மலடியாச்சே.  உன் கையாலே தாரை வார்த்தால் நாளைக்கு அவங்க குடும்பம் வாரிசில்லாமல் போயிட்டா?  சின்னப் பெண்ணாக இருந்தாலும் அவள் கோபத்திலே சொன்னாலும் சொன்னது சரிதான்."

"அவளுக்கு உண்மை தெரியாது அம்மா.  ஏதோ ஆத்திரத்தில் சொல்கிறாள்."  ராதா மீண்டும் கெஞ்சினாள்.

"அவளுக்கு ஏன் உண்மை தெரிய வேண்டும்!  இப்படியே இருந்துட்டுப் போகட்டுமே. உனக்கு என்ன!  நீ கல்யாணத்திலே என்ன பண்ணப் போறே.  பேசாம ஒரு மூலையிலே இருந்துண்டு உன்னை நமஸ்காரம் பண்ணினா ஆசீர்வாதம் பண்ணிக்கோ. அவ்வளவு தான்.  உன் ஓர்ப்படி தான் கன்யாதானம் பண்ணட்டுமே!"  என்றாள்.

ராதாவின் நிலைமையைப் பார்த்துக் கவலையுற்ற சந்துரு என்ன விஷயம் என விசாரிக்கப் போகத் தம்பி மூலம் விஷயத்தைத் தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைந்தான்.  இனியும் தான் சும்மா இருக்கக் கூடாது என எண்ணிக் கொண்டு ரம்யாவைத் தனியாகப் பார்த்து விஷயங்களைச் சொல்ல ஏதுவாக எழுதப் பட்டிருந்த டயரிக் குறிப்புகளைக் கொடுத்தான்.
*********************************************************************************

அத்தனையையும் படித்த ரம்யா தான் எவ்வளவு சுயநலமாக நடந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தாள்.  ராதா உண்மையில் நாத்தனாரான தனக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறாள் என்பதும் அவள் மனக்கண்களில் தோன்றியது. தன் தாய் செய்தது சரியில்லை என்பதும் அவள் மனதில் உறைத்தது.  தாய்க்குத் தன் தவறும் புரிய வேண்டும்.  அதே சமயம் இந்த விஷயம் தெரிந்த ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியவும் கூடாது.  ராதா தன் அம்மா இல்லை என்ற விஷயம் யாருக்கும் தெரியாமலே போகட்டும். அதற்குத் தான் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்டாள்.


அடுத்த பதிவிலே முடிச்சுட மாட்டேன்! :))))

17 comments:

  1. சஸ்பென்சைத் தொடரும் அப்ரோச் நல்லா இருக்கு - திடீர்னு வர டைரிக் குறிப்பு கொஞ்சம் சினிமாத்தனமா இருந்தாலும்.

    (கதையை என்னாட்டம் மறந்துட்டீங்களோனு நெனச்சேன் - விடாதீங்க, முடிச்சிடுங்க. நல்ல கதைத்தளம்)

    ReplyDelete
  2. 'இங்கே' சுட்டி இல்லேனு சொல்லுதே??

    ReplyDelete
  3. அடுத்த பதிவிலே முடிச்சுட மாட்டேன்! :))))


    முடிக்காதீங்க ...தொடருங்க .. கதை எங்கேயோ இழுத்துக்கொண்டு போ..கிறது !

    ReplyDelete
  4. இத்தனை நாள் மறந்து போனதையும் சேர்த்தே எழுதி விட்டீர்கள். சீக்கிரம் முடியுங்கள். அப்படி என்னதான் உபாயம் செய்கிறாள் என்று பார்க்க வேண்டும். ராதாவின் கண்ணீர் மறைய வேண்டும்!

    ReplyDelete
  5. Happy Diwali to all of you.What haappend to diwali purchase post this year?:))))

    ReplyDelete
  6. //கதையை என்னாட்டம் மறந்துட்டீங்களோனு நெனச்சேன் - விடாதீங்க, முடிச்சிடுங்க. நல்ல கதைத்தளம்)//

    ஹஹ்ஹா.. அப்பாஜி! சிரிச்சு.. சிரிச்சு.. நெனைச்சு நெனைச்சு சிரிச்சு..
    ஹம்மாடி...

    ReplyDelete
  7. முழுசா படிச்சிட்டு வர்றேன். இப்போதைக்கு முடிக்காதீங்க.. மாசத்துக்கு ஒரு பகுதி எழுதுங்க.. அதுக்குக் காரணமும் இருக்கு..

    ReplyDelete
  8. அப்பாதுரை, டைரிக் குறிப்பு பத்தி முந்தியே ஒரு பதிவிலே குறிப்பிட்ட நினைவு. ஹிஹி, இந்த அழகான கதையை சேமிக்கணுமானு நினைச்சு வேர்ட் டாகுமென்டிலே வைச்சுக்கலை. பதிவைப் போய்த் தான் பார்க்கணும். அதுக்குத் தேவை மின்சாரம். :))))

    ReplyDelete
  9. (கதையை என்னாட்டம் மறந்துட்டீங்களோனு நெனச்சேன் - விடாதீங்க, முடிச்சிடுங்க. நல்ல கதைத்தளம்)//

    காலம்பரயே இதைப் படிச்சுட்டுச் சிரிச்சாச்சு ஜீவி சார், என்னோட திறமையைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன! :)))))))

    ReplyDelete
  10. அப்பாதுரை, ஆமாம், லிங்க் வேலை செய்யலை. நேத்திக்குக் கொடுத்தப்போ வேலை செய்தது. என்னனு பார்க்கணும். :(

    ReplyDelete
  11. ஹிஹி, ராஜராஜேஸ்வரி, நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா சொல்றீங்க? வி.வி.சி.

    ReplyDelete
  12. சேர்த்தெல்லாம் எழுதலை ஸ்ரீராம். தோணினதை எழுதினேன். யோசிக்கலை: யோசிச்சா எப்படிப்போயிருக்குமோ! :))))

    ReplyDelete
  13. வாங்க ஜெயஸ்ரீ, தீபாவளிக்குத் துணி எடுக்கிறதிலே சென்னையிலே உள்ள விறுவிறு இங்கே இல்லை. :)))) அதான் எழுதலை. ஸ்ரீரங்கத்திலேயே முடிச்சாச்சு! :))))

    ReplyDelete
  14. ஹஹ்ஹா.. அப்பாஜி! சிரிச்சு.. சிரிச்சு.. நெனைச்சு நெனைச்சு சிரிச்சு..
    ஹம்மாடி...//

    ஜீவி சார், இந்தக் கிண்டல் தானே வேணாங்கறது! அப்பாதுரையோட காமெடியும் சரி, சீரியஸ்னெஸும் சரி, பழக்கமாயிடுச்சு. அதனால் அவர் காமெடி பண்ணறார்னு எனக்கு மட்டுமில்லை எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். நீங்க வேறே இப்படி எடுத்துச் சொல்லி "ஸ்கை"யை வாங்கணுமா! :))))

    ReplyDelete
  15. பழைய பதிவு உங்களுக்குப் படிக்க முடிஞ்சதுன்னா சரி. நான் தேடிட்டுப் போறதுக்குள்ளே இங்கே மின் வெட்டு வந்துடும். :))))

    ReplyDelete
  16. கீதாம்மா.. காபி & பேஸ்ட்க்காக செலக்ட் பண்ணும் பொழுது, ரெண்டு வரியும் செலக்ட் ஆயிருக்கு. தப்பா நினைக்காதீங்க.. 'கதையை என்னாட்டம் மறந்துட்டீங்களோனு'அவர் சொன்னதை இப்போ நெனைச்சாலும்...
    அந்த மூணு வார்த்தைக்குத் தான் ஹி..ஹி..

    ReplyDelete
  17. //ராதா தன் அம்மா இல்லை என்ற விஷயம் யாருக்கும் தெரியாமலே போகட்டும்.. //

    அதாவது, ராதா தான் தன் அம்மா என்று எல்லோரும் நினைக்க வேண்டும்.

    //அதற்குத் தான் என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொண்டாள்.//

    நினைத்தால் அம்மா, நினைக்கலேனா அம்மா இல்லை. ஒரு சின்ன பெண்ணுக்கு எவ்வளவு தீசல் பாருங்கள்!

    ReplyDelete