வழக்கமான மூச்சு விடற பிரச்னை தான். எப்போவுமே எனக்கும், என்னோட மூக்குக்கும் மூச்சு விடறதிலே சண்டை வந்துடும். இந்த முறை என்னால் எழுந்து நடமாட முடியாத அளவுக்குக் கடுமையான சண்டை. மூச்சோ ஒரேயடியா வந்துடலாமா, கொஞ்சம் கொஞ்சமா வரலாமானு யோசனை. விடுவேனா! மெல்ல, மெல்ல சமாளிச்சுட்டு மூச்சை அடக்கி வைக்கச் சொல்லிப் பிள்ளையார் கிட்டே வேண்டுகோள் விடுத்தாச்சு! இன்னிக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை தான். ஆனால் மருத்துவர் முறைக்கிறார். ஓய்விலேயே இருக்கணும்னு கண்டிப்புக் காட்டறார். முடிஞ்சவரை இருக்கேனு சொல்லித் தப்பிச்சுட்டு வந்திருக்கேன்.
ஒண்ணும் இல்லை; அதிகமான அலைச்சல் காரணம்னு சொன்னாலும் வெளியே போன இடத்தில் ஆர்வோ தண்ணீர் தானேனு ஒரு ஹோட்டலில் மாத்திரை சாப்பிடவேண்டித் தண்ணீரைக் குடிச்சது தான் காரணம். எனக்கும் சரி, அவருக்கும் சரி, உடனேயே சளி பிடித்துக் கொண்டு முதலில் அவர் படுக்க, அவரை டாக்டர் கிட்டே அழைத்துப் போய்க் காட்டிட்டு வர வரைக்கும் நடமாடிய நான் மறுநாளே எழுந்திருக்க முடியாமல் படுத்தேன். அப்புறமா 2 நாள் காலையா, மாலையானே தெரியாத அளவுக்கு மயங்கிக் கிடந்தேன். அதோடயே நானும் டாக்டர் கிட்டே போயிட்டு மருந்துகள் வாங்கிட்டு வந்து சாப்பிட்டிருக்கேன். நேத்திக்குத் தான் அந்த மாத்திரைகளை எல்லாம் தெளிவாக என்ன என்னனே பார்த்தேன். இப்படி இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் என்னோட பிறவியிலிருந்தே குடி இருக்கும் ஆஸ்த்மா எட்டிப் பார்த்து நானும் இருக்கேன் உன்னுடன், நினைவிலிருத்திக்கொள்னு சொல்லிட்டுப் போகும். அதை லக்ஷியம் செய்யாமல் இருக்கப் பழகியாச்சு என்றாலும் அது விடுவதாயில்லை. :( துர்க்குணம்!
இருபது வருடத்துக்கு முன்னாடியே திருச்சிக்கு வந்தப்போ என் தம்பி என்னை உ.பி, கோயிலுக்கு அழைத்துப் போக மறுத்தார். அப்போப் போயிட்டு வந்திருக்கலாம். அதுக்கப்புறமும் பலமுறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போக நேர்ந்ததில்லை. இப்போ இங்கே வந்ததில் இருந்து சொல்லிட்டே இருந்தேன். ஆனால் எங்க எதிர்க் குடியிருப்பில் இருக்கும் பெண்மணி ரொம்பவே பயந்தார் முடியுமானு! ஹா, நாங்க கைலாஷ், மானசரோவர், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்தாச்சு! இது என்ன பிரமாதம்னு ரெண்டு பேரும் தோள் கொட்டினோம். பிள்ளையார் நேர் எதிரே உச்சியில் இருந்து பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்திருக்கிறார். சரி, சரி இதுங்க வரட்டும், பார்த்துக்கலாம்னு இருந்திருக்கார்.
கடைசியா நாங்க, எங்க குழந்தைகளுடன் 86ஆம் வருடம் மலையில் ஏறியது தான். அப்புறமா இரண்டு பேரும் பல முறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போகலை. முதல்நாள் என் தம்பி தொலைபேசினப்போ மறுநாள் குறிப்பிட்ட நேரம் கூப்பிடச் சொன்னதுக்கு அப்போ உ.பி.கோயிலில் இருப்பேன்; அதனால் அப்போ முடியாதுனு சொன்னேன். அவருக்கு உடனே பயம். நான் தான் ஏற்கெனவே உனக்கு ஆகாதுனு சொன்னேனேனு கேட்டார். இரண்டு பேரும் போகப் போறோம்னதும், பிள்ளையாரே துணைனு விட்டுட்டார். நாங்களும் மிகவும் தன்னம்பிக்கையுடனேயே சென்ற வியாழன் 24-ஆம் தேதி உ.பி. கோயிலுக்குக் கிளம்பினோம். கூட வந்தவர்கள் எங்களை விடவும் வயது ஆனவர்கள். இப்படி நான்கு இளைஞர்களாக உ.பி. கோயிலுக்கு மலை ஏறப் போய் மாணிக்க விநாயகரிடம் வேண்டுகோள் வைத்தோம்.
அதற்கு முதல்நாள் தான் முதலில் நம்ம அழகிய சிங்கரைப் பார்த்துட்டு, திருவானைக்கா சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சமயபுரம், ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம், மாகாளிக்குடி உச்சையினி மஹாகாளி, ஆனந்த செளபாக்கிய சுந்தரி, அழகம்மை, விக்ரமாதித்தனின் உச்சையினி மஹாகாளி, வேதாளம், சுளுவன் எல்லாரையும் பார்த்துட்டு வந்திருந்தோம். அங்கிருந்து குணசீலம் சென்றோம். எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்றேன். முதல்லே பிள்ளையார் கிட்டே இருந்து ஆரம்பிக்கலாமேனு.