நிர்பயா எனப் பெயரிடப் பட்டிருக்கும் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, தான் பலவந்தப் படுத்தப் பட்டபோது, பலாத்காரத்துக்கு ஆட்பட்ட போது, அவர்களை எதிர்க்காமல்அபயம் கேட்டிருக்க வேண்டுமாம். "தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் சகோதரர்களே எனக் கெஞ்சி இருக்கணுமாம். கேட்கவில்லை என எப்படித் தெரியும்? அதான் கெஞ்சிக் காலில் விழுந்து கதறி இருக்காளே! இதுக்கும் மேல் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்றால் அயோக்கியத் தனமாய் இல்லை? ஆணாதிக்கத்தைக் காட்டுவதாய் இல்லை? அதிலும் ஒவ்வொருத்தரையும் பார்த்துத் தனித்தனியாய்ச் சொல்லி இருக்கணுமாம்! அப்படி அவங்க அந்தப் பெண்ணின் மேல் இரக்கமுள்ளவர்களாக இருந்திருந்தால் அந்தப் பெண்ணை சீரழிச்சதுக்கும் பின்னர் கம்பியாலும் குத்திக் காயப் படுத்தி இருக்க முடியுமா? கொடூரமான மனசு இருந்தால் ஒழிய இது நடந்திருக்காது. பல்வகையிலும் துன்புறுத்தப்பட்டு அதுவும் எந்தக் காரணமும் இல்லாதபோது வலுக்கட்டாயமாய் பலவந்தப் படுத்தப்பட்டு உடலளவிலும் மனசளவிலும் காயப்பட்ட ஒரு அப்பாவிப் பெண், வாழ வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த ஒரு பெண், இறந்து போனபின்னால் வாயில் வந்ததைப் பேசலாம்னு நினைக்கிறாங்க போல! என்ன கொடூர மனிதர்கள்! :((((((((((((((((((
குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு, இந்த மாதிரி உளறுகிறவர்களையும் தனி செக்ஷனில் தண்டிக்க வேண்டும்.
ReplyDeleteஉண்மைதான்..இரக்கம் உள்ளவர்கள் ஏன் இப்படி செய்யப்போகிறார்கள்?
ReplyDeleteமிருகங்களிடம் பேச முடியுமா என்ன?
ஒருத்தரா இரண்டு பேரா. ஆளாளுக்கு வாய்விட்டு இருக்கிறார்கள். இவர்கள் வீட்டுப் பெண்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்ரு தெரிந்தால் தேவலை.
ReplyDeleteஹூம், குற்றவாளிகள் முதலில் தண்டிக்கப்படட்டும். அப்புறம் பார்த்துப்போம். :(
ReplyDeleteஉண்மைதான் ராம்வி, மிருகங்களே தான். :((
ReplyDeleteஆமாம் வல்லி, ரொம்பவே ஓட்டுகிறார்கள். இஷ்டத்துக்குப் பேசிண்டு....... என்னத்தைச் சொல்றது! :(
ReplyDelete
ReplyDeleteபெண் எழுத்து என்னும் தலைப்பில் அன்புடன் மலிக்க்கா கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பதிவு எழுதி இருந்தேன். ஆனால் பெண்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்னும் ஆதங்கத்தில் பெண்களே என்ன செய்கிறீர்கள் என்று ஒரு பதிவு எழுதியுள்ளேன். இதை எழுதுமுன் ஒரு சிறிய வலைப் பயணம் மேற்கொண்டேன். உங்கள் பக்கம் இப்போதுதான் வந்தேன். என்பதிவைப் படித்துக் கருத்துக் கூறலாமே. வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteஎன் பதிவுக்கு வந்து கருத்திட்டதற்கு நன்றி. என் வலைப் பயணம் தலைநகர் சம்பவம் முடிந்த பின் பெண்களின் கருத்துத் தேடியே இருந்தது. இப்போது 2009 வருட உங்கள் பதிவுகள் சிலவற்றைப் படித்தேன். கருத்துக்களுக்குப் பின்னூட்டம் எழுதியவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு நீங்கள் எழுதி இருந்தது எனக்கு உடன் பாடாய் இல்லை. சில நேரங்களில் உறைக்கும்படி சொல்வது அவசியமாகிறது. தவறு செய்பவர்கள் குற்ற உணர்ச்சியால் குமுறினால் குமறட்டுமே. ஒரு ஆண் என்ற முறையில் சில விஷயங்களை கோடி காட்டத்தான் முடியும். வாழ்த்துக்கள்.