எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 30, 2013

பிள்ளையாரப்பா, தூக்கிவிடப்பா!

வழக்கமான மூச்சு விடற பிரச்னை தான்.  எப்போவுமே எனக்கும், என்னோட மூக்குக்கும் மூச்சு விடறதிலே சண்டை வந்துடும்.  இந்த முறை என்னால்  எழுந்து நடமாட முடியாத அளவுக்குக் கடுமையான சண்டை.  மூச்சோ ஒரேயடியா வந்துடலாமா, கொஞ்சம் கொஞ்சமா வரலாமானு யோசனை.  விடுவேனா! மெல்ல, மெல்ல சமாளிச்சுட்டு மூச்சை அடக்கி வைக்கச் சொல்லிப் பிள்ளையார் கிட்டே வேண்டுகோள் விடுத்தாச்சு! இன்னிக்கு இன்னும் கொஞ்சம் பரவாயில்லை தான்.  ஆனால் மருத்துவர் முறைக்கிறார்.  ஓய்விலேயே இருக்கணும்னு கண்டிப்புக் காட்டறார். முடிஞ்சவரை இருக்கேனு சொல்லித் தப்பிச்சுட்டு வந்திருக்கேன்.

ஒண்ணும் இல்லை;  அதிகமான அலைச்சல் காரணம்னு சொன்னாலும் வெளியே போன இடத்தில் ஆர்வோ தண்ணீர் தானேனு ஒரு ஹோட்டலில் மாத்திரை சாப்பிடவேண்டித் தண்ணீரைக் குடிச்சது தான் காரணம்.  எனக்கும் சரி,  அவருக்கும் சரி, உடனேயே சளி பிடித்துக் கொண்டு முதலில் அவர் படுக்க, அவரை டாக்டர் கிட்டே அழைத்துப் போய்க் காட்டிட்டு வர வரைக்கும் நடமாடிய நான் மறுநாளே எழுந்திருக்க முடியாமல் படுத்தேன்.  அப்புறமா 2 நாள் காலையா, மாலையானே தெரியாத அளவுக்கு மயங்கிக் கிடந்தேன்.  அதோடயே நானும் டாக்டர் கிட்டே போயிட்டு மருந்துகள் வாங்கிட்டு வந்து சாப்பிட்டிருக்கேன்.  நேத்திக்குத் தான் அந்த மாத்திரைகளை எல்லாம் தெளிவாக என்ன என்னனே பார்த்தேன்.  இப்படி இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் என்னோட பிறவியிலிருந்தே குடி இருக்கும்  ஆஸ்த்மா எட்டிப் பார்த்து நானும் இருக்கேன் உன்னுடன், நினைவிலிருத்திக்கொள்னு சொல்லிட்டுப் போகும். அதை லக்ஷியம் செய்யாமல் இருக்கப் பழகியாச்சு என்றாலும் அது விடுவதாயில்லை. :( துர்க்குணம்!

இருபது வருடத்துக்கு முன்னாடியே திருச்சிக்கு வந்தப்போ என் தம்பி என்னை உ.பி, கோயிலுக்கு அழைத்துப் போக மறுத்தார். அப்போப் போயிட்டு வந்திருக்கலாம். அதுக்கப்புறமும் பலமுறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போக நேர்ந்ததில்லை.  இப்போ இங்கே வந்ததில் இருந்து சொல்லிட்டே இருந்தேன்.  ஆனால் எங்க எதிர்க் குடியிருப்பில் இருக்கும் பெண்மணி ரொம்பவே பயந்தார் முடியுமானு!  ஹா, நாங்க கைலாஷ், மானசரோவர், அஹோபிலம் எல்லாம் போயிட்டு வந்தாச்சு!  இது என்ன  பிரமாதம்னு ரெண்டு பேரும் தோள் கொட்டினோம். பிள்ளையார் நேர் எதிரே உச்சியில் இருந்து பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்திருக்கிறார்.  சரி, சரி இதுங்க வரட்டும், பார்த்துக்கலாம்னு இருந்திருக்கார்.


கடைசியா நாங்க, எங்க குழந்தைகளுடன் 86ஆம் வருடம் மலையில் ஏறியது தான்.  அப்புறமா இரண்டு பேரும் பல முறை திருச்சி வந்தும் உ.பி. கோயில் போகலை.  முதல்நாள்  என் தம்பி தொலைபேசினப்போ மறுநாள் குறிப்பிட்ட நேரம் கூப்பிடச் சொன்னதுக்கு அப்போ உ.பி.கோயிலில் இருப்பேன்;  அதனால் அப்போ முடியாதுனு சொன்னேன்.  அவருக்கு உடனே பயம். நான் தான் ஏற்கெனவே உனக்கு ஆகாதுனு சொன்னேனேனு கேட்டார்.  இரண்டு பேரும் போகப் போறோம்னதும், பிள்ளையாரே துணைனு விட்டுட்டார்.  நாங்களும் மிகவும் தன்னம்பிக்கையுடனேயே சென்ற வியாழன் 24-ஆம் தேதி உ.பி. கோயிலுக்குக் கிளம்பினோம்.  கூட வந்தவர்கள் எங்களை விடவும் வயது ஆனவர்கள்.  இப்படி நான்கு இளைஞர்களாக உ.பி. கோயிலுக்கு மலை ஏறப் போய் மாணிக்க விநாயகரிடம் வேண்டுகோள் வைத்தோம்.

அதற்கு முதல்நாள் தான் முதலில் நம்ம அழகிய சிங்கரைப் பார்த்துட்டு, திருவானைக்கா சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு, அங்கிருந்து சமயபுரம், ஆதி சமயபுரம் என்னும் இனாம் சமயபுரம், மாகாளிக்குடி உச்சையினி மஹாகாளி, ஆனந்த செளபாக்கிய சுந்தரி, அழகம்மை, விக்ரமாதித்தனின் உச்சையினி மஹாகாளி, வேதாளம், சுளுவன் எல்லாரையும் பார்த்துட்டு வந்திருந்தோம்.  அங்கிருந்து குணசீலம் சென்றோம்.  எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்றேன்.  முதல்லே பிள்ளையார் கிட்டே இருந்து ஆரம்பிக்கலாமேனு.

22 comments:

  1. ஆகா! உச்சிப் பிள்ளையார் வணக்கத்துடன் தலபயணங்கள். வரக் காத்திருக்கின்றோம்.

    உச்சிப் பிள்ளையார் எனக்கும் பிடித்த இடம். இருதடவை வணங்கும் பாக்கியம் கிடைத்தது.

    ReplyDelete
  2. இப்ப பரவாயில்லையா? உடம்பை பார்த்துக்கோங்கோ மாமி.....

    பிள்ளையாரப்பா....சொல்லுங்க சொல்லுங்க.... நாங்களும் கூடவே வர்றோம்.

    ReplyDelete
  3. முற்றிலும் குணமாகி விட்டது போலும். தொடருங்கள் தொடர்கிறேன்!

    ReplyDelete
  4. அஹா.ஒரு சுவாரசியமான ஆன்மீக கட்டுரை தொடர் ஆரம்பித்திருக்கீங்க.தொடருங்க மாமி, படிக்க காத்திருக்கிறோம்.

    சாதாரணமானவர்களுக்கே குளிர்காலம் ஒத்துக்கொள்ளாது. ஆஸ்த்மா பிரச்சனை என்றால் கேட்கவே வேண்டாம். உடம்பை பார்த்துக்கொள்ளுங்க..

    ReplyDelete
  5. வாங்க மாதேவி, ரொம்ப நாட்களாக் காணோமேனு நினைச்சேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  6. வாங்க கோவை2தில்லி, பரவாயில்லை தான். :))) ஆனால் வெளியே எங்கேயும் போவதை மருத்துவர் தடை செய்திருக்கார். :)))) கொஞ்ச நாட்களுக்கு/மாசங்கள்(?) தடை!

    ReplyDelete
  7. வாங்க ஸ்ரீராம், ஓரளவு குணம். சும்மாவும் உட்கார முடியாதே. அதோட வீட்டு வேலை நேத்திலே இருந்து செய்ய ஆரம்பிச்சாச்சு! :)))))

    ReplyDelete
  8. வாங்க ராம்வி, குளிர்காலம்னு காரணம் இல்லை. ஏன்னா, எனக்குக் குளிர் ஒத்துக்கும். :)))) அலைச்சல் தான் முக்கியக் காரணம்! :)))))அதோட மலை ஏறினதும் முக்கியக் காரணம். :))))

    ReplyDelete
  9. Hi, Please give me your mail ID

    ReplyDelete
  10. hi, Please give me your mail ID

    ReplyDelete
  11. அடடா! அப்படியாவது மலை ஏறணுமா?

    அப்படி மலை ஏறினால் தானே எங்களுக்கு சுவாரஸ்யமா ஒரு - இல்லையில்லை பல பதிவுகள் கிடைக்கும்.

    பிள்ளையாரப்பா!
    எங்களுக்குப் பிடித்த பதிவரை பார்த்துக்கோப்பா!

    ReplyDelete
  12. Kavitha Bhargav,

    You can easily get it from my profile. it is as simple,

    sivamgss@gmail.com, that is all. :))))

    ReplyDelete
  13. வாங்க ரஞ்சனி,

    பிள்ளையார் பார்த்துண்டதாலே தான் இன்னிக்கு நல்லா இருக்கேனாக்கும். :)))))

    ReplyDelete
  14. நல்லது. எல்லாத்த பத்தியும் எழுதுங்கோ. உடம்பு கொஞ்சம் குணமானது குறித்து சந்தோஷம். கோவில்களை சுற்றி பார்க்க வேண்டும் என்றாலே எனக்கு மிகவும் சந்தோஷம் ஆகிவிடும். அதிலும் புராதன கோவில்கள் என்றால் இரட்டிப்பு சந்தோஷம். நீங்க எழுதி இருக்கறதை படிக்கும் போது நானும் இதெல்லாம் பாக்கனும்னு ஆசையா இருக்கு. கூடவே இப்ப பாக்க முடியலயேன்னு ஏக்கமா இருக்கு. கை, கால் தெம்பு இருக்கும்போதே பாத்துடனும். இல்லைன்ன கொஞ்சம் சிரமம்தான்.

    ReplyDelete
  15. ஆஹா பயணத் தொடரா - அதுவும் ஆன்மீகத் தொடர்.... நல்ல விஷயம்.

    இப்போ தேவலையா?

    ReplyDelete
  16. நம்பிக்கைதானே வாழ்க்கை. கொடுத்தவரே நோயை எடுத்துவிடுவார்.
    தலைசிறந்த ஆன்மீகப் பயண எழுத்தாளரைக் காப்பாத்தாமல் அவருக்கு வேற என்ன வேலை:)

    ReplyDelete
  17. பிள்ளையார் தன் பக்தையை பார்க்க ஆசைப்பட்டு கால்களுக்கு நல்ல பலத்தைக் கொடுத்து வரவ்ழைத்து விட்டார்.

    பிள்ளையாரைப்பற்றி எழுத அவர் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து விட்டார்.
    பயணத்தில் தொடர்கிறேன்.

    ReplyDelete
  18. மீனாக்ஷி, வருகைக்கு நன்றி. சீக்கிரமா வந்து எல்லாத்தையும் பார்த்துடுங்க. 2010-ஆம் வருடம் அஹோபிலம் போக எண்ணிக் கீழே விழுந்து கையில் கட்டுப் போட்டுக்கொண்டு போக முடியாமல் 2011-இல் ஜனவரியில் போனோம். அப்போதைக்கு இப்போது இரண்டே வருடங்கள் தான். அதுக்குள்ளே இந்தப் படிகளில் ஏற முடியலை. படியாய் இல்லாமல் மலையாய் இருந்திருந்தால் ஏறி இருக்கலாமோ என்னமோ!

    ReplyDelete
  19. வாங்க வெங்கட், இப்போப் பரவாயில்லை ரகம் தான். உடலில் இன்னமும் தெம்பு வரவில்லை. அசதியும், கால்வலியும் குறையலை. :))))

    ReplyDelete
  20. வாங்க வல்லி, மேலே அழைத்துச் சென்றதும் அவரே; கீழே இறக்கி விட்டதும் அவரே!

    ReplyDelete
  21. வாங்க கோமதி அரசு, உடலில் இன்னும் கொஞ்சம் தெம்பைக் கொடுக்கட்டும். பயணம் தொடரும்.

    ReplyDelete