எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 04, 2013

உங்க கடவுள் ஒசத்தியா? எங்க கடவுள் ஒசத்தியா?

முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாக்கி விடுகிறேன்.  யார் மனதையும் புண்படுத்த இதை எழுதவில்லை. என்றாலும் இம்மாதிரியான வற்புறுத்தல் மனதைக் காயப் படுத்துகிறது.

முந்தாநாள் எங்க குடியிருப்பு வளாகத்தில் எங்க குடியிருப்பின் எதிரே குடி இருக்கும் பெண்மணி திருச்சி செல்வதற்காக அம்மாமண்டபம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்திருக்கிறார்.  அவருக்குக் கொஞ்சம் தோல் பிரச்னை உண்டு.  ஆகவே கைகளை மணிக்கட்டு வரை  மூடிய வண்ணம் ரவிக்கை அணிவார்.  அதைக் கவனித்த ஒரு பெண்மணி என்ன, ஏது என விசாரிக்கிறார்.  அவரும் ஏதோ கேட்கிறாங்களே என தன் பிரச்னையைச் சொல்ல,  உடனே அந்தப் பெண்மணி அவருடைய பேச்சை வைத்து அவர் அரங்கன் மேல் கொண்டிருக்கும் பக்தியை உணர்ந்து,

"இந்தப் பிரச்னைக்கு உங்க அரங்கனால் என்ன பண்ண முடியும்? அவர் தான் மீளா உறக்கத்தில் இருக்கிறாரே!  நீங்க எங்க மதத்தில் சேருங்க.  எங்க கடவுள் உடனே குணப்படுத்துவார்.  பத்தே நாட்களில் உங்க தோல் சரியாயிடும்.  கண்ணை மூடிட்டு இருக்கும் கடவுளை ஏன் நம்பறீங்க?  அவரால் எல்லாம் குணப்படுத்த முடியாது!   உங்க வீட்டுக்கு வந்து எல்லார் கிட்டேயும் பேசறேன். வீட்டு விலாசம் கொடுங்க.  இந்தக் குறிப்பிட்ட பணிக்காக நாங்க இந்தக் குறிப்பிட்ட சங்கத்திலே இருக்கோம். " அப்படினு சொன்னதோடு இல்லாமல் அரங்கனைப் பற்றியும் கொஞ்சம் ஏதேதோ பேசி இருக்காங்க.  அவங்களோட மதத்தில் சேர்ந்தால் எல்லாம் சரியாகும்னு சொல்லி சேரச் சொல்லி வற்புறுத்தி இருக்காங்க.  எங்க சிநேகிதிக்குப் பயம் வந்து அப்போது வந்து நின்ற ஒரு பேருந்து எங்கே போகுதுனு கூடப்பார்க்காமல் ஏறிட்டாங்களாம். நல்லவேளையா அந்த அம்மா பின் தொடரவில்லை.

இதோடு இல்லாமல் சமீப காலமாக வெளிநாட்டு மத போதகர்களுக்கான விசா சட்டங்களும் தளர்த்தப் பட்டு அவங்க எத்தனை காலம் வேணும்னாலும் இருக்கலாம் என்கிறாப்போல் மாற்றி இருப்பதாகச் சில மடல்களும் தெரிவிக்கின்றன.  இது அரசாங்க விஷயம்.  விட்டு விடுவோம்.  நமக்குத் தேவையில்லை.  ஆனால் தெருவோடு போகிறவங்களைக் கூப்பிட்டு மதம் மாறச் சொல்வது நியாயமா?

நம் சார்ந்திருக்கும் மதத்தில் நமக்கே நம்பிக்கை இல்லை என்றால் தான் இன்னொரு மதத்தில் இருப்பவர்களை நம் மதத்துக்கு இழுக்கத் தோன்றும் என எனக்குப் படுகிறது.  அதே போல் மதம் மாறுபவர்களும் முதலில் அவர்கள் சார்ந்திருந்த மதத்தின் கடவுளர் மேல் நம்பிக்கை இல்லை என்பதால் தான் இன்னொரு மதக் கடவுளைத் தேடிப் போகின்றனர்.  இவர்கள் எப்படி பின்னர் தாங்கள் சார்ந்திருக்கும் மதக் கடவுளை நம்புவார்கள்?

இப்படி மாறச்சொல்லிக் கட்டாயப் படுத்த வேண்டாமே. அவரவராக இஷ்டப் பட்டு வந்து மாறுவது தனி.  அது சொந்த விஷயம்.  ஆனால் தெருவில் போகிற வருகிறவர்களை அழைத்து வலுக்கட்டாயமாக மதம் மாறச் செய்வது என்பது கொஞ்சம் கூட ஏற்கக் கூடியதாக இல்லை.   இதைப் போல இன்னும் சிலதும் இருக்கு.  ஆனால் ரொம்பவே குற்றம் காணுகிறாப்போல் வேண்டாம்னு விட்டுட்டேன். 




"............எங்கள் சமய நூல்கள் எதையும் படிக்காமலேயே எங்களை மிகக் கேவலமாக விமர்சிக்கத் துணியும் உங்கள் முட்டாள்தனத்தை என்னென்பது"

இவ்வாறு கம்பீரமாகக் கேட்டார் இந்த ஹிந்து மதக் காவலர்.

8 comments:


  1. பிரச்சாரம் செய்து ஆள் பிடித்துச் சேர்ப்பதா மதம்? மதம் என்பது அவரவர் நம்பிக்கை. கிடக்கிறார்கள் விடுங்கள்... இதை எல்லாம் லட்சியம் செய்யாமல் விடுவதே சிறந்தது.

    ReplyDelete
  2. இவற்றைத் தடுக்க ஒரே வழி நாம் நம் நம்பிக்கையில் உறுதியாக இருப்பது தான்.

    நமக்குப் பெரிய மனது என்று காண்பித்துக் கொள்வதற்காக அங்கு போய் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கிறோம். ஆனால் அவர்கள் இங்கு வருகிறார்களா? நாமையும் நம் கடவுள் நம்பிக்கையையும் கேலி செய்கிறார்கள். நாமும் அதைக் கேட்டுக் கொண்டு வாய் மூடிக் கொண்டு வருகிறோம்.

    நம் நிலைப்பாட்டில் உறுதி இருந்தால் நம் வழிக்கு யாரும் வரமாட்டார்கள்.

    ReplyDelete
  3. இன்னும் இதெல்லாம் நடக்கிறதா!!
    எங்களிடம் பத்து வருடங்களுக்கு முன்ன்னால் வெளிநாட்டினர் இருவர்
    இதையே இன்னும் நாகர்ரிகமாகப் பேசினார்கள்.

    இவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகமீட்டர் ஏறியது. நாங்கள் .....இருந்துவிட்டுப்போகிறோம். தேநீர் குடித்துவிட்டுக் கிளம்புங்கள் என்று சொல்லி வாசல் வரை கொண்டுவிட்டு வந்தார்:)

    ரஞ்சனி.நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், இது இப்போது மிகவும் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்தெட்டு போற்றி கூட இருக்கு இப்போ. அதைப் பார்த்து ஏமாந்தவர்கள் எத்தனையோ! :)))))

    ReplyDelete
  5. வாங்க ரஞ்சனி, நம் நிலைப்பாட்டில் உறுதியாகத் தான் இருக்கோம். அப்படி உறுதியாக இருக்கிறவங்களைத் தான் அவங்களும் மாத்த நினைக்கிறாங்க. :((( நாம் பதில் சொல்லாமல் இருந்தால் கூட விடறதில்லை. அம்பத்தூரில் இருக்கிறச்சே நிறைய அனுபவிச்சாச்சு. கல்யாணம் ஆகி முதல் முதல் ராஜஸ்தான் போனப்போ எங்க நண்பரின் மனைவி இப்படித்தான் எனக்கு போதனை பண்ணுவாங்க. :))))

    ReplyDelete
  6. வாங்க வல்லி, நாங்களும் நிறையக் கேட்டாச்சு. இன்னும் சொல்லப் போனால் எங்க பொண்ணு வீட்டிலே இருக்கிறச்சே கூட அங்கேயும் வந்தாங்கன்னா பாருங்க! :)))))))பொண்ணு சும்மா கேட்டுக்கொண்டு அனுப்பி வைச்சா!

    ReplyDelete
  7. எனக்கே இப்படி ஒரு அனுபவம் உண்டு கீதா மாமி. என மகளுடைய வகுப்புத்தோழியின் அம்மா அவள் வகுப்பு பாட புத்தகத்தை வாங்க வீட்டிற்கு வந்தார்.வந்தவர் சும்மா இல்லாமல் இப்படி ஏதோ போதனையை ஆரம்பித்தார்.ஆனால் நான் அவரிடம் நாமிருவரும் தொடர்ந்து தோழமையாக இருக்க வேண்டுமானால் மதத்தை பற்றி நீங்கள் பேசக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன்.
    ரஞ்சனி மேடம் சொல்லியிருப்பது போல நாம் உறுதியாக இருந்தால் யாரும் நம் வழிக்கு வர மாட்டார்கள்.

    ReplyDelete
  8. வாங்க ராம்வி, ரொம்ப மாதங்கள் கழிச்சு உங்களை இங்கே பார்ப்பதில் சந்தோஷம். கருத்துக்கு நன்றிம்மா.

    ReplyDelete