எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 16, 2013

காதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை!

நேத்திக்கு மத்தியானம் கணினியிலே ஒரு முக்கியமான வேலையைச் செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, செய்து, பார்த்தும் சரியாவராமல் போயிட்டதால் கணினி மேலேயே வெறுப்பு வந்து மூடி வைச்சுட்டேன்.  அப்புறமா கணினி  கிட்டேயே போகக் கூடாதுனு நினைச்சு என்னடா பண்ணலாம்னு யோசிச்சேன்.  மணி என்னமோ மத்தியானம் இரண்டரை தான்.  சாயந்திரம் வரைக்கும் ஒண்ணும் அவசர வேலை இல்லை!  அதிசயமாத் தொலைக்காட்சி இருக்கவே அதைப் போட்டு ஒவ்வொரு சானலா மாத்திட்டு இருந்தேன்.  ரங்க்ஸ் நல்லாக் குறட்டை.  யுடிவியில் முகல்-ஏ.ஆஜம் படம் ஓடிட்டு இருந்தது.  பதினைந்து வருஷங்கள் முன்னாடி இரண்டாம் முறையாவோ, மூன்றாம் முறையாவோ கறுப்பு வெள்ளையில் பார்த்தது.  இப்போக் கலரில்!  அதோடு டிஜிடைஸ் பண்ணி இருக்காங்களோ?  தெரியலை.   சரி மறுபடி பார்த்து வைப்போம்னு பார்த்தேன்.


வண்ணத்தில் இன்னும் அதிகமான தாக்கம் இருக்கிறது உண்மைதான்.  அனைவருமே நன்றாக நடிச்சிருக்காங்க.  அதிலும் மதுபாலாவின் நடிப்பைப் பார்க்கிறச்சே, மாதுரி தீக்ஷித் எந்த அளவுக்கு இவங்களோட சிரிப்பையும் தலை அலங்காரத்தையும், நாட்டியத்தையும் காப்பி அடிக்கிறாங்கனு புரிஞ்சது.   கதை உண்மையோ, பொய்யோ அதன் தாக்கமும் படத்தில் ப்யார் கியா தோ டர்னா பாடலுக்கான ஆடலும் அருமை.  ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்தக் காட்சி எடுத்ததாக நாங்க ஜெய்ப்பூர் போனப்போ சுத்திக்காட்ட வந்த வழிகாட்டிங்க சொல்லி இருக்காங்க.  நடுவிலே நின்று கொண்டு மேலே பார்த்தால் நம்மைப் போல் ஆயிரம் பேர் அந்தக் கண்ணாடித்துண்டுகளில் தெரிவாங்க.  அந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கும் விதம் அந்தக் கால கட்டத்தில் அபூர்வம் தான்.  ஃபதேபூர் சிக்ரி அரண்மனையின் காட்சிகளும் அந்தப் படிகளில் அந்த வயசிலும் ப்ருத்வி ராஜ்கபூர் வேகமாய் இறங்கி ஏறுவதும் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். :( 

கதையைப் பத்தி அதிகம் சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்.  சலீம், அனார்கலி கதை தெரியாதவங்க இருக்க மாட்டாங்க.  ஆனால் இங்கே திரைப்படத்துக்காக முடிவை மாத்தி இருக்காங்கனு நினைக்கிறேன்.  அக்பர் தன் அரண்மனைச் சேடிக்குக் கொடுத்த வாக்கைக் காக்கவேண்டி அனார்கலியை உயிரோடு தப்பித்துச் செல்ல விடுவதாக ரகசியச் சுரங்க வழியிலே அனார்கலியும் அவள் அம்மாவும் தப்பிப்பதாக முடிவு.  அதான் சொதப்பல். 

22 comments:

  1. மதுபாலா... ஐயோ அப்பாதுரை பதிவுலக விடுமுறையில் இருக்காரே....!

    வயசானவங்களுக்கேல்லாம் பிடிச்ச நடிகை மதுபாலா. சின்னவங்களுக்கெல்லாம் மாதுரி! எனக்கு மாதுரி பிடிக்கும். (ஹிஹி).

    ReplyDelete
  2. ஹிஹிஹி, வா.தி. + லே பதிலி இருக்கேனே! :))))

    ReplyDelete
  3. ஹாஹா, ஸ்ரீராம், எனக்கு எந்த நடிகையும் பிடிக்காதே, ஏன்னா நான் இன்னும் சி.கு. தான். :)))))

    ReplyDelete
  4. சின்னக் குழந்தைக்கு மொகலே ஆஸாம் ரொம்பவும் பிடித்துவிட்டது போலிருக்கிறதே!

    எனக்குக் கூட இந்தப் படத்தைப் பார்க்கணும்ன்னு ஒரு ஆசை. எப்போ தொலைக்காட்சில வருதுன்னு தெரியறதில்லை.

    பாடல்கள் ரொம்ப அருமையாக இருக்கும்.மதுபாலா கருப்பு வெள்ளையிலேயே அழகாக இருப்பரே!

    ReplyDelete
  5. நானும் க.வெள்ளையில் எப்பவோ டிவில் பார்த்தேன். ப்யார் கியா தோ டர்ன க்யாவில் நொடிக்கு நொடி மாறும் மதுபாலாவின் முகபாவங்கள் ரசிக்க வைக்கும். திலீப்குமார் நடிப்பும் குறை சொல்ல முடியாது.

    ReplyDelete
  6. வாங்க ரஞ்சனி, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ஒரு மாறுதலுக்கு இப்படி எப்போவானும் கணினியை ஒதுக்கிட்டு சினிமா பார்ப்பேன். :))) பல சமயங்களிலும் புத்தகங்களே கை கொடுக்கும். நேத்திக்குப் படிக்கிறதுக்கும் மனசு வரலை. :))) படம் எடுத்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறதோடு நடிப்பும் பரவாயில்லை அல்லவா? அதான்! மற்றபடி குறிப்பிட்ட எந்தப் படமும் பிடிக்கும், பிடிக்காதுனு வைச்சுக்கறதில்லை. :)))))

    ReplyDelete
  7. வாங்க அமைதி, ஆமாம், மதுபாலா சிறந்த நடிகை.திலீப் குமாரும் நன்றாகவே நடிச்சிருக்கார்.

    ReplyDelete
  8. மதுபாலாவின் அழகு இந்த காலத்தில் யாரிடம் இருக்கு?

    நான் கருப்பு வெள்ளையில்தான் பார்த்திருக்கிறேன் கலரில் ஒரு முறை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  9. முதல் தடவை அனார்கலி படம் பார்த்தபோடு அனுபவித்த சோகம் என்னை மொகலே ஆசம் பார்க்கத் தடையாக இருந்தது.
    இப்போது புதுப்பிக்கப்பட்ட ஆசம் 4 மாதங்களுக்கு முன்னால் பார்த்து பிரமித்துப் போனேன்.அத்தனை பிரம்மாண்ட செட்.அத்தனை நடிகர்கள்.பிரிதிவிராஜின் கம்பீரம்,அவருடைய இந்து மனைவியாக வருபவரின் நடிப்பு,திலீப்குமாரின் காதல்,மதுபாலாவின் அழகும் பாவமும் பாடல்களும் அழகுதான்.கொஞ்சம் ஸ்லோ???

    ReplyDelete
  10. கருப்பு வெள்ளையில் தான் பல முறை பார்த்திருக்கிறேன். கலரில் மதுபாலாவைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு இன்னும் வரலை! :)

    ReplyDelete
  11. வாங்க ராம்வி, இந்த அழகு என்பதே ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறதுனு நினைக்கிறேன். மதுபாலா முகம் காமிராவுக்கு ஏற்றது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இப்போதைய முதலமைச்சரின் அழகை அவரோட சின்ன வயசிலே நேரிலே பார்த்திருந்தீர்களானால் திரைப்படங்கள் அவர் அழகைக் குறைத்தே காட்டுகிறது என்பது தெரிந்திருக்கும். :)))))))

    ReplyDelete
  12. வாங்க வல்லி,படக் கதையின் சோகம் எல்லாம் என்னை அவ்வளவாய்த் தாக்காது. ஹிஹிஹி, நெஞ்சிருக்கும் வரை சினிமா பார்க்கையில் சிரிப்பு வந்ததை அடக்க முடியாமல் (சின்னமனூர் புகழேந்தி தியேட்டரில்) தவித்ததும் என்னோட சித்தப்பாவுக்குக் கோபம் வந்ததும் நல்லா நினைவில் இருக்கு! :)))))) ஹிஹிஹி, ஜிவாஜி படம் அது!

    படம் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஸ்லோதான். ஊடேலே விளம்பரங்கள் வேறே. ஒரு வழி பண்ணிட்டாங்களே! :)))) இம்மாதிரி ஆர்ட் ஃபில்ம்களே கொஞ்சம் ஸ்லோவாத் தான் போகுது! ஆனால் ஐஸ்வர்யா நடிச்ச இப்போது எடுத்த தேவதாஸ் பார்த்தீங்கன்னா! போதும், போதும்னு ஆயிடும்! :)))))

    ReplyDelete
  13. வாங்க வெங்கட், சீக்கிரமேவ கலரில் முகலே ஆஜம் பார்க்கிற ப்ராப்திரஸ்து! :))))))

    ReplyDelete
  14. ப்யார் கியா தோ டர்னா க்யா ! நம்ப ஊர்மேல ப்யார் தான். டர்னா தோ அடயார் கொசு , ட்ரெயின் மூட்டைபூச்சி அண்ட் எலி:) அவ்வளவே!!
    அரங்கன் தான் சனிக்கிழமை கார்தாலை 11 மணி வரை பிகு; நேரம் ஆகி விட்டது அப்புறம் , உங்களை கூப்பிட ஆசை கும்பகோணம் அவசரமாய் போக வேண்டியிருந்ததால் செய்ய முடியவில்லை, மன்னிக்கவும் . தாயார், நாச்சியார் பெரியாழ்வார் அருமந்தபுத்ரி அன்பால குளிப்பாட்டினார்கள்.சமயபுரத்தாள் வெள்ளிக்கிழமை பௌர்னமிஅர்த சாம பூஜைக்கு உள்ளயே உட்காரவைத்து அன்பை கொட்டி தீர்த்தாள்.அருமையான தரிசனம் இந்த முறையும். 20 நாட்கள் காணவில்லை.ஓடியே போய்விட்டது :((

    ReplyDelete
  15. I love Madhubala Geetha mam... What a face! I wrote an article in a Musical "Group Blog"- on her songs (http://musicmethodandmadness.blogspot.in/2011/02/muted-music_04.html)--- Mughal-e-azam is one of my fav movies... I love all the songs. But my fav still would be: teri mehfil mein kismat (shamshad begum! Better than Lata! :)..)

    ReplyDelete
  16. இந்த படம் நான் பாத்ததில்ல... ஆனா பதேபூர் சிக்ரி போன கல்லூரி கால நினைவு வந்தது

    ReplyDelete
  17. வாங்க ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கம் வரை வந்துட்டு இங்கே வராமல் போனதுக்கும், தொலைபேசியில் கூடக் கூப்பிடாமல் போனதுக்கும் மன்னிக்கப் போறதில்லை! :( தொலைபேசி அழைப்பு விடுத்திருந்தால் நாங்க வந்து உங்களைப் பார்த்திருப்போம். சொல்லாமல் வந்துட்டு சொல்லாமல் போயிருக்கீங்க! :(((((((

    ReplyDelete
  18. வாங்க மாதங்கி, உங்களுக்கு மதுபாலாவைப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. நல்ல நடிகை. பாவம் :( உங்கள் பேவரிட் ஷம்ஷத் பேகம் நிறையப் பேருக்கு ஃபேவரிட் தான். :))))) எனக்கும் லதாவின் குரல் அவ்வளவாய் ரசிக்காது. :))))

    ReplyDelete
  19. வாங்க ஏடிஎம், யூடிவியிலேயோ, ஜிடிவியிலேயோ எப்போவானும் போடுவாங்க, அப்போப் பாருங்க. :))))) எடுத்தப்போ ஏகப்பட்ட பிரச்னைகள்னு சொல்லுவாங்க. படமே ஓடாதுனு நினைச்சிருக்காங்க. ஆனால் பாருங்க எப்போப் போட்டாலும் சூப்பர் ஹிட்! :)))))

    ReplyDelete
  20. LK, nanna thedi parthuten. kulukki, ulukki parthuten. spamle kuda kidaikalai. innikku current oru vazhi pannitanga! :(

    ReplyDelete