எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 21, 2013

ஶ்ரீரங்கத்தில் கருடசேவை


தினம் தினம் திருவிழா கண்டருளும் நம்பெருமாளுக்கு தை மாதத்தில் மட்டும் திருவிழா இல்லாமல் இருக்குமா என்ன?? இப்போத்தானே வைகுண்ட ஏகாதசித் திருவிழா முடிஞ்சது.  அதனால் என்ன?  இப்போ பூபதித் திருவிழா.  திருவிழா கண்டருள நம்பெருமாளுக்குக் காரணமா வேண்டும்?  அதுவும் இந்த பூபதித் திருவிழா நம்பெருமாள் அழகிய மணவாளராக வெளியே போய் ஊரெல்லாம் நாடெல்லாம் சுத்தி முடிச்சுட்டுத் திரும்ப ஸ்ரீரங்கம் வந்தாரில்லையா?  அப்போது முதல் நம்பெருமாள்னு பெயரையும் மாத்தி வைச்சுண்டார்.  அது தனிக்கதை.  ஆன்மிகப் பயணத்திலே வரும் விரிவாப் பார்ப்போம்.  இப்போ நம்பெருமாளாக ஆனவருக்கு எப்படித் தைத்திருவிழா வந்ததுனு மட்டும் தெரிஞ்சுப்போமா?

இரண்டாம் ஹரிஹரபுக்கரின் பேரன் ஆன பூபதி உடையார் என்பவர் கிட்டத்தட்ட 135 பொன் கொடுத்து அரங்கனுக்குத் தைத்திருவிழா கண்டருளவும், அந்தத் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறவும்  ஏற்பாடுகள் செய்தார்.  தைத்திருவிழாவை இவரே தொடக்கி வைத்ததால் இவர் பெயராலேயே இந்தத் திருவிழா பூபதித் திருவிழா என அழைக்கப் படுகிறது.  திருவிழா தொடங்கி நான்கு நாட்கள் ஆகின்றன.  இன்று காலை கண்ணாடி அறை ஆண்டாள் சந்நிதியில் தங்கி இருந்த நம்பெருமாள் அதிகாலை நாலரை மணிக்கு அங்கிருந்து கிளம்பி வழியெல்லாம் பக்தர்கள் செய்த மண்டகப்படி உபயங்களை ஏற்றுக் கொண்டார்.


பின்னர் அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு மண்டகப்படியாக முடித்துக்கொண்டு அம்மா மண்டபம் அருகே உள்ள கருட மண்டபம் வந்தடைந்தார்.  மதியம் முழுதும் அங்கு வேண்டிய ஓய்வு எடுத்துக்கொண்டு மாலை ஆறு மணிக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க, வாத்தியங்கள் மெல்ல ஒலிக்க நம்பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்தி வீர வாளும், கேடயமும் இடையில் தரித்துக் கிளம்பினார். நாங்க ஐந்தரை மணி போல கருட மண்டபத்திலிருந்து வெளிவரும் வாயிலில் போய் நின்று கொண்டோம்.  போகப் போகப் போகப் போகக் கூட்டம் வந்து எங்களைப் பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் தள்ளி விட்டது.  இருந்தாலும் உயர்ந்த கருடனின் மேல் ஆரோகணித்த பெருமாளை நன்கு பார்க்க முடிந்தது.
கையில் காமிரா எடுத்துப் போவதைக் கூட்டம் காரணமாகத் தவிர்த்து விட்டேன்.  ஆனால் படம் எடுக்கையில் எடுத்துப் போயிருக்கலாமோ எனத் தோன்றியது.  ரொம்பவே சுமாராகப் படங்கள் வந்திருக்கு. பிகாசாவில் கருடன் நல்லாவே மூக்கை நீட்டிண்டு தெரியறார்.  இங்கே என்னமோ சரியா வரலை.  கொஞ்சம் வேலை செய்திருக்கணுமோ?   யாருப்பா அது?  தொழில் நுட்ப நிபுணரா?  ம்ஹூம், இந்தப் படங்கள் எல்லாம் உங்களுக்கு இல்லை.  என்னை மாதிரிக் கத்துக்குட்டிங்களுக்கு.  பேசாம இருக்கணும், புரிஞ்சுதா! :))))))

 கப் சிப் காரா வடை,
காலணாவுக்கு ஓசி வடை!

ஹிஹிஹி, காலணா ஏதுங்கறீங்களா?  அப்போ நோ வடை!

6 comments:

  1. அருமையான அரங்கனின் கருட சேவையை பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. 'இங்கே சரியாய்த் தெரியவில்லை' - ஞானக் கண்களுக்கு மட்டும் தெரிவாரோ என்னமோ...!

    ReplyDelete
  3. கருடசேவையா. இந்தப் பெருமாள் ஆடம்பர வதியா இருப்பார் போல இருக்கே.
    ரங்கோத்சவம் காணத்தான் நீங்கள் ஸ்ரீரங்கம் போனீர்கள் என்று மிக நன்றாஆகத்தெரிகிறது:)

    ஒரு சேவையும் விடாமல் விவரிக்கும் உங்கள் சேவை வாழ்க கீதாமா.

    ReplyDelete
  4. //திருவிழா கண்டருள நம்பெருமாளுக்குக் காரணமா வேண்டும்?//

    ஆஹா..

    பூபதி திருவிழா பற்றி தகவல் அறிந்து கொண்டேன். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு. நாங்களும் நேற்று ”ரங்கா ரங்கா” கோபுரத்தினருகில் உத்திர வீதியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்து கருட சேவையை பார்த்து விட்டு வந்தோம் மாமி.

    ReplyDelete
  6. நம்பெருமாள் தைத்திருவிழா கண்டு மகிழ்ந்தோம்.

    ReplyDelete