எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 27, 2013

ஜாமூன் சாப்பிட்டேனா இல்லையா! தலையாய கேள்விக்கு பதில்! :))

டெல்லிவாலாதான் போக முடியலை. குறைஞ்சது அந்தப் பக்கத்து ஸ்வீட்டானும் சாப்பிடணும்னு எனக்குப் பிடிவாதம்.  அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் நான் மசியவில்லை.  அண்ணாவுக்கும், தம்பிக்கும் கூட ஆசைதான்.  அப்பாவுக்குப் பயந்து வாயே திறக்கலை.  கடை ஊழியர் நான்கு கிண்ணங்களில் இரண்டிரண்டு ஜாமூன்களை ஜீராவோடு போட்டுக் கொண்டு வைத்துவிட்டார்.  எப்படிச் சாப்பிடறதுனு யாருக்கும் தெரியலை.  ஜீராவை முன்னாடி குடிக்கிறதா? இல்லை உருண்டைகளைச் சாப்பிட்டுவிட்டு ஜீராவைக் குடிக்கிறதா, வைச்சுடணுமா? எனக்கோ இரண்டும் வேண்டும்.  ஆகவே ஜாமூன்களை உடைத்து ஜீராவில் கலந்துவிட்டேன்.  உடனே அண்ணா, தம்பி இருவரும் அப்படியே செய்து சாப்பிட்டார்கள்.  அப்பாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.  அதுக்கப்புறமா மசால் தோசை சாப்பிட்டோம்.  எல்லாத்துக்கும் மேலே புத்தாண்டு சிறப்பாக சினிமாவுக்கு வேறே கூட்டிப் போறதா அப்பா சொல்லி இருந்தார்.  அந்த நாளைய வழக்கப் படி அம்மா ஹோட்டலுக்கெல்லாம் வரலை.  ஆகையால் அம்மாவுக்குப் போற வழியிலே வீட்டிலே போய்க் கொடுத்துட்டு வரலாம்னு அம்மாவுக்குப் பிடித்த கத்திரிக்காய், வெங்காய பஜ்ஜிகளை வாங்கியாச்சு.

எங்க தெருவழியாத் தாண்டியும் அப்போ கல்யாணப்பரிசு ஓடிட்டிருந்த கல்பனா தியேட்டருக்குப் போகலாம்.  பஜ்ஜியைக் கொடுக்க வேண்டியே அந்த வழியாவே போனோம். தெரு முக்கில் நாங்க நிற்க தம்பி ஓடிப் போய் வீட்டிலே அம்மா கிட்டே பஜ்ஜியைக் கொடுத்துட்டுத் திரும்ப ஓடி வந்தான்.  எங்கே விட்டுட்டுப் போயிடுவாங்களோனு பயம். :))) கல்யாணப் பரிசு சினிமாவுக்குப் போனால் அங்கே ஹவுஸ் ஃபுல்!  நாங்க தியேட்டருக்குப் போயிட்டிருந்தப்போவே அங்கிருந்து கூட்டமாக ஜனங்கள் வர படம் முடிஞ்சுதான் வராங்கனு நினைச்சு என்னனு கேட்டால் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி வரும் மக்கள்னு தெரிஞ்சது.  எங்களுக்கு ஏமாற்றமாய் இருக்க, அப்பாவோ நல்லதாப் போச்சு, புது வருஷமும் அதுவுமா அழுகைப் படம் பார்க்க வேண்டாம்னு திரும்ப ஆரம்பிக்கத் தம்பியோ சினிமா இல்லைனும் ஏமாற்றத்தின் எல்லைக்கே போக, திடீர்னு அப்பா என்ன நினைச்சாரோ, வந்த வழியிலேயே போய்ப் பின்னர் தெற்கு கோபுரம் செல்லும் பாதையில் செல்ல ஆரம்பிக்க வீட்டைத் தாண்டி எங்கே போகிறோம்னு தெரியாமல் நாங்களும் கூடப் போக நியூ சினிமா வந்தது.



அங்கே அப்போ ஓடிட்டு இருந்த படம் "வீரபாண்டியக் கட்ட பொம்மன்," அப்பா கவுன்டருக்குப் போய்ப் படம் போட்டாச்சா? டிக்கெட் இருக்கானு கேட்க, அவரும் இப்போத் தான் நியூஸ் ரீல் ஓடுது, கல்பனா தியேட்டரில் ஃபுல்லுனு வந்தப்புறமாத் தான் இங்கே படம் போடுவோம்.  அங்கே டிக்கெட் கிடைக்காதவங்க இங்கே வர வாய்ப்பு இருக்கேனு சொல்ல, அப்பாவும் நல்லதாப் போச்சுனு அதுக்கு டிக்கெட் எடுத்தார்.  அப்போ கலர் படமே அரிதான காலத்தில் கேவா கலர் எனப்படும் கலரில் வந்த படம் வீரபாண்டியக் கட்டபொம்மன்.  அப்போல்லாம் கட்டபொம்மன் வரலாறு இவ்வளவு நன்றாகத் தெரியாது.  ஆகவே ரசித்தே பார்த்தேன். ஆகக் கூடி இம்மாதிரித் தான் எதிர்பாராமல் வீரபாண்டியக் கட்டபொம்மன் படம் பார்க்க நேரிட்டது.  அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் சிவாஜி ரசிகர்கள். எனக்குத் தான் அப்போலே இருந்து சிவாஜியைப்பிடிக்காது.  ஜெமினி படம் கொஞ்சம் பிடிக்கும் என்றாலும் அவ்வளவு ஆர்வம் இல்லை. சிவாஜி படத்துக்குப் பரவாயில்லைனு தோணும்.  ஆனால் வேறு வழியில்லாமல் அன்னிக்கு அந்தப் படம் பார்த்தேன்.

அதுக்கப்புறமா கல்யாணப்பரிசு படத்துக்குப் பின்னர் பாஸ் கிடைத்துப் போய்ப் பார்த்தோம், அம்மாவோடு.  தியேட்டரிலிருந்து வெளியே வரச்சே அம்மா முகமெல்லாம் அழுது வீங்கி இருந்தது பார்க்க அப்போ சிரிப்பா வந்தது.  அதுக்கப்புறமா நிறைய சிவாஜி படங்களைப் பார்க்க நேரிட்டிருக்கிறது.  என்னோட டாக்டர் சித்தப்பா (சின்னமனூரில் இருந்தார்) சிவாஜியின் ரசிகர் எனச் சொல்வதை விட வெறியர்னே சொல்லலாம்.  எங்க ரெண்டு பேருக்கும் இதை வைச்சு வாக்குவாதம் நடக்கும்.  சிவாஜியை விட உயர்ந்த நடிகர் இல்லைனு அவர் கட்சி.  நடிப்பா அதுனு என் கட்சி! :)))))  விபரம் தெரிஞ்சப்புறமா ரசிக்க முடியலை.  சித்தப்பாவாலே உயர்ந்த மனிதன் படத்தை மட்டும் குறைந்த பக்ஷம் பத்து முறை  பார்க்கும்படி ஆயிடுச்சு.  கட்டித் தூக்கிட்டுப் போய்த் தியேட்டரிலே உட்கார வைப்பார். :))))) விதியேனு பார்த்திருக்கேன்.  

16 comments:

  1. அதானே நடிப்பா அது...? நடிக்கும் பாத்திரத்திற்கேற்றவாறு 100% மாறி விட்டால் நடிப்பா அது...? டாக்டர் சித்தப்பா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள்...

    ReplyDelete
  2. //சித்தப்பாவாலே 'உயர்ந்த மனிதன்' படத்தை மட்டும் குறைந்த பக்ஷம் பத்து முறை பார்க்கும்படி ஆயிடுச்சு.//

    நானும் இவருக்குமேல் இருந்தவன் தான். [பெரியப்பா என்று வைத்துக்கொள்ளலாம். ;)))))]

    அது ஒரு காலக்கட்டம். அப்படியொரு ரஸனை. நானும் இதே படத்தை ஒரு 15 முறைகள் பார்த்திருக்கிறேன்.

    முதல்பாட்டு “நாளை ... இந்த ... வேளை பார்த்து ... ஓடிவா நிலா” என்பதில் ஆரம்பித்து, கடைசிவரை உள்ள அனைத்துக்காட்சிகளையும், இன்றும் கூட அப்படியே ரஸனையுடன் என்னால் சொல்ல முடியும்.

    நாளாக நாளாகத்தான் ஒரு Maturity ஏற்பட்டது. சினிமா என்பது ஒரு போலியான கற்பனை உலகம் என்பதை அறிய முடிந்தது.

    அருமையான பதிவு. அழகாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ஆஹா DD... திருப்பிட்டீங்களே DD!

    வீ பா க வும், உ ம - ம் ரெண்டுமே நல்ல படங்கள்தான்.

    டெல்லிவாலா கடை அவளவு பழசா? டெல்லிவாலாவும் கங்குவாலாவும் ஒன்றேதானா? கல்பனா தியேட்டர் பெயரை இப்போது மாற்றி விட்டார்கள். நியூ சினிமா மவுனமாகி விட்டது!

    ReplyDelete
  4. டிடி, உங்க பேச்சு காய்! :))))) ஹாஹா, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ரசனை! :)))

    ReplyDelete
  5. வைகோ சார், நிஜம்மா உங்க கிட்டே இருந்து சிவாஜி படத்துக்கான என் விமரிசனத்துக்கான ஆதரவை எதிர்பார்க்கலை. நன்னீஸ்ஸ்ஸ்!

    ReplyDelete

  6. //டெல்லிவாலா கடை அவளவு பழசா?//

    ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு என்ன வயசாச்சுனு நினைக்கறீங்க?? அநியாயமா இல்லையோ! :))) ஹிஹிஹி, டெல்லிவாலா கடை திறந்த அன்னிக்கு அங்கேருந்து வந்த உணவுத் தயாரிப்பின் வாசனைகளில் மயங்கி அந்தப் பக்கமாப் போய் நின்னு வேடிக்கை பார்க்காதவங்க இல்லை.

    அங்கே தான் முதன் முதல் சப்பாத்திக்கு சைட் டிஷோடு சேர்த்து வெங்காயப் பச்சடியையும் அறிமுகம் செய்தாங்க. நான் நேரில் போய்ச் சாப்பிட்டதில்லை. தம்பி வாங்கி வந்து கொடுத்துச் சாப்பிட்டிருக்கேன். :)))))அப்போல்லாம் அங்கே போய்ச் சாப்பிட மட்டுமில்லை, ஹோட்டலில் போய்ச் சாப்பிடவே கூச்சமா இருக்கும். கொஞ்சம் விபரம் தெரிஞ்சதும், அண்ணாவும் வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், புதுவருஷத்துக்கு ஹோட்டலுக்குப் போறதை நாங்களாவே நிறுத்திட்டோம்.

    ReplyDelete
  7. //அப்பா, அண்ணா, தம்பி எல்லாம் சிவாஜி ரசிகர்கள். எனக்குத் தான் அப்போலே இருந்து சிவாஜியைப்பிடிக்காது. //

    சிவாஜியை பிடிக்காத காரணம் இப்பத்தான் தெரியுது! :-)))))

    ReplyDelete

  8. சினிமா பார்த்த அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அதை வைத்து ஒரு நீண்ட பதிவே எழுதலாம். இனிப்பில் குலாப்ஜாமூன் எனக்கும் பிடிக்கும். சீக்கிரமே செய்யக் கூடிய இனிப்பு அது. என் மனைவி அதில் எக்ஸ்பெர்ட்.எப்படி சாப்பிட்டால் என்ன? போர்த்திப் படுத்தாலும் படுத்துப்போர்த்தினாலும் என்ன பெரிய வித்தியாசம்.?

    ReplyDelete
  9. வாங்க வா.தி. ஹிஹிஹி, அநியாயமா இருக்கே! :)))))

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார், குலாப்ஜாமூன் ஒரிஜினலான சர்க்கரை போடாத கோவாவில் செய்தால் தான் ருசியே. :))) இங்கெல்லாம் மிக்சட் பவுடர் அல்லது பால்பவுடர்+மைதா மாவு! :((( ஒரிஜினல் சாப்பிட்டுட்டு இதெல்லாம் பிடிக்கிறதே இல்லை.

    ReplyDelete
  11. ஆஹா.... குலாப்ஜாமூன்....

    நீங்க சொல்ற மாதிரி இப்ப வர ரெடிமேட் பவுடர் குலாப்ஜாமூன் அவ்வளவு நல்லா இருக்காது - இங்கே சாப்பிட்டு அலுத்துப் போன விஷயம்!

    சிவாஜி! - :)))

    ReplyDelete
  12. ஜாம்ன்னு சொல்லி பதிவைத் தொறந்தா இப்படிப் பயமுறுத்துறீங்களே?

    ReplyDelete
  13. வாங்க வெங்கட், குலாப் ஜாமூன் சாப்பிட அலுத்துப் போச்சுனு சொல்லிட்டு வந்துட்டீஙக்??? :)))))))

    ஹிஹிஹி சிவாஜி!:))))) கீழே அப்பாதுரையைப் பாருங்க, இதுக்கே பொங்கிடுவார் போலிருக்கு! அந்த மட்டில் பிழைச்சேன்.

    ReplyDelete
  14. அப்பாதுரை, எழுதும்போது உங்களை நினைச்சுட்டே தான் எழுதினேனாக்கும். :))))))

    ReplyDelete
  15. எங்கள் அப்பாவும் சிவாஜி படத்துக்குத்தான் அழைத்துப்போவார். அதைவிட்டால் படம் இல்லை என்பதால் நானும் அம்மாவும் போவோம். அண்ணாமார்கள் சிநேகிதர்களுடன் தப்பிவிடுவார்கள்.:(

    ரிக்சாக்காரன் படம் மட்டும் எம்ஜிஆர் படம் பார்த்திருக்கின்றேன்.

    ReplyDelete
  16. ஆஹா ஜாமூன் சாப்பிட்டதுல இவ்ளோ பெரிய வரலாறு இருக்கா? சூப்பர்

    ReplyDelete