எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 09, 2013

ராமா கல்யாணமே வைபோகமே! சீதா கல்யாணமே வைபோகமே!


காமிராவை வெர்டிகலா வைச்சு எடுங்கனு வெங்கட் (நாகராஜ்) சொன்னதாலே அப்படி எடுத்தப்போக் கூட ராமரோட ஒரு பக்கத்திலே இருக்கும் விக்ரஹமும், கீழேயும் ஒரு பக்கத்து விக்ரஹங்கள் மட்டுமே வருது.  இன்னும் கொஞ்சம் பின்னால் போகணும் ஹவுடினி மாதிரி! :)))))))

பின்னாலே எங்கே போறது? மூணடி?? மூன்றரை அடி பாசேஜ்! பின்னால் சுவர் தான். :))))  சுவத்தை ஊடுருவிக் கொண்டு ஹவுடினி மாதிரிப் போக முடியலை.

கல்யாணம் நிச்சயம் செய்தப்புறமா செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிடலாமா?

முதல்லே பத்திரிகை அடிக்கக் கொடுக்கணும்

தொலைதூரத்தில் இருக்கும் உறவினர், நண்பர்கள் விலாசங்கள் சேகரிக்கணும்.

அடுத்துப் பத்திரிகைகள் வந்ததும், கிட்ட இருக்கிறவங்களுக்குக் கல்யாணத்துக்குப் பதினைந்து நாட்கள் முன்னாடி கொடுக்கிறாப்போலும், தூரத்தில் இருக்கிறவங்களுக்கு, முதலில் ஒரு போஸ்ட் கார்ட், இப்போல்லாம் தொலைபேசி மூலம் தெரிவித்து, அவங்க வரவை உறுதி செய்து கொள்வது நல்லது.  ரயிலிலோ, விமானத்திலோ, பேருந்திலோ வரவங்க அவங்க பயணச்சீட்டை உறுதி செய்துக்க வசதி.  அப்புறமாப் பத்திரிகையை கையால் எழுதிய ஒரு அழைப்புக் கடிதத்தோடு அனுப்பி வைக்கணும்.  அதுக்கும் இப்போல்லாம் ப்ரின்ட் அவுட் எடுத்துக் கையெழுத்து மட்டும் போடறாங்க சிலர் அதுவும் போடறதில்லை.

பத்திரிகைகளில் விலாசம் எழுதி, ஸ்டாம்ப் மறக்காமல் ஒட்டி அனுப்ப என்றெ இரண்டு பேரைத் தனியா நியமிக்கணும்.

அடுத்துத் துணிமணிகள்.  முதல்லேயே அவசியமா வாங்க வேண்டியவை கல்யாணப் பெண்ணுக்கு என்ன என்ன என முடிவு செய்துக்கணும்.  ஒவ்வொருத்தர் கல்யாணம் வரைக்கும் ஒரு பட்டுப் புடைவை கூட எடுத்திருக்க மாட்டாங்க.  அப்படின்னா இப்போ நிறைய எடுக்கிறாப்போல் ஆயிடும்.  ஆகவே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒண்ணு, ரெண்டு பட்டுப் புடைவை கைவசம் இருந்தால் கல்யாணத்தின் போது கட்ட வசதியாக இருப்பதோடு (இரவல் கேட்க வேண்டாம்) கல்யாணத்தின் புடைவைச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம்.  எப்படியும் மாப்பிள்ளை வீட்டில் ஒன்றிரண்டு எடுப்பாங்க என்பதால் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு என எடுத்தால் போதுமானது. (இது என் தனிப்பட்ட கருத்துப்பா, சண்டைக்கு வராதீங்க, பட்டுப்புடைவை என்னிக்கோ கட்டுவது கொஞ்சமா இருந்தால் போதும்னு என் எண்ணம்)  கல்யாணப்பெண்ணுக்கு உள்ளாடைகளில் இருந்து துண்டுகள், கைக்குட்டைகள், அழகு சாதனப்பொருட்கள், என எல்லாத்துக்கும் மறக்காமல் முடிவு செய்து செலவுத் திட்டத்திலே சேர்த்துடணும்.

அடுத்து மாப்பிள்ளைக்கு நீங்க வாங்கப் போற வேஷ்டி வகையறாக்கள். இவையும் வீட்டுப் புரோகிதரைக் கலந்து கொண்டு எப்படி வாங்கணும்னு கேட்டுக் கொண்டு வாங்கலாம்.  காசியாத்திரைக்கு உள்ள சாமான்கள், குடை, புத்தகம், செருப்பு, கம்பு போன்றவையும் இதில் அடங்கும். இப்போதெல்லாம் சமையல் ஒப்பந்தக்காரர்களே இவை கொடுத்துவிடுகின்றனர்.  ஆகவே தெரியலையே, விட்டுப் போச்சே என்ற பதட்டம் இருக்காது. :)

இதுக்கு அடுத்துப் பாத்திரங்கள், பக்ஷணம், அப்பளம், கருவடாம் போன்றவை.
இங்கே நல்லா வெயில் காயுது! யாரெல்லாம் கருவடாம் போட ரெடியா இருக்கீங்க?  அதுக்கப்புறமா கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி பக்ஷணம் செய்தால் போதும்.  அதுக்கு அடுத்தாப்போல் வருவோம்!  இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு. 

15 comments:

 1. இப்ப பக்ஷணம் யாரு பண்றா அதுவும் ஒப்பந்தகாரர்தான்

  ReplyDelete
 2. பட்டுப்புடவை கொஞ்சமா தான்... ஒரு நாலைந்து...!!!

  ReplyDelete
 3. எல்கே, நாம பண்ணிடுவோம்! :))))))

  ReplyDelete
 4. டிடி, ஹிஹிஹிஹி, பட்டுப்புடைவை நாலைந்துன்னா ஓகே. கம்மி தான். நான் சொல்றது மொத்தமா நாலைந்து! :))))) வெயிட்டா இருந்தாக் கட்ட முடியறதில்லை. :(

  ReplyDelete
 5. இனிமேல் உங்களைப் பிடிக்கவே முடியாது தலைக்கு மேல் வேலைதான் :)))

  நடக்கட்டும் வைபோகம்

  ReplyDelete
 6. //அதுக்கு அடுத்தாப்போல் வருவோம்! இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு. //

  சந்தோஷம். இது அந்தக்கால கல்யாணம் போலிருக்கு. இப்போ எல்லாமே காண்ட்ராக்ட் தானே. தொட்ருங்கள்.

  ReplyDelete
 7. செக் லிஸ்ட்ல அனுப்பினவங்க பேருக்கும், அழைத்தவர்கள் பேருக்கும் டிக் போட்டு, எதிர்பார்ப்பவர்கள் எண்ணிக்கையை ஃபில் செய்தாச்சா? யார் யாருக்கு மரியாதை செய்யணும்? யார் யாருக்கு பதில் மரியாதை செய்யணும் லிஸ்ட் ரெடியா? சமையல்காரர் கிட்ட கொடுக்கறதுக்கு மெனு ரெடியா?!! :))

  ReplyDelete
 8. இன்னும் கல்யாண வேலை நிறைய இருக்கு.

  ~ தாலி மறந்துட்டேளே!

  ReplyDelete
 9. வாங்க மாதேவி, ஆமாம், தலைக்கு மேலே வேலை காத்துக் கிடக்கு! :))))

  ReplyDelete
 10. வைகோ சார், கரெக்டா சொல்லிட்டீங்க, அந்தக் காலக் கல்யாண முறைகளைக் குறிப்பிடுவதே இந்தப் பதிவுகளின் முக்கிய நோக்கம். :)))))

  ReplyDelete
 11. வாங்க ஸ்ரீராம், இன்னும் பொண்ணுக்கும், பிள்ளைக்கும் துணி வாங்கி முடியலை. அதுக்கப்புறமா முக்கிய உறவினர்களுக்கு! :)))))

  சமையல் மெனு தனியா வரும். இது காடரிங் கல்யாணம் இல்லையே! :))))

  ReplyDelete
 12. வாங்க "இ"சார், அவ்வப்போது வந்து எனக்குப் பெருமை சேர்ப்பதில் மகிழ்ச்சி. தாலியை மறப்பேனா? தனியா வரும் பாருங்க. :))))))

  ReplyDelete
 13. இது யாரோட கல்யாணம்னு எனக்கொரு சம்சயம்:)
  என் கல்யாணத்துக்கு எங்க வீட்டில் மூணு பட்டு தான்.
  இரண்டு சின்னாளப்பட்டு. ஆறு கடாவ் வாயில்:)
  சும்மா களை கட்டிடுத்தே.ஜம்ஜம்னு கல்யாணம் நடக்கணும்.

  ReplyDelete
 14. கல்யாணம் களை கட்டி விட்டது.
  இனி நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறக்குமே! நிக்க பொழுது இருக்காது.

  ReplyDelete
 15. கல்யாணம் களை கட்டியாச்சு.....

  புகைப்படம் எடுக்க முடியலையா.... அச்சச்சோ... அன்னிக்கு கேமராவோட வந்தேனே... சொல்லியிருந்தா ஒரு படம் எடுத்திருக்கலாம்! சரி பரவாயில்லை. அடுத்த ட்ரிப்-ல எடுத்துடுவோம்! :)

  ReplyDelete