எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 28, 2014

நானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே!

இங்கே

நான் எழுதி முடிக்கிறதுக்குள்ளே ஹிந்தி ட்ரென்ட் போய் வேறே வந்துடும்; வந்தாச்சு! :)  ஆனாலும் விட மாட்டோமுல்ல!

மத்யமா பரிக்ஷைக்கு எக்கச்சக்கமாப் படிக்கணும். பெப்ரவரி இரண்டாம் சனி, ஞாயிறில் தான் ஹிந்திப் பரிக்ஷை இருக்கும். அதுக்குள்ளே தயாராகணும்.  ஒரு வசதி என்னன்னா, எங்க வீட்டிலே சாப்பாடு சூடா இருக்கணும்னு இல்லை.  காலம்பரவே சமைச்சுடலாம்.  பத்து மணிக்குச் சாப்பிட்டால் கூட ஆறிப் போச்சுனு சொல்ல மாட்டாங்க.  அதோட வெண்கலப்பானையில் சாதம் வைக்கணும்.  கல்சட்டி, ஈயச் செம்பில் குழம்பு, ரசம் பண்ணணும்.  எல்லாமே சூடு தாங்கும்.  ரொம்ப நேரம் சூடாக வைத்திருக்கும்.  ஆகவே ஏழு மணிக்குள்ளாகச் சமைச்சுட்டுக் கிளாஸுக்குப் போவேன்.  ஒன்பது, ஒன்பதரைக்கு வந்து சாப்பிட்டுட்டு டெய்லரிங் கிளாஸ், மத்தியானம் ஒரு மணிக்கு வந்தால் அப்பாவுக்கு டிஃபன், காஃபி கொடுத்தனுப்பணும்.  தம்பியும் அதே ஸ்கூல்லே படிச்சதால் அவன்ன் வந்து எடுத்துப் போவான்.  அதைத் தம்பி கிட்டே கொடுத்துடுவேன்.  டிஃபன் கடையும் முடிஞ்சுடும்.  அதே அடுப்பிலேயே ராத்திரிக்கு சாதம் வைச்சுடுவேன்.  எல்லாம் ஆக இரண்டரை மணி ஆயிடும். அதுக்கப்புறமாப் பக்கத்து வீட்டு அக்கா கிட்டே போய் ஹிந்தி படிப்பேன். அவங்க ப்ரவீன் ப்ரசாரக் படிச்சுட்டு அப்பா அனுமதி இல்லாததால் வீட்டிலேயே இருந்தாங்க.

தாத்தா வீட்டிலே இருந்து ஒரு பழைய ஹிந்தி- ஆங்கிலம்- தமிழ் அகராதியும் தற்செயலாக் கிடைச்சது.  அதையும் துணைக்கு வைச்சுட்டுப் படிச்சேன். அதுக்குள்ளே பொங்கல் பண்டிகைக்கு அம்மாவும் மதுரை வந்தாங்க.  கொஞ்சம் நேரமும் கூடக் கிடைச்சது.  பெப்ரவரியில் பரிக்ஷை எழுதி முடிச்சுட்டேன்.  ஏப்ரலில் ரிசல்ட் வந்துடும்.   தொடர்ந்து ராஷ்ட்ரபாஷா வகுப்புக்குப் போயிட்டு இருந்தேன்.  அப்போப் பார்த்து திடீர்னு ஜுரம் வர ஒரு வாரம் வகுப்புக்குப் போகலை. அதுக்குள்ளே தமிழ்ப் புத்தாண்டும் வந்தது. அன்னிக்குப் பெரியப்பாவைப் பார்த்து ஆசி வாங்கறதுக்காகப் பெருமாள் தெப்பக்குளம் அருகே இருந்த அவங்க வீட்டுக்குப் போனப்போ பெரியப்பா பொண்ணு ஹிந்தி ரிசல்ட் வந்தாச்சே, தெரியுமானு கேட்டாள்.  எனக்குத் தெரியாதுனு நான் சொல்லிட்டு, என் ரிசல்ட் பத்தி ஏதானும் அவளுக்குத் தெரியுமானு கேட்கவே பெரியம்மாவும், அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தெரியாதேனு சொல்லிட்டாங்க.  எனக்குச் சந்தேகம் முளை விட்டது.

சந்தேகத்தோடயே வீட்டுக்கு வந்தேன்.  வர வழியிலே என்னோட ஹிந்தி படிக்கும் இன்னொரு பெண்ணைப்பார்த்தேன்.  அவள் பாஸா என்று கேட்டதுக்குப் பாஸ் என்று சொன்னாள்.  என் ரிசல்ட் பத்திக் கேட்டதுக்கு அவளும் தெரியாதுனு சொல்லிட்டு நழுவப் பார்த்தாள்.  அவளை நிறுத்தி வலுக்கட்டாயமாகக் கேட்டதற்கு எதுக்கும் நீ சபாவிலேயே போய்ப் பார்த்துக்கோனு சொல்லிட்டா.  ஹிந்தி பிரசார சபாவின் கிளை அப்போ ராஜாபார்லி பேக்கரி இருக்கும் சந்தில் மாடியில் தான் இருந்தது.  ஆகவே மீண்டும் மேலகோபுர வாசலுக்கு வந்து அந்தச் சந்தில் போய் மேலே மாடிக்குப் போனேன்.  ரிசல்ட் வந்த லிஸ்டைக் கேட்டேன்.  என்னோட நம்பரைக் கேட்டுட்டு அந்தக் குறிப்பிட்ட மத்யமா ரிசல்ட் வந்திருக்கும் பேப்பரை மட்டும் எடுத்துக் கொடுத்தாங்க.  ஆஹா என்ன ஆச்சரியம்!  நிச்சயமா நான் இதை எதிர்பார்க்கவே இல்லை தான்! 

12 comments:

  1. ஹிஹிஹி.... சஸ்பென்ஸு...! ஓகே... ஓகே... மெய்ன்டெய்ன் பண்ணுங்க... அடுத்த பதிவுல தெரிஞ்சுக்கறேன்!

    ReplyDelete
  2. 1. பார்கவா அகராதி தானே. மங்கலான வெளிர்நீல அட்டை?

    2. இந்த மாதிரி சஸ்பென்ஸ் த்ராட்லெ விட்றதை யார் கிட்ட கற்றீர்கள்?

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், நன்றி.

    ReplyDelete
  4. மறந்து போச்சு "இ"சார். அந்த அகராதி இப்போ யார் கிட்டே இருக்குனு தெரியலை. ரொம்பவே உதவியது. :)))

    ஹிஹிஹி, சஸ்பென்ஸ் வைக்காமல் எப்படி? :))))

    ReplyDelete
  5. நீங்கள் முதலாவதாய் வெற்றி பெற்று இருப்பீர்கள் .

    ReplyDelete
  6. நல்லா சஸ்பெண்ஸொட எழுதறீங்க! தொடருங்கள்!

    ReplyDelete
  7. வாங்க கோமதி அரசு, கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க சுரேஷ், ரொம்ப நாளாச்சு பார்த்து! வரவுக்கு நன்றி.

    ReplyDelete

  9. நான் பள்ளியில் படிக்கும்போது ஹுந்தி கட்டாய பாடம். ஆனால் மேல் வகுப்புக்குப் போக தேர்வாக வேண்டுமென்ற அவசியம் இருக்கவில்லை.பள்ளியில் ஹிந்தி படித்ததில் “மானே ஹம்கோ ஜன்ம தியா ஹை. உசிகா தூத் பீகர் ஹம் படே ஹுயே ஹை “ என்பது நினைவுக்கு வருகிறது இப்போது ஹிந்தி புரியும் . ஓரளவு பேசி சமாளிக்கலாம்

    ReplyDelete
  10. வாங்க ஜிஎம்பி சார். நன்றி.

    ReplyDelete
  11. வெங்கட் வரவுக்கு நன்றி.

    ReplyDelete