எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 25, 2014

மீண்டும் ஒரு பயணத்தின் கதை!

இன்னிக்குக் காலம்பர சீக்கிரமா எழுந்து குலதெய்வம் கோயிலுக்குப் போகணும்னு முடிவு எடுத்திருந்தோம்.   ஃபாஸ்ட் ட்ராக்கில் வண்டிக்குப் பதிவு செய்து ஐந்தரைக்கு வரச் சொல்லியாச்சு.  வெள்ளிக்கிழமை காலை பத்தரை மணியில் இருந்து பனிரண்டு வரை ராகுகாலம் என்பதால் அதற்கு முன்னாடி மாவிளக்குப் போடணும்னு எண்ணம். ஆனால் ஐந்தேமுக்கால் ஆகியும் வண்டி வரலை. வண்டி நம்பர், ஓட்டுநர் நம்பர் எல்லாம் ஐந்து மணிக்கே வந்துடுச்சு.   ஃபோன் பண்ணிக் கேட்டால் அந்த ஓட்டுநர் சாவகாசமாய் நான் வரமாட்டேன் அப்படினு சொல்றார்.  என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நம்ம ரங்க்ஸே இன்னிக்குப் பதட்டம் அடைஞ்சுட்டார்.  மறுபடி ஃபாஸ்ட் ட்ராக்கிற்குத் தொலைபேசிக் கேட்டால் அவங்க ஓட்டுநரோடு பேசிட்டுச் சொல்றோம்னு சொன்னாங்க.


ஓட்டுநரை சமாதானம் செய்திருப்பாங்க போல.  ஆனால் ரங்க்ஸ் அந்த ஓட்டுநர் வரவேண்டாம்னு சொல்லிட்டார்.  வேறே வண்டி அனுப்பச் சொல்லி அது வரச்சே ஆறே கால் ஆயிடுச்சு.  நல்லவேளையா அபிஷேஹ சாமான்கள், மாலை, பூ, பழங்கள், தேங்காய் உள்பட ஶ்ரீரங்கத்திலேயே வாங்கிட்டோம். அதுக்கேத்தாப்போல் கும்பகோணம் எட்டரைக்குத் தான் கண் விழித்திருந்தது. எந்தக் கடைகளும் திறக்கலை.  துளசி மாலை மட்டும் அங்கே வாங்கிக் கொண்டோம்.  வழியிலே செல்லை எதுக்கோ எடுத்துப்பார்த்தா சுத்தம்!  சார்ஜே இல்லை.  நேத்திக்கே போட்டிருக்கணும் போல!  நல்லவேளையா ரங்க்ஸ் செல்லை எடுத்து வந்திருந்தார்.  அதன் மூலம் கோயில் பூசாரிக்குத் தகவல் சொல்லியாச்சு.  பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கும் தகவல் சொல்லியாச்சு.

செல் தான் இருக்கேனு நான் காமிரா எடுத்துட்டுப்போகலை! :( படங்கள் எடுக்க முடியலை. கும்பகோணத்திலிருந்து பரவக்கரை வரும் வழியில் அரசலாற்றங்கரையிலும், பாசன வாய்க்காலிலும் தூர் வாரி இருந்தது தெரிந்தது.  பாராட்ட வேண்டிய விஷயம் தான்.  சில குளங்கள் தூர் வாரப்பட்டுக் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த   3 நாள் மழையில் நிரம்பியும் இருந்தது.  செல்வதற்கே கஷ்டமாய் இருந்த சாலையும் செப்பனிடப்பட்டு இருந்தது.  இப்படி நல்ல விஷயங்களாக் கண்ணிலே படறதேனு ஆச்சரியமா இருந்தது.  அதற்கேற்ப  திருஷ்டிப் பரிகாரமும் கிடைத்தது.  :(  அரசலாற்றங்கரையில் கரை ஓரமாய்ப் பெரிய பெரிய பள்ளங்கள் வெட்டி  தண்ணீருக்காக ஊற்றுத் தோண்டி இருந்தனர்.  தண்ணீரைக் குழாய் மூலம் மேலே ஏற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தது. எல்லாம் சரிதான்.

அந்த மேட்டின் அருகேயே தோண்டிய மணல் ஒரு சின்னக் குன்றாக இருந்தது.  அதோடு பள்ளமும் கிட்டத்தட்டப் பத்தடிக்கும் மேல் ஆழம்.  தண்ணீர் வரும் நாட்களில் இந்தப்பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி, ஆற்றிலும் தண்ணீர் ஓடும்போது கரையருகே பள்ளம் இருக்கிறது எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும்? அந்த அந்த கிராமத்துக்காரங்களுக்கே நினைவில் இருக்கப்போவதில்லை. அதோடு அருகிலிருக்கும் மேடு?  அதில் எத்தனை பேர் புதைந்து போகும் சாத்தியம் இருக்கிறது என்பதையும் யாரும் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை.  நம் வேலை எப்படியானும் ஆனால் சரினு இஷ்டத்துக்குப் பள்ளம் தோண்டி நதியை வறண்டு போக வைப்பதோடு ஆபத்துக்கும் வழி தேடுகிறோம்.  அப்புறமா அரசாங்கம் வந்து அதுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கணும்.   என்னத்தைச் சொல்றது!

ஊருக்குள்ளே நுழையும்போதே முதலில் இருக்கும் பொய்யாப் பிள்ளையார் கோயில் இருக்கும் அழகு கண்ணில் ரத்தம் வர வைத்தது. பிள்ளையாருக்கு நெய்க்கொழுக்கட்டை பண்ணிக் கொண்டு போய்க் கொடுத்தேன்.  ரொம்ப சந்தோஷமா இருந்தது அவருக்கு. பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் அவரைக் கவனிப்பாங்க.

மாரியம்மன் கோயிலில் மாவிளக்குப் போட்டுட்டுப் பெருமாள் கோயிலிலும் தரிசனம் முடித்துக் கொண்டு நேரே கருவிலி சென்றோம்.  அங்கே சர்வாங்க சுந்தரி அம்பாளுக்கு லக்ஷார்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.  உறவினர் திரு கண்ணன் வந்திருந்தார்.  நேற்றுத் திரு ராய. செல்லப்பாவுடன் பேசுகையில் என்னைக் குறித்தும் பேசினதாய்த் தெரிவித்தார்.  அட, நம்மை நினைவு கூர்ந்திருக்கிறாங்களே என மகிழ்ச்சியாக இருந்தது.



கருவிலி கோயிலின் ராஜகோபுரம்.  படம் சமீபத்தில் தான் எடுக்கப்பட்டது.  ராஜகோபுரமும் இப்போது தான் பத்து ஆண்டுகளுக்குள்ளாக கட்டப்பட்டது.  கோயில் சீந்துவாரின்றிக் கிடந்தது.  நான் புக்ககம் போன புதிதில் குடிக்க நல்ல தண்ணீர் இந்தக் கோயில் கிணற்றிலிருந்து தான் கொண்டு வருவோம். அப்போது வயதான ஒரு குருக்கள் மட்டுமே கோயிலில் தன்னந்தனியாக இருப்பார்.  அவர் வீடு எதிரே தான்.  இப்போது அவரின் பிள்ளை தான் கோயிலைப் பார்த்துக் கொள்கிறார்.  ஆனால் அப்போது அந்தக் கோயிலுக்குத் தினமும் போனது நானும், என் கடைசி நாத்தனாருமாகத் தான் இருக்கும். இப்போதோ எங்கெங்கிருந்தோ வந்து வழிபடுகின்றனர்.  இந்தக் கோயிலுக்குத் தான் திரு கிருஷ்ண மூர்த்தி (கல்கி வைத்தியநாதனின் தம்பி)  தன் செலவில் திருப்பணிகள் செய்வித்தார்.  இப்போதும் கோயிலில் எல்லா முக்கிய தினங்களிலும் இவரின் பங்கு நிச்சயம் இருக்கும்.

சர்வாங்க சுந்தரி ஏற்கெனவே நல்ல உயரம்.  இன்னிக்கு அலங்காரத்தில்  என் கண்ணுக்கு அம்பாள் விஸ்வரூபமாய்த் தெரிய, ரங்க்ஸுக்கோ அம்மன் சோகமாய் இருப்பதாய்ப் பட்டிருக்கிறது.  அப்புறமா ரங்க்ஸின் செல்லப் பிள்ளையாரைப் பார்த்தோம்.  அவருக்கு யாரோ பூ வைச்சிருந்தாங்க.  அதிலே அவருக்கு ரொம்ப சந்தோஷம்.  சுவற்றில் மிகச் சிறிய அளவில் ஆறங்குலமே இருப்பார் அந்தப்பிள்ளையார்.  அவர் சிறுவனாய் இருந்தப்போவிருந்தே இந்தப் பிள்ளையார் தான் நெருங்கிய நண்பர்.  தினம் எண்ணெய் முழுக்காட்டிக் குளிப்பாட்டிப் பூ வைத்து நிவேதனம் செய்வாராம்.



இது முன்னர் ஒரு முறை எடுத்த படம்.  இவர் தலைக்கு மேல் திருவாசிபோல் வந்திருக்கும் இடத்தில் தான் ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது.  அதில் தான் பூ வைக்கின்றனர்.  இன்றும் யாரோ வைத்திருந்தனர்.  கருவிலியை முடிச்சுட்டுப் பின்னர் கும்பகோணம் வழியா ஶ்ரீரங்கம் வரச்சே மூன்றரை மணி ஆயிடுச்சு! 

25 comments:

  1. குலதெய்வம் கோவில் விசிட்டா... எங்கள் குலதெய்வம் கூட கிட்...டத்...தட்ட அந்தப் பக்கம்தான்! சேங்காலிபுரம் அருகே மழுவசேரி!

    ReplyDelete
  2. மிக விஷேசமான தலம்.. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. // என்னத்தைச் சொல்றது! // ம்ஹீம்...!

    ReplyDelete
  4. ஆடி வெள்ளிக்கிழமைக்குக் கருவேலி போகிறேன் என்று கண்ணன் கூறினார். உங்களைப் பற்றியும் கூறினார். உங்கள் எழுத்தைப் பற்றி உயர்வான கருத்தை அவரிடம் சொன்னேன். மகிழ்ந்தார்.சர்வாங்க சுந்தரி அம்மனை விரைவில் தரிசிக்கவேண்டும். அவள் அருளாலே அவள்தாள் வணங்குவதுதானே முறை! வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன். உங்கள் எழுத்தில் நானே இன்று அம்மனைத் தரிசித்துவிட்ட அமைதி மனத்தை ஆட்கொள்ளுகிறது.

    ReplyDelete
  5. உங்களுடனேயே வந்த திருஒப்தி தந்தது பதிவு. பொய்யாப் பிள்ளையார், அம்பாள் எல்லாமே தத்ருபமாய் அப்படியே பார்ப்பது போல் இருந்தது.
    அரசலாற்றங்கரை என்று நீங்கள் சொல்வது பொன்னியின் செல்வனில்
    படித்ததாய் நினைவு.(பொன்னியின் செல்வன் என்று தப்பாக சொல்கிறேனோ)அந்த ஆறு தானா?

    ReplyDelete
  6. //கோயில் சீந்துவாரின்றி கிடந்தது..//

    கோயில் அதன் பெருமையும் அருமையும் தெரிவாரற்று இருந்தது.

    (அல்லது)

    கோயிலில் உழவாரப்பணி காரியங்கள் மேற்கொண்டு சீர்படுத்துவோர் இன்றி இருந்தது.

    'சீந்துவாரின்றி' என்ற வார்த்தை மனசை நோகப்படுத்தியதால்.

    ReplyDelete
  7. நம் வேலை எப்படியானும் ஆனால் சரினு இஷ்டத்துக்குப் பள்ளம் தோண்டி நதியை வறண்டு போக வைப்பதோடு ஆபத்துக்கும் வழி தேடுகிறோம். அப்புறமா அரசாங்கம் வந்து அதுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கணும். என்னத்தைச் சொல்றது!

    ~வபையான பாயிண்ட், இதை பற்றி எழுதுணும்னு ஆசை. ஆக்சுவலி இந்த நஷ்ட ஈடு தப்பு செஞ்சவனுக்கு ஆதாயம். நான் சொல்லி உஆர்ய் கேக்கப்போரா: கை வலி தாம் மிச்சம்.

    மற்றபடி இங்களுக்கு நவீன ஆனந்தரங்கிணி என்று விருது அளித்திருக்கிறேன்.
    இன்னம்பூரான்

    ReplyDelete
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  9. @ஶ்ரீராம்,

    எப்போவோ ஒரு தரம் திருவாரூர் போனப்போ சேங்காலிபுரம் வழியாப் போனோம்னு நினைக்கிறேன். :))))

    ReplyDelete
  10. நன்றி ராஜராஜேஸ்வரி.

    ReplyDelete
  11. வாங்க டிடி, மக்களாய்ப் பார்த்துத் திருந்தினால் தான்! :(

    ReplyDelete
  12. @செல்லப்பா சார், ரொம்ப நன்றி.

    ReplyDelete
  13. வாங்க ராஜலக்ஷ்மி, பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் செல்லும் அதே பாதை தான்! :))))) நான் சின்ன வயசிலே கல்யாணம் ஆகிப் போனப்போ இதையெல்லாம் பார்க்கப் பார்க்க பிரமிப்பா இருந்தது. அதோட வந்தியத் தேவன் நடந்த பாதையில் நடந்திருக்கேனு நினைச்சு பூரிச்சுப் போவேன். இந்த இடத்திலே தான் குந்தவைப் பிராட்டிக்கும், வந்தியத் தேவனுக்கும் சந்திப்பு நடந்திருக்கும்னு எல்லாம் நினைச்சுப்பேன். :))))

    ReplyDelete
  14. ஜீவி சார், நான் பொருள் புரிந்தே எழுதினேன். அப்போ கோயில் இருந்த நிலைமை அதான். :( இப்போப் பரவாயில்லை. உள்ளூர் மக்களும் கோயில் விசேஷங்களில் பங்கெடுக்க ஆரம்பித்துள்ளனர். :)

    ReplyDelete
  15. "இ" சார், எழுதுங்க, எழுதுங்க. படிக்க நாங்க இருக்கோம். உங்க விருதுக்கு நன்றி.:))))

    ReplyDelete
  16. நன்றி காசிராஜலிங்கம்.:)

    ReplyDelete
  17. குலதெய்வ கோவில் வழிபாடு செய்தமை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  18. ஒரு முறை போய் வந்திருக்கிறோம். அது குறித்து ஒரு பதிவும் எழுதி இருந்தேன். இப்போது மீண்டும் நினைவில் கண்டுகளித்தேன்.

    ReplyDelete

  19. காலை ஆறுமணி அளவில் கிளம்பி தரிசனம் முடித்து மூன்றரை மணிக்கெல்லாம் வாபஸ் என்றால் really lightning trip...!

    ReplyDelete
  20. சீந்துவாரின்றி என்றால் என்ன? கவனிப்பார் இன்றி?

    ReplyDelete
  21. நன்றி தளிர் சுரேஷ்.

    ReplyDelete
  22. ஜிஎம்பி சார், உங்க பதிவையும் படிச்ச நினைவு இருக்கு.

    ReplyDelete
  23. கிளம்பினோம்னா திரும்பி வர வரைக்கும் வேறே வேலை இருக்காதே! எதிர்பாராமல் ஏற்படும் தாமதங்கள் தவிர நாங்கள் தாமதமாக எதையும் செய்வதில்லை. கிராமம் என்பதால் கோயில் பூசாரிக்கும், பெருமாள் கோயில் பட்டாசாரியாருக்கும் முன் கூட்டியே தகவல் சொல்லணும். அவங்கள்ளே பூசாரி எப்ப்போவும் இருப்பார். பட்டாசாரியார் 2, 3 பெருமாள் கோயில் பார்த்துக்கறதாலே கொஞ்சம் முன்னேப் பின்னே ஆகும். :)

    ReplyDelete
  24. அப்பாதுரை, கவனிப்பார் இன்றினும் வைச்சுக்கலாம். யாருமே வராமல் இருந்தாங்கனும் பொருள் கொள்ளலாம்.

    ReplyDelete
  25. குலதெய்வம் தர்சித்துக்கொண்டோம்.

    ReplyDelete