எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 27, 2014

எங்கே என்னோட மதுரை????

என்னத்தைச் சொல்றது?  ஒரு சிலர் புகழோ புகழுனு புகழறதைப் பார்த்தால் நாம இப்படி எழுத வேண்டி இருக்கேனு இருக்கு. ஆனால் உள்ளதைத் தானே எழுதி ஆகணும். ம்ம்ம் ஊர் எப்படி எப்படி எல்லாம் முன்னேற்றம் அடையுதுனு அவங்க சொல்றாங்க. மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை வீதியை நல்லாப் பராமரிக்கிறது பத்திச் சொல்றாங்க பாசமலர்.

//மீனாட்சி கோவிலைச் சுற்றிலும் சிமிண்ட் பாதை போடப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
கோவிலில் நுழையும் எல்லா வழிகளிலும் பாதுகாப்புச் சோதனை..விமான நிலையங்கள் தோற்று விடும்.
கோயில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் கட்ட அரசு அனுமதி கிடைத்துவிட்டதாகக் கேள்வி.//

சரிதான், சிமிண்ட் பாதை மட்டும் போட்டால் சரி, ஆனால் மக்கள் மனசிலும் சிமிண்டாலேயே மூடிக்கிட்டிருக்காங்க போல. கோவிலில் நுழையும் எல்லாவழிகளிலும் பாதுகாப்புச் சோதனை தவிர்க்கமுடியாது தான். ஆனால் உள்ளே போனால் தரிசனம் கிடைக்கும்கிற நிச்சயம் உண்டா?? கோவில் கோபுரங்களை விட உயரமான கட்டடங்கள் வந்தால் நகரின் நெரிசல் குறையுமா? அதிகம் ஆகுமா? ஏற்கெனவே நின்ன இடத்தில் இருந்து நகருகிறதே இல்லை யாரும். அதிலும் மேலச் சித்திரை வீதியும், வடக்குச் சித்திரை வீதியும் கூடும் இடத்தில் கோபு ஐயங்கார் கடை வாசலில் ஆரம்பிச்சால் மேலகோபுர வாசலும் தாண்டி தெற்கு கோபுர வாசலையும் தாண்டி, சொக்கப்ப நாயக்கன் தெருவையும் தாண்டி நெரிசல் தாங்கலை. கீழ வாசல் கேட்கவே வேண்டாம். எந்த வழியிலே நுழைஞ்சாலும் இதே தொல்லை தான். போன வருஷம் நாங்க போனப்போவே தரிசன வரிசை வெளியே வந்துடுச்சு.

நாங்க பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போனோம். எங்களோடு பத்து, இருபது பேர் வந்தாங்க. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் நுழைவு வாயில் வழியாக நுழைந்தோம் அவ்வளவு தான். பிறகு திருப்பதியை விட மோசம். திருப்பதியிலே ஒரு செகண்டாவது பார்த்துடலாம். இங்கே மீனாட்சி தெரியவே இல்லை. அதுக்குள்ளே அதே வழியாக மொத்தக் கூட்டத்தையும் அவங்க இஷ்டத்துக்குப் பணம் வாங்கிக் கொண்டு கோயில் ஊழியர்கள் உள்ளே விட நெரிசலில் சிக்கிக் கொண்ட நான் வெளியே வரமுடியாமல் தவிக்க, வெளியே வந்துவிட்ட என் கணவரும், பையரும் அங்கே இருந்த பெண் காவலரிடம் சொல்லி என்னை மீட்கச் சொல்ல, அவங்க பேசாமல் இருக்க,ஊழியர்களின் இந்த வேலையைக் கண்டு பட்டர்கள் சத்தம் போட, ஊழியர்கள் லட்சியமே செய்யவில்லை. அப்புறமாய் ஒருவழியாய் எங்க பையர் என்னை வெளியே கொண்டு வந்தார். மூச்சு முட்டிப் போய்விடும்போல் ஆயிடுச்சு. இதுவும் முன்னேற்றத்தில் ஒரு வகை போல.

வளர்ச்சி என்பது ஒரு புராதன நகரின் ஆன்மாவைச் சிதைக்கிறாப் போல் ஆகிவிட்டதே என்று வருத்தமாய் இருக்கு. இன்று காலை ஒரு வெளிநாட்டுத் தொலைகாட்சி நிகழ்ச்சியில் ஜெர்மனியின் ஒரு புராதன நகரைக் காட்டினாங்க. புராதனச் சின்னங்களை அவங்க எல்லாம் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பது நாம் கட்டாயமாய் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று. மேலும் சுற்றுலாப் பயணிகளையும் எவ்வகையில் அவங்க திறம்பட திருப்திப் படுத்தறாங்க என்பதும் கவனிக்கணும். ஆனால் நாம அவங்க உடை, உணவு, மொழி, கலாசாரம்னு மாத்திக்கிறோமே தவிர எது வேணுமோ அதை விட்டுடறோம்.

எங்க மீனாட்சி, எங்க மீனாட்சி என்று பெருமையாய்ச் சொல்லிப்போம். அவள் கடைக்கண் பார்வையால் அனைவரையும் ரட்சிக்கிறாள்னு சொல்லுவோம். அந்தக் கண்களை சிமெண்ட் போட்டு மூடிக் கொண்டாள் போல. ஓயாமல் சலிக்கும் கண்களால் இப்போ பக்தர்களைப் பார்ப்பதில்லைனு வச்சிருக்கா போல. மதுரை நகரம் இருக்கு. ஆனால் மீனாட்சி அங்கே இல்லை. எங்க அம்மாவின் அழகே போய், அவளின் ஆன்மாவே போய் நகரம் இப்போது புது வண்ணம் பூசிக் கொண்டு, புது வடிவம் எடுத்துக் கொண்டு புத்தம்புதுமையாய் இருக்கு. இது என்னோட மதுரை இல்லை. ஒரு வேளை 25 வருஷமாய் எந்த வகையிலும் மாறாமல் இருக்கும் அம்பத்தூரைப் பார்த்துட்டே இருக்கிறதாலே இப்படித் தோணுதோ?? :((((((((

எங்கே என்னோட மதுரை????????? :((((((((

இது பழைய பதிவு என்றாலும் இப்போதும் மதுரையின் நிலைமை இப்படித் தான் இருக்கிறது.  இன்றைய தொலைக்காட்சிச் செய்தியில் மதுரைக் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்னு பார்த்தேன்.  உடனே நினைவு வந்தது.  இது 2007 ஆம் ஆண்டில் சென்றபோது எழுதியது.   சமீபத்தில் சித்திரைத் திருவிழாவுக்குச் சென்றிருந்த என் தம்பி குடும்பம் சொன்னதையும் கேட்டதால் ஏற்பட்ட மன வருத்தம்.  இப்போதெல்லாம் திருக்கல்யாணம் ஆனதும் அம்மனையும், சுவாமியையும் பார்க்கவே முடிவதில்லையாம்.  முன்னால் எல்லாம் இஷ்டத்துக்கு மூன்று முறை, நான்கு முறை போவோம்.  இப்போ ஒரு தரம் பார்க்கவே முடியலை என்று சொன்னார்கள்.  இது வளர்ச்சியா?  வீக்கமா?

23 comments:

  1. நிலைமையை அறிந்தேன்... சிரமம் தான்...!

    ReplyDelete
  2. இப்படி கூட்டம் கூடுவதால் வளர்ச்சி என்றாலும் தரிசனம் கிடைப்பதில் பாகுபாடு வீழ்ச்சிதான்!

    ReplyDelete
  3. அப்படியும் கும்பிடுறதைச் சொல்லுங்க!!

    ReplyDelete
  4. மதுரைக்கு போகும் போது எல்லாம் மீனாட்சி கோவில் போகவேண்டும் என்று நினைக்கும் நான் இப்போது போக பயப்படும் இடம் ஆகிவிட்டது.

    ReplyDelete
  5. அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  6. ஜூன் கடைசியில் மதுரை சென்று வந்த என் அனுபவங்களையும் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரி. பழைய மதுரை, பழைய கோவில் நடைமுறைகள்.... ஊ...ஹூம்... ஒன்றையும் காணோம்.

    ReplyDelete
  7. எதிலும் வியாபாரம்... பணம் சம்பாதிக்கும் வழி....

    பல புராதனமான இடங்களின் நிலை இது தான். மதுரை மட்டுமே இப்படி என்று சொல்ல முடியாது....

    ReplyDelete
  8. //முன்னால் எல்லாம் இஷ்டத்துக்கு மூன்று முறை, நான்கு முறை போவோம். இப்போ ஒரு தரம் பார்க்கவே முடியலை என்று சொன்னார்கள். இது வளர்ச்சியா? வீக்கமா?//

    அப்பொழுதிருந்த ஜனத்தொகை என்ன, இப்பொழுது இருப்பதென்ன?

    அப்பொழுதிருந்த ஜனங்களின் ஆர அமர தரிசித்தல், இப்பொழுதும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி?..

    கோயில் மட்டுமே நகரத்தின் அடையாளமாக இருந்த அப்பொழுது தான் இப்போதும் என்பதற்காக சந்தோஷப்படுங்கள்.

    அந்த சந்தோஷத்தில் எதன் வளர்ச்சி என்று தெரியும்.

    ReplyDelete
  9. இப்போது ஜனத்தொகை மட்டுமல்ல பக்தர்களின் எண்ணிக்கையும் கூடியிருக்கிறதோ. ? ஒரு சுற்றுலாப் பயணிபோல் போய்வருவதால் மதுரையின் அடையாளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்ற மட்டில் விளங்குகிறது.

    ReplyDelete
  10. இப்போதுள்ள நிலையை நினைத்தால்:(

    நாங்கள் முன்பே சிலதடவைகள் பார்த்து தப்பிவிட்டோம் :) என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  11. கடந்த ஞாயிறு மீனாக்‌ஷியைக் கண் குளிர தரிசனம் செய்தோம். ஞாயிறு கூட்டம் என்றாலும் ஜருகண்டி இல்லாமல் தரிசனம் செய்ய முடிந்தது. கட்டண வரிசையில் தான். அன்றைய தினம் நிறைய வட இந்தியர்களைப் பார்க்க முடிந்தது. பொதுவாக ராமேஸ்வரத்தில் தான் வ.இந்தியர்கள் கூட்டம் அலைமோதும். மதுரையில் ஆச்சரியம். எத்துனை முறை பார்த்தாலும் அலுக்காத அழகுக் கோலம். பொதுவாக கோயில் சுத்தமாகத் தான் இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் நன்மைக்கே. வெள்ளியம்பலம் கண்டு வியந்தோம்.

    ReplyDelete
  12. வாங்க டிடி, ரொமவே சிரமம் தான். :)

    ReplyDelete
  13. தளிர் சுரேஷ், இன்றைய தினசரியில்(?) அல்லது எதிலே படிச்சேன்னு தெரியலை. திருச்செந்தூர்க் கோயில் தரிசனம் பத்திப் போட்டிருந்தாங்க. எப்படி எல்லாம் தில்லுமுல்லு நடக்குதுனு பார்த்தால் திகைப்பா இருக்கு.

    ReplyDelete
  14. அப்பாதுரை, கோயிலுக்குப் போறதே அதுக்குத் தானே! :) நானெல்லாம் கூட்டம்னா போறதே இல்லை.

    ReplyDelete
  15. கோமதி அரசு, கீழே தீக்ஷிதர் நல்லா தரிசனம் கிடைச்சதாச் சொல்லி இருக்கார். :)

    ReplyDelete
  16. நன்றி காசிராஜலிங்கம். உங்க பெயர் எனக்கு "அமரதாரா" நாவலை நினைவூட்டுகிறது. :)

    ReplyDelete
  17. எழுதுங்க ஶ்ரீராம். நான் குறிப்பிடுவது கோயில் நடைமுறைகள் தான். சரியாகப்புரிந்து கொண்டீர்கள். :)

    ReplyDelete
  18. வாங்க வெங்கட், நீங்க சொல்வது உண்மை தான்.

    ReplyDelete
  19. ஜீவி சார், முன்னை விடவும் இப்போது தொழில் நுட்ப வசதி பெருகி இருக்கிறது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதற்கேற்றவாறு தன்னார்வலர்களையோ, காவல் துறையினரையோ நியமிக்கலாம். கோயிலுக்குச் செல்வதே சுவாமியை ஆர அமர தரிசிக்கத் தான். வெறும் நாட்களில் கூட தரிசிக்க முடியலைனால் எப்படி! :( அதுக்கு இங்கே ரங்கனார் பரவாயில்லை. வெறும் நாட்களில் காற்றாடப் படுத்திருப்பார். சரியாத் தெரிந்து வைத்துக் கொண்டால் ஓடிப்போய்ப் பார்த்துடலாம். :))))

    ReplyDelete
  20. கோயில்களுக்கு வருவதே இப்போதெல்லாம் சுற்றுலா போல் தான் ஆகிவிட்டது ஜிஎம்பி சார். :(

    ReplyDelete
  21. மாதேவி, இப்போதும் மாலை மூணு மணி அளவில் கோயிலுக்குள் நுழைந்தால் கொஞ்சம் கூட்டமின்றி தரிசிக்க இயலும். ஆனால் எத்தனை பேரால் அந்த வெயிலைத் தாங்க முடியும்! :( ஆடி வீதியெல்லாம் காலே வைக்க முடியாது.

    ReplyDelete
  22. தீக்ஷிதரே, உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. மதுரை போக இந்த வழியாத் தான் போயிருப்பீங்க. இங்கே வர மறந்துட்டீங்களே! போன வருஷத்துக்கு முந்தைய வருஷம் வந்தப்போ ஆவணி அவிட்டம்னு சொன்னதாலே வராமலே போயிட்டீங்க. இப்போ வந்திருக்கலாமே! :(

    ReplyDelete
  23. எப்போ ரங்கனாதரைத் தரிசிக்க சரியான கிழமை, நேரம்? நாங்கள் வரும்போது 250 ரூபாய் தரிசனத்திலும் முழுமையாக தரிசனம் செய்யமுடிவதில்லை. தயவு செய்து எழுதவும்.

    ReplyDelete