எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 23, 2015

சவாலே, சமாளி!

குமுட்டி அடுப்பில் சமைத்த கதை!

அட, ஊருக்குப் போறச்சே தான் அப்படி! சரி, வீட்டுக்கு வந்தப்புறமாவது கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு பார்த்தால்! கடவுளே! நேற்றைய தினத்தைப்போன்றதொரு தினம் பார்த்ததே இல்லை. சில வருடங்கள் முன்னர் அம்பத்தூரில் இருக்கையில் மழைக்காலத்தில் ஒரு நாள் நல்ல மழையில் மின்சார வெட்டு. அன்று பார்த்து எங்க வீட்டு எரிவாயு அடுப்பிலும் கசிவு ஏற்பட, இன்டக்‌ஷன் ஸ்டவோ, அல்லது ரைஸ் குக்கரோ பயன்படுத்த முடியா நிலையில் எப்போவோ வாங்கி வைச்சிருந்த அடுப்புக் கரியைப் பயன்படுத்திக் குமுட்டி அடுப்பில் சமைத்தேன். இட்லி, கையால் அரைத்த தேங்காய்ச் சட்னி, மோர்க்குழம்பு, ரசம், வெண்டைக்காய்க் கறி செய்து சாதம் வைத்துச் சாப்பிட்டோம். இந்த அழகில் ஒரு விடாக்கண்டரான விருந்தினர் வேறு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து மூன்று வேளை சமைத்தேன்.

நேற்று என்ன ஆச்சுன்னா, காலை வந்ததும் காஃபி இன்டக்‌ஷன் ஸ்டவில் போட்டுக் குடித்தாயிற்று. பக்கத்தில் உள்ள மெஸ்ஸில் இட்லி வாங்கிச் சாப்பிட்டாயிற்று. துணி தோயல் போன்ற வேலைகளை முடித்துக் கொண்டு பதினோரு மணி போல் சமைக்க ஆரம்பித்தேன். பத்து நாட்களாக மூடி வைக்கப்பட்ட எரிவாயு அடுப்பின் சிலிண்டரைத் திறந்தால் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று சீறுகிறது. எரிவாயுக் கசிவின் நாற்றமும் கூடவே வர, அவசரமாக ரங்க்ஸை அழைக்க, அவரோ எரிவாயு தீர்ந்து விட்டதாக நினைக்க, இல்லைனு மறுபடி சிலிண்டரைத் திறந்து நேரடியாகச் செயல்விளக்கம் செய்து காட்டினேன். பின்னர் சிலிண்டரை மீண்டும் நன்றாக மூடிவிட்டு மேலிருந்து ரைஸ் குக்கரை எடுத்துச் சாதம் வைக்க ஏற்பாடு செய்து அதைச் சமையலறையில் வைக்கக் கூடாது என்பதால் வேறோர் அறையில் வைத்தேன்.

நேற்று துவாதசி என்பதால் ரங்க்ஸ் அகத்திக்கீரை வாங்கி வந்திருந்தார். அதை நறுக்கி வைத்திருந்தேன். அதையும் பாசிப்பருப்பையும் வேக வைப்பதற்காக இன்டக்‌ஷன் ஸ்டவை எடுத்துக் கொண்டு ரைஸ் குக்கர் வைத்திருந்த அதே அறையில் பக்கத்துப் ப்ளகில் இன்டக்‌ஷன் ஸ்டவை வைத்துவிட்டு அதில் அடிப்பாகம் சமனாக உள்ளதொரு பாத்திரத்தில் பருப்பைப் போட்டு நீர் ஊற்றி வேக வைக்கவேண்டி இன்டக்‌ஷன் ஸ்ட்வை ஏற்றினால், "பொட்" என்றொரு சப்தம்! இன்டக்‌ஷன் ஸ்டவ் அணையப் பக்கத்தில் உள்ள ரைஸ் குக்கரும் அணைய மின்சாரம் போயிடுச்சுனு நினைச்சால் இன்வெர்ட்டர் குய்யோ, முறையோ என கூக்குரல்!

நடுங்கிப் போயிட்டேன்! ரங்க்ஸ் ஓடிப் போய் இன்வெர்டரின் வாயை அடைத்தார். வீட்டில் வந்து ஒவ்வொரு அறையிலும் சோதனை செய்தால் சமையலறை, பெரிய படுக்கை அறை, சுவாமி அறை, நான் சாப்பாடு தயார் செய்யப் பயன்படுத்திய அறைகளில் மின்சாரம் இல்லை. தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் ஆகியவற்றுக்கு மின்சாரம் சீராக வந்து கொண்டிருந்தது. கணினி வைத்திருக்கும் அறையிலும் (அங்கே மட்டும்) மின்சாரம் இருந்தது. ரைஸ் குக்கரை அங்கே கொண்டு போய் வைத்துவிட்டு எலக்ட்ரீஷியனுக்குத் தொலைபேசிக் கேட்டோம். பவர் பாயின்டில் தான் இன்டக்‌ஷன் ஸ்டவை வைக்கணுமாம். இது அப்போ வைக்கும்போது ரங்க்ஸுக்கும் தோணலை! எனக்கும் தோணலை! அதான் ஃப்யூஸ் போயிருக்கும்ன்னு சொல்லிட்டு இப்போ உடனே வர முடியாது (இதுக்கே பதினொன்றரை மணி ஆகி விட்டதே!)மாலை தான் வருவேன், ஆனால் இன்னிக்குள் சரி பண்ணிக் கொடுக்கிறோம்னு சொல்லிட்டாங்க.

எரிவாயுக் கசிவுக்கான புகார் எண் எடுக்கவே இல்லை. விசாரித்தால் இப்போது அது பயன்பாட்டிலேயே இல்லையாம்! சுத்தம்! பின்னர் எங்கள் எரிவாயு முகவரின் எண்ணுக்கே தொலைபேசித் தகவல் தெரிவித்தோம். ஒரு வழியாக ரைஸ் குக்கரில் சாதம் தயார் ஆக, நல்ல மோரும் ஆவக்காய் ஊறுகாயுமாகப் போட்டுக் கொண்டு சாப்பிட்டுச் சமாளித்து விட்டோம். இதுக்கே ஒரு மணி ஆகிவிட்டது!  பின்னர் இரண்டு மணிக்கு மேல் ஒவ்வொருத்தராக வர எரிவாயுக் கசிவுக்கு சிலிண்டர் ரெகுலேட்டரின் புஷ் தேய்ந்து போயிருக்க அதை மாற்றி மீண்டும் சிலிண்டரைப் பொருத்தியதும் கசிவு நின்றது. அதன் பின்னர் எலக்ட்ரீஷியனும் வந்து இன்வெர்டரிலும் ஃப்யூஸ் போயிருக்கிறது எனச்சொல்லி அதையும் மாற்றிக் கொடுத்தார். எல்லாம் முடிய நேற்று மாலை நாலரை மணி ஆகிவிட்டது! சோதனைகள் இதோடு முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.  பிள்ளையார் என்ன நினைச்சிருக்காரோ தெரியலை! :)

28 comments:

  1. //கணினி வைத்திருக்கும் அறையிலும் (அங்கே மட்டும்) மின்சாரம் இருந்தது. // இது ஏதோ சதி வேலை மதிரி இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, ஆமா இல்ல? மோடம் கூட நல்ல வேகத்தோட இருந்துச்சு! :)

      Delete
    2. எனக்கும் அதே தோன்றியதே.

      Delete
    3. @ அப்பாதுரை, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  2. இன்டக்‌ஷன் ஸ்ட்வை ஏற்றினால், "பொட்" என்றொரு சப்தம்!.. எதாவது புதுசா வாங்கினா அதப்பத்தி படிக்கறது இல்லையா? கற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இந்த இன்டக்‌ஷன் ஸ்டவ் புதுசுன்னு யாரு சொன்னா உங்க கிட்டே? அரதப் பழசு! அறிமுகம் ஆன புதுசுலே வாங்கினது! எவ்வளவு ஜாக்கிரதையாக் கையாண்டிருந்தா இப்படி ஏழு எட்டு வருஷம் ஆகியும் ஸ்டவ் நல்ல பயன்பாட்டிலே இருக்கும்! யோசிச்சுப் பாருங்க! :P :P :P :P

      Delete
  3. //அதான் ஃப்யூஸ் போயிருக்கும்ன்னு// எந்த காலத்தில இருக்கீங்க? எம்சிபி போடறதுக்கென்ன?

    ReplyDelete
    Replies
    1. எம்சிபி? அபுரி தம்பி, அபுரி! விம் போட்டு விளக்கம் ப்ளீஸ்!

      Delete
    2. @ வா.தி. இதைக் குறித்து ரங்க்ஸிடம் சொன்னப்போ நம்ம வீட்டிலே எம்சிபி தான் அப்படினு சொன்னார். ஹிஹிஹிஹி! மீ த குழந்தை அன்ட் அப்பாவி! :)

      Delete
  4. எதற்கும் பதற்றப்படாமல் இருக்க வேண்டும் பதற்றம் மேலும் மேலும் தவறுகளைச் செய்ய வைக்கும் All is well that ends well.

    ReplyDelete
    Replies
    1. பதற்றமா? அதெல்லாம் ஒண்ணுமே இல்லை! என்ன சாப்பாடுக்குக் கொஞ்சம் தாமதம் ஆச்சு! அதான், மத்தபடி வேறே ஒண்ணும் இல்லை!

      Delete
  5. குமுட்டி அடுப்பிலும், கையால் அரைத்த சட்னியும் செய்த உங்கள் சுறுசுறுப்புக்கு ஒரு சபாஷ். இத்தனைக்கும் காலைதான் பயணத்திலிருந்து திரும்பி... சபாஷ்.

    "மலைபோலே வரும் சோதனை யாவும் பனிபோல் நீங்கி விடும்..."

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல் பத்தியை மறுபடி ஒழுங்காப் படிச்சுட்டு மறுபடி கருத்துச் சொல்லுங்க! பனிஷ்மென்ட் உங்களுக்கு! தேர்வு மறுபடி வைச்சிருக்கேன்.

      Delete
  6. தங்களின் அனுபவங்கள் படிக்கப்படிக்க தனிச்சுவையாக உள்ளன.

    ஒரே அமக்களம் ஜமக்காளமாக இருக்கிறது.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, எங்களுக்குன்னு விசித்திரமான அனுபவங்கள் கிடைக்கும்! :)

      Delete
  7. //இந்த அழகில் ஒரு விடாக்கண்டரான விருந்தினர் வேறு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து மூன்று வேளை சமைத்தேன்.//

    அடப்பாவமே ! அதற்குத்தான் நான் உங்கள் வீட்டுப்பக்கமே வருவது இல்லை.

    ஒரே ஒருமுறை மட்டும் வந்தேன். உங்களை சிரமப்படுத்தாமல் உடனே ஓடியாந்துட்டேன். :)

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், முதல் பத்தியை மறுபடி ஒழுங்காப் படிங்க. விடாக்கண்டர் விருந்தினர் நேத்திக்கு வரலை! அந்தப் பதிவைத் தேடி எடுத்துச் சுட்டி தரேன். :) அப்போப் புரியும் உங்களுக்கும் ஶ்ரீராமுக்கும். :)

      Delete
  8. பழைய கதைக்குச் சுட்டி கொடுத்திருக்கேன். முடிஞ்சாப் போய்ப் பாருங்க ஶ்ரீராம், வைகோ சார்! :)

    ReplyDelete
  9. ஜாலியான அனுபவம் போலத்தான் தோணுது (தொடராம இருந்தா சரி).
    கையால் எப்படி அரைச்சீங்க? (ஹிஹி)

    எரிவாயுக் கசிவு கொஞ்சம் ஆபத்தான சமாசாரம். கவனம். கசிவை நுகரந்தவுடனே என்னைக் கேட்டால் பக்கத்துவீட்டில் போய் உட்கார்ந்து கொள்வது உத்தமம். பிடிக்காத பக்கத்துவீட்டுக்காரராக இருந்தால் உங்கள் வீட்டுக்குள் அவர்களை உட்காரவைப்பதும் உத்தமம்.

    ReplyDelete
    Replies
    1. கையால அரைக்கிறதை டெமோ காட்டறதுக்கு இங்கே அம்மி இல்லை! :P :P :P கசிவை நுகர்ந்ததுமே அந்த அறையை விட்டே வெளியேறிடுவோம். :)

      Delete
    2. அம்மில்யால் அரைச்சதா சொல்லுங்க அப்போ.. கையால அரைச்சதுன்னதும் ஆடிப் போயிட்டேன் ஆமா!

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அம்மிக்குழவியைக் கையால் பிடிச்சுத் தானே அரைக்கணும்! :P :P :P :P

      Delete
  10. கீதா கீதா. உங்களுக்குனு நடக்கிறது பாருங்கோ. நல்ல வேளை காஸ் சரியாகக் கவனித்தீர்கள். சரியாகட்டும் எல்லாம்..சமாளிக்கத் தெரிந்த
    உள்ளம் இருந்ததால் எல்லாம் நடக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் மா.

    ReplyDelete
    Replies
    1. ஆமா இல்ல? எல்லாம் நமக்குனு விசித்திரமா வரும்! :) எரிவாயுக் கசிவை நாற்றம் மட்டும் வெளிவருகையில் வரும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சப்தத்திலிருந்து சுலபமாய்க் கண்டு பிடிச்சுடலாம். கவனம் மட்டும் அடுப்பிலேயே இருக்கணும். :) கொஞ்சம் அசந்தால் போச்சு!

      Delete
    2. எரிவாயுவின் மணத்தை நுகரமுடியாமல் கோரமான ஆபத்துக்குள்ளான ஒரு குடும்பத்தை அறிவேன். அவர்கள் வீட்டில் லெமன்கிராஸ் மணம் எப்பவுமே தூக்கலாக இருக்கும் - ஆடோமேடிக் ஸ்ப்ரே வாங்கி வைத்திருந்தார்கள். அதனாலோ என்னவோ அவர்களுக்கு எரிவாயு கசிந்தபோது நுகரமுடியவில்லை.

      Delete
    3. அவஸ்தை தான். நல்லவேளையாக இந்த ஸ்ப்ரே எதுவும் உபயோகிப்பதில்லை என்பதோடு லெமன்கிராஸும் பயன்பாட்டில் இல்லை. எதுவுமே அளவோடு இருந்தால் நல்லது! எரிவாயு அடுப்போடு இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்கெனவே 2,3 முறை ஏற்பட்டிருப்பதால் எப்போது அடுப்பை மூட்டும் முன்னர் சிலிண்டரைத் திறந்து சிறிது நேரம் கழித்தே தீக்குச்சியைக் கிழிப்பேன். :) இதுவரை கடவுள் காப்பாற்றி விட்டார். இனியும் காத்தருள்வார். :)

      Delete
  11. நல்ல வேளை சகோ காஸ் லீக் கண்டுபிடித்துவிட்டீர்கள். அடுத்த அறைக்கு ரைஸ் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் கொண்டு சென்று விட்டீர்கள். எப்படியோ ஒரு வழியாகச் சமாளித்தீர்களே...பயணம் முடிந்து வந்ததும் வராததுமாக...வணக்கம் பல!!! அதான் தொப்பியை எடுத்துச் செய்வார்களே அதுதான்..ஹஹ்ஹ்..

    கீதா: ஆமாம் இண்டக்ஷன் பவர் பாயின்டில் தான் போடணும்..எல்லாம் அனுபவம் தான். முதலில் வாங்கிய புதிதில் சாதாரண பாயின்டில் போட்டு வொர்க் செய்தது. ஒரு நாள் டொப். அப்போதுதான் ரிப்பேர் செய்ய வந்தவர் சொன்னார். பவர் பாயின்ட் என்று. எனவே பவர் பாயின்ட் மாற்றப்பட்டது.

    பாண்டிச்சேரியில இருந்தப்ப தானே புயல். கரன்ட் 3 நாள் இல்லை. (இப்போ சென்னைல 4 1/2 நாள் ஆனா கேஸ் இருக்குது) அப்போ கேஸ் ஒரு சிலிண்டர் அதுவும் என் பையன் ஸ்டூடன்ட் கோட்டால எடுத்துருந்தது. ஒண்ணுதான் அதுவும் பெப்பே காட்டியது. இருந்தது கிராமம். நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றி சிறிய தோட்டம். எடு மூணு கல்லை என்று மூணு கல்லைப்போட்டு வீட்டில் கிடைத்த கம்பு குச்சி ஓலைகள், (பக்கத்து வீட்டுல எல்லாம் நிறைய வைச்சுருப்பாங்க...அவங்ககிட்டயும் வாங்கி) சமையல். அதுவும் மழை நனையாத சிமென்ட் தரை இருக்கும் பகுதியில் (வீடு ரொம்ம்ம்ம்ம்ம்பச் சின்னது) அப்க்கத்து வீட்டில் அம்மியில் அரைத்தல் என்று கனஜோராக அந்தக்காலத்து முறையில் சமையல் என்று அதுவும் வித்தியாசமான அனுபவமாகத்தான் இருந்தது. சிறிய வயதில் கல்லூரிக் காலம் வரை இது பழக்கம்தான். எல்லா முறையும் கொஞ்சம் சமாளிக்கத் தெரிஞ்சாத்தானே என்ன வந்தாலும் சமாளிக்க முடியும் இல்லையா....உங்கள் அனுபவமும் அப்படித்தான்...எனக்கும் நினைவுப்படுத்தியது..

    சூப்பர்!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், எரிவாயு கசிவை எளிதில் கண்டு பிடிக்கலாம். சமாளிக்க நமக்குச் சொல்லியா தரணும்! ஹிஹிஹிஹி!

      கீதா, இன்டக்‌ஷன் பவர் பாயின்டில் போடணும்னு தெரிஞ்சிருந்தும் அன்னிக்கு சாதாரண பாயின்டில் போட்டிருக்கோம். இரண்டு பேருமே அதைக் குறித்து யோசிக்கவில்லை. மூணு கல்லைப் போட்டு தென்னை ஓலைகளைப் போட்டு அம்பத்தூர் வீட்டில் வெந்நீர் போடுவோம். ஆகவே அந்த அனுபவமும் உண்டு! :)

      Delete