எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 12, 2016

காளியைக் குறித்துத் தெரிந்து கொள்வோம்!

நம்ம வலைப்பக்கத்தைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கையை மறுபடி கூகிளார் திருத்தி இருக்காரோ? அல்லது அவங்களாவே விலகிட்டாங்களோ தெரியாது! ஹிஹிஹி! இரண்டு நபர் குறைஞ்சிருக்காங்க! போகட்டும். இப்போல்லாம் என் நேரம் என்னிடம் இல்லை. கிடைக்கும் நேரத்தில் இணையத்துக்கு வந்து பார்க்க முடிஞ்சதைப் பார்த்துப் போக முடிஞ்ச பக்கங்களுக்குச் செல்கிறேன். ஒரு சிலர் அழைப்பு அனுப்புகிறார்கள். அப்போ அவங்க பதிவுக்கெல்லாம் கட்டாயமாய்ப் போயிடுவேன். ஏனெனில் அழைப்பிலேயே சுட்டி இருக்குமே! :) இப்போ கல்கத்தாப் பயணம் முடியும் கட்டத்தை நெருங்கி விட்டது! அதற்கு முன்னர் காளியைப் பத்தி ஜிஎம்பிசார் கேட்ட கேள்வி என் சிந்தனைகளைக் கிளப்பி விட்டது. ஆகவே காளியைக் குறித்த சிறியதொரு விளக்கம் இங்கே! காளி உக்கிர சொரூபியா, சாந்த சொரூபியா இதான் ஜிஎம்பி ஐயா கேட்டது.
*********************************************************************************
காளி க்கான பட முடிவு

காளி என்று நாம் சொன்னாலும், "காலி" தான் சரியான உச்சரிப்பு என்பவர்கள் உண்டு. ஏனெனில் காளி காலத்திற்குப் பொறுப்பானவள். கால மாறுதல்களுக்கும் அவளே பொறுப்பு!  காலன் அல்லது காளன் என்றொரு பெயர் ஈசனுக்கு உண்டு. அவன் மனைவி என்பதால் காலி அல்லது காளி என அழைக்கப்படுகிறாள். காளிகா புராணத்திலும் தேவி மஹாத்மியத்திலும் காளி பற்றிய குறிப்புகள் பல காணக்கிடைக்கின்றன. நான் காளிகா புராணம் படித்ததில்லை. ஆனால் தேவி மஹாத்மியத்தில் இருக்கிறது. காளியை வழிபடும் முறை பல புராணங்களிலும், தந்திரங்களிலும் கூறப்பட்டாலும் அதர்வண வேதத்தில் விரிவாகக் கூறப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். காளி காலங்களை வெல்பவளாகவும் தீய சக்திகளைக் கட்டுப்படுத்துபவளாகவும் பக்தர்கள் நம்பிக்கை. காளியை வணங்குபவர்களைத் தான் "காளாமுகர்கள்" என்று சொல்லி இருக்கிறார்கள்.

பொதுவாகக்காளிக்கெனத் தனியே இருக்கும் கோயில்கள் ஊரை விட்டுத் தள்ளித் தனித்தே காணப்படும். பெரும்பாலும் சிவன் கோயில்களில் காளிக்கெனத் தனிச் சந்நிதி உண்டு.  பக்கலில் அகோர வீர பத்திரரும் இருப்பார். இவர் தான் காளியின் துணவர் என்று சொல்வோரும் உண்டு. வீரபத்திரரும் ஈசனின் அம்சமே என்பதால் இதுவும் பொருந்தும்!  காளியை வணங்குபவர்கள் கடுமையான விரதங்களை மேற்கொள்கின்றனர்.  உயிர்ப்பலியும் கொடுப்பது உண்டு. முன் காலங்களில் நரபலியும் கொடுத்து வந்ததாகத் தெரிய வருகிறது.  காளியின் ஒரு அம்சமே மகமாயி என்றும் கூறுகின்றனர்.பெரும்பாலும் நீலி, பத்ரகாளி, மஹாகாளி, பிடாரி, பச்சையம்மன் போன்ற கடவுளர் அனைவரும் காளியின் அம்சம் பெற்றவர்களே! காளி கருமை நிறம் படைத்தவள் என்று சொன்னாலும் கடல் நீரானது எப்படித் தூர இருந்து பார்க்கையில் நீல வண்ணத்திலோ அல்லது நீலம் கலந்த பச்சை வண்ணத்திலோ காட்சி அளிக்கிறது. ஆனால் கைகளில் எடுத்துப் பார்த்தால் வண்ணமின்றிக் காணப்படும். அதே போல் மனதில் அஞ்ஞானம் நிறைந்த நமக்கெல்லாம் காளி கருமை நிறத்தவளாகக் காணப்பட்டாலும் அவளால் அஞ்ஞான இருள் நீங்கியவருக்கு அவள் ஒளிமயமாகவே காணப்படுவாள். இதை நாம் பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கைச் சரித்திரத்தின் மூலம் அறிகிறோம். காளி ஒரு சிறு பெண்ணைப்போல் பகவானின் பக்கத்தில் அமர்ந்து அவர் அளித்த உணவை உண்டாள் அல்லவோ!

சிவபுராணத்தில் ஆதிகாளி எனப்படும் இவள் பௌத்த, சமண மதங்களில் இருக்கும் 24 யட்சிகளில் ஒருத்தியாகத் திகழ்கிறாள். சதய நக்ஷத்திரக்காரர்களின் வழிபடும் தெய்வம் காளி. இவளை வணங்குவோருக்குக் குறை ஒன்றும் வராது!  கல்கத்தாவின் தக்ஷிணேஸ்வரத்தின் காளியை "பவதாரிணி" என்பார்கள். இதற்கு ஜீவன்களை வாழ்க்கை என்னும் சம்சார சாகரத்திலிருந்து காத்து ரக்ஷித்து முக்தி என்னும் கரையில் சேர்ப்பவள் என்னும் பொருளில் வரும். "திகம்பரி" என்னும் பெயராலும் காளியை அழைப்பார்கள். இதற்குத் திசைகளை ஆடையாக உடுத்தியவள் என்னும் பொருள் வரும்.  மண்டை ஓடுகளை மாலையாக அணிவதால் "முண்டமாலினி" என்றும் அழைப்பார்கள். குழந்தைப் பருவத்திலிருந்து வெவ்வேறு வயதுள்ளவர்களின் மண்டை ஓடுகளை மாலையாக அணிந்துள்ளாள் காளி. இதற்கு வாழ்க்கை நிலையற்றது எனவும், எந்த வயதிலும் மரணம் ஏற்படும் என்பதால் கிடைத்திருக்கும் மனிதப் பிறவியைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பொருள் சொல்கின்றனர்.

திசைகளை ஆடையாகக் கொண்டவள் என்று பார்த்தோம் அல்லவா? திசைகளை ஆடையாகக் கொண்டிருப்பது நமக்குத் தெரியாது; நம்மை அஞ்ஞானம் மூடியுள்ளது. ஆகவே ஆடையில்லாமல் நமக்குக் காட்சி தருகிறாள் காளி தேவி!  நான்கு கைகள் இருப்பது நம்மை விட ஆற்றல் உள்ளவள் என்பதைச் சுட்டுகிறது.  ஒரு கையானது வரத ஹஸ்தம் என்னும் நிலையில் பக்தர்களுக்கு வரம் தரும் நிலையில் காணப்படுகிறது. இன்னொரு கை அபய ஹஸ்தம் காட்டுகிறது. இதன் மூலம் பக்தர்களின் துயரை நீக்கிப் பாதுகாப்பு அளிக்கிறது. காளியின் இடையில் கைகளே ஒட்டியாணமாகவும் காட்சி தரும். அதற்கு நம் கைகளினால் நாம் செய்யும் நற்செயல் அனைத்தையும் காளிதேவியே நடத்தி வைக்கிறாள் என்று பொருள். தீய செயல் செய்கையில் அது நம் அஞ்ஞானத்தால் விளைந்தது என்னும் பொருளிலும் கைகளை ஒட்டியாணமாக அணிந்திருப்பதைச் சொல்கின்றனர்.

தொடரும்!

20 comments:

 1. கல்கத்தா காளியைப்பற்றியு்ம்,தில்லை காளியைப்பற்றியும் நேரில் நிறைய தரிசித்திருக்கிறேன். இவ்வளவு விரிவாகத் தெரியாது. நல்ல விஷயங்கள் அருமையாக இருக்கிறது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி அம்மா.

   Delete
 2. அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம்!

   Delete
 3. அது சரி, சிவன் உக்கிர சொரூபியா, சாந்த சொரூபியா??

  ReplyDelete
  Replies
  1. மிகப் பெரிய விஷயம் ஒன்றை இப்படிச் சர்வ சாதாரணமாய்க் கேட்டால் எப்படி? எனக்குப் புரிந்ததை என்னால் வெளியே சொல்ல இயலாது! :)))))

   Delete
  2. அது சொரூபி இல்லை. ஸ்வரூபி. ஸ்வ ஸ் சரஸ்வதி இருக்கிற ஸ் .
   வ வாசுதேவன் ல் இருக்கிற வ

   ருத்ர ரூபிணி என்றும் சொல்வார்களோ ?

   அது இருக்கட்டும். பச்சக் காளி , பவழக்காளி என்கிறார்களே ?
   அவர்கள் எல்லாம் எங்கே ரெசிடென்ஸ்.

   தேர்தல் சமயத்திலே காளி பற்றிய வர்ணனை சூப்பர்.

   சுப்பு தாத்தா.

   Delete
  3. சு.தா. அது ஸ்வரூபி தான். எழுத வசதிக்காக சொரூபி என்று போட்டேன். பச்சைக்காளி, பவழக்காளி பத்திச் சில வருடங்கள் முன்னர் மின் தமிழில் எழுதின நினைவு! தேடிப் பார்க்கணும். :) நினைவுக்குக் கொண்டு வர முயல்கிறேன். அது சரி தேர்தலுக்கும் காளிக்கும் என்ன சம்பந்தம்னு புரியலையே! :))

   Delete
 4. கீதா,
  ஏன் சிவன் மேல் கால் வைத்திருக்கிறாள் காளி.
  காளியைப் பற்ரறி அறியக் கொடுத்ததற்கு நன்றி.

  ReplyDelete
  Replies

  1. ஏன் சிவன் மேல் கால் வைத்திருக்கிறாள் காளி?//
   இது என்ன புதுசா கேட்கறீர்கள் ?

   காளிக்கு கோபம் வந்தா என்ன ஆகும்? தெரியாதா என்ன?

   எல்லார் ஆத்துலேயும் நடக்குற கதை தானே..

   எதுக்கும் வாசுதேவன் சார் கிட்ட கன்பர்மெஷன் வாங்கிக்கோங்க.

   சுப்பு தாத்தா.

   Delete
  2. ஓரளவுக்குப் புரிகிறாப்போன்ற தத்துவ ரீதியான விளக்கம் என்னவென்றால் சிவன் படுத்திருப்பது செயலற்ற நிர்குண பிரம்மம். காளி செயலாற்றும் சகுணப் பிரம்மம். அசையாது படுத்திருக்கும் பாம்பு ஈசன் எனில் அதை அசைக்கும் சக்தியே காளி ஆவாள். சக்தி அசைத்ததும் பாம்பு ஓடும், தலை தூக்கும், சீறும்! ரொம்பவெல்லாம் தத்துவம் தெரியாது வல்லி. ஆகையால் எனக்குத் தெரிந்ததை மட்டும் கொடுத்திருக்கேன் அதுவும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் சொல்லி இருப்பதைத் தான் சொல்லி இருக்கேன். :)

   Delete
 5. நான் கேட்ட ஒரு கேள்வி உங்களைப் பதிவிடச் செய்தது மகிழ்ச்சி கடவுளர்களுக்கு உருவங்கள் பற்றி நான் ஒரு பதிவு எழுத இருக்கிறேன் எந்த எழுத்துப் பூர்வமான ஆதாரமும் கிடையாது எனக்குத் தோன்றியவாறு ஒரு லாஜிகல் ரீசனிங்தான் வரிந்து கட்டிக் கொண்டு வந்தாலும்கேட்க நான் தயார் உங்களைத் தூண்டிவிட்டதில் காளி பற்றிய பல கதைகள் தெரிய வருகிறது வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஏற்கெனவே நவராத்திரிப் பதிவுகளுக்காக எல்லா தேவியர் குறித்தும் படித்து வைத்திருக்கிறேன் ஐயா. அவற்றில் காளி குறித்துப் படித்ததை இங்கே பகிர்கிறேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 6. எல்லா ஆபத்திலிருந்தும் காக்கும் காளியை வணங்கி மகிழ்கிறேன். அருமையாக காளியைப்பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 7. நல்ல தகவல்கள் காளி பற்றி.

  நிற்குண பரப்ரம்ம ஸ்வரூபன் சிவன். பிரபஞ்ச ரஹித...இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அவன். அதாவது அசையா செயலற்ற...பௌதிகம் படி மேட்டர்....ஸ்டாட்டிக் எனர்ஜி! பல அணுக்களால் ஆனது. அதனால்தான் அணுவிலும் அணுவாய் இறைவன் என்று பாடப்படுவதும். எலெக்ட்ரான்ஸ் ப்ரோடான்ஸ் ந்யூட்ரான்ஸ் என்று அதாவது பாசிட்டிவ், நெகட்டிவ்,ந்யூற்றல் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக.இந்தப் பிரபஞ்சம் அப்படியே இருந்துவிட்டால் பூமி ஏது? சூரியன் ஏது? நாமெல்லாம் ஏது..இதோ இப்படி.....வெற்றிடமாக அல்லவா..

  அந்த ஸ்டாட்டிக் எனர்ஜி இயங்க வேண்டுமே இல்லையா முடுக்கிவிட அதுதான் சக்தி அவள்தான் சக்தி என்று பார்க்கப்படுகிறாள். அந்த சக்தி தேக்கப்பட்டால் பொடென்ஷியலாகவும், இயங்கினால் கைனெட்டிக்காகவும். பிரபஞ்சத்தில் இருக்கும் மாக்னெடிக் துகள்களில் அதி வேகமாக இயங்கியதால் தான்வெடித்து இந்தப் பிரபஞ்சம் ப்ளாக் ஹோல் தியரி, பூமி பிறந்தது என்று பௌதிகமும்/அறிவியலும், ஆன்மீகமும் சொல்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள பாடிஸ், அவற்றிற்கிடையில் உள்ள க்ராவிடேஷனல் ஃபோர்ஸ் இந்த ஸ்டாட்டிக் இயங்கி கைனெட்டிக்காகி மேட்டர் மற்றும் எனர்ஜி பரவலாக இருப்பதற்கு உதவுகிறது. இப்படிப் பல ரகசியங்களை இந்தப் பிரபஞ்சம் தன்னுள்ளே கொண்டுள்ளதுதான். அதைத்தான் பிரபஞ்ச ரகசியம்/சிதம்பர ரகசியம் என்றும் சொல்லுகிறார்கள். சிதம்பரம் கோயில் கூட ஒரு இடம் திரை போட்டு இருட்டாக இருக்கும். சிதம்பர ரகசியம் இடம் என்று சொல்லப்டுவது.

  சரி இது இன்னும் விரிவானது கொஞ்சம் புரிவதும் பௌதிகம் நன்றாகத் தெரிந்தால் மட்டுமே. எனவே சுருங்கச் சொன்னால் சக்தி இல்லையேல் சிவம் இல்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை. அர்த்தநாரீஸ்வரர் தத்துவம். இன்னும் கீழே வந்து சொல்ல வேண்டும் என்றால்....ஒவ்வொரு ஆணின் (வெற்றி/அழிவு) பின்னும் பெண் இருக்கிறாள், ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே எனப்தெல்லாம் இப்படித்தான் வந்திருக்கும் என்று எண்ணுகின்றேன். அல்லாமல் யாருடைய வெற்றிக்கும் தோல்விக்கும் அவரவரே பொறுப்பு யாரும் காரணமாக முடியாது இல்லையா...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா. தெய்வத்தின் குரலில் பரமாசாரியாரும் சொல்லி இருக்கார்! :)

   Delete
 8. காலி/ காளி பற்றிய விவரங்கள் பல எனக்குப் புதிது. விளக்கியதற்கு நன்றி கீதா மேடம்.

  என் பதிவிலும் followers நான்கு பேரைக் காணோம். என்ன மாயம் என்று புரியவில்லை என்று உரக்க சிந்தித்ததற்கு,"உன் பதிவுகளைப் படித்து விட்டுத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடியே போய் விட்டார்கள்" என்று வீட்டில் எல்லோரும் கிண்டல். கூகுளார் சதி என்று சொல்லி விட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜலக்ஷ்மி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஹிஹிஹி, இன்னிக்கு என்னோட ஃபாலோயர்ஸ் லிஸ்டிலே மேலும் ஒண்ணு குறைஞ்சிருக்கு! ஆனால் பார்வையாளர்கள் இந்தக் கத்திரிக்காய் சாதம் பதிவுக்கு மட்டும் ஐநூறுக்குக் கிட்டத்தட்ட வந்திருக்காங்க! என்னத்தைச் சொல்றது. :)))))))

   Delete