எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 08, 2016

பேலூர் மடம் பார்க்க முடிந்ததா? கல்கத்தாப் பயணம்!

ஹவுரா பாலம் க்கான பட முடிவு

படத்துக்கு நன்றி கூகிளார்!

இது தக்ஷிணேஸ்வர் கோயிலின் அருகே ஓடும் ஹூக்ளி நதிக்கரையில் இருந்து எடுத்த படம். தூரத்தில் தெரிவது சமீபத்தில் கட்டிய புது ஹவுராப் பாலம் என எண்ணுகிறேன். சரியான வழிகாட்டி இல்லாமல் எதுவும் சரியாகப் புரியவில்லை என்பது உண்மை. கல்கத்தா போகும்போது  நிறையக் கனவுகள். கல்கத்தா ஹவுரா பாலத்தில் போகணும். நிறையப் படங்கள் எடுக்கணும். விக்டோரியா மெமோரியல் ஹால் போகணும். கல்கத்தாவின் பிரபல நூலகம் போகணும். அங்குள்ள காட்டன் புடைவைகளின் மொத்த வியாபாரப் பகுதிக்குச் சென்று பருத்திச் சேலைகள் வாங்கணும். மட்காவில் ரசொகொல்லா சாப்பிடணும். சந்தேஷ் எப்படி இருக்கும்னு சுவைத்துப் பார்க்கணும்.

முக்கியமாக அங்கே உள்ளாடைகள் மிகவும் மலிவாகக் கிடைக்கும். வேண்டிய மட்டும் வாங்கணும்! என்றெல்லாம் நினைத்துக் கொண்டு போனேன். பேலூர் மடத்தில் எல்லா இடங்களையும் நல்லாச் சுத்திப் பார்க்கணும். பின்னர் கங்கா சாகர் போகணும்னு ஆயிரத்தெட்டு ஆசை. அதிலே கங்காசாகருக்குப் போவது கஷ்டம்னு முதலிலேயே ஓட்டல்காரங்க சொல்லிட்டாங்க.  அது கல்கத்தாவிலிருந்து 100 கி.மீ தூரத்தில் இருக்கும் ஒரு தீவு. மேற்கு வங்கத்தின் ஆட்சிக்குக் கீழ் தான் வருது. நம்ம ராமேஸ்வரம் மாதிரினு வைச்சுக்குங்க. இதுவும் ஒரு புனித யாத்திரைக்குரிய தலமே! ஆனால் அங்கே செல்லக் குறிப்பிட்ட தூரம் வரைதான் காரில் போகலாம்.  அதுக்கப்புறமா அதற்கென இருக்கும் படகில் செல்ல வேண்டும். சுந்தரவனக்காடுகள் அங்கே தான் ஆரம்பிக்கின்றன என்பதால் சுந்தரவனக்காடுகளைப் பார்க்கணும். கல்கத்தாவின் பிரபலமான சணல் பொருட்களை வாங்கணும். சொந்தக்காரங்க, நண்பர்கள்னு கொடுக்கக் குறைஞ்சது ஒரு கைப்பையாவது வாங்கணும். என் தம்பி மனைவி கேட்டிருந்த கல்கத்தா அலுமினியம் சட்டி வாங்கிக் கொடுக்கணும். என்று ஒரு பெரிய பட்டியலே காத்திருந்தது. 

ஆனால் இவை அனைத்தையும் என்னால் வாங்க முடிந்ததா?  அங்கே இருக்குங்க சஸ்பென்ஸ்! :)

தக்ஷிணேஸ்வரத்தில் இருந்து கிளம்பும்போதே பனிரண்டு மணிக்கு மேல் ஆகி விட்டது.  தக்ஷிணேஸ்வரம் ஹூக்ளி நதியின் கிழக்குக்கரை எனில் பேலூர் மடம் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. பகவான் ராமகிருஷ்ணரின் பிரதம சீடரான ஸ்வாமி விவேகானந்தரால் நிர்மாணிக்கப்பட்ட இந்த மடத்தில் பகவானுக்கும், அன்னைக்கும், விவேகானந்தருக்கும் எனத் தனித் தனி சந்நிதிகள் உள்ளதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் பெரிய அளவிலான  அருங்காட்சியகமும் இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கும் ஆவலில் அங்கே பயணித்தோம். ஆனால் அங்கே போனதுமே இதுவும் பனிரண்டு மணியோடு மூடிடுவாங்க என்றும் இனி மாலை நாலு அல்லது நாலரைக்குத் தான் திறக்கப்படும் என்றும் சொல்லிவிட்டார்கள். அதற்குள்ளாக எங்களுக்குச் சென்னையிலிருந்தும், மும்பையிலிருந்தும் உறவினர்களால் ஒரு சில தொலைபேசி அழைப்புகள் வந்ததில் எங்களுக்குச் சுற்றிப் பார்க்கும் ஆவலே இல்லாமல் போய்விட்டது.  ஓட்டுநரிடம் பேலூர் மடமும் மதியம் மூடுவாங்கனு ஏன் சொல்லலை என்று கேட்டால் இதெல்லாம் நான் கேட்டு வைச்சுக்க முடியாது. உங்களுக்கு வேணும்னால் நீங்க தான் கேட்டிருக்கணும் என்று பதில் வந்தது. 

பொதுவாக சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் வண்டிகளில் வண்டியை ஓட்டும் ஓட்டுநர் செல்லும் இடங்களைக் குறித்தும், ஆங்காங்கே உள்ள தங்குமிடங்களைக் குறித்தும் கோயில்கள் எனில் திறக்கும் நேரம், மூடும் நேரம் போன்றவற்றை அறிந்தவராகவே இருப்பார்கள். வண்டி ஓட்டுநரே பல இடங்களுக்கு வழிகாட்டியாக வருவதும் உண்டு. ஆனால் இவரோ எனக்கு வண்டி ஓட்டுவதைத் தவிர வேறே வேலை இல்லை என்று சொல்லும்படி செயல்பட்டார். ஆகவே மாலை நான்கு மணி வரை அங்கே காத்திருக்க முடியாது என்பதால் மனது வேதனையுடன் பேலூர் மடத்தைத் தரிசிக்கக் கொடுத்து வைக்கவில்லை என்ற குறையுடன் அங்கிருந்து கிளம்பினோம்.

படத்துக்கு நன்றி விக்கிபீடியா

belur math க்கான பட முடிவு


சனி, ஞாயிறு இரண்டு நாட்களாக இணையம் சரியாக இல்லை. ஞாயிறன்று காலையிலிருந்து சுத்தமாக இணையம் இல்லை. ஆகவே பலருடைய பதிவுகளையும் பார்க்க முடியவில்லை. அதோடு நேற்று மீண்டும் நெபுலைசர் வைச்சுக்கும்படி உடல்நிலையும் சரியில்லை. இன்றும் மறுபடி போய் நெபுலைசர் வைச்சுக்கணும். விரைவில் எல்லாம் சரியாகும்னு நினைக்கிறேன். இப்போல்லாம் இணையத்தில் இருப்பதே அரிதாகி வருகிறது! :)

26 comments:

 1. உடல் நலத்தில் கவனம் வையுங்கள். நெபுலைசர் வீட்டிலேயே வாங்கி வைத்துக் கொள்ளவில்லையா? தேவைப் படும்போது அல்லது ரெகுலராக நாமே வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே..

  பயணத் திட்டங்கள் நாமொன்று நினைக்க அதுவொன்று மாறுகிறது போலும். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வீட்டில் வைத்துக்கொண்டால் அப்புறமா அதே பழக்கமாப்போயிடும்! :) பொண்ணு கூடச் சொன்னா. வீட்டில் வாங்கி வைச்சுக்கோ என்று. :) பயணத்திட்டங்கள் இப்போத் தான் இப்படித் தாறுமாறாக. அநேகமாய் எல்லாம் வெற்றிகரமாகவே முடிந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் எங்களால் முடியலை என்பதால் அதிக அலைச்சலைத் தவிர்ப்போம். இப்போ அப்படி இல்லை. எங்கும் போகவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது! :)

   Delete
 2. பலநேரங்களில் திட்டமிட்டபடி பலதும் செய்ய முடிவதில்லை. ஆமாம் நெபுலைசர் என்றால் என்ன எதற்கு உடல் நலம் பேணுங்கள்

  ReplyDelete
  Replies
  1. https://en.wikipedia.org/wiki/Nebulizer
   ஐயா, விக்கிபீடியா கொடுக்கும் தகவலின் சுட்டி மேலே கொடுத்திருக்கேன். நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம். இப்போ இதுவும் பழசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். :) எங்க வீட்டில் முதல் முதல் நெபுலைசர் வைத்துக் கொண்டவள் என்னும் பெயர் எனக்கு உண்டு. 20 வருஷம் முன்னால் எனக்கு நெபுலைசர் வைப்பதை எல்லோருமே ஆச்சரியமாப் பார்த்திருக்கோம். இப்போ சர்வ சகஜம்! :)

   Delete
  2. "THIS IS NOT MY JOB " ஆமி குர்போ நா ..என்பது TYPICAL
   பெங்காலி WORK CULTURE ..25 வரு டடங்களுக்கும் மேலாக
   C P M -ஆட்சியில் இந்த மனோபாவத்தை நன்கு வளர்த்துவிட்டார்கள் ..ஆகவே தான் பெங்காலில்
   ( கல்கத்தாவில் -? )எ ந்த வியாபாரம் ,/நிறுவனம் தொடங்கினாலும் , சீக்கிரமே மூடிவிடும் நிலையம் ஏற்பட்டது எனலாம் ..தங்களுக்கு அமைந்த ஓட்டுனர் ஒரு typical example ..!

   பேலூர் மடத் தை பார்க்க இயலாமல் போனதிற்கு வருந்திகிறேன் ..

   மாலி

   Delete
  3. வாங்க மாலி சார், கல்கத்தா பயணம் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது! :(

   Delete
  4. சிபிஎம்மால் எப்போதுமே பிரச்னைதானே! :) இங்கே தமிழ்நாட்டில் எல்லாம் இலவசம்! அங்கே அப்படி! :( மக்கள் புரிந்து கொள்ளும் நாள் எப்போதோ!

   Delete
 3. உடல் நலம் முக்கியம். பதிவுகள் பக்கம் பிறகு வரலாம். விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகள்.

  பயணம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், ஃபெப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து மருத்துவமனைக்குப் போறது தான் வேலை! :)

   Delete
 4. உடம்பை முதலில் கவனித்துக் கொள்ளுங்க அக்கா! அடுத்தமுறை தான் கெய்ட் ஆக வருகிறேன். விட்டதை எல்லாம் சரி செய்து விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் தம்பி. அடுத்தமுறை கல்கத்தா போனால் நிச்சயமாக உங்களிடம் அல்லது மாலி சாரிடம் கேட்டுக்கொண்டு தான் போகணும்.

   Delete
 5. அன்பு கீதா,
  உங்கள் கல்கத்தப் பயணத்தில் காளி காப்பாற்றி இருக்கிறாள்.

  இதற்கு மேல் விபரீதம் இல்லாமல் போச்சே என்று நான் நிம்மதி அடைகிறேன்.
  உங்கள் இருவரின் விடா முயற்ச்கிக்கும் என் நமஸ்காரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் காளி தான் காப்பாற்றினாள்; காப்பாற்றி வருகிறாள், ஏதோ ஒரு ரூபத்தில்! :)

   Delete
 6. உங்கள் உடல்நலத்தில் சீரிய கவனம் கொள்ளவும்.
  இத்தனை தூரம் போய், பேலூர் மடம் பார்க்கமுடியாது போன வருத்தம் மனதில் இருக்கும். என்ன செய்வது? எல்லாமே நம் கையில் இல்லை.Better luck next time.

  பெங்காளிகளை நீங்கள் முன்பே அறிந்திருக்கவில்லை. அதனால்தான் அந்த ஓட்டுனரின் பதில் உங்களுக்கு அதிர்ச்சியையோ, அயர்வையோ கொடுத்திருக்கும். வேலை செய்வதுதான் அவர்களுக்கு எப்போதும் பிரச்னை. வேலையைத் தவிர்ப்பதல்ல. எப்போதும் ஏதாவது பான் மென்றுகொண்டோ, புகைபிடித்துக்கொண்டோ, வாய்கொள்ளாமல் ரொஸகுல்லாவை விழுங்கிக்கொண்டோ, அரசாங்கத்தின் கடமை என்ன, கம்பெனி முதலாளியின் கடமை என்னென்ன என்று வியாக்கியானம் செய்துகொண்டிருப்பார்கள் நாள் பூராவும். மாதாமாதம் ஒரு பைசா குறையாமல் சம்பளம் அவர்களுக்கு டாண் என்று வந்துவிடவேண்டும். அதற்கேற்ற பணி? நாங்கள் தினம் தினம் ஆஃபீஸில் தலைகாட்டுகிறோமே அது போதாதா என்று கேட்பார்கள். இந்தமாதிரி மக்கள்தான் கம்யூனிஸ்டுகளுக்குத் தேவை. ஜோதிபாஸு அண்ட் கோ. 25 வருடம் ஆளமுடிந்தது இப்படித்தான். பெங்காளிகள் வாய்ச் சவடாலை நிறுத்திவிட்டு ஒரு 25% உழைப்பு காட்டியிருந்தால்கூட போதும், வங்காளம் எங்கோ சென்றிருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, ஏகாந்தன். உண்மையிலேயே வங்காளிகளோடு அதிகம் பழக்கம் இல்லை. குஜராத்தியர், ராஜஸ்தானியரோடு தான் அதிகம் பழக்கம். அடுத்துப் பஞ்சாபிகள். அங்கெல்லாம் பார்த்ததுக்கு இங்கே மாறாக இருக்கிறது. மற்றபடி கம்யூனிஸ்டுகளைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது சரியே! :))))

   Delete
 7. மகளிர் தின வாழ்த்துக்கள் மேடம். பேளூர் மடம் பற்றி விவேகானந்தரின் சரிதையில் படித்திருக்கிறேன். என் ஓய்வுகாலப் பயணத்திட்டத்தில் அதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சிவகுமாரன், முதல் வருகைனு நினைக்கிறேன். ஏற்கெனவே ஒருத்தரைத் தெரியும், மதுரைக்காரர். நீங்க அவர் இல்லைனும் நம்பறேன். ஓய்வுகாலம் வரை ஏன் காத்திருக்கணும்? சீக்கிரம் பேலூர் மடம் போய்ப் பாருங்க! :)

   Delete
  2. நீங்கள் குறிப்பிடும் மதுரைக்காரர் நானாகத் தானிருக்கும். இது முதல் வருகையும் அல்ல.😃

   Delete
  3. அப்படிங்கறீங்க? அந்தக் குழந்தை நீங்க தானா? :) நான் இப்போதெல்லாம் அவர் இணையத்தில் இல்லை என்றே நினைத்திருந்தேன். :)))) பழைய நண்பர்கள் பலருடனும் இப்போது தொடர்பு இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் நான் ஒருத்தி தான் தொடர்ந்து இணையத் தொடர்பில் இருக்கேன்னு நினைக்கிறேன். :(

   Delete
 8. நான் ஆரம்பகாலத்தில் கம்யூனிச இயக்கத்தில் இருந்தவன் தான். ஏகாந்தன் சொல்வது மிகச் சரி.

  ReplyDelete
  Replies
  1. ஆரம்ப காலக் கம்யூனிஸ்டுகள் எல்லாம் பிற்காலத்தில் ஆன்மிகவாதிகளாகி இருக்கின்றனர். பக்தி இல்லை, நான் சொல்வது சுத்தமான ஆன்மிகம் :), எங்க வீட்டிலேயே அப்படி ஒருத்தர் இருந்துட்டு, 40 வயசுக்கப்புறமா சுத்த சைவப்பழமாக மாறிப் பின்னர் ஆன்மிக உலகிலே முத்திரை பதித்தார். இப்போ இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார். :) இன்னும் பலரும் இருக்கின்றனர்! முகநூலில் கூட என் தம்பி ஒருவர் இருக்கிறார். தீவிரக் கம்யூனிஸ்ட்! :) விரைவில் மாறுவார்.

   Delete
 9. நாங்கள் 78ம் வருடம் 10 நாட்கள் கல்கத்தாவை நிதானமாக சுற்றிப்பார்த்தோம்.
  எங்கள் சாரின் அண்ணா இருந்தார்கள் அதனால் அவர்கள் உதவியுடன் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தோம். கல்கத்தா இந்தேலியம் இருப்புசட்டியும் 12 ரூபாயுக்கு வாங்கி வந்தோம். இன்னும் நல்ல உபயோகத்தில் இருக்கிறது. ரெடிமேட் ஆடைகள், பெட்டிகள் எல்லாம் வாங்கி வந்தோம்.
  உடல் நிலையில் கவனம் செலுத்துக்கள். விரைவில் நலபெறுவீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், கோமதி அரசு. இம்மாதிரியான ஊர்களைச் சுற்றிப் பார்க்கவெனில் சொந்தமோ, நெருங்கிய நட்போ இருந்தால் தான் நமக்கு உதவியாக இருக்கும். என்னிடம் கல்கத்தா அலுமினியம் சட்டி இருக்கு. தம்பி மனைவி தான் கேட்டிருந்தார். :( வாங்க முடியலை! :(

   Delete
 10. அப்போ HTN, DM, COPD, GERD, ARTHRITIS எல்லாம் உங்களுக்கு உண்டு போல. Nebulizer சும்மா சும்மா எடுக்கக் கூடாது. அதற்கு மருத்துவரின் மேற்பார்வை தேவை. இவ்வாறு கூறியது ஒரு பெரிய டாக்டர் தான்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹாஹா, நீங்களே ஒரு மருத்துவர் போலிருக்கே அண்ணா! சும்மாச் சும்மாவெல்லாம் நெபுலைசர் எடுக்கிறதில்லை. கிட்டத்தட்டப் பத்து வருடங்களாக இதன் துணை இல்லாமல் தான் இருந்தேன். இந்த வருஷம் அதிக அலைச்சல் அல்லது ஒடிஷா, கல்கத்தாவின் சீதோஷ்ணம் ஒத்துக்காமல் போனது! இப்படி ஏதோ ஒரு காரணம்! போன மாதம் இரு முறை நெபுலைசர் மருத்துவர் மேற்பார்வையுடன் வைத்துக் கொண்டேன். இப்போ இரு முறை! இதுவும் மருத்துவர் மேற்பார்வையுடன் தான். வீட்டில் வாங்கி வைச்சுக்கலையா என எல்லோரும் கேட்கின்றார்கள். அந்த அளவுக்கு சுய மருத்துவம் எல்லாம் பார்த்துக் கொள்வது இல்லை. எங்க மருத்துவரும் அவசியம் என்றால் தான் வைக்கிறார். இருமல் மருந்தையே இரவு மட்டும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார். :)

   Delete
 11. இப்போது தேறிவிட்டதா உடல்நலம்..??

  பயணங்கள் சிலசமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது. ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளவும்..நாங்கள் தாமதமாக வந்துள்ளதால் இப்போது தாங்கள் குணமடைந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்..

  ReplyDelete