எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 20, 2016

ஞாயிற்றுக் கிழமைச் சிறப்பு உணவு! சேவை செய்யலாம், சாப்பிடவும் செய்யலாம்! :)

இங்கே

மேற்கண்ட சுட்டியில் ஒரு இடியாப்பம் புளி உப்புமா ஆன கதையை எழுதி இருக்கேன். அன்னிலே இருந்து மறுபடி ஒரு நாள் சேவையாவது பண்ணியே தீரணும்னு! ஆனால் ஜனவரி 31 ஆம் தேதியன்று மும்பையிலிருந்து திரும்பினவள் ஃபெப்ரவரி ஒன்றாம் தேதி மருத்துவரிடம் போனேனா! அதிலே இருந்து தினம் தினம் மருத்துவரைப் பார்க்கிறதே வேலையாப் போச்சு. நேத்திக்குப் போனப்போ இனிமே ஒரு மாசம் கழிச்சு வந்தாப் போதும்னு மருத்துவர் சொல்லிட்டாரா! ஹூர்ரே! என ஒரு குதி குதிச்சேன். மனசுக்குள்ளே தான்! (நிஜம்மாக் குதிச்சா முழங்கால் என்ன ஆறது?) ஆகவே அதைக் கொண்டாடும் முகமாக இன்னிக்குச் சேவை பண்ணலாம்னு காலையிலேயே தோன்றி புழுங்கலரிசி ஒன்றரை ஆழாக்கு(கிட்டத்தட்ட 350 கிராம்) பச்சரிசி ஒன்றரை ஆழாக்கு கலந்து களைந்து நனைச்சு ஊற வைச்சேன்.

சுமார் பதினோரு மணி சுமாருக்கு சமையல் வேலையைப் பார்த்துக் கொண்டே அரைச்சு எடுத்து வைச்சாச்சு. மதியம் சாப்பாடு முடிஞ்சதும் பாத்திரங்கள் கழுவிட்டு உடனேயே சேவை பிழியும் வேலை ஆரம்பிச்சாச்சு! கீழே படங்கள். படங்கள் முன்பின்னாக எடுத்தவை என்றாலும் வரிசைக்கிரமமாகக் கொடுக்கிறேன்.


இதான் என்னோட சேவை நாழி! 74 ஆம் வருஷம் ராஜஸ்தான் போறச்சே அம்மா வாங்கிக் கொடுத்தது. திண்டுக்கல் சேவை நாழி தான் பிரபலம். திண்டுக்கல் இரும்பு சாமான்களுக்குப் பிரபலமானது.  திண்டுக்கல்லில் சொல்லி வைச்சு வாங்கினாங்க. வாங்கும்போது 2 ரூபாய்! இப்போ இதைப் போல 250 ரூபாய் கொடுத்தால் கூடக் கிடைக்கிறதில்லை.

அரைச்ச மாவை நிதானமாகக் கரைச்சு இட்லிகளாக ஊற்றினேன். வெந்த இட்லிகளை மேலே பார்க்கிறீங்க!

 இட்லிகளைச் சேவை நாழியில் போட்டுப் பிழிந்தாயிற்று. இதோடு போதும். திரும்ப வேக வைக்கணும்னு இல்லை. ஒரு சிலர் புழுங்கலரிசியை மட்டும் அரைச்சுக் கிளறிப் பின்னர் கொழுக்கட்டை மாதிரி வேக வைச்சு, அல்லது கொதிக்கும் நீரில் வேக வைச்சுப் பிழிவாங்க. அதெல்லாம் வேலை ஜாஸ்தி என எனக்குத் தோன்றும். வெறும் புழுங்கலரிசி இல்லாமல் பச்சரிசியும் சேர்த்து அரைச்சுட்டு இப்படி இட்லி மாதிரி வார்த்துச் சேவை பிழிந்தால் மீண்டும் வேக வைக்க வேண்டாம். 


பிழிஞ்ச சேவை கலக்கும் முன்னர். தேங்காய்ச் சேவை கொஞ்சம், எலுமிச்சைச் சேவை கொஞ்சமும், தயிரில் கொஞ்சமும் போட எடுத்து வைச்சிருக்கேன். அப்பாடா, நீண்ட நாளாகக் காத்திருந்த ஒரு வேலை முடிஞ்சா எப்படி இருக்குமோ அப்படி ஓர் உணர்வு! :))

பி.கு. இந்த மொக்கைக்குக் கூட்டம் அள்ளும் வழக்கம் போல்! :)

16 comments:

  1. மொக்கை நல்லா இருக்கு. முன்னால் நாங்களும் இப்படித்தான் செய்தோம்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க (நான் மட்டும்) எப்போவுமே இப்படித் தான் செய்யறோம். :)))))

      Delete
  2. நன்றாகவே செய்து உள்ளீர்கள் அம்மா...

    ReplyDelete
  3. திண்டுக்கல்லில் வாங்கியதா.அட.
    அம்மாவிடம் மர நாழி இருந்தது. நீங்க சொல்கிற மாதிரி வென்னீர் கொதிக்க வச்சு மாவை உருட்டிப் போட்டு,பார்க்கும்போதே எனக்கு அலுப்பாயிருக்கும். ஆனால் பிழிவதற்கு நான் தான்.
    இல்லாவிட்டால் அப்பா. நன்றாக இருக்கிறது சேவை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி இப்போவும் இங்கே ஶ்ரீரங்கம் கோயில்கடைகளில் திண்டுக்கல் சேவை நாழி எனச் சொல்லி விற்கிறாங்க. தம்பி மனைவி கேட்டாளேனு வாங்கிண்டு போனால் ம்ஹ்ஹும், அசையவே இல்லை. :)))))

      Delete
  4. சேவை.... எங்கள் வீட்டிலும் ஒன்று இருக்கிறது! :) என்றாலும் ரெடி மேட் சேவை தான் வீட்டில்.....

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் ஆயத்த உணவுகளுக்கும் வெகு தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊரம்!:)

      Delete
  5. திருகும் முறை எனில் விரைவில் வீணாகாது. ரேவதி சொன்னமாதிரி மர அச்சு என்றால் பிழிவது கஷ்டம்! :)

    ReplyDelete
  6. ஹும் ... என்னவோ போங்க!

    ReplyDelete
    Replies
    1. என்ன, இப்படி சலிச்சுக்கறிங்க தம்பி? :)

      Delete
  7. பி.கு. இந்த மொக்கைக்குக் கூட்டம் அள்ளும் வழக்கம் போல்! :)

    attendance :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நன்மனம். மொக்கைக்கே உங்கள் ஆதரவா? ஓகே, ஓகே! :)

      Delete
  8. என் மனைவி முதலில் மாவைக் கிண்டுவாள் சரியான பதம் வராவிட்டால் பிழிவது சிரமம் பின் அதைப் பிழிந்து அதை ஆவியில் வேக வைப்பாள்

    ReplyDelete
    Replies
    1. பச்சரிசி மாவில் செய்யறவங்க நீங்க சொல்றாப்போல் தான் செய்வாங்க ஐயா! அதையும் பார்த்திருக்கேன். கடையில் விற்கும் இடியாப்ப மாவில் மாவில் வெந்நீர் ஊற்றிப் பிசைந்து கொண்டு செய்யணும். அப்படிச் செய்தது தான் சரியா வராமல் அன்னிக்குப் புளி உப்புமாவாக அதை மாற்றினேன். என்னைப் பொறுத்தவரை இதான் சரியா வருது! :)

      Delete
  9. பச்சரிசியில் செய்வது இடியாப்பம் பச்சரிசி மாவில் வெந்நீர் ஊற்றிக் கிளறி இடியாப்ப அச்சில் (ஓமப்பொடி அச்சு போல) பிழிந்து ஆவியில் வேக வைப்பது அப்படித்தான் எங்கள் வீட்டில் சொல்லுவது...இலங்கையில் ரொம்பவே பிரபலம் இடியாப்பம் சொதி..இலங்கை சொதி ரொம்பவே நல்லாருக்கும்.

    நீங்கள் செய்வது போலத்தான் எங்கள் வீட்டிலும் ஆனால் மாவு கிளறி கொழுக்கட்டை ஆவியில் வேகவைத்து (பாட்டி நீரில் போட்டு வேக வைத்து...நீங்கள் இங்கு சொல்லியிருப்பதுதான்..) அப்புறம் இதே போல ஹின்டாலியத்தில் அம்மா கொடுத்த அச்சு இருக்கு. இரும்பில் இருந்தது அதை வீட்டிற்கு வந்த உறவினர் எடுத்துக் கொண்டு போய்விட்டாட் அப்புறம் இரும்பு கிடைக்கவில்லை..இதில்தான் பிழிவோம்..இரு வாரங்கள் முன் கூட பிழிந்தேன். இதற்கு எங்கள் ஊரில் திருநெல்வேலி/திருவநந்தபுரம் மோர்க்குழம்பு/ எரிகொள்ளி செய்து வடாம் வற்றல், அப்பளத்துடன்...

    சில சமயம் கலந்த சேவை....பார்த்ததும் ஆசை வந்துவிட்டது...நாளை இதுதான் எங்க வீட்டில் ..

    கீதா

    ReplyDelete