எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 31, 2016

அரங்கனோடு ஒரு மணி நேரம்!

நான் இருக்கேனான்னு நிறையப் பேர் வந்து பார்த்திருக்காங்க. இரண்டு நாட்களாக இணையம் வரலை. வந்தபோதும் பின்னூட்டங்களை மட்டும் வெளியிட்டுவிட்டு மூடிட்டேன். நேத்திக்கு ரஞ்சனி நாராயணன் தொலைபேசிப் பேசினாங்க. அப்போ அவங்களுக்கும் இம்மாதிரிப் பிரச்னை இருந்ததாகச் சொன்னாங்க. ஆனால் அவங்க கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்திருக்காங்க. எனக்கு அதெல்லாம் இல்லை. மருத்துவர் கூடக் கேட்டார்; இதுக்கு முன்னே வேறே எங்கானும் அறுவை சிகிச்சை நடந்திருக்கானு! ஏற்கெனவே என் கண்ணை அவங்க கிட்டேக் கடந்த நாலு வருஷமாக் காட்டிட்டு வரேனே! மறந்திருப்பாங்க போல!

ரஞ்சனி இது ரொம்பச் சின்ன விஷயம்னும் இதுக்காகக் கவலை வேண்டாம்; இணையத்தை ஒதுக்க வேண்டாம்னு சொன்னாங்க. ஒரு சின்ன லேசர் ஆபரேஷன் அவங்களுக்குச் செய்தாங்களாம். எனக்கு எங்க மருத்துவர் அதெல்லாம் இப்போ வேணாம்னு சொல்லிட்டாங்க. பார்க்கலாம்! சில சமயம் வருது. இன்னிக்குப் பெரிய ரங்குவையும் நம்பெருமாளையும் பார்க்கப் பல நாட்கள் கழிச்சுப் போனோம். கும்பாபிஷேஹத்துக்கு அப்புறமா ஒரே முறை போனது.  தைத் தேருக்கு வீதியில் இருந்தே பார்த்துட்டு வந்துட்டோம். இன்னிக்குத் தான் கொஞ்சம் அவகாசம் கிடைத்துப் போனோம்.  முதலில் வடக்கு வாசல் போய்த் தாயாரைப் பார்த்து உத்தரவு வாங்கிக் கொண்டு சடாரியும் சாதித்துக் கொண்டு மஞ்சள் பிரசாதம் பெற்றுக்கொண்டு பெருமாளைப் பார்க்க வந்தோம். தாயாரை எப்போவும் போல் இலவச தரிசனம் தான். பெருமாளைப் பார்க்க  வழக்கம் போல் சுத்து வழி தான்.  ஆனால் கூட்டம் இல்லை. பெருமாள் ஜாலியாக் காத்தாடிட்டு இருந்தார். நாங்க தான் அசடு மாதிரி டிக்கெட் வாங்கிட்டுப் போனோம். எல்லோரும் டிக்கெட்டே இல்லாமல் போயிட்டிருந்தாங்க. நின்று நிதானமாக நல்ல தரிசனம் என்பதோடு சந்நிதியிலேயே துளசிப் பிரசாதமும் கிடைத்தது.  நம்பெருமாள் முகத்தை மூடிக்கொண்டு ஓர் ஆபரணத்தை அணிந்து அது வழியாச் சிரிச்சுட்டு இருந்தார்.  திருவிழாவெல்லாம் முடிஞ்சு நம்பெருமாள் ஆசுவாசமாக இருந்தார்.  பக்கத்தில் உபய நாச்சியார்கள்.  கொஞ்சம் மேலே பெரிய ரங்குவின் திருமுகத்தையும் திருவடியையும் நல்லா தரிசனம் செய்ய முடிஞ்சது.

திரும்பும் வழி வழக்கம் போல் சுத்தல்! தொண்டைமான் மேடு வழியா மேலே ஏறி வடக்கு வாசல் வழியாகக் கிழக்குப் பிரஹாரம் மடப்பள்ளி இருக்குமிடம் வந்து அன்னமூர்த்தி சந்நிதி வழியா மறுபடிக் கொடிமரத்துக்கு வரணும். :( என்ன ஒரு ஆறுதல்னா இது வரை நேரே பார்த்துட்டுக் குறுக்கே விழுந்தடிச்சு வருவோம். இப்போக் கட்டாயமா என்னோட பிரகாரத்தைச் சுத்தி ஆகணும்னு ரங்கு சொல்லிட்டார். ஆகவே பிரகாரம் ஒரு அரைச்சுத்து ஆயிடுது! தொண்டைமான் மேடுப் படிகளில் மேலே ஏறியதும் மூலஸ்தானத்தின் பின்புறமாகத் தெரியும் பிரணவ விமானத்தின் தரிசனம் கீழே!



கறுப்பாய் மேலே தெரிவது நாங்க நின்றிருந்த தொண்டைமான் மேட்டின் கூரை! வெயிலில் ஒரு பக்க விமானம் சரியா விழலை! நல்ல வெயில் என்பதால் கண்கள் ஏற்கெனவே கூசிக் கொண்டிருந்தன! :)




நடுவே குறுக்கே மின்சார ஒயர்கள் செல்கின்றன. அது குறுக்கே விழுந்திருக்கு. அதுக்கு ஏதும் செய்ய முடியாது. இது கர்பகிரஹத்திற்கு நேர் பின்பக்கம். 

21 comments:

  1. செலவே இல்லாமல் என்னையும் தரிசிக்க வைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, உங்களோட பதிவுக்கு வரணும். அநேகமா நாளைக்கு வருவேன்! :) உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. அப்பப்போ கோவில் சென்று வந்து விடுகிறீர்கள். சமீபத்தில் மதுரை சென்றிருந்தபோது தல்லாக்குளம் பெருமாள் கோவில் சென்றோம். சென்ற நேரம் மாலை 4.15. சுற்றி வந்து கொண்டிருந்த பட்டர்கள் சன்னதி திறக்கவே நேரம் ஆனது. சடாரி சாதிக்காமலேயே அனுப்பி விட்டார்கள். அப்புறம் ஆஞ்சி கிட்ட போய் புகார்க் கொடுத்துட்டு வந்தோம்!

    :)))

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம், கார்த்திகை மாசம் போனப்புறமா இப்போத் தான். நடுவில் தை மாசம் தேரில் நம்பெருமாளை மட்டும் தூரக்க இருந்து பார்த்தது!

      Delete
  3. அரங்கன் அருகில் இருக்கும் பொழுது மணிக் கணக்கு கூடத் தெரிகிறதா, என்ன?..

    ReplyDelete
    Replies
    1. வீட்டை விட்டுக் கிளம்புகையில் நேரம் 3-35 ஆகி இருந்தது. பின்னர் மீண்டும் வீடு திரும்பியபோது நேரம் 4-50 ஆகி இருந்தது. ஆகவே ஒரு மணி நேரம்னு கணக்குச் சொன்னேன்! :)

      Delete
  4. அருமையான தரிசனம்
    வாழ்த்துக்கள் நட்பே...

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி அஜய்!

      Delete
  5. அரங்கன் நல்ல தரிசனம் கொடுத்து இருக்கிறரே! தன்னை நம்பிய பக்தருக்கு காட்சி கொடுக்கவில்லை என்றால் எப்படி? விமான தரிசனத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை! நேற்று பட்டாசாரியார்கள் மிகவும் மெதுவாகவே பார்த்தாச்சுன்னா போங்கனு சொன்னாங்க! விரட்டலை! இது மாதிரி அனுபவம் ஏற்கெனவே நேர்ந்தும் இருக்கிறது. கூட்டமில்லாத நாளில் தான் அரங்கனைச் சென்று பார்க்க வேண்டும்! :) அவங்களுக்கும் வசதி! நமக்கும் நல்ல தரிசனம் கிடைக்கும்.

      Delete
  6. நல்ல தரிசனம் ..


    விடுமுறைக்கு வரும் போது தரிசிக்கணும் ...

    ReplyDelete
    Replies
    1. எங்கே இருக்கீங்க அநுராதா? கட்டாயமாய் விடுமுறையில் வந்து தரிசியுங்கள். திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கூட்டம் இருக்காது. நேற்று என்னமோ அதிசயமா வியாழக்கிழமையில் கூட்டம் இல்லை. நாங்க அம்மாமண்டபம் பக்கம் இருப்பதால் காலையிலேயே ஒரு மாதிரியா நிலவரத்தைத் தெரிந்து கொண்டு விடுவோம். :)

      Delete
    2. அம்மா வீடு ....உறையூரில் தான் ..அதனால் எல்லா விடுமுறைக்கும் திருச்சியும் ஸ்ரீரங்கமும் உண்டு...

      உங்க அன்புக்கு நன்றி ..

      Delete
  7. நேற்று உங்களுடன் பேசியது எனக்கும் மகிழ்ச்சி. உங்களைப் போலவே எனக்கும் இருந்து இப்போது சரியாகிவிட்டது. அதனாலேயே உங்களுக்கு போன் செய்து தைரியம் சொன்னேன்.
    சென்ற வருடம் ஸ்ரீரங்கம் வந்திருந்தபோது நாங்கள் கூட சுற்றிச் சுற்றி வந்து பெரிய பெருமாளை சேவித்தோம். யாருமே இல்லை.
    @ஸ்ரீராம் ஸ்ரீரங்கம் போனால் கோவிலுக்குப் போவது மட்டுமே வேலை. காலையில் ஒருமுறை. திரும்பவும் மாலையில் ஒருமுறை தவறாமல் போய் சேவித்துவிட்டு வருவோம். நிறைய சந்நிதிகள் இருக்கின்றன. ரங்கவிலாசத்திலும், கருடன் சந்நிதிக்கு அருகிலும் பக்கவாட்டில் நிறைய குட்டிக்குட்டி சந்நிதிகள். இவைகளை சேவிக்கவே இரண்டு நாட்கள் வேண்டும். பிறகு தாயார் சந்நிதி அருகிலும், போகும் வழியிலும் ஏராளமான சந்நிதிகள்.
    ஸ்ரீரங்கத்தில் ஒரே பொழுதுபோக்கு கோவிலுக்குச் செல்வதுதான்.
    அங்கேயே இருப்பவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, தைரியம் கொடுத்ததுக்கு முதலில் நன்றி. காலை, மாலை இருவேளை எல்லாம் எங்களால் போக முடியறதில்லை. பக்கவாட்டு சந்நிதிகள் எல்லாம் சிலது மேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏலே ஏறணுமே! அவற்றில் அவ்வளவா ஏறுவது இல்லை. நேற்று அன்னமூர்த்தியைப் பார்க்கணும்னு தயாரா இருந்தேன். சந்நிதி திறக்கலை! :(

      Delete
  8. அரங்கன் அருள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்மனம். :)

      Delete
  9. அரங்கனைப் பார்க்க ஒரு மணிநேரம் ஆயிற்று என்கிறீர்களா?அரங்கனோடு எங்கே ஒரு மணிநேரம் ஒரு சில நொடிகளே தரிசனம் என்றாலும்

    ReplyDelete
    Replies
    1. கோவிலில் செலவு செய்த மொத்த நேரத்தைக் குறிப்பிட்டேன், ஐயா! மற்றபடி அரங்கனோடு சில நொடிகளே இருந்தாலும் அதுவே போதுமானது!

      Delete
  10. அடடா இங்கு அரங்கனுக்குப் போட்ட கமென்டை செக்யூரிட்டி தாலிபீத்திற்கு அனுப்பிவிட்டதே....சரி நீங்கள் அங்கு பார்த்துக் கொள்ளுங்கள் இதற்கான கமென்டை...இதுவும் செக்யூரிட்டி செக் பண்ணிவிட்டுத்தான் பாஸ்போர்ட் விசாஎ எல்லாம் கேட்டுத்தான் அனுப்பும்...ஏதோ வெளிநாட்டுக்குப் போவது போல..ப்ளாகர் ரொம்பவே படுத்துகிறது

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, பார்த்தேன். செக்யூரிடி செக் கேட்கலைனாலும் சமயத்தில் என்னோட பதிவுக்கே என்னை அனுமதிக்காது! ஆகவே நீங்க சொல்றதெல்லாம் நமக்கு ஜூஜூபி! :)

      Delete