எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 01, 2017

மண்ணின் மைந்தர்கள்!

தமிழ்நாட்டில் தற்போதைய முக்கியச் செய்தி "நெடுவாசல்" விவகாரம் தான். ஜல்லிக்கட்டு முடிஞ்சு போய், அடுத்த முதல்மந்திரி யாருங்கறதும் ஒருவழியா முடிஞ்சு போய் இப்போ இதைக் கையில் எடுத்திருக்கிறாங்க!  என்னமோ புதுசா இப்போத் தான் எடுக்கிறாப்போல் பேசறாங்க. 1901 ஆம் வருடம் பிரிட்டிஷ் இந்தியாவின் அசாம் மாநில டிக்பாயில் தான்ஆசியாவிலேயே முதல் முதலாக எண்ணெய்க்கிணறுகள் தோண்டப்பட்டன. அப்போது முதல் இவை தொடர்ந்து பல மாநிலங்களிலும் தோண்டப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இதற்கெல்லாம் எதிர்ப்பே இல்லை.  மற்ற மாநிலங்களில் மட்டும் விளைநிலங்கள் இல்லையா? குடிநீர்த் தேவை இல்லையா? சுற்றுச் சூழல் பாதிப்புக்கு அந்த மாநிலங்கள் எல்லாம் கவலைப்பட்டுக்காதா?  அவங்களுக்கும் இருக்கும் தானே! ஆனால் அங்கெல்லாம் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டதாகவோ குடிநீர் நஞ்சானதாகவோ, சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதாகவோ புகார்கள் எழும்பவே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

நாம் தான் எல்லாத்திலேயும் தனியாச்சே! ஆகவே நாம் "தமிழர்கள்" என்பதைக் காப்பாற்ற இப்படி ஏதானும் செய்து தானே ஆகணும்!  ஹைட்ரோ கார்பன் தோண்டி எடுப்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்தாலும், தமிழ்நாட்டிலேயே நரிமணம், களப்பால், அடியக்கமங்கலம் ஆகிய இடங்களில் பெட்ரோல், எரிவாயு  போன்றவை கிடைத்தாலும் அங்கெல்லாம் வேலைகள் ஏற்கெனவே நடந்து கொண்டிருந்தாலும் இப்போது கொண்டு வந்ததற்குத் தான் நாங்கள் எதிர்ப்புத் தெரிவிப்போம். ஏனெனில் முந்தைய திட்டங்களெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலும் ஏற்பட்டவை. இப்போதோ மோதி அரசு இதைப் புதுசாக் கொண்டு வந்தது போல் சொல்லிக் கொண்டு எதிர்க்கணும்! அதான் முக்கியம்.

உண்மையில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டது 2006 ஆம் ஆண்டில். அப்போதைய சுற்றுச் சூழல் அமைச்சரால்  ஒப்புதல் பெறப்பட்டு 2009 ஆம் ஆண்டில் ஆய்வுகள் நெடுவாசல் உள்பட 68 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு, 2011 ஆம் ஆண்டில் 327 பக்க ஆணை தயார் செய்யப்பட்டு சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு 31-1-2014 ஆம் ஆண்டில் ஓ என் ஜிசிக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.  இதன் தொடர்ச்சியாகவே 14-10-2015 இல் அரசாணை அனுப்பப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் எந்தக் கட்சியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்போது தான் புதுசா மோதி அரசில் இந்த விஷயம் தொடங்கப்பட்டிருப்பது போல் எல்லோரும் போராடக் கிளம்பி இருக்காங்க.

ஒரு மாநிலத்தில் மாநில அரசின் அனுமதி இல்லாமல், குறிப்பிட்ட ஊரின் கலெக்டர் உத்தரவு இல்லாமல் எந்தத் திட்டத்தையும் நேரடியாக மத்திய அரசு தொடங்கி விட முடியாது.  நமக்குச் சந்தேகம் இருந்ததெனில் சில கேள்விகளை முன் வைத்து முறைப்படி அரசிடமோ அல்லது உடனடியாகப் பலன் வேண்டுமெனில் நீதிமன்றத்தையோ அணுகலாம்.

உதாரணமாக
 ஹைட்ரோ கார்பன் எவ்விதத்தில் எடுக்கப் போறாங்க?
அதை விவசாய நிலத்தில் தான் எடுக்க முடியுமா? கரம்பு நிலங்களிலும் எடுக்க முடியுமா?
விவசாய நிலங்கள் தான் எனில் எத்தனை பேருடைய நிலங்கள் தேவைப்படும்?
அவங்களுக்கு நஷ்ட ஈடு உண்டா? எனில் எவ்வகையில் நஷ்ட ஈடு கொடுக்கப்படும்? நிலத்துக்கு நிலமா அல்லது பணமா?
திட்டம் தொடங்கி நடக்கும்போது விவசாய நிலங்களை அல்லது நிலங்களைக் கொடுத்தவர்களின் குடும்பத்திற்கு வேலை வாய்ப்புக்கான உத்தரவாதம் உண்டா?
இந்தத் திட்டத்தை இங்கே தான் தொடங்க வேண்டும் என்று ஏற்கெனவே ஆய்வுகள் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆய்வறிக்கையை மக்களுக்குப் புரியுமாறு அளிக்க வேண்டும்.
இதற்கான ஒப்புதலை மாநில அரசு, நகராட்சி, கிராமப் பஞ்சாயத்துக்களிடம் வாங்கியிருந்தால் அதற்கான நகலைக் காட்ட வேண்டும்.

இத்தனையும் கேட்டுவிட்டு இதற்கான உடனடி பதிலை அரசால் உடனே அளிக்க முடியவில்லை எனில் நீதிமன்றத்தை அணுகலாம். இடைக்காலத் தடை வாங்கலாம்.  ஏற்கெனவே இப்போக் குடிநீருக்கே ஆயிரம் அடி வரை போர்வெல் போட்டுக் கொண்டிருக்கோம். அப்படி இருக்கையில் எரிவாயுக்காகப் போட்டால் மட்டும் தப்பா?  மீத்தேன் வாயுவுக்காக எத்தனை அடி தோண்டப்படும்? அதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு இதற்கு முன்னர் எங்கேயானும் இருந்திருக்கா? வேறெந்த நாடுகளிலிருந்தாவது இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? ஏற்கெனவே எண்ணெய்க் கிணறுகள் குஜராத்தில் கட்ச் மாவட்டத்திலும்,  அஸ்ஸாமில் அப்பர் அசாம், அம்குரியிலும், ராஜஸ்தானில் ஜோத்பூர், பிகானீர், நாகோர், பார்மர், ஜெய்சல்மேர் ஆகிய இடங்களிலும் தோண்டப்படுகிறது. இதைத் தவிரவும்  ஆந்திராவில் கிருஷ்ணா நதி, கோதாவரி நதிப் படுகைகளிலும், தமிழ்நாட்டில் ஏற்கெனவே காவிரி நதிப்படுகைகளிலும் உள்ளன.  ஒரிசாவில் மஹாநதிப்படுகை, மும்பையில் கடற்கரையோரங்கள், அருணாசலில் கர்சங் எண்ணெய்க்கிணறு,  மத்தியப் பிரதேசத்தில் சோஹக்பூர், ஜார்க்கண்டில் ஜரியா, பொக்காரோ, மேற்கு வங்கத்தில் ராணிகுஞ்ச் ஆகிய இடங்களில் உள்ளன. இங்கிருந்தெல்லாம் எதிர்ப்புகள் ஏதும் இருந்திருந்தால் இவ்வளவு நாட்கள் ஊடகங்கள் சும்மாவா விட்டு வைத்திருக்கும்?

நமக்குச் சமைக்க எரிவாயு வேண்டும். அதோடு இப்போதெல்லாம் ஆட்டோ ஓட்டவும் எரிவாயு தேவைப்படுகிறது.  இரு சக்கரவண்டிகள், நான்கு சக்கர வண்டிகள் எனப் பெருகிக் கொண்டு வருகின்றன. பெட்ரோலோ, டீசலோ, எரிவாயுவோ தேவை இல்லை என்று  இவற்றை  நாம் விட்டு விட்டுப் பழையபடி மாட்டுவண்டியில் போகலாமா? அல்லது கால்நடையில் செல்லலாமா? வீடு கட்டணும்னாலும் இரும்புக்கம்பிகள், மணல், செங்கல், சிமென்ட் எல்லாமும் வேண்டும். ஆனால் முக்கிய தாதுக்களை அதிலும் இரும்பு தாதுக்களை எடுக்கணும்னா எதிர்ப்போம். அதே போல் மின் அடுப்பு, மின் சாதனங்கள், ஏசி, விளக்குகள் மின்சாரத்தில் எரியணும். குளிர்சாதனப்பெட்டி வேண்டும். ஆனால் பழுப்பு நிலக்கரியிலேயோ அல்லது அணு சக்தி மூலமோ மின்சாரம் எடுக்கறதுனா அலறுவோம். போராட்டம் நடத்துவோம்.

நம்மிடம் இருக்கும் இயற்கையான எரிசக்திகளை நாம் பயன்படுத்திக் கொண்டால் என்ன குறைந்துவிடும்?

  “தமிழ்நாட்டின் நரிமணம், கோவில் களப்பால், அடியக்காமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் மற்றும் கேஸ் கிடைக்கும் போது, கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காட்டி தமிழகத்திற்கு ஏன் பெட்ரோல், டீசல், விலையேற்றம்?" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு இல்லாமல் இவர் இந்த எண்ணெய்க்கிணறுகளைத் தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கார். பழைய செய்தி தான்  என்றாலும் இப்போது இவங்களும் எதிர்க்கறாங்க என்றே நினைக்கிறேன். 

 மேலே உள்ளது பெட்ரோல் விலை ஏற்றத்தின் போது கேட்ட கேள்வி! இப்படியும் கேட்கிறாங்க!அதே சமயம் எண்ணெய்க் கிணறுகள் தோண்டி இயற்கை எரிவாயு எடுக்கணும்னா அதுக்குத் தடையும் போடறாங்க. போராடக் கிளம்பிடறாங்க!   அப்போ என்னதான் செய்யணும்? பெட்ரோல், டீசலுக்கான விலையும் குறைக்கணும். அதே சமயம் உள்நாட்டில் கிடைக்கிறதையும் எடுக்க விட மாட்டோம்!  ஏனெனில் நாங்கள் மண்ணின் மைந்தர்கள்! :( பின்னாடி வந்தா உதைப்போம். முன்னாடி வந்தா கடிப்போம்! எந்த வழிக்கும் போக விடமாட்டோம்!

10 comments:

  1. எனக்கு இதைப்பற்றிய அறிவு இல்லை. நல்லதா, கெட்டதா என்று சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே குழப்பமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம்ம், இதைப் பற்றிப் பலரும் சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே போராடுகின்றனர்! :(

      Delete
  2. போதாக்குறைக்கு இல கணேசன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒரு நாட்டின் நன்மைக்காக ஒரு மாநிலத்தை இழந்தால் தவறில்லை என்று பேசி பீதியூட்டியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. இல.கணேசன் பேசத் தெரியாமல் பேசி இருக்கார் போல! :(

      Delete
  3. ஒன்றின்மீது ஒன்றாக பல சுமைகளை தமிழகத்தின்மீது வைக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் கிடைக்கும் தாதுக்களே மிகக் குறைவு! ஆகவே இதிலே சுமைகளை வைப்பது எங்கிருந்து வருகிறது ஐயா?

      Delete
  4. ரொம்ப கன்வின்சிங்காத் தெரியலை. பெட்ரோல் விலையெல்லாம் எங்கயோ போயிடுச்சு. எடுக்கற இயற்கை வளமெல்லாம் மக்களுக்குப் பயன்தர மாதிரித் தெரியலை. காவிரித் தண்ணீருக்கு வழியைக் காணோம். இந்த காண்ட்ராக்ட் எடுக்கறவங்க பின்புலம் சரியில்லை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் கான்ட்ராக்ட் எடுக்கிறவங்க சரியில்லை என்பதற்காகத் திட்டத்தையே எதிர்ப்பதா? அதோடு எதுக்கெடுத்தாலும் பிரதமரைக் குற்றம் சாட்டுவதா?

      Delete
  5. துர்க் மெனிஸ்தானில் தோண்டப்பட்ட எரிவாயுக்கிணறு 40 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருப்பதாக தஞ்சையம்பதியாரின் வலையில் படித்தேன் ஸ்ரீராம் சொன்னது போல் விவரங்கள் போதவில்லை. எனக்கு ஒரு திரைப்படத்தில் நாகேஷ் ஒரு விளாக்கு எரிவதைப் பார்த்தாலும் எங்கும் தீ பற்றி எரிவதுபோல் தோன்றி அழுவார் ஏனோஅது நினைவுக்கு வருகிறது ஆனால் இது மோதிக்கு எதிரானது என்று நீங்கள் நினைப்பதை ஏற்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புள்ளி விபரங்களைத் தருகிறார்கள். உண்மையான நிலை யாருக்கும் தெரியவில்லை! மற்றபடி மத்திய அரசு மாநில அரசின் அனுமதி இல்லாமல் எதையும் இந்த மாநிலத்துக்குள் கொண்டு வர முடியாது. அப்படிக் கொண்டு வர முடிந்திருந்தால் எப்போதோ நவோதயா வித்யாலயாக்கள் வந்திருக்கலாம். கிராமப் புற மாணவர்களும் பயன் அடைந்திருக்கலாம்.

      Delete