எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 15, 2017

அலுப்புத் தட்டும் அமெரிக்க வாழ்க்கை! :)

இங்கே அம்பேரிக்காவின்  கிழக்கு மாநிலங்கள், மத்திய மாநிலங்களில் நேரம் மாற்றி அமைச்சிருக்காங்க. மலைப் பிரதேச மாநிலங்களின் நேரம் மாற்றப் படாது என நண்பர் அரிசோனா மஹாதேவன் அவர்கள் சொன்னார். எங்களுக்கெல்லாம் ஒரு மணி நேரம் முன்னால் தள்ளி அமைச்சிருக்காங்க. சனிக்கிழமை  இரவு பனிரண்டு மணிக்குப் பின்னர் மாற்றி வைக்கிறாங்க னு நினைக்கிறேன்.  நேற்றிலிருந்து ஒரு மணி நேரம் குறைந்து விட்டது. சனிக்கிழமை வரை காலை நாலு மணி என்பது நேற்றிலிருந்து காலை ஐந்து மணி ஆகி விட்டது! இப்போ சாயந்திரம் ஏழேகால் மணி! ஆனால் ஐந்து மணி மாதிரி வெளிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சம்! சூரியன் இன்னமும் மறையலை. சூரியனார் யோசிக்கிறார்.

இங்கே பாப்பாவோட விளையாடுவது தவிர வேறே பொழுது போக்கு வைச்சுக்கலை. எங்கேயும் போகவும் இல்லை! கொஞ்சம் குழப்பமான மனோநிலை!  சில எதிர்பாரா சம்பவங்கள்! நிகழ்வுகள்! அதனால் ஏற்பட்டிருக்கும் குழப்பம். மெல்ல மெல்லச் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். விரைவில் இந்தியா திரும்பணும்னு தான் ஆசை! ஆனால் அது முடியவில்லை! கோயில்கள் எதற்கும் போகலை!  போக முடியலை! நண்பர் ஒருவர் வந்திருக்கார். அவரைப் போய்ப் பார்க்கக் கூட முடியலை. :( இன்னைக்குக் காரடையான் நோன்பு இங்கே செய்தாச்சு! இந்திய நேரப்படி மாலை இரண்டரை மணிக்குள் என்றால் இங்கே காலை நான்கு மணிக்குச் செய்யணும்னே நினைக்கிறேன். ஆனால் இங்கேயும் செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டரைக்குத் தான் செய்தேன். அப்போ  இந்திய நேரப்படி அங்கே நடு இரவு தாண்டி ஒரு மணி இருக்கும். எல்லோரும் தூங்கிட்டு இருந்திருப்பீங்க!

இந்த நேரமாற்றம் இந்தியாவில் இல்லை. பார்க்கப் போனால் வடகிழக்கு மாநிலங்களிலும் வடமேற்கு மாநிலங்களிலும் இந்த நேர மாற்றத்தைக் கடைப்பிடிக்கலாமோனு தோணும் . ஒரிசா, கல்கத்தா போயிருக்கிறச்சே பார்த்தோம்.  சாயந்திரம் நான்கு மணிக்கே மாலை மயங்கி இருட்டாயிடும்! :) மாலை ஆறு மணிக்கு இரவு எட்டு, ஒன்பது மணி மாதிரி இருக்கும். காலம்பரயும் சீக்கிரம் விடியும்!இங்கே அம்பேரிக்காவில்  இந்த ராகு காலம், எமகண்டம் எல்லாம் இந்திய நேரப்படித் தான் கடைப்பிடிக்கணும்னு பையர் சொல்லுவார். அம்பேரிக்காவில் அதெல்லாம் பார்க்க வேண்டாம்னு அவரோட கருத்து. இந்திய நேரப்படித் தான் அதெல்லாம் பார்க்கணும்னு சொல்வார். ஆகவே இதெல்லாம் இந்தியாவோட விட்டுடுங்க என்பார். ஆனால் நம்ம ரங்க்ஸ் இதிலெல்லாம் ரொம்பவே நோண்டிட்டு இருப்பார். குளிக்கப் போறச்சே கூட ராகுகாலம், யமகண்டம், மட்டும் பார்க்காமல் இந்தியப் பிரதமர் மோதியால் ஒண்ணும் பிரச்னை இல்லையே னு எல்லாமும் பார்த்துட்டுத் தான் போவார்.

என்னவோ அமெரிக்க வாழ்க்கை ரொம்பவுமே இயந்திரத்தனமாக இருப்பதாகத் தோன்றுகிறது. நம்ம நாட்டில் மாதிரி ஒரு ருசிகரமான வாழ்க்கை இங்கே இல்லை. எல்லா ஊர்களும் ஒரே மாதிரியாக வேறே காட்சி தருகின்றன. வீடுகளும் அப்படியே! நம்ம ஊரில் ஒரு வீடு உயரம்னா பக்கத்திலே குட்டையான ஓர் வீடோ, அகலமான வீடோ, அடுக்குமாடிக் கட்டிடமோ பார்க்கலாம். இங்கே அப்படி இல்லை. கவனித்துக் கவனித்துச் செதுக்கிய புல்வெளிகளோடு கூடிய வீடுகள். ஒரே மாதிரி வடிவமைப்புகள். உள்ளே வேண்டுமானால் வித்தியாசங்கள் இருக்கலாம். மற்றபடி ஒரே மாதிரிக் கட்டமைப்புத் தான்!  சுவரெல்லாம் கையால் தட்டினால் உதிர்ந்து விடும்போல் இருக்கும்.

  ஒரு தெருவில் ஒரு வீடு மாதிரியே அநேகமாய் எல்லா வீடுகளும் இருக்கும். ஒரு சில வீடுகளில் மாற்றம் இருக்கலாம். ஆனால் என்ன ஒன்றுன்னா ஒவ்வொரு குடியிருப்புக்களிலும் ஓர் ஏரி அமைச்சுடறாங்க. அதில் வாத்துக்கள், நீர் வாழ்ப்பறவைகள் வந்து விடுகின்றன. அந்த ஏரிக்கரையைச் சுற்றி வீடுகள் அமைக்கிறாங்க. சில வீடுகள் வாசலில் ஏரியைப் பார்த்தாப்போல் இருந்தால் ஒரு சில வீடுகள் பின் பக்கம் ஏரியைப் பார்த்து அமையும். அங்கே உட்கார்ந்து ஏரியை ரசிக்கிறாப்போல் நாற்காலிகள், பெஞ்சுகள் அமைக்கப்பட்டிருக்கும். நாங்க தினமும் நடைப்பயிற்சிக்குப் போகும்போதெல்லாம் அந்த ஏரிக்கரையில் சுற்றிவிட்டுச் சிறிது நேரம் உட்கார்ந்துட்டு வரோம்.

பண்டிகைகள் என்றெல்லாம் இங்கே இல்லாததால் காதலர் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம், கணவர் தினம், மனைவியர் தினம் என்று கொண்டாடுகிறார்கள். நம்ம பண்டிகைகள் எல்லாமும் சனி, ஞாயிறுகளில் தான். நேற்றுத் திங்கட்கிழமை ஹோலி கொண்டாட்டம் இங்குள்ள இந்தியர்களால் முதல் நாள் ஞாயிறன்றே கொண்டாடப்பட்டு விட்டது.  இதற்கு முன்னர் வந்தப்போ எல்லாம் அங்கே இங்கே போனதாலோ என்னமோ நேரம் போவது அவ்வளவு சிரமமாக இல்லை. அதோடு மீனாக்ஷி கோயில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் நிறைய எடுத்து வருவோம். இம்முறை எதுவும் இல்லை! :) கோயிலுக்கே போக முடியாத சூழ்நிலை!

45 comments:

  1. என்ன ஒரே புலம்பல்ஸ் ஒப்பி அமெரிக்கா! பக்கத்திலேயே ஏரி இருந்தால் கொசு வராதோ! அங்கே கொசு எப்படி? நேரத்தை மாற்றி அமைத்தால் குழம்பாதோ!

    இணையத்தில் புத்தகம் படியுங்கள். வாட்ஸாப்பில் ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, வாழ்க்கையில் "ரசம்" வேண்டாமோ! :) கொசுனு தெரியலை. ஆனால் அது மாதிரி ஒண்ணு இங்கே இருக்கு. கொஞ்சம் பெரிய சைஸ்! ஒரத்தநாடு கார்த்திக் தானே! அங்கேருந்து தானே சுஜாதா புத்தகங்களெல்லாம் பழைய மடிக்கணினியில் தரவிறக்கிக் கொண்டேன். :)

      Delete
    2. http://www.tamilnannool.com/tamil-novels இந்தச் சுட்டியிலேயும் கிடைக்கின்றன. இது இங்கே உள்ள இளைய சிநேகிதி முகநூலில் பகிர்ந்த சுட்டி.

      Delete

  2. //குளிக்கப் போறச்சே கூட ராகுகாலம், யமகண்டம், மட்டும் பார்க்காமல் இந்தியப் பிரதமர் மோதியால் ஒண்ணும் பிரச்னை இல்லையே னு எல்லாமும் பார்த்துட்டுத் தான் போவார்.//

    ஹா...... ஹா..... ஹா....

    ReplyDelete
  3. சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வராது தான் அம்மா...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் டிடி!

      Delete
  4. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா ?

    மனக்குழப்பம் விரைவில் நீங்கும் வாழ்க நலம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. இந்த டே லைட் ஸேவிங்ஸ் எனக்குப் பிடிக்காத ஒன்னு.... ப்ச் :-( இன்னும் ரெண்டரை வாரம் பல்லைக் கடிக்கணும்.

    நம்மூரில் முந்தியெல்லாம் அவ்வளவா ஒரே மாதிரி வீடுகள் இல்லை. இப்பப் புதுசா பெருகிவரும் குடியிருப்புகளில் இப்படி ஆரம்பிச்சுருக்காங்க.

    நம்ம தெருவில் நம்ம வீடு தனிப்பட்டுத் தெரியும்! வாசல் முகப்பில் புள்ளையார் இருக்கார் :-)

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரில் குடியிருப்புக்களே வித்தியாசமாத் தானே இருக்கு! மற்றபடி நான் எங்கே நியூசி வந்து உங்க வீட்டைப் பார்க்கிறது! பிள்ளையார்னு சொல்லிட்டீங்க. படம் பிடிச்சுப் போடுங்க, பார்த்துக்கறேன்.

      Delete
    2. இந்த மாதிரி வீடுகளைப் பார்த்தால் நமது கிராமப்புர வீடுகள் மாதிரி வெளிப்புறத் தோற்றம் கொண்டிருப்பதை நீங்கள் உணரவில்லையா?..

      //நம்ம நாட்டில் மாதிரி ஒரு ருசிகரமான வாழ்க்கை இங்கே இல்லை. //

      இங்கே என்ன ருசிகரமோ? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

      Delete
    3. இந்தியாவில் இல்லாத ருசிகரமா? இங்கே என்ன இருக்கு? கிராமப்புற வீடுகள் மாதிரித் தோற்றம் அளிக்கிறது என்றா சொல்கிறீர்கள்? அது எங்கே? இவை எங்கே? :)

      Delete
  6. இந்தியா Colourful தான். எல்லா எமோஷன்ஸ் ம் உள்ளடங்கிய அனுபவங்கள் அங்க மட்டும் தான் கிடைக்கும் சில சமயங்களில் கோவம் எரிச்சல் irritable ஆ வந்தாலும் மொத்தத்துல comedy தான் .ஓசை, அசைவுகளிலேயே பழக்கப்பட்ட வாழ்க்கை. பக்கத்து வீட்டு டிவி தண்ணி லாரி சத்தம், சித்தாள் , கட்டிட வேலை சத்தம்னு கல காலா தான். அந்த மாதிரி ஒருவாரம் இருந்தாலும் அதை மிஸ் தான் பண்ணுவோம் நாங்க. அப்புறம் இந்த அமைதி பழகிடும் ஆரம்பத்தில் கஷ்டமா இருந்தாலும். மேஜர் disadvantage dependency and transport . நம்ப ஊர்ல auto பிடிச்சோமா போனோமான்னு எல்லாமே நாமளா செஞ்சு பழகிட்டா புது இடத்துல வீட்டுக்குள்ளேயே இருக்கற மாதிரி தோணும் ,எனக்கு இந்தியா வந்தா இதே problem உங்களுக்கு ஸ்டேட்ஸ் ல மாதிரி. உங்க குழப்பங்கள் எல்லாம் சரியாகி எல்லாரும் நன்னா சந்தோஷமா இருக்க சாமியை வேண்டிக்கறேன். குட்டிப்பாப்பா பிள்ளை வழி பேத்தியா பேரனா? பேர் என்ன?

    ReplyDelete
    Replies
    1. பையருக்குத் தான் பதினோரு வருஷம் கழிச்சுப் பெண் குழந்தை பிறந்திருக்கா! பெயர் துர்கா! கொட்டம் அடிக்கிறது! மற்றபடி நீங்க சொன்னாப்போல் தான் அரிசோனா நண்பர் இந்தியாவில் எங்களுக்குப் பிரச்னையா இருக்குனு சொன்னார். :))) 30 வருஷமா அமெரிக்க வாழ்க்கை அவருக்கு! :)

      Delete
  7. ஐரோப்பிய அமெரிக்கர்கள், கிறிஸ்மஸ் தான் பிரதான பண்டிகையாக தெருவெல்லாம் அலங்கரித்து கொண்டாடுவார்கள். ஐரோப்பிய,அமெரிக்க தேசங்களுக்கு பயணப்படும் பலரின் ஆதங்கம் இது. இது ஆரம்பம் தான், அங்கே தான் நிலையாக வசிக்க வேண்டும் என செல்லும் இளையோர் இந்த மனனிலையை சீக்கிரம் தாண்டி விடுவார்கள். ஊர் செல்ல வேண்டும் என தற்காலிகமாக செல்வோர் எப்போது ஊர் திரும்புவோம் என ஏங்கிக்கொண்டிருப்பார்கள்.

    அடுத்த வீட்டில் குடியிருப்பவர் யார் என 18 வருடஃங்களாக ஒரே வீட்டில் குடியிருக்கும் எங்களுக்கே தெரியாதுமா. அடுத்த வீட்டில் துக்கம் நடந்தாலும் தெரியாது. அது தான் வெளி நாட்டு வாழ்க்கை. ஒரு தடவை வெளியில் சென்று வாருங்கள், மனம் மற்றும் உடல் நிலை சரியாகி விடும், தனியே இருப்ப்தும் கூட கஷ்டமாக இருக்கும்.

    வீடுகள் கட்டும் அனுமதி கொடுக்கும் போதே குறிப்பிட்ட பகுதியில் இப்படித்தான் வெளித்தோற்றம் அமைய வேண்டும் எனும் சட்டங்கள் இங்கே கட்டாயமாக்கப்பட்டவை, நம் இஷ்டத்துக்கு நெட்டையாக குட்டையாக கட்ட முடியாது, மேலே வானத்திலிருந்தும் கீழே பூமியிலிருந்தும் பார்க்கும் போது அமைக்கப்பட்ட நகர் பார்வைக்கு எப்படி இருக்க வேண்டும் என தீர்மானித்து திட்டமிட்டு வடிவமைக்கின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இளைஞர்களிலும் சிலருக்குப் பிடிப்பதில்லை என்றே தோன்றுகிறது நிஷா! மற்றபடி வீடுகள் கட்டும் அனுமதி எல்லாம் மிகச் சரியாகக் கடைப்பிடிக்கிறார்கள். முதலில் தண்ணீர், மின்சாரம், மற்ற வசதிகளைச் செய்துவிட்டு முறையாகச் சாலைகள் போடப்பட்டே பின்னர் வீடுகள் கட்ட நிலம் பிரிக்கின்றனர். எங்கெங்கே கடைகள் வரணும்னு முன் கூட்டியே தீர்மானிக்கிறார்கள். மற்றபடி எங்களுக்கும் பக்கத்து வீட்டில் யார் இருக்காங்கனு தெரியாது தான். ஆனால் பெண் இருக்கும் கேடியில் கொஞ்சம் பரவாயில்லை. அக்கம்பக்கம் பழகிக்கறாங்க!

      Delete
  8. இந்த ராகுகாலம் போன்றவை ஊருக்கு ஊர் வேறுபடுமா என்று கேட்டு ஒரு பதிவு எழுதி இருந்தேன் அதன் பின்னூட்டத்தில் இவை சூரியனின் பொசிஷனால் தீர்மானிக்கப் படுவதாக இருந்த நினைவு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், விண்ணில் சூரிய மண்டலத்தின் பாதையைக் கணக்கிட்டுத் தான் தீர்மானிக்கணும்னு நினைக்கிறேன்.

      Delete
  9. இன்று முதல் நானும் இந்தச் சூழலில்.

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு. உங்கள் பொழுது நன்றாகவும் இனிமையாகவும் கழிந்து நிதானமாக எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்க வாழ்த்துகள்.

      Delete
  10. ஏன் பையரும் அங்கேதான். கிளீவ்லேண்ட். Islander Apartments, Islander lake கூகிள் பண்ணிப்பாருங்கள். அக்கம் பக்கம் தமிழ் தெலுங்கு மலையாளம் குஜராத்தி ஆட்கள் நிறைய உள்ளனர். சிவா விஷ்ணு கோயில், வெங்கடேஸ்வரா கோயில், சாமிநாராயன் கோயில் என்று கோயில்கள் உள்ளன.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நாங்க இருப்பது ஷுகர்லான்ட்! பொண்ணு இருப்பது கேடி! கோயில்கள் நிறைய உள்ளன என்பது தெரியும். ஹூஸ்டனுக்கு இதோடு நான்காம் முறையாக வந்திருக்கேன். முதல் முறை வந்தப்போ ஸ்வாமிநாராயண் கோயிலில் தமிழ்நாட்டுச் சிற்பிகள், ஸ்தபதிகள் வேலை செய்வதைப் பார்த்திருக்கேன். :)

      Delete
  11. அலுப்புத் தட்டுவது அமெரிக்க வாழ்க்கையில்லை கீதா மேடம். எதுவுமே நம்ம இடமா இருக்கும்போதுதான் நாம எல்லாத்தையும் சமாளிக்கமுடியும். ஸ்ரீரங்கம்னா, நீங்க பண்ணறது, வெளில போறது எல்லாமே நீங்களே செய்யலாம். சமையல் அறையிலும் முழு சார்ஜ் எடுத்துக்குவீங்க. இதுவே உறவினர் வீட்டில் (தமிழ்'நாட்டிலேயே) கொஞ்சகாலம் இருக்கும்போது அலுப்பாகவும் போரடிக்கவும் செய்யும். அங்க, நீங்களா வெளி இடங்களுக்குப் போகமுடியாதுங்கறதுனாலயும், depend பண்ணி இருக்கணும்கறதுனாலயும் அலுப்பா இருக்குன்னு நினைக்கறேன். நல்லா ரெஸ்ட் கிடைச்சுதுன்னு இருங்க. இங்க வந்தபின் எல்லா வேலையும் இருக்கத்தானே செய்யும்.

    ராகுகாலம், சூரிய உதயத்தைப் பொறுத்தது. அதனால் கடைபிடிப்பவர்கள் எல்லா நாட்டிலேயும் கடைபிடிக்கலாம். இந்த மாதிரி நம்பிக்கைகளைத் தொடர ஆரம்பித்துவிட்டால், ஒருவேளை ஒரு காரியத்தை ராகு காலத்தில் ஆரம்பிக்க வேண்டிவந்துவிட்டால், மனது 'பக்..பக்'னு அடிச்சுக்கும். அதுதான் இந்த மாதிரி நம்பிக்கைகள்ல உள்ள பிரச்சனை. உங்களுக்குத் தெரியுமா MOTHER SAW FATHER WEARING THE TURBAN ON SUNDAY - இதுல ஆரம்ப எழுத்தை வைத்து ராகுகாலத்தைக் கண்டுபிடிக்கலாம். ராகுகாலம் 1 1/2 மணி, 7.30க்கு ஆரம்பிக்கும்.

    நோன்பு குழக்கட்டை படம்தான் காணோம். மற்றபடி இயற்கைக் காட்சிகள் ரொம்ப நல்லா இருக்கு. பெஞ்சிலேயிருந்து எடுத்தது போலிருக்கு.

    ReplyDelete
    Replies
    1. @நெல்லைத் தமிழன்! இங்கேயும் சமையலறை சார்ஜ் என் கிட்டேத் தான். எங்கே போனாலும் நான் கேட்காமலேயே வந்துடும். ஹிஹிஹி! மற்றபடி ஒரு கருகப்பிலை வேணும்னாக் கூடப் பையர் சனி,ஞாயிறு இந்தியன் கடைகளுக்குச் சென்று வாங்கி வந்தால் உண்டு. ஆனால் வாழைப்பூ, முருங்கைக்காய்(ஃப்ரோசன்), பூஷணிக்காயிலிருந்து எல்லாமும் கிடைக்கத் தான் கிடைக்கிறது. நோன்புக்குக் குழக்கட்டை செய்யலை! அதான் படம் போடலை! கேசரி தான் பண்ணி நிவேதனம் செய்தேன். :)

      Delete
    2. ஹிஹிஹி, ஆமாம், பெஞ்சிலே உட்கார்ந்து தான் படம் எடுத்தேன். எப்படிக் கண்டு பிடிச்சீங்க? ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராஃபர் போல! :)))))

      Delete
    3. இதுக்கு ப்ரொஃபஷனல் போட்டோகிராபராக இருக்கவேண்டியதில்லை. பக்கத்துல பேன்ட்,ஷர்ட்டோட தெரியறது சாம்பசிவம் சார்தானே. கோஞ்சம் நீர்நிலை பக்கத்துல போய் படம் எடுத்திருந்தால் என்னவாம்?

      Delete
    4. நீர்நிலை பக்கம் போக முடியாது. கரை+பாதையிலிருந்து ஒரே சரிவாகப் போகும். புல் தரை தான் என்றாலும் ஆங்காங்கே ஸ்ப்ரிங்க்ளர்ஸ் இருப்பதால் தண்ணீர் போய்க் கொண்டு இருக்கும். வழுக்கும்! அப்புறமா ஏரியிலே போய் விழணும்! :)

      Delete
  12. எனக்கென்னமோ இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிக வித்தியாசம் இல்லைன்னுதான் தோணுது.Flat வாழ்க்கையில் அங்கேயும்தான் அடுத்த வீட்டில் இருப்பவர் யார் என்று தெரியாமல் போகிறது. (2) ஒரே வித்தியாசம், இங்க யாரும் ஒங்களை 'என்ன ஊரு எப்ப வந்தேங்க'ன்னு விசாரிக்கமாட்டங்க.வெறும் 'ஹாய்' சொல்ரதொட சரி. (3) நியூஜெர்சி வாங்களேன், பையன், பொண் எல்லாம் இங்க தான்..

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார், நீங்களும் ஹூஸ்டன் வாங்க! அங்கே ஶ்ரீரங்கத்தில் இன்னும் அந்த அளவுக்குப் போகலை! கொஞ்சம் உயிர்ப்பு இருக்கத் தான் செய்கிறது.

      Delete
  13. நெ.த! குழக்கட்டை இல்லை. அடைதான். அதுவும் காராமணி உபயோகத்தில் குட்டி குட்டியாக
    வெல்ல அடை, உப்பு அடை என்று ரெண்டு வெரைட்டி. தொட்டுக்கொள்ள ஆவின் வெண்ணை விழுது. அடையில் கொஞ்சம் விண்டு, வெண்ணி விழுதில் அப்படியே அழுத்தித் தோய்த்து எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் என்ன ருசி என்கிறீர்கள்?..

    பாவம், சாவித்திரி. சத்தியவானுக்காக நோன்பு நோற்றாளாம். காட்டில் கிடைத்த காராமணி. இவ்வளவு ருசி எங்கே கிடைத்திருக்கும்?.. கிடைத்திருந்தாலும் நோன்புக்கு அர்த்தம் இல்லாமல் போயிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், தென்மாவட்டங்களில் முக்கியமாய் மதுரை, திருநெல்வேலிக்காரஙக் கொழுக்கட்டைனு தான் சொல்வோம். தஞ்சை ஜில்லாவில் தான் அடை என்பார்கள்! மற்றபடி இந்த அடையை தினசரி டிஃபனுக்குக் கூடச் செய்து சாப்பிடலாம். :)

      Delete
    2. ஜீ.வி சார்.. இந்தப் பெயர்கள் வட்டாரத்துக்கு வட்டாரம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடும். நோன்புக் குழக்கட்டைனு காரடையான் நோன்பு திதிப்பு தட்டையான குழக்கட்டையைத்தான் சொல்லுவோம். எங்க அம்மா எல்லாம் பண்ணிணப்பறம் முதல்ல பசுமாட்டுக்குக் கொடுத்துட்டுவரச் சொல்லி என்னை அனுப்புவா. அப்புறம்தான் வெண்ணையோட எங்களுக்கு. உப்புக் குழக்கட்டை எங்கம்மா பண்ணினமாதிரி ஞாபகமில்லை.

      பூரணம் வச்சுப் பண்ணற பிள்ளையார் குழக்கட்டை எங்கள் இல்லத்தில் கிடையாது. அதை 9ம் வகுப்புவரை சாப்பிட்டதுகூடக் கிடையாது.

      "இங்க என்ன ருசிகரமோ" - என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. இங்க கொசு, சப்தம் அறவே கிடையாது. மின்வெட்டை 25 வருடங்களாக அனுபவித்ததே இல்லை. வெய்யில், மழை, குளிர் என்ற எந்தத் தொல்லைக்கும் எளிய நிவாரணம் (எப்போதும் ஓடும் குளிர்சாதனம்). நடக்கற தூரத்தில் சைவ உணவகங்கள் பல. நம்ம ஊர்மாதிரி அலைய வேண்டாம், ஆள் எந்திரிக்க (இலையைவிட்டு) கால்கடுக்க நிற்கவேண்டாம். ஆனாலும் இந்தியா, தமிழ்நாடு வரும்போது அங்கு காண்பவைகளையெல்லாம் மிஸ் பண்ணற மாதிரியே தோணும். உதாரணத்துக்கு, எப்படிப்பட்ட செல்வச் செழிப்பில் புகுந்த வீட்டில் இருந்தாலும் பெற்றோர் வீட்டுக்கு வரும் பெண், அங்கு அனுபவிக்கிற நிம்மதி, சுதந்திரம் போன்று (உதாரணம் சரியா கீதா மேடம்)

      Delete
    3. நெல்லைத் தமிழன் சொல்றாப்போல் தித்திப்பு மட்டும் தான் என் அம்மாவும், பெரியம்மா போன்றவர்களும் செய்வார்கள். மாவு கை இயந்திரத்தில் திரித்துப் பண்ணுவார்கள். உப்புக் கொழுக்கட்டையே எனக்குக் கல்யாணம் ஆகி வந்து மாமியார் பண்ணித் தான் தெரியும். அதே போல் திருநெல்வேலிப் பக்கம் பூரணக் கொழுக்கட்டை எல்லா வீடுகளிலும் செய்ய மாட்டாங்க! என்னோட தாய்மாமாக்கள் நான்கு பேரின் மனைவிமார்களும் முறையே திருச்செந்தூர், கல்லிடைக்குறிச்சி, ஏர்வாடி, திருநெல்வேலி என்பதாலும், தம்பி மனைவி கல்லிடைக்குறிச்சி என்பதாலும் எனக்குத் திருநெல்வேலிப் பழக்கங்கள் ஓரளவுக்கு அத்துப்படி!

      Delete
    4. நெல்லைத் தமிழன், பிறந்த வீட்டுக்குப் பெண் வந்தாலும் அங்கே அம்மா என்றொருத்தி இருந்தால் தான் அவளுக்கு எல்லா மரியாதையும்! :) அண்ணா, தம்பிகள் என்னதான் நல்லாப் பார்த்துக் கொண்டாலும் அம்மாவின் கவனிப்பு தனி தான்!

      Delete
    5. ஆமாம் தாய் தந்தையர்போல் வராது் சகோதர்ர்களுக்கும் வேறிடத்துப் பெண்கள் அமைந்துவிடுவதால் தாய் தந்தை இருக்கும்போது தன் வீட்டுக்கு வருவதுபோல் இருக்காது (தந்தை பொருட்களை வாங்கிவர, தாய் சமைத்துப் போட, அங்குதான் பெண் அக்கடான்னு இருக்கலாம்)

      Delete
  14. சூழலுக்கு தகுந்தார் போல் அனுசரித்து, அரவணைத்துச் செல்லுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்!.. எல்லாம் விரைவில் சரியாகி, பழையபடி நிம்மதியும், நல்ல ஆரோக்கியமும் தங்களுக்கு ஏற்பட வேண்டி, பிரார்த்தித்துக் கொள்ளுகிறேன்!.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி பல மாதங்கள் கழித்து வருகை தந்தமைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  15. இதுவும் கடந்து போகும். ஓய்வெடுக்க ஒரு வாய்ப்பாக நினைத்துக் கொள்ளுங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட், ஒரே ஓய்வானாலும் அலுப்பாகத் தான் ஆயிடுது! :)

      Delete
  16. வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு வலைப்பக்கம் ஒதுங்கினால், அலுப்பூட்டும் அமெரிக்க வாழ்க்கை என்று புலம்புகிறீர்கள்...! சுத்தமான காற்று, தண்ணீர், அமைதி.. எல்லாம் இருக்கும் ஆனாலும் நம் ஆற்றில் இருக்கும் உயிர்ப்பு இருக்காது என்பது உண்மைதான்.

    போகட்டும், இந்த நாக்கு கசப்பிற்கு என்ன செய்யலாம்?

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரிலே இல்லாத மருந்தா? வாய்க்கசப்புக்கு மணத்தக்காளி வற்றலை நெய்யில் வறுத்துப் பொடி செய்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது மணத்தக்காளிக்கீரையையே பொடியாக நறுக்கி நெய்யில் சின்ன வெங்காயத்துடன் உப்பு, மிளகுத் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கிச் சூடான சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடலாம். நெல்லி வற்றலும் நல்லது. நெல்லி வற்றலைத் தூள் செய்து குளிர்ச்சியான தண்ணீரில், (குளிர்சாதனப் பெட்டியில் வைத்த நீர் அல்ல) கலந்து கொண்டு (குறைந்தது ஐந்து கிராம் பொடி! ஒரு டீஸ்பூன்) காலை, மாலை உணவுக்குப் பின்னர் சாப்பிடலாம். துளசி கிடைத்தால் அதைக் கஷாயமாகச் செய்தும் சாப்பிடலாம். நிறைய மாதுளம்பழம் சாப்பிடுங்கள்! ஜூஸாகச் சாப்பிடுவதை விட மாதுளை முத்துக்களாகச் சாப்பிட்டால் வாயில் ருசி மாறுவதை நீங்களே உணர்வீர்கள்! வாழைப்பூவும் நல்லது.

      Delete
    2. சுண்டைக்காய் வற்றல், மிதுக்கவற்றல், மணத்தக்காளி வற்றல், சுக்கு, இந்துப்பு, பெருங்காயம், ஓமம் இவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் காய்ந்த வேப்பம்பூவுடன் சேர்த்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இம்மாதிரி ஜுரம் அல்லது வயிற்றுக் கோளாறு எனில் இந்தப் பொடியைச் சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெயுடன் கலந்து இரண்டு வாய் சாப்பிட்டுவிட்டு உங்கள் வழக்கமான சாப்பாடைச் சாப்பிடவும். இந்தப் பொடி கைவசம் இருந்தால் நல்லது. வாரம் ஒரு முறை சாப்பிட்டு வர வயிறு தானே சுத்தமாகும்!

      Delete
    3. சுத்தமான காற்று, அமைதி எல்லாமும் இருக்குத் தான்! தண்ணீர் இங்கேயும் எல்லா ஊர்களிலேயும் நல்ல நீராக இருக்காது. அவங்க அவங்க வீடுகளிலே தண்ணீரை மென்மையாக்கும் கருவிகளைப் பொருத்திடுவாங்க. மெம்பிஸ் (டெனிசி மாநிலம்) தண்ணீர் நன்றாக இருக்கும். மிசிசிபி நதி ஓடுவதால்!

      Delete
  17. குளிக்கப் போறச்சே கூட ராகுகாலம், யமகண்டம், மட்டும் பார்க்காமல் இந்தியப் பிரதமர் மோதியால் ஒண்ணும் பிரச்னை இல்லையே னு எல்லாமும் பார்த்துட்டுத் தான் போவார்.// ஹஹஹஹஹ் ரொமப்வே ரசித்தோம் இந்த வரியை....செம காமெடி!!!

    கீதா: நான் 9மாதங்கள் அமெரிக்காவில் 16 வருடங்களுக்கு முன் இருந்திருக்கிறேன். எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. புது ஊர் என்பதால் ரொம்பவே எஞ்சாய் செய்தேன். ரொம்ப ஊர் சுற்ற வில்லை என்றாலும் அருகே இருந்த இடங்களுக்குச் செல்வதுண்டு. நான் தான் எங்கள் வீட்டு சாரதி என்பதால் வெளியில் சென்று எல்லாம் வாங்குவது என்பதாலும், கணினி வாசிப்பு பையன் அப்போது 7 ஆம் வகுப்பு அங்கு படிக்க நேர்ந்ததாலும் கராத்தெ க்ளாஸ் என்றெல்லாம் இருந்தால் நேரம் எனக்கு சரியாக அதே சமயம் பொழுது போகி பயனுள்ளதாகவும் இருந்தது. நாமே செய்வதாக இருந்தால் அங்கு நன்றாக இருக்கும். நாம் சார்ந்திருக்க வேண்டி வந்தால் கஷ்டம்தான். கொஞ்ச நாள்தானே அக்கா சமாளித்துவிடுங்கள்....நீங்கள் உங்களையே எங்கேஜ பண்ணிக் கொள்பவராயிற்றே!!

    ReplyDelete