எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 16, 2017

குற்றம் 23

"குற்றம் 23" என்னும் படத்தைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. நல்லவேளையா படம் ஆரம்பிச்சுக் கொஞ்ச நிமிடங்களிலேயே பார்க்க உட்கார்ந்துட்டேன். தொடர்ந்து (நான் மட்டும்) பார்த்து முடிச்சேன்.

 குற்றம் 23 திரைவிமர்சனம் க்கான பட முடிவு

நல்ல அருமையான கருத்துள்ள திரைக்கதை. நடிகர்களில் விஜய்குமாரைத் தவிர மத்தவங்களைத் தெரியலையேனு நினைச்சால் உதவி கமிஷனர் "வெற்றி மாறன்" பாத்திரத்தில் நடிச்சிருப்பது விஜய்குமாரின் மகன் அருண் விஜய் என்று பையர் சொன்னார். அபாரமான நடிப்பு! அடக்கமான நடிப்பு! வெகு இயல்பாக உதவிக் கமிஷனராக வாழ்ந்தே காட்டி இருக்கார்னு சொல்லலாம். கதை குழந்தை இல்லாத் தம்பதிகளை வைத்து அமைக்கப்பட்டிருந்தாலும் இதை ஓர் திகில் படமாகவே எடுத்திருக்கிறார்கள். கடைசி வரை விறுவிறுப்பாகவும் இருக்கிறது. கடைசியில் கிளைமாக்ஸில் சண்டைக்காட்சி தேவை இல்லை என்பதோடு அது கதைக்குப் பொருந்தவும் இல்லை என்பது என் கருத்து.

ஒரு சர்ச்சின் பாதிரியார் கொலை வழக்கில் ஆரம்பிக்கிறது கதை! அதைப் பற்றி ஓர் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்துகையில் பிரபல தொழிலதிபரின் மனைவியைக் காணோம்னு போலீஸுக்குப் புகார் வருகிறது. அதைக் குறித்து விசாரிக்கப் போன உதவிக்கமிஷனர் வெற்றி மாறன் பாதிரியார் கொலைக்கும், தொழிலதிபர் மனைவி இறந்ததுக்கும் ஏதோ தொடர்பு இருக்கணும்னு கண்டு பிடிக்கிறார்.  ஆகவே இரண்டு வழக்குகளையும் அவரே விசாரிக்கட்டும் என மேலதிகாரி (விஜயகுமார்) உத்தரவிட அதைத் துப்புத் துலக்கும் வெற்றி மாறனுக்குக் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக வருகிறது. தொழிலதிபரின் மனைவி கர்ப்பமாக இருந்திருக்கிறார். கடைசியில் அவர் பிணம் குப்பைக்கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்படுகிறது.

குழந்தை இல்லாத் தம்பதிகளுக்குச் செயற்கை முறை கருத்தரிப்புச் செய்யும் ஓர் மருத்துவமனை கணவன் ராமகிருஷ்ணன் என்னும் மருத்துவராலும் அவர் மனைவி துளசி என்னும் மருத்துவராலும் நடத்தப்படுகிறது. அந்த மருத்துவமனை நகரிலுள்ள மற்ற மருத்துவமனைகளில் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் குழந்தை இல்லாத் தம்பதிகள் பற்றிய தகவல்களைத் திரட்டுகிறது. இதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளும் வில்லன் (வம்சி கிருஷ்ணாவாமே, யாருங்க அது புதுசா) அந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையில் செய்யும் ஓர் செயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக இறக்கின்றனர். கடைசியில் அங்கே சுத்தி இங்கே சுத்தி நம்ம உதவி கமிஷனரோட அண்ணியும் தூக்குப் போட்டுக் கொள்கிறார். அவர் அண்ணியும் அந்தச் சமயம் மூன்று மாதம் கர்ப்பம்.  இன்னொரு இடத்தில் ஓர் அரசியல் தலைவரின் மருமகளும் கர்ப்பம் தரித்து வளைகாப்புப் போடும்போது கழிவறையில் தற்கொலை செய்து கொள்கிறாள். இந்த மூன்று கொலைக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று வெற்றி மாறனுக்குத் தோன்றுகிறது.

குற்றம் 23 திரைவிமர்சனம் க்கான பட முடிவு

வெற்றிமாறன் முதல் முதல் சர்ச்சில் நடந்த கொலையை விசாரிக்கப் போன இடத்தில் தென்றல் என்னும் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்யும் பெண் இருந்ததால் அவளைச் சந்திக்கச் செல்லும் உதவிக் கமிஷனர் வெற்றிமாறன் நாளாவட்டத்தில் தென்றலைக் காதலிக்கத் தொடங்குகிறார். இது வீட்டுக்கும் தெரிய வருவதால் வெற்றிமாறனின் அண்ணியோடும் தென்றல் (மஹிமாவாம் நடிகை பெயர்) பழகத் தொடங்க, திடீர்னு அண்ணி இறந்ததைப் பற்றி வருந்தும் வெற்றிமாறனிடம் தென்றல் தன் தோழி மூலம் ஓர் உண்மை தெரிந்ததாகச் சொல்கிறார். என்னவென்று கேட்கும் வெற்றிமாறனிடம் அவர் அண்ணனுக்குக் குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி இல்லை என்றும் அவர் அண்ணி வயிற்றில் வளர்ந்து வந்தது அவர் அண்ணாவின் குழந்தை இல்லை என்றும் அண்ணிக்கு வேறு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று சந்தேகப்படுவதாகவும் சொல்கிறார். கோபம் கொண்ட வெற்றிமாறன் தென்றலை அடித்து விடுகிறார். ஆனால் இந்த நூலைப் பிடித்துக் கொண்டு செல்லும் அவருக்குக் கிடைப்பன அதிர்ச்சியான தகவல்கள்.

மருத்துவமனையில் குழந்தை இல்லாத் தம்பதிகளின் பலவீனத்தை எப்படிப் பயன்படுத்திக் கொண்டு அதை வியாபாரம் ஆக்கிக் காசு சம்பாதிக்கிறார்கள் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. குழந்தை பிறக்கவில்லை என்றால் ஓர் தம்பதிகளை இந்த சமூகம்  இப்போதும் நடத்தும் முறையும் அதைத் தீர்க்க வேண்டி கோயில் கோயிலாகவும் ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் ஏறி இறங்கும் தம்பதிகள் பலரையும் குறித்தே இந்தக் கதை அமைப்பு! இவற்றை எல்லாம் அருமையான வசனங்கள் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் கதாசிரியர் அல்லது இயக்குநர் அறிவழகன்!  இயக்குநருக்குப் பாராட்டுகளைச் சொல்லும் கையோடு பாதிரியார் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட சர்ச்சைப் படமாக்கி இருப்பதற்கு ஒளிப்பதிவாளருக்கும் பாராட்டுகள்.

சண்டைக்காட்சியெல்லாம் வெகு இயல்பாக இருக்கின்றன. அதிலும் போக்குவரத்து நெரிசலில் சின்னத்திரைக் கதாநாயகியாக வரும் நீலிமா ராணியையும் அவர் கணவராக நடிப்பவரையும் துரத்தும் காட்சி, அவர்கள் காரில் வில்லனின் ஆள் ஏறிக் கொண்டு பணத்தை எடுத்துச் செல்வது, அவர்களைத் துரத்தியும் பிடிக்க முடியாமல் போவது எல்லாம் மிக அழகாக உயிரோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.  தர்க்கரீதியாக வில்லன் இந்த அடுத்தடுத்த மரணங்களுக்குச் சொல்லும் காரணம் அவ்வளவு அழுத்தமாக இல்லை.  அவன் ஒரு சைகோ என்பதை ஆரம்பத்திலே காட்டவில்லை என்பது படத்தின் வெற்றி என்று சொல்லலாம்.  ஏனெனில் மரணங்களின் காரணம் தெரிந்த பின்னரே வில்லன் படத்தில் நுழைகிறார். அதுவே ஒரு புதுமை!

அருண் விஜய் நடிச்ச எந்தப்படமும் நான் பார்த்ததில்லை என்றே நினைக்கிறேன். இது தான் முதல் படம். ஒரு போலீஸ் அதிகாரிக்குள்ள மிடுக்கு, உடல்கட்டு, நடிப்பு என்றே தோன்றாதவண்ணம் இயல்பாகச் செய்திருப்பது எல்லாம் சேர்ந்து இது அருண் விஜய்க்கு ஓர் வெற்றிப்படம் என்றே தோன்றுகிறது. தென்றலாக வரும் மஹிமா நடிச்சும் எந்தப் படமும் பார்த்ததில்லை. அவரும் வெகு இயல்பாகவே நடித்திருக்கிறார்.  மற்றபடி உறுத்தாத பின்னணி இசை! பாடல்கள் அதிகம் இல்லை. மரத்தைச் சுற்றி வெள்ளைத் தேவதைகளுடன் ஓடியாடும் காதல் காட்சிகள் இல்லை. நேரிடையாகக் கிட்டே இருந்து சம்பவங்களைப் பார்க்கிறாப் போன்ற உணர்வு. அதோடு குற்றம் 23 என்பதும் கதையின் முக்கியக் கருவைச் சுட்டுகிறது.  23 குழந்தைப்பேறில் முக்கிய அங்கம் வகிக்கிறது.  23+23 முக்கியமானது. ஆகவே நன்கு யோசித்துச் சிறிதும் தவறில்லாமல் அருமையாகக் கதையைத் தயாரித்ததோடு  மட்டுமில்லாமல் படத்தையும் எடுத்திருக்கும் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

20 comments:

  1. நீங்க ஒரு படத்தைப் பாராட்டுவதா? அட! அதுவும் தமிழ்ப்படத்தைப் பாராட்டுவதா? அட, அட!!

    விஜயகுமார் மகனுக்கு கெளதம் வாசுதேவ மேனன் மறுவாழ்வளித்தார் - தன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்து..

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கதை சொல்லி இருக்கும் உண்மை அப்படிப்பட்டது. :) கௌதம் வாசுதேவ மேனன்? யாரு? இப்போக் கத்திப்பாராவைப் பூட்டுப் போட்டவரா? :)

      Delete
    2. கீதா மேடம்... அநியாயமா கௌதம் வாசுதேவ் மேனனை (விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற பல நல்ல படங்கள் இயக்கியவர்.. ஒரு சில மோசமான படங்களையும்) இந்த இயக்குனர் கௌதமனோட (ஜல்லிக்கட்டு போன்ற பல போராட்டக்களத்தில் அடிபடுபவர்) சேர்த்துட்டீங்களே...

      Delete
    3. ஹிஹிஹி, சினிமா விஷயத்தில் நான் ஓர் த.கு. எதுவும் தெரியாது. ஜிவாஜி படங்களையோ, எம்ஜார் படங்களையோ பார்க்க நேர்ந்தால் சிப்பு சிப்பா வரும்! :) அப்படியும் ஜிவாஜி படத்தைப் பார்க்கும் தண்டனை கிடைச்சிருக்கு!

      Delete
  2. அருண் விஜய்க்கு வெற்றிப்படம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் நெ.த. ஓடலைனு சொல்லி இருக்காரே!!!!!!!!!!!!!!!!! நல்லபடம்னா ரசிக்க மாட்டாங்க போல! :)

      Delete
  3. ம்ம்ம்.. இந்தப் படம் பார்க்கலாம்னு தோணுது... முடிந்தால் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இங்கே இது recommended film category list ல இருக்கு! :)

      Delete
  4. படம் எப்போ வந்தது, எப்போ போச்சுன்னு தெரியலை. எப்படியோ படத்தைப் பார்த்து (எதில்?) விமரிசனமும் எழுதிட்டீங்க. ரொம்ப டீடெல்யா எழுதியிருக்கறதுனால, அங்க அங்கதான் படிச்சேன். நல்லாருக்குங்கற வார்த்தையைப் பார்த்ததுனால, படத்தைப் பார்த்திடுவோம்னு நினைச்சுட்டேன். நீங்கவேற முழுக்கதையையும் எழுதியிருந்தீங்கன்னா...

    படம் பார்த்துட்டு, உங்கள் விமரிசனத்தை முழுவதுமாப் படிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. படம் வந்து ஒரு மாதத்துக்குள் தான் ஆகிறது. இங்கே இப்போது தான் இந்தப் படம் pay list ல இருந்து வெளியே வந்திருக்கு! :) ரொம்ப விபரம் எல்லாம் கொடுக்கலை. முழுக்கதையையும் சொல்லவும் இல்லை! ஹிஹிஹி, கதைக்கான கரு நல்லா இருக்கு. இப்போதைய சமுதாய சூழ்நிலைக்கு இப்படிப்பட்ட படங்கள் தான் தேவை! அழுத்தமாக எடுத்துச் சொல்லி இருக்காங்க. கடைசியில் கதையில் சொல்லி இருக்கும் முக்கியக் கருத்தை நான் இங்கே சொல்லவே இல்லை. படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளணும்னு விட்டுட்டேன். :)

      Delete
    2. படத்தைப் பார்த்துட்டேன். கிளைமாக்ஸ் தவிர, மற்றபடி படம் நல்லா இருந்தது. மருத்துவமனை, இதனை வியாபாரமாக்கி பல காலம் ஆகிவிட்டது. இதுல வேற, 'நடக்கவில்லைனா நாங்க பொறுப்பு இல்லை' என்று முதலிலேயே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள் (ஜிஜி மருத்துவமனை முதற்கொண்டு). கிட்டத்தட்ட, 'பொறந்தா ஆண்குழந்தைதான்' என்று எல்லாரிடமும் ஜோஸ்யம் சொன்னோம்னா, 50%ஆவது ஆண் குழந்தை பொறக்குமல்லவா. அப்போ, நான் சரியா ஜோஸ்யம் சொன்னேன் என்று சொல்லிக்கொள்ளலாமல்லவா? அப்படி ஆகிவிட்டது இந்த 'குழந்தை produce' செய்யும் மருத்துவமனைகள்.

      Delete
    3. ஆமாம், கிளைமாக்ஸ் தேவையே இல்லை! :( அது தான் இந்தப் படத்தில் சொதப்பல்! மற்றபடி மருத்துவமனைகள் குறித்து நீங்கள் சொல்லி இருப்பது எல்லாம் உண்மையே! :(

      Delete
  5. எப்படியோ எனக்கு விமர்சனம் முழூவதும் படித்ததால் பணம் மிச்சம்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, ஆனாலும் படம் பார்க்கிறது போல் வருமா?

      Delete
  6. நானும் பார்த்தேன் நல்ல படம்க்கா ..அருண் விஜய் இதுக்குமுந்தி பாண்டவர் பூமியில் பார்த்தேன் அதோட இதுதான் அவர் படம் நான் பார்ப்பது ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சலின். அருண்விஜய் நடிக்கிறார், நடிச்சிருக்கார் என்பதே இந்தப் படம் மூலமாய்த் தான் எனக்குத் தெரியும்! :))))

      Delete
  7. லிஸ்டில் இருக்கு...பார்க்கணும்....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பார்த்துடுங்க! :)

      Delete
  8. அருண் நல்ல நடிகர்...ஆனா யாரும் யூஸ் பண்ணிக்கலை அவா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அவர் நடிக்கிறார் என்பதே இந்தப் படத்தின் மூலமாகத் தான் அறிந்தேன்! :)))))

      Delete