மறுபடி ஒரு திப்பிச வேலை. ஞாயிறன்று வந்திருந்த விருந்தாளிகளுக்காக ஆமவடைக்கு அரைத்துத் தட்டி இருந்தேன். வடை மாவு மிஞ்சி விட்டது. திங்கட்கிழமை அன்னிக்கு அதை வெங்காயம் சேர்த்து வடையாகத் தட்டணும்னு நினைச்சுச் செய்யவே முடியலை. தினம் தினம் மாவை எடுத்து வெளியே வைக்கிறதும் திரும்ப உள்ளே வைக்கிறதுமாகச் செய்துட்டு இருந்தேன். கடைசியில் ஒரு வழியா இன்னிக்குக் காலையில் (இங்கே இன்று தான் வியாழன் காலை பத்தே கால் மணி) கொஞ்சம் அரிசியை ஊற வைச்சு அரைச்சு அந்த வடை மாவுடன் சேர்த்துக் கலந்து அடைகளாக வார்த்தேன். ரங்க்ஸுக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டேன்.
இதே போல் உளுந்து வடைக்கு அரைத்த மாவு மிஞ்சினால் அதையும் கோதுமை மாவு, கேழ்வரகு மாவு அல்லது ஏதேனும் சிறுதானிய மாவுகள் சேர்த்து ஒரு கரண்டி அரிசி மாவையும் கலந்து தோசைகளாக வார்த்துடலாம். மூன்று நாட்களாக மண்டையைக் குடைந்து கொண்டிருந்த தலையாய பிரச்னைக்குத் தீர்வு கண்டாச்சு! :))) ஹிஹிஹிஹிஹி! இந்த மொக்கைக்குக் கூட்டம் அள்ளுமே!
படம் என்னமோ இருட்டில் எடுத்தாப்போல் வந்திருக்கு! :)
அடுத்த விமர்சனம் எதிர்பார்த்து... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்(!)
ReplyDeletehaahaahaa
Deleteதங்களுக்கும்
ReplyDeleteஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
நன்றி காசிராஜலிங்கம். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Deleteகுரங்கு பிடிக்க அனுமாராய் வந்ததா!
ReplyDeleteஹாஹாஹா, நன்றாகவே இருந்தது. மொறுமொறு அடை! முதல் முறையாக வெண்ணெய், வெல்லத்துடன் சாப்பிட்டேன். :)
Deleteதிப்பிசச் சமையல்! :) பழசைப் புதுசாக்கறதே பல வீடுகளில் நடக்கிறது! ம்ம்ம்ம்ம்.... நடக்கட்டும் நடக்கட்டும்!
ReplyDeleteஹாஹாஹா, முன்னெல்லாம் சொன்னதில்லை. இப்போச் சொல்றேன். :)
Deleteஎதையும் சாப்பிட ஆள் இருந்தால் .......
ReplyDeleteஅப்படி ஒண்ணும் தூக்கிக் கொட்ட முடிந்த பொருள் இல்லையே! வீணாகி இருந்தால் கட்டாயம் பயன்படுத்த மாட்டோம். ஶ்ரீரங்கத்தில் என்றால் எதிர்வீட்டில் வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் கொடுப்பேன். அல்லது வடைகளை எங்க குடியிருப்பு வளாகத்தின் காவலர்களுக்கு விநியோகம் பண்ணலாம். இங்கே என்ன செய்யறது?
Deleteஹஹஹ....மீ டூ.... இப்படி நிறைய கோல் மால் எல்லாம் பண்ணி நாமகரணம் சூட்டி..அப்பப்ப.. நடக்கும்
ReplyDeleteகீதா....