எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 09, 2017

மறுபடி திரைப்பட விமரிசனமா? ஓடிடறேன்!

இன்னிக்கு திடீரென இணைய இணைப்புப் போய் விட்டது. கைபேசியில் இருக்கு! ரங்க்ஸோட ஐபாடில் வருது! என்னோட மடிக்கணினியில் மட்டும் இல்லை! வாழ்க்கையே வெறுத்துப் போச்சு! அப்புறமா ஒரு வழியாப் பையர் சரி பண்ணிக் கொடுத்தாரோ பிழைச்சேனோ! இரண்டு நாட்கள் முன்னர் தீக்ஷா என்றொரு படம் பார்த்தேன். யு.ஆர். அனந்த மூர்த்தியின் கட ச்ராத்தா கதையைப் படமாக எடுத்திருக்கிறார்கள். National Film Development Corporation தயவில் எடுக்கப்பட்ட படம். படத்தின் ஒவ்வொரு அடியையும் நுணுக்கமாகக் கவனித்துக் கொஞ்சம் கூடக் கால மாற்றம் என்பது அங்கே வராமல் பார்த்துக்கொண்டு நம்மை எல்லாம் 1930க்கு முந்தைய காலத்துக்கே அழைத்துச் சென்று விட்டார்கள்.

கதை சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலம். அப்போதைய காலத்தை மட்டுமில்லாமல் மனிதர்களைச் சித்திரிப்பதிலும் முழு வெற்றி பெற்றிருக்கின்றனர். அந்தக் காலத்து மாந்தர்களின் நடை, உடை, பாவனைகள் இப்படித் தான் இருந்திருக்கும் என்பதில் நமக்குச் சந்தேகமே வருவதில்லை. கதையில் கதாசிரியர் எப்படி வர்ணித்திருப்பாரோ அப்படியே திரைப்படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியக் கதாபாத்திரம் வட கர்நாடகத்தைச் சேர்ந்த ஓர் குருவைப் பற்றியது. அங்கே படிக்கும் மாணாக்கர்களையும், அந்த குருவின் விதவை மகளையும் பற்றியது.
diksha film க்கான பட முடிவு

கோகாவாக நடிக்கும் நானா படேகர்! இயல்பாகச் செய்திருக்கிறார்.

வடகர்நாடக கிராமம் ஒன்றில் குருகுலம் நடத்தி வரும் குரு ஒருத்தரின் விதவை மகள் பால்ய விவாகத்தின் மூலம் விதவையானவள். அவள் மனதைக் கெடுக்கிறான் அந்த குருவைப் பார்க்க வரும் ஒரு பிராமண இளைஞன். அவள் தந்தை வெளியூர் சென்றிருக்கும் சந்தர்ப்பத்தில்  எப்படியோ அவனிடம் மனதையும் உடலையும் பறி கொடுத்து கர்ப்பமும் ஆகும் இளம்பெண் பின்னர் தங்கள் கிராமத்தின் சேரிப்பகுதிக்குச் சென்று அங்கே கர்ப்பத்தைக் கலைக்க அந்தக்கால முறைப்படி வைத்தியமும் செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அவளைக் கெடுக்கும் ஆணோ அவளை ஏற்க மறுக்கிறான்.  விஷயம் தெரிந்து தந்தையை ஊருக்கு வரவழைக்கின்றனர். அந்தப் பெண்ணை பிரஷ்டம் செய்து அவளுக்கு சிராத்தம் செய்து வைக்கும்படி கூறுகின்றனர் ஊரில் உள்ள மற்ற அந்தணர்கள் எல்லோரும். வேறு வழியில்லாமல் தந்தை அப்படியே செய்து விடுகிறார். அவர்களிடம் வேலை செய்யும் கோகா என்னும் வேற்று ஜாதி இளைஞன்  இதைக் கண்டு மனம் வெறுத்துப் போய் விடுகிறான்.  பெண்ணை அழைத்து வராமல் தான் பெருமதிப்பு வைத்திருக்கும் குருவானவர் இப்படிச் செய்கிறாரே  என்பதில் குருவிடம் மட்டுமில்லாமல் அது நாள் வரை தான் நினைத்துக் கொண்டிருந்த சொர்க்கம், மோக்ஷம் என்பதும் மெய்ஞானம் என்பதுமே பொய் என்று தோன்றி விடுகிறது கோகாவுக்கு. குருவிடமே எல்லாவற்றையும் மறுத்து விடுகிறான்.
diksha film க்கான பட முடிவு
ஆரம்பத்தில் இந்த குருகுலத்திற்குப் படிக்க வரும் ஒரு சிறுவனையும் அவன் தந்தையையும் அந்தப் பையனின் உபநயனத்தையும் காட்டுவதினால் அவர்கள் தான் கதையின் முக்கியப் பாத்திரங்களோ என்று தோன்றினாலும் பின்னால் கதை குருவையும் அவர் மகளையும் சுற்றி வருகிறது. முற்றத்தில் நட்டிருக்கும் துளசியைச் சுற்றி வந்து வழிபடும் பெண்ணை குருவைச் சந்திக்க வரும் இளைஞன் ஜாடையால் கூப்பிடுவதும், பெண் பயப்படுவதும் பின்னர் குரு ஊரில் இல்லாத நேரம் பார்த்து யக்ஷகானம் பார்க்கவரும் பெண்ணை மனதை மாற்றி அழைத்துச் சென்று அவளுடன் உல்லாசமாக இருப்பதும் மிகவும் அழகாகப் படம் ஆக்கப்பட்டிருக்கிறது. சற்றும் விரசமே தட்டவில்லை. படத்தில் பாடல்களோ, ஆடல்களோ (யக்ஷகானத்தைத் தவிர்த்து) எதுவும் இல்லை.  தேர்ந்த இயக்கம். படம் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது.

துருவங்கள் பதினாறு கதை க்கான பட முடிவு

துருவங்கள் பதினாறு படமும் பார்த்துட்டேன். ரகுமான் நடிக்கவே இல்லை. வாழ்ந்திருக்கிறார். முதலில் அடையாளமே தெரியலை! எங்கோ பார்த்த முகமா இருக்கேனு நினைச்சால் அப்புறமா மாட்டுப்பெண் ரகுமான் என்று அடையாளம் காட்டினாள். படக்கதை புரிந்தாலும் முடிவு எதிர்பார்க்காதது என்றாலும் படத்தின் பிரதியில் ஆடியோ சரியாக இல்லாததால் சரியாக ரசிக்க முடியலை! முடிஞ்சால் இன்னொரு தரம் பார்க்கணும். பார்ப்போம்.

துருவங்கள் பதினாறு கதை க்கான பட முடிவு

மற்றபடி மிக மிக இளைஞர் ஆன கார்த்திக் நரேனுக்கு இது முதல் படம் என்றே நம்பமுடியவில்லை. அருமையாக எடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது வெறும் பேச்சு!

20 comments:

  1. கிர்ர்ர்ர்ர்... நான் சொன்ன படங்கள் இன்னும் பார்க்கவில்லையா? (உங்கள் வங்கிக்கணக்கில் ஒரு ரூபாய் இருபது பைசா சேர்த்து விட்டேன்... கிர்ர்ர் க்கு ராயல்டி!)

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன படங்கள் இங்கே இருக்கு. ஆனால் அவை எல்லாம் நீளம் அதிகமே! ஆகவே ரொம்ப சாவகாசமாப் பார்க்கணும்! இவை எல்லாம் அதிகமாய் இரண்டு மணி நேரத்துக்குள் தான்! மத்தியானமாக் குழந்தை தூங்கறச்சே பார்த்துடுவேன்! :)

      Delete
    2. பிங்க் படத்துக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு போல!

      Delete
    3. கிர்ர்ர்ர்ர்ர்ர்ருக்கு ராயல்டி இதெல்லாம் பத்தாதுங்கோ! :)

      Delete
  2. ம்ம்ம். படம் பார்க்க முடிகிறது - மகிழ்ச்சி. நேற்று நான் கூட யூவில் ஒரு மலையாள படம் பார்த்தேன்.... விமர்சனம்-அனுபவம் விரைவில் என் பதிவில்! :) விளம்பரம் இல்லை! முதல் படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், வாங்க வெங்கட், நானும், பிரேமம், த்ருஷ்யம் ரெண்டும் மலையாளத்திலேயே பார்க்க நினைக்கிறேன். முடியலை! :)

      Delete
  3. தொடருங்கள் அம்மா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றிப்பா.

      Delete
  4. துருவங்கள் பதினாறில், பல இடங்களில் வசனம் தெளிவாக இல்லை. கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் படம் நல்லாத்தான் இருக்கு.

    தீக்ஷா படத்தின் கதையும் நல்லா இருக்கு.

    நிறைய நேரம் கிடைக்கறதுனால, புத்தகங்கள் படித்து விமரிசனம் எழுதலாமே... உங்க 'கர்ர்ர்ர்ர்', ஒரு எழுத்துக்கு 20 பைசான்னு ஸ்ரீராம் தீர்மானித்திருக்கிறார். கொஞ்சம் ஜாஸ்திதான்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் வசனம் கேட்கலையா? ஹை ஜாலி! புத்தகம் படித்தால் தொந்திரவு இருக்கக் கூடாது. தொடர்ந்து படிக்கணும். இங்கே அப்படி முடியாது! எப்போவானும் புத்தகம் படிக்கிறேன். :)

      என்னாது> ஒரு எழுத்துக்கு 20 பைசாவா? அதெல்லாம் ஏத்துக்க முடியாத்! ஒரு கிர்ருக்குக் குறைந்த பட்சமாக ஆயிரம் ரூபாய்! :)

      Delete
  5. ஒரு காலத்தில் கன்னடத்தில் சில படங்களைப் பார்த்துஇருக்கிறேன் உங்களுக்குக் கிடைக்குமானால் சம்ஸ்காரா என்னும் படம் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சம்ஸ்காரா எப்போவோ தூர்தர்ஷன் தயவிலே பார்த்தாச்சு ஐயா! ஜி.வி. ஐயரின் மஹாபாரதமும் கன்னடப் பதிப்பும், சம்ஸ்கிருதப் பதிப்பும் பார்த்திருக்கேன். :)

      Delete
  6. என்னதிது? வேதா கமண்ட் எல்லாம் கூட போடறாங்க? :))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, அம்பியே போடறச்சே வேதா(ள்) போட்டால் என்னவாம்?

      Delete
  7. மாநகரம்? படம் வந்திருக்கு? பார்க்க முயல்கிறேன். நன்றி வேதா(ள்).

    ReplyDelete
  8. அமரர் அனந்த்தர்த்தியின் கதைகள் படமாக வந்து வெற்றி அடைந்தவை (box-office இல் அல்ல!) கட ஸ்ரார்த்த எழுதிய காலத்தில் தெல்ங்கு, கன்னடம், மராத்தி போன்ற மொழிகளிலும் பிராமணர் குடுமபத்துப் பெண்கள கெட்டுப்போவதாகவும், பெற்றோர்களே அவர்களை அனுதாபம் இல்லாமல் ஒதுக்குவதும் கருப்பொருளாகக் கொண்ட நாவல்களும் திரைப்படங்களும் அதிகம் வெளிவந்தன. இவற்றை எழுதியவர்கள் எல்லாரும் பிராமணர்களே என்பது irony. தமிழிலும் ஜெயகாந்தன் இப்படித்தான் 'அக்கினிப் பிரவேசம்' எழுதினர். ஆனால் அவர் பிராமணர் அல்லர்.

    - இராய செல்லப்பா (இப்போது) நியூ ஆர்லியன்ஸ்

    ReplyDelete
    Replies
    1. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்துக் கதை! என்றாலும் இப்போப் பார்த்தாலும் நன்றாகவே இருந்தது. :) திரு ஜி.வி.ஐயரின் மஹாபாரதமும் கன்னடம், சம்ஸ்கிருதம் இரு மொழிகளிலும் வந்திருக்கு! பார்க்கலாம். நீனா குப்தா தான் திரௌபதினு நினைக்கிறேன்.

      Delete
  9. துருவங்கள் 16 செம படம்! இளம் இயக்குனர் என்று சொல்லமுடியாத அளவிற்கு அருமையாக எடுத்திருக்கிறார்.

    கீதா: நெல்லைத் தமிழன் துருவங்கள் 16 நெட்டில் பார்த்தால் வேஸ்ட் டயலாக் கேக்காது தியேட்டர் காப்பி...தியேட்டரில் பார்த்தால்தான் செமையா இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. கீதா ரங்கன்... இங்கே என்ன என்ன படங்கள் தியேட்டரில் வருதோ அதைத்தான் நான் பார்க்கமுடிகிறது. மீதி படங்களை, தியேட்டர் காபியில் பார்ப்பதில்லை. நான் வைத்திருப்பது HD PRINT. நான் படம் பார்ப்பதே கம்மி (ஒரு படத்தை முடிக்க 4-5 நாளாயிடும். சமயத்துல பாதிகூட முடித்திருக்கமாட்டேன். படம் நல்லா இல்லைனா பார்க்கமாட்டேன்).

      சமீபத்தில் தியேட்டரில் பார்த்தபடம் 'காற்று வெளியிடை'. அவ்வளவு ரசிக்கமுடியலை. ஜவ்வு. இங்கெல்லாம் எங்களுக்கு சாதகம், புதுப்படம் வியாழன் இரவே வெளியாகிடும் (தமிழ்நாட்ல வெள்ளி காலைதான் முதல் ஷோ). அதுக்கு முந்தினவாரம் கவண் (படம் சுகமில்லை). தியேட்டர்ல டிக்கட் வாங்கறது ரொம்ப ரொம்ப சுலபம். 10 நிமிடம் நடந்தா தியேட்டர் வந்துடும். அங்க செலவாறதைவிட இங்க கம்மியாதான் செலவு. இதுக்குமேல சொல்லி உங்க காதுல புகை வரவழைக்கமாட்டேன்.

      Delete
  10. அப்பாடா! துருவங்கள் பதினாறு படம் பிடித்திருக்கிறது. எங்கேயாவது பிடிக்காமல் போய், இந்த பானுமதி சொன்னதை கேட்டு அவஸ்தை என்று சொல்லிவிடப் போகிறீர்களே என்று உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. மாநகரமும் பாருங்கள்.

    ReplyDelete