எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 05, 2017

ஶ்ரீராமநவமிக்கு ஓர் மீள் பதிவு! :(

ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)
ரெண்டு நாளாவே ராமர் கேட்டுட்டு இருந்தார். முந்தாநாளைக்கு விஷு புண்யகாலத்திலும் வெறும் பாயசம் மட்டும் தான்! நேத்திக்குத் தமிழ் வருஷப் பிறப்பிலும் ஒண்ணுமே பண்ணித்தரலைனு சோகமா ஆயிட்டார்! நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க! இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும்! அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி! கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே! ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான்! உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன்! ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர்!  சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே! நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு! ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம்! ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.

என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை!  இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு!  பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு! இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன்! நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை! காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.

வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது! :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள்! ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை!


மல்லிகைப்பூ நேற்று உதிரியாக வாங்கித் தொடுத்தேன். கால் கிலோ நேத்திக்கு 40 ரூ விலை. :(  கால் கிலோவுக்குப் பூக்காரங்களைப் போல் தொடுத்தால் ஆறு, ஏழு முழம் வரும். நான் தொடுத்தது 5 முழம், கொஞ்சம் கூடவும் வந்தது.





சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்!

கீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது.  பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)

எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா!


சில, பல காரணங்களால் இந்த வருடம் ராமநவமிக் கொண்டாட்டம் கொண்டாட முடியாத சூழ்நிலை! :( இது போன வருஷத்துப் பதிவு. மனமெல்லாம் ஶ்ரீரங்கத்திலே நம்ம வீட்டு ராமரிடம்! ராமருக்குத் தெரியும், ஆகவே ஒண்ணும் சொல்ல மாட்டார்! 

14 comments:

  1. இந்த வருடம் வெய்யில் அதை விட பயங்கரமாக இருக்கப்போகிறது என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கிறது. அலுவலகத்தில் தோழி ஹேமா மூலமாக ஸ்ரீ ராமநவமி பானக, நீர்மோர் கேரட், பா. ப கோசுமல்லி போன்றவை கிடைத்தன!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், இங்கே எங்களுக்கு ஒன்றுமே கிடைக்கலை! :)

      Delete
  2. படத்தை காண்பிச்சு பாயசம் குடிங்கப்பா என்றால் எப்பூடி ???

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அதுவும் போன வருஷப் பாயசம்!

      Delete
  3. ஒரு வருஷத்துக்கு முன்னால தட்டுல வச்சது இன்னுமா சுடச் சுட இருக்கும்? படத்தைப் பெரிது படுத்திப் பார்க்கமுடியாம பண்ணீட்டீங்க. இல்லைனா, என்ன 4-5 வடைதான் பண்ணிட்டு, ஊரையே விருந்துக்குக் கூப்பிடுறீங்கன்னு நாங்க கேட்டுடுவோமில்ல. (கடலைப் பருப்பு சுண்டல் மாதிரி தெரியுது). போளிலாம் பண்ணுவீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, கண்ணாலே பார்த்துக்கலாம் இல்லையா? கடலைப்பருப்புச் சுண்டலே பண்ணலை! போளியும் பண்ணறதில்லை!

      Delete
  4. ராமர் ஒன்றும் சொல்ல மாட்டார். நாங்களும் சொல்லமாட்டோம் ஐயா. ரசித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா! நான் "ஐயா" இல்லை! அம்மா! :) ரசித்தமைக்கு நன்றி.

      Delete
  5. கடவுள் பிறந்த நால் நட்சத்திரம் என்று ஏதேதோ சொல்லி நம் நாக்குக்கு வக்கணையாகச் செய்து சாப்பிடுகிறோம் ராமநவமி அன்று பானகம் இல்லையா அதை அங்கேயே செய்து குடிக்கலாமே வெள்ளை காரர்களுக்கும் கொடுத்துசுவை பார்க்கச் சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. ஐயா, ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்வதும் அதை விநியோகிப்பதன் மூலம் அக்கம்பக்கம் உறவுகள் பலப்படுவதும் காரண, காரியங்களோடு தான். ஶ்ரீராமன் நல்ல வெயில் காலத்தில் பிறந்ததால் தாகம் தணிக்கும் உணவு வகைகளும், ஸ்ரீகிருஷ்ணன் மழைக்காலம் என்பதால் தின்னக் கடிக்க மொறுக் மொறுக் பட்சணங்களும், நவராத்திரி மழை வலுக்கும் காலம். குளிர் அரைகுறையாக ஆரம்பிக்கும் காலம். அந்தச் சமயம் உண்ணும்படியாகவும் உடலுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவும் சுண்டல்கள் நிவேதனம் செய்யப்படுகின்றன. பண்டிகைகளும் சரி, அவற்றின் நிவேதனங்களும் சரி ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளவை மட்டுமில்லாமல் நம் உடல் நலம் காக்கும்படியாகவும் அந்த அந்தப் பருவத்துக்கேற்ற உணவு வகைகளை இம்மாதிரிப் பண்டிகைகளின் பெயரால் நாம் உண்ணும்படியாகவும் பெரியோர்கள் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார்கள். மற்றபடி கடவுள் பெயரால் தான் நாம் ஒவ்வொரு மூச்சையும் விட்டுக் கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு கவளம் உணவையும் உண்ணுகிறோம். இதற்குக் கடவுளின் பிறந்தநாள், நக்ஷத்திரம் என்று ஏதேதோ சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆழ்வார் கூற்றுப்படி நாம் உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை எல்லாமே அவன் கொடுத்தது தான்!

      உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
      கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
      மண்ணின் உளவன் அவன் சீர் வளம் மிக்கவனூர் வினவி
      திண்ணம் என் இள மான் புகுமூர் திரு கோளூரே

      Delete
    2. கார்த்திகைப் பொரி கூட வெண்மை நிறப்பொரி சிவனையும், வெல்லம் அவனுடன் நமக்கு இணைந்திருக்கும் பக்தியையும் அந்த பக்தியில் நெருடல்களாகத் தோன்றிய மாவலி எனப்படும் மஹாபலிச் சக்கரவர்த்தி தேங்காய் உருவிலும் இருப்பதாக ஐதிகம். இன்னொரு சாரார் திருமணத்தின் போது சகோதரன் கைகளால் பொரியைக் கை நிறைய வாங்கி மணமகள் அக்னியில் இடுவாள். ஆகவே சகோதரனுக்கு நன்றி செலுத்த வேண்டியே பொரியை நிவேதனம் செய்வதாகவும் சொல்வார்கள். தென்மாவட்டங்களில் கார்த்திகைப் பண்டிகையே சகோதரனும் பிறந்த வீடும் செழிப்பாக இருப்பதற்காகச் செய்வதாக ஓர் ஐதிகம். அன்று பிறந்த வீட்டுச் சீராக ஓர் ஐந்து ரூபாயாவது பெண்களுக்குக் கொடுத்தே தீரும் சகோதரன்கள் இன்றளவும் உண்டு! தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்குக் காரணம் வேண்டியதில்லை என எண்ணுகிறேன். :)

      Delete
  6. ஆகா என்ன தாராளம், போன வருசம் பண்ணியது. சரி,சரி அட்ஜஸ்ட் பண்ணிக்குறோம். அருமை. இராமர் பத்தி எழுதிட்டிங்களா?. நான் படிக்கவில்லை.லிங்க் தாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இந்த வருஷம் பண்டிகைகள் கொண்டாட முடியாது! அதான்! :)

      Delete
  7. ஆகா என்ன தாராளம், போன வருசம் பண்ணியது. சரி,சரி அட்ஜஸ்ட் பண்ணிக்குறோம். அருமை. இராமர் பத்தி எழுதிட்டிங்களா?. நான் படிக்கவில்லை.லிங்க் தாங்க.

    ReplyDelete