அடுத்து பூத்நாத்! ஓர் ஆங்கிலப் படம்/நாவலின் தழுவல் என்கின்றனர். நம்ம அமிதாப் தான் பூத்நாத்தாக நடிச்சிருக்கார். பேய், பிசாசுப் படமாச்சேனு பார்த்தால் பேயாக வரும் அமிதாப் நன்றாகக் காமெடி பண்ணுகிறார். அவரும் அவர் வீட்டில் குடி இருக்க வரும் தம்பதிகளின் மகனும் செய்யும் கூத்துக்களே படத்தில் முக்கியமானவை! அமிதாப் ஏன் பேயாக அலைகிறார் என்பதைக் கடைசியில் சொல்லும்போதும், அவருக்கு முக்தி கிடைக்க ஏற்பாடு செய்யும்போதும் என் மனசும் குற்ற உணர்வில் தவிக்கிறது. நேரம் வரணும்! :( மொத்தத்தில் படம் நன்றாகவே இருந்தது. கோவாவில் "நாத்வில்லா" என்னும் பங்களாவில் குடியிருக்க வரும் ஷாருக்கான், ஜூஹி சாவ்லா தம்பதிகளுக்கு ஒரு மகன்.
இந்த வீட்டைப் பற்றி ஏற்கெனவே வதந்திகள் நிலவினாலும் தைரியமாகக் குடி வருகின்றனர் ஷாருக் கான் ஜோடி! அவர்களுக்குக் கம்பெனி ஒதுக்கிய வீடு அது! அந்த வீட்டில் அவர்கள் மட்டும் இல்லாமல் வீட்டின் சொந்தக்காரர் ஆன கைலாஷ்நாத் என்னும் பேயாரும் குடி இருக்கார்! அந்தப் பாத்திரத்தில் தான் அமிதாப் நடித்திருக்கிறார். அவர் ஏன் பேயாக அலைகிறார் என்பதும், அதை ஒட்டிய சம்பவங்களும் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்! ஹை, நான் ஏன் சொல்லறேன்! அப்புறமாக் கதையைச் சொல்லிட்டேன்னு சொல்றதுக்கா? வேணாம் சாமி! ஆளை விடுங்க! இந்தப் படத்தின் அடுத்த பகுதி, "பூத்நாத் ரிடர்ன்ஸ்" என்னும் பெயரில் வந்திருக்கிறதாச் சொல்றாங்க. இது கொஞ்சம் வணிக ரீதியாக எடுக்கப்பட்டிருக்குனு நினைக்கிறேன். இதைப் பற்றி அதிகம் யாரும் சொல்லலை!
அடுத்து இன்னிக்குப் பார்த்த படம் கஹானி! வித்யா பாலன் நடிச்சது! இதுவும் ஓர் த்ரில்லர் படம்! லண்டனில் இருந்து தன் கணவனைத் தேடி வருகிறார் கர்ப்பிணியான வித்யா வெங்கடேசன் பாக்சி! வித்யா பாலன், "வித்யா வெங்கடேசன் பாக்சி" என்னும் பெயரிலே நடிச்சிருக்கார். படம் முழுவதும் அவர் தன் கணவனைத் தேடுவதைச் சொல்லுவதிலேயே போகிறது. அவருக்கு உள்ளூர் போலீஸ்காரர் ஆன "ரானா" சத்யோகி என்பவர் உதவி செய்கிறார். படத்தில் காதல் காட்சிகளோ, அதிகமான பாடல்களோ எதுவும் இல்லை. கல்கத்தாவில் துர்கா பூஜா நடைபெறும் நாட்களில் இந்தச் சம்பவங்கள் நிகழ்வதால் உண்மையான துர்கா பூஜை ஊர்வலத்தையே உள்ளூர் மக்கள் பங்கு கொள்வதையே காட்டி இருக்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட படப்பிடிப்புக் குழுவினர் சுஜய் கோஷ் என்னும் இயக்குநர் தலைமையில் கிட்டத்தட்ட கொரில்லாக்களைப் போல் மறைந்திருந்தே இயல்பான நிகழ்வுகளைப் படம் பிடிப்பதில் வல்லவர்களாம். இந்தப் படத்திலும் அவ்வாறே செய்திருக்கின்றனர்.
வித்யாபாலன் தன் கணவனைத் தேடிக் கண்டு கொண்டாரா? அவர் திரும்ப லண்டன் சென்றாரா என்பதை எல்லாம் வெள்ளித் திரையில்/யூ ட்யூபில் கண்டு மகிழவும்! ஹிஹி, சொல்ல மாட்டோமுல்ல! :)
வரவர ரொம்பப் படம் பாக்கறீங்க... கண்டிக்கறதுக்கு இல்லாமப் போச்சு!! :P
ReplyDeleteதிருஷ்யமும் பாபநாசமும் பார்த்திருக்கிறேன். ஹிந்தி பார்க்கவில்லை. அஜய் தேவ்கன் பிடிக்காது!
பூத்நாத் பார்த்திருக்கிறேன். சுவாரஸ்யமான படம்.
//அஜய் தேவ்கன் பிடிக்காது// சிங்கம் ஹிந்தில பார்த்துட்டீங்களா?
Delete@ஸ்ரீராம், ஹிஹிஹி! இங்கே பொண்ணு வீட்டில் இருக்கோமா, பொழுது போகலை! கழுத்தைப் பிடிச்சுத் தள்ளிட்டு இருக்கோம். அங்கே குழந்தை இருப்பா! :) எனக்கு இந்த நடிகர்கள் ரசனை எல்லாம் கிடையாது. நல்ல கதையம்சம் உள்ள படம்னா பார்ப்பேன் அவ்வளவே! ஆகவே அஜய் தேவ்கனா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன! :)
Delete@கோவை ஆவி, அதிசய வரவுக்கு நன்னி!
Deleteஆவி.. ஹிந்தியில் பார்க்கவில்லை. தமிழும், மலையாளமும் மட்டும்தான்.
Deleteவித்யா பாலன் லண்டன் போயிருந்தால் அங்குள்ள லண்டன் பதிவர்கள் பதிவு மூலம் தெரியப்படுத்துவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி! ஹிஹிஹி, அதைச் சொல்லலையே படத்தில்! ஆனால் கஹானி 2 படமும் வித்யா பாலன் நடிச்சே வந்திருக்கு! அதிலும் இதே மாதிரி இன்ஸ்பெக்டர் ரானா வருகிறார். இந்தப் படத்தின் தொடர்ச்சி என்பதற்கு இவங்க 2 பேர் தான் அதிலே. ஆனால் இன்ஸ்பெக்டர் ரானாவாக நடிப்பது கஹானி 2 இல் வேறே ஒருத்தர்னு நினைக்கிறேன். பாதி பார்த்தேன். அவ்வளவாப் பிடிக்கலை! :)
Deleteநான் சொல்ல நினைத்ததை தலைப்பிலேயே வைத்துவிட்டீர்கள். உணவுலயும் பதிவைக்காணோம். பதிவர் கடமையை மறந்துவிட்டீர்களே.
ReplyDeleteபாபநாசத்தில் கௌதமி பிடிக்கவில்லை என்று சொன்னால் ஒத்துக்கொள்கிறேன். அதைவிட ஹிந்தி பதிப்பு எப்படி நல்லா இருக்குன்னு சொல்றீங்க. உங்களுக்கு திருநெவேலி பாஷை புரியலைன்னு சொல்லுங்க.. ஒத்துக்கிடுதேன். (எனக்கே கொஞ்சம் பாஷை புரிய சிரம்ப்பட்டேன்)
கனவுக்கன்னி கஜோலை மணந்துகொண்டதால் சிலருக்கு அஜய்தேவ்கன் பிடிக்கவில்லையோ? போறபோக்கைப் பார்த்தால் நாளைக்கு பிரபாஸையும் பிடிக்காமல் போகப்போகிறதி (நான் பிரபாஸ்-அனுஷ்கா வதந்தியைச் சொன்னேன்) - எனக்கும் அஜய்தேவ்கனின் கடு கடு முகம் பிடிக்காது
வாங்க நெல்லைத் தமிழன், கொஞ்சம் சோர்வு, அசதி, வேலை அதிகம் என்பதால் அதிகம் கணினியில் உட்காருவதில்லை. என்றாலும் அன்றாடம் மடல்கள், ஒரு சில பதிவுகள் பார்த்துடுவேன். மதியம் கிடைக்கும் 2 மணி நேர ஓய்வில் தான் படம் பார்ப்பது! படுத்துத் தூங்கும் வழக்கம் இல்லை!
Deleteம்ம்ம்ம் பாபநாசம் கதை வரை ஓகே தான் நெ.த. ஆனால் எனக்கு என்னமோ இந்த உல(க்)கை நாயகன்னாலே அலர்ஜி! அதனாலோ என்னமோ தெரியலை, அவ்வளவா ரசிக்கலை! :))) மலையாளம் இன்னும் பார்க்கலை! :)))) உல(க்)கை நாயகரை விட லாலேட்டன் நல்லா நடிச்சிருப்பதாச் சொன்னாங்க! :))) உணவுப் பதிவுகள் வரும். இங்கே ஒரு சில ஊறுகாய், பொடி வகைகள், புளிக்காய்ச்சல், மிளகு குழம்பு தயாரிப்புக்கள் என வேலை மும்முரம்! :)
Delete"இங்கே ஒரு சில ஊறுகாய்....வேலை மும்முரம்! " - அப்படின்னா ரிடர்ன் ஜர்னிக்கு ஆயத்தமாகிறீர்களா? (அவங்களுக்குத் தேவையானவற்றை ருசியாக செய்துவைத்துவிட்டு). வாங்க. நீங்க இங்க காலடி வச்சபிறகுதான் அக்னி நக்ஷத்திரம் தமிழ்'நாட்டைவிட்டுப் போவேன் என்று சொல்லிவிட்டது.
Deleteஎன்னைக்கேட்டால், கலாபவன் மணிதான் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். என்னைப் பொருத்தவரையில், லாலேட்டன் பெண்ணைத் தேடி அந்தப் பணக்காரப் பையன் வருமளவுக்கு அந்தப் பெண் இல்லை. அதுக்கு பாபனாசம் படத்தில் போட்டிருந்த பெண் பரவாயில்லை. கௌதமி நன்றாக நடிக்கவில்லை. அதுக்கு மீனா எவ்வளவோ நன்றாகச் செய்திருக்கிறார். கமல் நல்லாத்தான் நடிச்சிருக்கார். ஆனால், அவர் அப்போ அப்போ பேட்டி, பேச்சு, அவரின் சொந்த வாழ்க்கை நடவடிக்கை போன்றவைகள் அவர் மீதான நல்லெண்ணத்தை மங்கச் செய்கிறது போலிருக்கு.
Deleteஇல்லை நெல்லை! கஜோல் என் கனவுக்கன்னி இல்லை! அஜய் தேவ்கன் அதே கடுகடு முகத்துக்காகத்தான் எனக்கும் பிடிக்காது!
Deleteபிரபாஸ் அனுஷ்க்காவை கல்யாணம் செய்யப்போவதில்லை. பிரபாஸ் ஒரு கல்லூரி மாணவியை லவ்ஸ் அடிக்கிறார்! அனுஷ்க்கா யாரைக் கல்யாணம் செய்தால் நமக்கென்ன!! நாம் அடுத்த ஆளைப் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதான்!
Deleteகமல்ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எனக்கு அவர் படங்கள் பிடிக்காததுக்கும் தொடர்பு இல்லை! பொதுவாகவே கமல், ஜிவாஜி, எம்.ஜி.ஆர்.ஜெமினி படங்கள் அலுப்புத் தட்டுகின்றன! :) கொஞ்ச நாட்கள் முன்னர் "தங்க மீன்கள்" (அந்தப் பெண் இப்போப் பெரிய பெண்ணாக ஆயிடுச்சுனு படிச்சேன்) படம் பாதி பார்த்தேன். பார்த்தவரை பிடித்தது. பாலுமகேந்திராவின் "தலைமுறைகள்" "வீடு" பிடிச்சது. "குட்டி" படமும் பிடிச்சது. மற்றபடி தமிழில் சமீபத்திய சில தயாரிப்புகளை இளம் தலைமுறையினர் நன்றாகவே எடுத்திருக்காங்க!
Deleteஉங்களைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது. இவ்வளவு படம் பார்க்கிறீர்களே! வீட்டில் ஒன்றும் சொல்ல மாட்டார்களா? சரி விடுங்கள், பாபநாசம் படத்திற்கு கமல்ஹாசன் தேவையே இல்லை. ஒரு பார்த்திபனோ, டெல்லி கணேஷோ போதும். அத்துடன், கமலின் உருவம், எவ்வளவு மேக்கப் போட்டாலும் வயது முதிர்ந்திருப்பதை மறைக்கமுடியாமல் காண்கிறது. அதற்காகவே கெளதமிக்கு வயதான மேக்கப் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். போலீஸ் அதிகாரியாக வரும் அந்தப் பெண்தான் சிறந்த நடிகர். மற்றபடி, பாபநாசம் என்பது எந்தக் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இல்லாத, கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படம். இந்திய சினிமா மாணவர்களுக்கு பாடமாக அமையவேண்டிய படம்.
ReplyDeleteநீங்க வேறே! இங்கே மதியம் என்றால் இந்தியாவில் ராத்திரி! அப்போ மடல்களோ, பதிவுகளோ வராது! ஆகவே அந்த நேரம் இணையத்தில் இருந்தால் யாருமே இல்லாமல் வெறுமையாக இருக்கும்! அதோடு அப்போப் பதிவு போட்டாலும் பார்க்க ஆள் இல்லை! ஆகவே மதியம் ஒரு மணி முதல் மூன்று, மூன்றரை வரை பொழுதைக் கொன்று தீர்ப்பதற்காகத் தேர்ந்தெடுத்த படங்களாகப் பார்த்தேன். இனி இல்லை! ஆகவே பொறாமைப் படாதீங்க! 2007 ஆம் ஆண்டு பார்த்த படங்களின் தொகுப்பை மீள் பதிவாகப் போடறேன். ஹிஹிஹி, இன்னும் பொறாமைப் பட்டுக்கலாம். :))))
Deleteஸ்ரீராம் சொன்னதே தான் நானும் நினைச்சேன்! படங்கள் ரொம்பவே பார்க்கறது தெரியுது!
ReplyDeleteஹாஹாஹாஹா! இனி படங்கள் பார்ப்பது அரிது! :) அங்கே வந்தால் இம்மாதிரி ஒரு படத் தொகுப்பு உள்ள சானல்கள் கிடைக்காது! இங்கே நெட் ஃப்ளிக்ஸ் மற்றும் யப் ஃப்ளிக்ஸ் இருப்பதால் படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க முடிகிறது.
Deleteத்ருஷ்யம் ஜப்பானிய நாவலின் தழுவல் என்றும் கொரியன் படத்தின் சுடுதல் என்றும் சொல்லுகிறார்கள். சில சமயம் உலகின் வெவ்வேறு பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரே போன்று கருத்து தோன்றாதா....ஒன்னுமில்லை எதுக்கு இப்படி ஒரு பில்டபுனா....பவர் பாண்டி கதை போன்ற ஒன்றை நான் முக்கால் வாசி எப்போதோ எழுதி வைத்திருக்கிறேன்...முடிக்காமல்....முடிவு மனதில் இருக்கிறது...அதைப் போன்ற ஒரு கதையை ஏற்கனவே எங்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன்....அருணாச்சல முதியோர் விடுதினு அதுல இலைமறைகாயாகச் சொல்லி இதே கருத்துதான்.. ஆனால் இன்று பானுக்காவின் தளத்தில் வாசித்ததும் ஐயோ நாம முடிக்காம வைத்திருக்கும் கதையை முடிச்சு வெளியிட்டா காப்பினு சொல்லிடுவாங்களேனு நினைச்சு அப்படியே முடக்கிட்டேன்....படத்தின் முடிவு தெரியலை...என்றாலும் கதைக் கரு அதே...ஹிஹி அதான் ..
ReplyDeleteகீதா
த்ருஷ்யம் படம் மலையாளம்தான் பார்த்தேன் தமிழ் எங்கள் ஊரில் வரவில்லை. மற்ற படங்கள் பார்க்கவில்லை.
ReplyDeleteகீதா: நான் இரண்டு வெர்ஷன் மலையாளம், தமிழ் இரண்டும் பார்த்தேன் ஹிந்தி பார்க்கவில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களையும் குறித்துக் கொண்டுள்ளேன்...ஹிந்திப் படங்கள்.