எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 04, 2017

எண்ணக் கதம்பம்!

நேற்று  (மே 2 ஆம் தேதி இங்கே) அப்புவோட பிறந்த நாள். பத்தாவது பிறந்த நாள். ஓடியே போச்சு பத்து வருஷங்கள். 2007 ஆம் வருஷம் யு.எஸ்.ஸின் மெம்பிஸ் நகருக்கு வந்தது, அப்பு பிறந்தப்போ அங்கே இருந்தது, பிறந்த குழந்தையை முதல் முதல் தொட்டப்போ அது சிலிர்த்துக் கொண்டது எல்லாமும் நினைவில் இருக்கு.  விமானப் பயணம் செய்பவர்களுக்கு ஜெட்லாக் இருக்கிறாப்போல் பிறக்கும் குழந்தைகளுக்கு கருப்பைலாக் இருக்குமோனு நினைக்கிறேன்.  ஏனெனில் கருவில் குழந்தை இருக்கும்போது பகல் பொழுதை விட இரவுகளில் தான் அதிகம் விழித்துக் கொண்டும், சுற்றிக் கொண்டும், உதைத்துக் கொண்டும் இருக்கும்னு சொல்றாங்க சிலர்.  கருவில் குழந்தை இரவு நேரம் விழித்திருப்பதாலோ என்னமோ பிறந்த குழந்தைகள் சில நாட்கள், அல்லது குறைந்தது ஒரு மாதமாவது இரவில் தூங்குவதில்லை!

அது போல் அப்புவும் இரவு நேரங்களில் தூங்காமல் விழித்திருப்பாள். காலையில்  நாம எழுந்ததும் தூங்க ஆரம்பிப்பாள். அதே போல் இப்போப் பையரின் மகளும் இரவில் சீக்கிரம் தூங்குவதில்லை. பின் தூங்கிப் பின் எழுகிறாள்.  அப்புவோட பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடியாச்சு. பத்தாம் தேதி ஜன்ம நக்ஷத்திரத்தன்னிக்குத் தான் கோயிலுக்குப் போய்க் கொண்டாடணும்! அப்போ நாங்க பையர் வீட்டுக்குப் போயிடுவோம். ஆயிற்று! இங்கே வந்தும் ஐந்து மாதங்கள் ஆகப் போகின்றன.  ஜூன் பத்து தேதி வரை விசா இருந்தாலும் மே மாதமே திரும்பும்படி ஏற்கெனவே டிக்கெட் வாங்கியாச்சு. அதன்படி நல்லபடியாகத் திரும்பணும்.

திரும்பியதும் ஓர் பெரிய தவிர்க்க முடியாத கடமை இருக்கிறது! அதை முடிக்கணும். அதுவரையிலும் மனம் எதிலும் நிலை கொள்ளாமல் தவித்தபடி தான் இருக்கும்! வேறே வழி இல்லை! :(
*********************************************************************************

நான்கு சினிமா பார்த்ததாக எழுதி இருந்தேன், இல்லையா? மற்றப் படங்கள் பத்தி இங்கே குறிப்பிடப் போவதில்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஆளாளுக்கு நான் முழுக் கதையைச் சொல்றேன்னு கிண்டல் செய்துட்டு இருக்காங்க! முழுக்கதையை எங்கே சொல்லி இருக்கேன்? அந்தக் காலத்து சினிமாப் பாட்டுப் புத்தகங்களைப் பார்த்திருந்தாத் தெரிஞ்சிருக்கும்.  கதையைப் போட்டுட்டுக் கடைசியில் கிளைமாக்ஸை மட்டும் சொல்லாமல் "மீதியை வெள்ளித்திரையில் காண்க!" என்று போட்டிருப்பாங்க. அப்படித் தானே நானும் சொன்னேன்!

ஹிஹிஹிஹி!

அது யாரு சிரிக்கிறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர் ம.சா.வா? வந்துட்டியா, வா! என்ன சிரிப்புங்கறேன்!

ஒண்ணும் இல்லை! அந்தக்காலத்து முறைனு எழுதி இருப்பதால் உனக்கு வயசாயிடுச்சுனு எல்லோருக்கும் புரிஞ்சுடுமே!

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யார் சொன்னது? இப்போ ராஜராஜ சோழனைப் பத்திக் கூடத் தான் எனக்குத் தெரியும். அதுக்காக! எனக்கு ஆயிரத்துச் சொச்சம் வயசு ஆயிடுச்சுன்னு சொல்லிட முடியுமா என்ன?

சரி, எப்படியோ போய்க்கோ! எனக்கென்ன? (ம.சா. பின் வாங்கல்) இப்போல்லாம் கதையை லேசாத் தொட்டுட்டு மற்றத் தொழில் நுட்ப விஷயங்களைப் பத்தித் தான் பேசணும். இது தெரியலை! இதிலே பேச்சு வேறே!

என்ன அங்கே முணுமுணுப்பு?

ஒண்ணுமில்லை(ஈனஸ்வரத்தில் ம.சா.)

தொலையட்டும்! நாம என்னிக்கும் குழந்தை ஒன்லி!  அதை யாராலும் மாத்த முடியாதாக்கும்!
*********************************************************************************
piku movie க்கான பட முடிவு     pink movie க்கான பட முடிவு

piku movie க்கான பட முடிவு

இதுவும் பிகு படத்துக் காட்சி தான்!


ஆகவே நான் பார்த்த நீர்ஜா,  ருஸ்தும், ஆரக்ஷண்(இரண்டாம் முறை), தம் லகாகே ஹைஷா ஆகிய படங்களைப் பற்றி ஒண்ணும் சொல்லப் போறதில்லை!

இதிலே நீர்ஜாவும், ருஸ்தும் படமும் நிஜமாக நடந்த நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள்.  ருஸ்தும் படம் சுதந்திரம் பெற்ற காலத்து இந்தியாவில் மும்பை மாநகரில் ஓர் கடற்படை அதிகாரியால் செய்யப்பட்ட கொலை பற்றியது. கதையைச் சிறிதும் மாற்றவில்லை! ஓரளவுக்கு அப்படியே எடுத்திருக்காங்க!  நீர்ஜாவும் எண்பதுகளில் கடத்தப்பட்ட பான் ஆம் விமானத்தில் பணி புரிந்து வந்த ஓர் பெண்ணைப் பற்றியது. உண்மைக் கதை. விமானம் கராச்சி வழியாக ஜெர்மன் செல்ல வேண்டும். விமானம் கராச்சியில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வருகிறது.  கராச்சியில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பயணிகளைக் காப்பாற்றும்போது அந்தப் பெண் சுடப்பட்டு இறந்தாள்.
Neerja க்கான பட முடிவு

சுடப்பட்டு இறந்த உண்மையான நீர்ஜா!


Neerja க்கான பட முடிவு

படத்தில் நீர்ஜாவாக நடித்திருப்பது அனில் கபூரின் மகள் சோனம் கபூர்! முதல் படம் என நினைக்கிறேன். நன்றாகவே செய்திருக்கிறார்.

ஆரக்ஷண் விளக்கவேண்டாம்னு நினைக்கிறேன். அமிதாப், சையஃப் அலி கான், தீபிகா படுகோனே நடித்தது. தம் லகாகே ஹைஷா படம் விருப்பமில்லாமல் திருமணம் புரிந்து கொள்ளும் ஒரு ஜோடி கடைசியில் எப்படி ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்குகிறார்கள் என்பது பற்றி. துளிக்கூட ஆபாசம் இல்லாமல் எடுக்கப்பட்ட படங்கள்! கதைக்கேற்ற காட்சி அமைப்பு, பின்னணி இசை, வசனங்கள், தேவையான இடத்தில் பாடல்! கனவுக்காட்சியோ, நாயக, நாயகியர் சேர்ந்து பாடி ஆடும் காட்சிகளோ கிடையாது!  கொஞ்சம் நெருடலாக இருந்த ஒரே விஷயம் கதையில் நாயகனும், நாயகியும் சேருவதற்குக் காரணமாக இருந்த போட்டி விஷயம் தான்! அப்படி ஓர் போட்டி இன்றும் நடக்கிறதா என்பது தெரியவில்லை! அல்லது கதைக்காகச் சேர்த்தார்களா என்பதும் தெரியவில்லை! ஆனால் கொஞ்சம் கடுமையான போட்டி என்றே சொல்லணும்! :)

dum laga ke haisha க்கான பட முடிவு

இந்தப் பெண் தான் கதாநாயகி! சிறந்த கதாநாயகி என்னும் விருது வாங்கி விட்டார் இந்தப் படத்திலே. அதைத் தவிரவும் இந்தப் படம் சிறந்த பாடல்கள், சிறந்த இந்திப்படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பாடகர் ஆகிய தகுதிகளுக்காகவும் பரிசு பெற்றிருக்கிறது.  கதாநாயகன் , நாயகியின் உண்மைப் பெயர் ஆயுஷ்மான் குரானா மற்றும் பூமி பெட்னேகர்!  நம்ம வீட்டு ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டைப் பார்த்தால் ஏற்படும் உணர்வுகள் இந்தப் படம் மூலம் ஏற்படுகிறது.

வசனங்கள் இயல்பு எனில் அதைப் பேசி நடித்தவர்கள் மட்டுமின்றி அரங்க வடிவமைப்பும் அதற்கேற்றாற்போல் செய்யப் பட்டிருக்கிறது. தம் லகாகே ஹைஷா படம் ஹரித்வாரில் நடப்பதாகக் கதை! ஆகவே ஹரித்வாரை அப்படியே நேரே காட்டி இருக்கின்றனர்.  ஹரித்வாரில் உள்ள ஓர் இல்லத்திலேயே படப்பிடிப்பு நடந்திருக்கிறது. நல்ல படங்களைப் பார்க்கையில் ஏற்படும் மன நிறைவு இதிலும் ஏற்படுகிறது.

பாகுபலி 2 ஐப் பற்றிப் பேச்சும் விமரிசனமும் வந்துட்டிருக்க நாம பழைய படங்களைப் போடுவதைப் பார்த்து எல்லோருக்கும் சிப்பு, சிப்பாய் வரும்னு நினைக்கிறேன். இங்கேயும் பாகுபலி 2 கூட்டிட்டுப் போறதாத் தான் சொன்னாங்க. வேண்டாம்னுட்டோமுல்ல! :)

17 comments:

 1. ஹெஹெஹெ, கணினிக்கு நான் இந்தியாலேருந்து வந்திருக்கேன்னு தெரிஞ்சிருக்கு போல! இங்கே இப்போத் தான் மூணாம் தேதி மாலை நாலே முக்கால். ஆனால் பதிவு நாளைய தேதியில் (5ஆம் தேதி) வெளியாகியாச்சு! :)

  ReplyDelete
 2. அப்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  சினிமா நீங்கள் சொல்வது ஒன்று கூட நான் பார்த்ததில்லை. படமெல்லாம் போட்டு அசத்தறீங்க! ஆனால் அமிதாப் படம் ஒன்று கூடப் போடவில்லையே!

  ReplyDelete
  Replies
  1. போட்டுடுவோம்! :)

   Delete
  2. போட்டாச்சு இல்ல! :)

   Delete
  3. ஆரக்ஷண் படமும் அமிதாபோடது தான். ஆனால் கொஞ்சம் பழசு. :)

   Delete
  4. அடடே... நன்றி.

   Delete
  5. அப்புவுக்கு வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி.

   Delete
 3. பாகுபலி 1 பார்த்தீர்களோ? பாகுபலி பார்க்கலைனா ஏதோ மிஸ் பண்ணறீங்க. நான் ஏற்கனவே இரண்டு முறை பார்த்தாச்சு.

  நல்ல வெயில் சமயத்துல ஊருக்கு வர்றீங்க. வாங்க.

  ReplyDelete
  Replies
  1. பாகுபலி 1 பார்த்துட்டேன். தொலைக்காட்சியிலேயே வந்துடுத்தே! அதே மாதிரி 2ம் வரட்டும்னு வேண்டாம்னு சொல்லிட்டேன். :)

   Delete
  2. திரைல பார்க்கற எஃபெக்ட் வருமா? இப்படி நீங்கள்லாம் படம் பார்க்கலைனா, எப்படி 1000 கோடில எடுக்கப்போற மகாபாரதம் வெற்றியடையும்?

   Delete
  3. ஹாஹா, தியேட்டரிலே போய்ப் படம் பார்த்தே எத்தனையோ வருஷங்கள் ஆச்சு! கடைசியா இங்கே யு.எஸ்ஸில் இருந்தப்போ ரஜினியின் "சிவாஜி" படத்தைப் பொண்ணு வீட்டில் (அப்போ மெம்பிஸ்) இருந்தப்போ அவங்க அனுப்பி வைச்சுப் பார்த்தது தான்!

   Delete
 4. மே மாதக் கடைசியில் இந்தியா போனபிறகு எந்தப் படத்தைப் பார்க்கப்போகிரீர்களோ என்று இப்போதே ஆவலோடு இருக்கிறேன்.

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் படம் பார்க்க நேரம் இருக்காது என்பதோடு அங்கே இம்மாதிரி வசதிகளும் இல்லை! :) அங்கே போனால் ஜீ டிவியிலோ, சோனியிலோ திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்பப் போடும் "பாக்பன்" படத்தைத் தான் பார்க்கணும். :)))

   Delete
 5. அப்புவுக்கு எமது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

  அதானே.... உங்களுக்கு ராஜராஜன் காலத்து கதையென்ன... ராமராஜன் காலத்து கதைகூட தெரியுமே... என்னே சமாளிப்பு.

  கடைசியில் நான் சினிமா விமர்சனம்தான் எழுதப்போறேன்னு சொல்றதுக்கு இவ்வளவு பில்டப்பு ஓவர்தான்.

  ReplyDelete
  Replies
  1. அப்புவுக்கு வாழ்த்துச் சொன்னதுக்கு நன்றி. ஹிஹிஹி, பில்டப்புனு கண்டு கொண்டதுக்கும் நன்னி ஹை! :))))

   Delete
 6. அப்பு ஒரு ஆண்குழந்தை என்று நினைத்திருந்தேன்

  ReplyDelete
 7. அப்புவுக்கு எங்கள் இருவரின் தாமதமாகப் பிறந்த நாள் வாழ்த்துகள்! அதனாலென்ன இனிதானே நட்சத்திரப் பிறந்தநாள்...அதற்கு இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துகள்!!!

  கீதா: நீங்கள் சொல்லியிருகும் படங்கள் பார்த்தது இல்லை.குறித்துக் கொண்டாயிற்று. பார்க்க முடிந்தால் பார்க்கலாம்..கீதாக்கா...

  ReplyDelete