நன்றி, தினகரன், கூகிளார் வாயிலாக. சூட மிட்டாய்கள்.
நன்றி விதூஷ் வலைப்பக்கம், கூகிளார் வாயிலாக. இதிலே நடுவில் ஓட்டை இல்லை. மதுரைப்பக்கம் நடுவிலே ஓட்டையோடும் கிடைக்கும். ஓட்டை இருக்குனு அவங்க சொல்லி இருக்காங்க. படத்திலே தெரியலை போல! :)
இது சுக்கு மிட்டாய். அணா, பைசா வழக்கில் இருந்தப்போ இது காலணாவுக்கு மூணு! :) இதைத் தான் சென்னையிலே கமர்க்கட்டுனு சொல்றாங்கனு நினைக்கிறேன். :)
இது பாப்பின்ஸ்
இது ஆரஞ்சு மிட்டாய்கள். இந்த ஆரஞ்சு மிட்டாய்கள் இப்போவும் கிடைக்கின்றன. இவற்றைத் தான் முன்னெல்லாம் சுதந்திர தினத்தில் விநியோகிப்பார்கள். கவியோகி சுத்தானந்த பாரதியார் தான் சந்திக்கும் குழந்தைகளுக்கு இவற்றைத் தான் தருவார். நானும் வாங்கிக் கொண்டிருக்கேனே! :)
இது சீரக மிட்டாய்கள், உள்ளே சீரகம் வைச்சிருக்கும். இப்போவும் பெரிய ஹோட்டல்களிலே சோம்பு வறுத்து இந்த மிட்டாய்களைச் சேர்த்து வைப்பார்கள்.
படங்களுக்கு நன்றி விதூஷ் வலைப்பக்கம்.
படத்துக்கு நன்றி, கோமதி அரசுவின் வலைப்பக்கம்
மேலே நீங்கள் பார்ப்பது தான் ஜவ்வு மிட்டாய், மதுரையிலே விற்பது. ஒரு சிலர் நீள மூங்கில் கொம்பில் சுற்றிக் கொண்டு வந்து மணி அடித்து கைக்கடிகாரம், நெக்லஸ், வளையல் என்று பண்ணிக் கொடுப்பாங்களே அதையும் சொல்றாங்க. இதைக்கீழே பார்க்கலாம்.
படத்துக்கு நன்றி கூகிளார்
இதையும் ஜவ்வு மிட்டாய் என்றே சொல்கிறார்கள்.
இன்னொரு விஷயம் சொல்லணுமே! இங்கே இம்மாதிரியான பண்டங்களை மிட்டாய் என்று சொல்கிறோம். ஆனால் வடமாநிலங்களில் மிட்டாய் என்றால் அவை, லட்டு, ஜிலேபி, ஜாங்கிரி(வடக்கே இமர்த்தி), மைசூர்ப்பாகு, பாலில் செய்யப்பட்ட இனிப்பு வகைகள், மற்ற இனிப்பு வகைகள் எல்லாமே அங்கே மிட்டாயி!
எங்கள் ப்ளாகில் தம்பி மோகன் சூட மிட்டாய் குறித்துத் தன் கவிதையில் குறிப்பிடப் போக அங்கே ஏஞ்சலினுக்கு எழுந்த சந்தேகத்தைத் தெளிவிக்கவே இந்தப் பதிவு.
இனிப்புக்கு பெயரே மிட்டாய்தானே... அவர்கள் பாஷையில்.
ReplyDeleteசூட மிட்டாய் சுட்டுக் கொண்டேன்.
ஹாஹா, உங்களுக்கும் சூட மிட்டாய் பிடிக்குமா? :)
Deleteஆஹா. நான் பார்த்தே இல்ல சூட மிட்டாய் .நன்றி அக்கா
ReplyDeleteஶ்ரீராம் சொல்றாப்போல் புதினா வாசனை வரும். ஆனாலும் சூட மிட்டாய் என்றே சொல்வோம்
Deleteகம்மர்கட் நான் சாப்பிட்டிருக்கேன் ..அதில 5,20 ,25 பைசா உள்ள வச்சும் மிட்டாயா செஞ்சு விப்பாங்க ..ஹெல்த் அண்ட் சேப்டிலாம் அப்போ எவ்ளோ மோசம்னு நினைக்கலாம் ஆனாலும் அந்த காசை பிள்ளைங்க விழுங்கி நான் கேள்விப்படலை அப்போ
ReplyDeleteகாசு வைச்சு கமர்கட்? முதல் முறையாக் கேள்விப் படறேன். :)
Deleteஅக்கா .இப்போ நினைவு வருது .இந்த சூடை மிட்டாய் ஸ்டேடியம் ஷேப்ல ஓவல் மாதிரி ஆனா கொஞ்சம் முனைகள் ப்ளாண்ட்டா இருக்கும் செவ்வகத்தை நீள்வட்டமாக்கின மாதிரி நான் பார்த்திருக்கேன் ..தொண்டைல அடைச்சிக்கும்னு அளவை பார்த்து பயப்படுவேன் ..
Deleteஅந்த கமர்கட்டை ஆமாம் காசுமிட்டாயினும் சொல்வாங்க கறுப்பு கலர்ல வெள்ளை ட்ரான்ஸ்பரண்ட்பிளாஸ்டில் தாள் போட்ட கடைகளில் விற்பாங்க ஒன்னு 5 பைசா அதுக்குள்ள 20 பைசா இருந்தா அதை தூக்கிட்டு ஓடுவோம் இன்னும் நாலு வாங்க :)
காசு கமர்கட் லக்கி கமர்கட் அக்கா அது பேரு
Deleteஅட! அப்படியா? கமர்கட் இதானா? ம்ம்ம்ம்? நான் சுக்கு மிட்டாயைத் தான் கமர்கட்டுனு சொல்றாங்களோனு நினைச்சேன்.
Deleteவாட்ச் மிட்டாய் ஊரில் சின்ன பிள்ளையா இருந்தப்போ சந்தைல பார்த்தது ..
ReplyDeleteஅந்த இலந்தை அடை ஸ்வீட்ன்னு ஒன்னு அப்பா கும்பகோணம் பக்கம் வேலை செய்தப்போ வாங்கி வருவார் ஆனா நான் சாப்பிட்டதே இல்லை
வாட்ச் மிட்டாய் எங்கப்பா வாங்கக் கூடாதுனு சொல்லிடுவார். அதிலே சர்க்கரைப் பாகு கெட்டியாக ஆக ஏதோ சேர்க்கிறாங்கனு சொல்வார்.
Deleteஇலந்தை அடை நான் சாப்பிட்டதே இல்லை! அதனால் அதைப் பத்திச் சொல்லலை!
Deleteவாட்ச் மிட்டாய் ஊரில் சின்ன பிள்ளையா இருந்தப்போ சந்தைல பார்த்தது ..
ReplyDeleteஅந்த இலந்தை அடை ஸ்வீட்ன்னு ஒன்னு அப்பா கும்பகோணம் பக்கம் வேலை செய்தப்போ வாங்கி வருவார் ஆனா நான் சாப்பிட்டதே இல்லை
ஆரஞ்சு மிட்டாய் பல்லி மிட்டாயிலாம் சாப்பிட்டிருக்கேன் ..
ReplyDeleteசின்னத்தில் இப்போ ஸ்வீட்ஸ் என்றால் எப்பவாது சாப்பிடுவது புளி imli ஸ்வீட் ஏர் இந்தியா பிளைட்ல தர பாரம்பரிய ஸ்வீட்
ஸ்வீட் மெமரிஸ் நிறைய வருதே :)
புளி ஸ்வீட்? ஏர் இந்தியாவில்? வெளிநாடு செல்லும்போது கொடுக்கிறாங்க போல! உள்நாட்டுப் பயணத்தில் கொடுப்பதில்லையே! ஒரு தரம் ரசமலாய் கொடுத்தாங்க! :)
Deleteநம்ம பொருட்காட்சில நார்த் இந்தியன் ஸ்டாலில் ஒரு பாக்கெட் 200 இருக்கும் வாங்கி வந்தேன் ..அதில் உப்பு இனிப்பு துளி காரம் இருக்கும் :) பாம்பே டு சென்னை ட்ரிப்பில் ஜெட் ஏர்வேஸிலும் கொடுத்தாங்க
Deleteம்ம்ம்ம்ம், ஜெட் ஏர்வேஸில் மிட்டாய் கொடுக்கலை எங்களுக்கு! சாக்லேட் கொடுத்தாங்க! :) சான்ட்விச்சும் ஜூஸும் நல்லா இருந்தது. மற்றபடி சாப்பாடு தான் பாஸ்தா கொடுத்துட்டாங்க! எங்களுக்குப் பாஸ்தா அவ்வளவாப் பிடிக்கலை! :)
Deleteபஞ்சு மிட்டாய், கமர்கட்,தேங்காய் மிட்டாய், ம்ம்ம். எல்லாம்
ReplyDeleteமதுரையோடு போய்விட்டது மிக நன்றி கீதா.
ஆமாம், எல்லாம் மதுரையோடு சரி!
Deleteசூட மிட்டாயில் மின்ட் வாசனை அடிக்கும். இந்தவகை மிட்டாய்கள் பெரும்பாலும் திருவிழாக்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றன! தேன் மிட்டாயை விட்டு விட்டீர்களே...
ReplyDeleteதேன் மிட்டாய் மைதாவில் செய்யறதுனு சொல்வாங்க! அது மிட்டாயோடு சேருமானு சந்தேகம். அதோடு நான் சாப்பிட்டதில்லை! சாப்பிடாத ஒன்றைச் சொல்ல வேண்டாம்னு விட்டுட்டேன். :)
Deleteஆஹா வகை வகையாய் மிட்டாய்கள். இப்பவும் இதில் சில கிடைக்கின்றன - திருவரங்கத்தில் நேற்று கூட ஒரு கடையில் பார்த்தேன்!
ReplyDeleteம்ம்ம்ம்ம், எல்லோருக்கும் மலரும் நினைவுகள்!
Deleteமிட்டாய் !மிட்டாய் ! கோழி முட்டை போன்று மிட்டாய் இருக்கும் 10 பைசா தின்னு முடிக்க நெடுநேரம் ஆகும் குச்சி மிட்டாய் கலர் குச்சிகள் போல் மிட்டாய் உண்டு, சிகரெட் போலவே மிட்டாய் உண்டு. சூட மிட்டாய் நன்றாக ஓட்டை உள்ளது உண்டு இப்போது வீட்டில் இருக்கிறது பின்பு படம் எடுத்து போடுகிறேன்.
ReplyDeleteசுக்கு மிட்டாய் என்பதை பார்க்கும் போது கொக்கோ மிட்டாய் போல் உள்ளது.
ஆரஞ்சு வில்லை மிட்டாய் இப்போது கிடைக்கிறது ஆனால் பழைய சுவை இல்லை. கமர்கட் இப்போது மிக சின்னதாய் தட்டையாக சுக்கு மிட்டாய் (உங்கள் படத்தில் உள்ளது போல்) கிடைக்கிறது. பல்லுக்கு வலு வேண்டும் அதை தின்ன.
ஆமாம், அந்தக் கோழி முட்டை மிட்டாய்க்குள் வேர்க்கடலை வைச்சிருப்பாங்க இல்ல??குச்சி மிட்டாய், சிகரெட் மிட்டாய் ஆகியனவும் பார்த்திருக்கேன். சுக்கு மிட்டாய் என்பது நாங்க பார்த்த வரைக்கும் சுக்கைப் பொடி செய்து முற்றிய வெல்லப்பாகில் கலந்து உருட்டி இப்படித் தட்டையாக வைச்சிருப்பாங்க. கொக்கோ மிட்டாய் வேறே. மதுரையில் மேலமாசி வீதியில் ஒரு கடையில் முன்னே நல்லா இருக்கும். கமர்கட் சாப்பிட்டதில்லை. இந்தச் சுக்கு மிட்டாயைத் தான் கமர்கட்டுனு சொல்றாங்கனு நினைச்சேன். அது வேறே போல!
Deleteவந்துட்டேன். நக்கீரன் மாதிரி குற்றம்தான் கண்ணுல படுது.
ReplyDeleteசூட மிட்டாய் - கொஞ்சம் கற்பூர வாசனை இருக்கும். மின்ட் வாசனை வராது. நடுல ஓட்டை உள்ளதும், ஓட்டை இல்லாத வெள்ளை கலரிலும் வாங்கியிருக்கிறேன். புதினா வாசனையோட ஹார்ட் சாக்லேட்டாக (Candy) கிடைக்கும்.
நீங்கள் படத்தில் போட்டிருப்பது, வேர்க்கடலையைப் பொடியாக்கிச் செய்கிற வேர்க்கடலை சிக்கி. அது கமர்கட் அல்ல. கமர்கட் கொப்பரைத்தேங்காய், வெல்லத்தில் செய்வது. இப்போ ராஜம் பிராண்டுல கிடைக்கிறது. சென்னைல அம்பிகால சின்ன சைஸுல கிடைக்கிறது. ஓரளவு நல்லது பாண்டிச்சேரி அமுதம் அங்காடி பக்கத்துல டெல்லி நன்னாரி சர்பத் கடையில் கிடைக்கிறது. நான் வாங்கினபோது பெரிய சைஸ் 12-15 உள்ள பாக்கெட் 20 ரூ என்று ஞாபகம். ஆனால், கமர்கட் சாப்பிட்டு (இரவில்) பல்துலக்காமல் படுத்துக்கொண்டால், பல் கெட்டுப்போகும் (இது என் அனுபவம்) இந்த கமர்கட், 1 பைசாவுக்கு 1, 1973ல். (டெல்லி நன்னாரி சர்பத் கடையில் நன்னாரி எசென்ஸ் பாட்டில் ஒன்று 100 ரூக்குள் என்று ஞாபகம். ரொம்ப அட்டஹாசமாக இருக்கும். மற்ற பிராண்டுகளைவிட மிகவும் தரமானது)
சின்ன வயதில் ஆரஞ்சு மிட்டாய், கலர் கலராக சிறியதாக இருக்கும் Candy இவைகளை உபயோகப்படுத்தி எனக்கு 2-3 படிக்கும்போது எங்க அப்பா கணக்கு சொல்லிக்கொடுப்பார். இப்போ கேரளாவிலிருந்து Quality பிராண்டு, நல்ல ஆரஞ்சு மிட்டாய்களை பாக்கெட்டில் விற்கிறார்கள் (இங்கு கிடைக்கிறது)
கோகுலம் படிக்கிற வயசுல, அதில் கடைசி பக்கத்தில் பாப்பின்ஸ் மிட்டாய் விளம்பரம் வரும். பாப்பின்ஸும் ரொம்ப காலம் பிடித்தது. இப்போதும் கிடைக்கிறது.
தேன் மிட்டாய் சாப்பிடாத சிறுவர்கள் உண்டா? இப்போதும் நான் சென்னையில் தேன் மிட்டாய் 2 பாக்கெட் வாங்கிவருவேன்.
இப்போ கோவில்பட்டி கடலை மிட்டாய் என்று சொல்லி நிறைய ஃப்ராடு மிட்டாய்கள் வருகின்றன. தேன்மிட்டாயும் கடலைமிட்டாயும் மிஸ்ஸிங்.
ஆமாம், கற்பூர வாசனை வரும் சூட மிட்டாய்களும் உண்டு. மின்ட் வாசனையோடு உள்ளவையும் உண்டு. ஓட்டை போட்டே நான் பார்த்திருக்கேன். புதினா வாசனை கான்டி இப்போதைய பாப்பின்ஸ் மாதிரி வரும். கமர்கட் நான் சாப்பிட்டதில்லை. ஆகவே பல்லைப் பற்றிப் பிரச்னை இல்லை. ஹிஹிஹி, தேன் மிட்டாய் சாப்பிட்டதில்லை. கோவில்பட்டி கடலை மிட்டாயும் சரி, மும்பை செல்லும் வழியில் கிடைக்கும் லோனாவாலா சிக்கியும் சரி! சாப்பிட்டவரை அப்படி ஒண்ணும் பெரிசாச் சொல்லும்படி இல்லை. :) கடலை மிட்டாய் இப்போவும் வாங்கிச் சாப்பிடுவோம்.
Deleteபணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
ReplyDeleteமிட்டாய்களைப் பார்த்ததும் பள்ளிக்காலம் நினைவிற்கு வந்தது. ஆரஞ்சு மிட்டாய்க்காக நண்பர்களுடன் சண்டை போட்டது இன்னும் நினைவிலுள்ளது.
உங்கள் பணி நிறைவு குறித்து அறிந்திருந்தேன். இனி தொடர்ந்து வருவீர்கள் என எதிர்பார்க்கிறேன். உங்கள் பதிவையும் வந்து படிக்கிறேன். ஆரஞ்சு மிட்டாய் சாப்பிடாதவர்களே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.
Deleteஇப்போதும் இம்மாதிரி மிட்டாய்களை சாப்பிட விருப்பம் கூடவே கூச்சம்
ReplyDeleteநான் அந்தக் கூச்சம் எல்லாம் படுவதே இல்லை பேருந்துப் பயணங்களில் கட்டாயமாய் ஆரஞ்சு மிட்டாய்களோ நெ.த. சொல்லி இருக்கும் புதினா வாசனை கான்டிகளோ கட்டாயமாய்க் கையில் வைச்சுப்பேன். சாக்லேட்டும் சாப்பிடுவேன். வேணும்னே கேட்டு வாங்கிப்பேன். :))))
Deleteஅழகான மிட்டாய்கள் - அதற்குள்
ReplyDeleteகலக்கப்பட்ட நிறங்கள் மற்றும் ஏனையவை
உடல் நலத்திற்குக் கேடாகலாம்
எச்சரிக்கை தேவை!
ஜவ்வு மிட்டாயின் நிறச் சேர்க்கை கொஞ்சம் யோசிக்க வேண்டியவையே! மற்றவை இயற்கையான வண்ணம் கலந்தவை என அட்டையில் போடுகிறார்கள். இருந்தாலும் எச்சரிக்கை தேவை தான். நன்றி.
Deleteமிட்டாய்கள் சூப்பர்! அதிலும் ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டு வாயெல்லாம் பிங்காகி...வீட்டில் திட்டு வாங்கியதுண்டு...
ReplyDeleteகீதா: தேன் மிட்டாய் பற்றிச் சொல்லலியே. இப்போது தேன் மிட்டாயும் ஒரு சில கலர்களில் கிடைக்கிறது. கமர்கட் அல்லஅது...ஆரஞ்சு மிட்டாய் நிறைய சாப்பிட்டதுண்டு. பெப்பர்மின்ட் என்று சொல்லப்படும் சூஅட மிட்டாய்கள் நடுவில்ஓட்டையுடனும் வரும்..பாபா கோயில்களில் நார்த் கோயில்களில் சீனிக் கட்டிகள் போன்று மிட்டாய்கள் தருவதுண்டு...பார்க்கப் பொரித்த நெற்பொரி போல இருக்கும்....எல்லா மிட்டாய்களும் இப்போதும் சாப்பிட ஆசைதான் ஆனால் நான் ரொம்ப ஸ்வீட் கேர்ள் ஆச்சே!!!