மீண்டும் ஓர் அருமையான தமிழ்ப்படம், அதிலும் மிகவும் மன முதிர்ச்சியோடு கூடியதொரு கதைக்கரு! முதியவர்கள் தங்கள் மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் இருக்கையில் நடக்கும் யதார்த்தங்கள். அதனால் வரும் மனஸ்தாபங்கள். முதியவரின் குற்ற உணர்ச்சி! அதனால் தன் பழைய வாழ்க்கையை, காதலைத் தேடிப் போகும் முதியவர்! முழுக்கதையையும் சொல்லிடலாம். ஆனால் படம் பார்க்கையில் அதன் ருசி குன்றி விடும்.
முதிய பவர் பாண்டியாக ராஜ்கிரணும், இளவயது பவர் பாண்டியாக தனுஷும் நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் ராஜ் கிரணே வந்தாலும் அது சலிப்புத் தட்டாதபடிக்கு அசத்தி இருக்கிறார் ராஜ்கிரண். அதிலும் அவருடைய பக்கத்து வீட்டு இளைய நண்பனாக நடித்திருக்கும் இளைஞன் கலக்கல்! யார்னு தெரியலை. ராஜ்கிரணின் பிள்ளையாக பிரசன்னா! அவர் மனைவியாக நடித்திருக்கும் நடிகையும் (ஹிஹிஹி, பெயர் தெரியாதுங்க) அருமையாக நடிப்பை வெளிப்படுத்துகிறார். ராஜ்கிரணின் பேத்தி சும்மா வந்து போகிறாள். ஆனால் பேரன் கலக்கி விட்டான்.
ராஜ்கிரணின் முதல்காதலியாக முதிர்ந்த வயது பூந்தென்றலாக வரும் ரேவதியின் பார்வையே ஆயிரம் கவிதைகளைச் சொல்கிறது. அதிலும் அந்த ஹைதராபாத் போக்குவரத்தில் சகஜமாக ராஜ்கிரணின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடந்ததும் பின்னர் கையை விட்டதும் அவரின் ஸ்பரிசம் தந்த உணர்வால் திக்பிரமித்து நிற்கும் ராஜ்கிரணை ஒருபார்வையால் அழைப்பார் பாருங்க!
ஒரே காட்சியில் வந்தாலும் டிடி கலக்கல்! தொலைக்காட்சி மட்டுமில்லாமல் திரைப்படத்திலும் கலக்குவேன் என நிரூபித்திருக்கிறார். ராஜ்கிரண் தன் மனதில் உள்ள அழியாக் காதலைச் சொன்னதும் ரேவதியின் முகமும், ராஜ்கிரணின் முகபாவமும் காட்டும் உணர்ச்சிக்கலவை இருவரும் அந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்திருப்பதைச் சொல்கிறது. ராஜ்கிரணை மறுநாள் தன் வீட்டுக்கு மதிய உணவுக்கு ரேவதி அழைக்கையில் கிளைமேக்ஸ் அதுதான் எனப் புரிந்தாலும் ரேவதியின் மகளுக்கு ஏதோ பிரச்னையோ என நினைக்கத் தோன்றியது ஒரு கணம். ஆனால் அதன் பின்னர் தான் தன் மகளுடன் தன்முதல் காதலைப் பற்றி ரேவதி கலந்து பேசுகிறார். அப்போ டிடியைப் பார்த்ததும் முடிவு என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைத்தது.
இளவயது பவர் பாண்டியாக வரும் தனுஷ் அடக்கி வாசித்திருக்கிறார். அவர் காதலியாக வரும் நடிகையும் கண்பார்வையிலும் புன்சிரிப்பிலுமே தன் காதலைக் காட்டி இருக்கிறார். வெகு இயல்பாக தனுஷ் ஊரில் தன்னை வம்பிழுக்கும் இளைஞர்களை தனுஷ் அடிப்பதை ஏதோ தினம் தினம் நடக்கும் ஒன்று போல ரசிக்கும் காட்சி அருமை! அந்த அந்த ஊர்களுக்கான நிஜமான மனிதர்களைப்பதிவு செய்திருப்பதில் தனுஷின் திறமை வெளிப்படுகிறது. கிராமத்துக்காட்சிகளெல்லாம் அதிகமாக செயற்கைத் தனம் இல்லாமல் இயற்கையான சூழ்நிலையிலேயே படமாக்கப்பட்டிருப்பதும் ஒளிப்பதிவாளரின் திறமையே!
ராஜ்கிரணின் மகனாக வரும் பிரசன்னாவும் வழக்கம் போல் தூள் கிளப்பி இருக்கிறார். அப்பாவைக் கோபிக்கையிலும் அப்பா வீட்டை விட்டுச் சென்றதும் தேடி அலைவதும் உருகுவதும் அப்பா, மகனின் பாசத்தை எடுத்துக் காட்டுகிறது. அதிலும் தன் மகன், "நீ என் அப்பா! உன்னை நான் கோபித்துக் கொண்டால் நீ என்ன செய்வே? நீ மட்டும் உன் அப்பாவிடம் இப்படிக் கடுமையாக நடந்துக்கலாமா?" என்னும் பொருள்படும்படி கேட்கும்போது குற்ற உணர்ச்சியை முகத்தில் நன்றாகக் காட்டுகிறார். குழந்தைகள் நடிப்பில் அதிகப்பிரசங்கித் தனம் இல்லாமல் இருப்பதும் ஓர் சிறப்பு!
முதியவர்கள் மனநிலைக்கு இந்தக்காலத்து மகன்கள், மகள்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதே இந்தப் படத்தின் முக்கியக் கரு! இன்றைய காலகட்டத்தில் தேவையானதும் கூட. வெகு நுணுக்கமானதொரு கருவை மிக அநாயாசமாகக் கையாண்டிருக்கும் தனுஷுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஒரு காதல் காட்சியோ, கன்னா, பின்னா உடைகளோ இல்லாமல் வெகு இயல்பான உடையிலேயே அனைவரும் நம் கண்ணெதிரே உலவுகின்றனர். மனதுக்கு நிறைவான படம். குடும்பத்தோடு தைரியமாகப் படத்தைப் பார்க்கலாம் என்பதோடு படம் ஒவ்வொருவர் மனதிலும் கேள்விகளைப் பிறக்க வைக்கும்! சிலருக்குக் குற்ற உணர்வு பிறக்கலாம். சிலர் நாம் ஒழுங்கா இருக்கோம்னு நினைக்கலாம்.
இன்னும் ஒரு படமும் பார்த்தேன்! ஹிஹிஹி, இப்போச் சொல்லலை! :)))) எங்கே, எல்லோரும் வந்து கண்ணு வைங்கப்பா!

பார்க்க நினைத்திருக்கும் படம்...
ReplyDeleteபாருங்க, பாருங்க! :)
Deleteமறுபடியும்! ஆனால் இந்தமுறை தமிழ்!
ReplyDeleteஇந்தப் படம் நல்லாயிருக்கு என்று எல்லோரும் சொல்கிறார்கள். பார்க்கும் தைரியம்தான் இல்லை. ம்ம்ம்... பார்ப்போம்.
ம்ம்ம், இந்த மாதிரித் தமிழ்ப்படங்கள் வந்தால் பார்க்கலாமே! தைரியமாப் பார்க்கலாம். அந்த இன்னொரு படம் "டோரா!" :)))))
Deleteஉண்மையான விமர்சனம்போல் இருக்கிறது.
ReplyDeleteஆமாம், நன்றி கில்லர்ஜி!
Deleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteநன்றி கோமதி!
Deleteஇந்தக் படத்தை இன்னும் பார்க்கலை. பார்த்துட்டு விமரிசனம் படிக்கிறேன். உணவுக்கு தனியா ஒரு தளம் வச்சிருக்கறமாதிரி பழைய (அல்லது தியேட்டரைவிட்டு ஓடிய படங்கள் அல்லது உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக படங்கள்) படங்களின் விமரிசனம் சல்லிசாக்க் கிடைக்குமிடம்னு ஒரு தளம் ஆரம்பிச்சிடலாம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
வாங்க நெ.த. இங்கே சினிமா பார்ப்பதாலே இப்படிச் சொல்றீங்க போல! இந்தியா போயாச்சுன்னா தொலைக்காட்சி பார்க்க உட்காருவதே ஒரு நாளைக்கு அரைமணியிலே இருந்து ஒரு மணி நேரம் தான்! :) பயப்படாதீங்க! :P :P
Deleteஇன்டெரெஸ்டா உணவுல என்ன போட்டிருக்கீங்கன்னு நான் (நிச்சயம் நிறையப்பேர்) படிப்பேன். அதுல ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவைன்னு பதிவு போடறீங்க. அதுல அடிக்கடி போடுங்க. (இதுதான் எல்லோருக்கும் தெரிஞ்சதுன்னு நினைக்காதீங்க. நீங்க எப்படிப் பண்ணுவீங்கன்னு எழுதுங்க, படம் இல்லாவிட்டாலும்)
Deleteபோடணும் நெ.த. கணினி பக்கம் வரக் கொஞ்சம் முடியலை! அதோடு சில பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொன்னதுமே இரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது! :))) இந்தியா போனதும் எல்லாம் நடைமுறைக்கு வரும்னு எதிர்பார்க்கிறேன். :)
Deleteநானும் பார்த்தேன் என் மகளோடு :)
ReplyDeleteஎங்க வீட்டு குட்டி எலி கிட்ட பாராட்டு வாங்கறது பெரிய விஷயம் ..நல்லா ரசிச்சா படத்தை
ஆமாம் குடும்பத்தோடு பார்க்கும் படங்கள் வருவது அபூர்வமே ..அதில் இது சூப்பர்
உண்மையிலேயே அருமையான படம் தான்! ஒரு சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அவை கதையோடு ஒட்டியே வருது! உதாரணமா முகநூலில் ரேவதி போட்ட படத்தைப் பவர் பாண்டியின் பேரன் பார்ப்பது! அவனோட நண்பருக்கு ரேவதி நண்பர்னோ அல்லது வேறே யார் மூலமாகவோ அந்தப் படம் அவனுக்கு வந்திருக்குனு வைச்சுக்கலாம். அதே போல் ஷூட்டிங் முடிஞ்சு வரும் பவர் பாண்டி தெருவிலேயே ஆடுவது, பாடுவது! அந்தக் காட்சியும் ஹைதராபாதில் மாலில் நடக்கும் சண்டைக்காட்சியும் தேவையில்லைனு தோணும்! :)))
Deleteஸ்ரீரங்கம் வந்தால் இத்தனை படங்கள் பார்க்க முடியுமா
ReplyDeleteநிச்சயம் முடியாது! அங்கே நெட்ஃப்ளிக்ஸோ, யப் ஃப்ளிக்ஸோ கிடையாது! சோனியும், ஜீ டிவியும் தான். போட்டதையே திரும்பத்திரும்பத்திரும்பத் திரும்பப் போடுவாங்க! :)
Deleteநல்ல விமர்சனம்,நேரம் வாய்க்கும் போது படத்தை பார்க்கவேண்டும் அவசியம்.
ReplyDeleteநன்றி விமலன் பேரலி/பேராளி? பேராலி? முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteநல்ல படம்... அருமையான விமர்சனம் அம்மா...
ReplyDeleteநன்றி டிடி.
Deleteபார்க்க ஆசையைத் தூண்டும் மதிப்பீடு. நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா. கட்டாயம் நேரம் கிடைக்கையில் பாருங்கள்.
Deleteநான் எப்போதுமே நகைச்சுவைப் படங்கள் மாத்திரமே பார்ப்பேன். சீரியசான படங்கள் எதுவுமே பார்ப்பதில்லை.
ReplyDeleteஎன்றபோதிலும் உங்களின் இந்த விமர்சனம், தனுஷின் இப்படத்தைப் பார்க்கத் தூண்டியுள்ளது.
வாங்க ராஜீவன், முதல் வருகைக்கு நன்றி. எனக்கும் நகைச்சுவைப் படங்கள், நகைச்சுவை கலந்த த்ரில்லர் படங்கள், த்ரில்லர் படங்களே பிடிக்கும். ஆனால் இந்தக் கதைக்கரு அருமை! மிக நுணுக்கமான ஒன்றை உணர்வு பூர்வமாக அணுகி இருப்பதைப் பாராட்டத்தானே வேண்டும்!
Deleteஅக்காவ் அமெரிக்கா போனதும் படங்கள் பார்க்கறீங்க போல!!!! நீங்களே சொல்லிட்டீங்க. பானுக்காவும் நல்லாருக்குனு போட்டிருக்காங்க பார்த்துட வேண்டியதுதான்
ReplyDeleteகீதா
வாங்க கீதா. படம் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன்.
Deleteகீதா மாமி நலமா (மாமின்னு கூப்பிடலாமா?) எனக்கு வயது இந்த மாதம் 29ம் தேதியுடன் 62 முடிகிறது.
ReplyDeleteமுக்திநாத் போகும் முன் உங்கள் கைலாஷ் யாத்திரை படித்தேன். ரொம்ப உபயோகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.
நான் சினிமா ரொம்ப பார்ப்பதில்லை. ஆனால் உங்கள் விமர்சனம் இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. ஏன்னா நானும் 2 பேத்திகள், பிள்ளை, நாட்டுப் பெண்ணுடன் வசிப்பவள். பார்த்து விட்டு மீண்டும் வரேன்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எங்காத்துக்கும் அதான் என் வலைத்தளத்துக்கும் வாங்கோ
http://aanmiigamanam.blogspot.in/2017/05/1.html
http://manammanamveesum.blogspot.in/2017/05/blog-post_14.html
வணக்கம் ஜெயந்தி. உங்களை முகநூலிலும் பார்க்கிறேன். உங்களை விட நான் 3 வயது மூத்தவள். ஆகையால் உங்கள் விருப்பம் போல் அழைக்கலாம். உங்க வலைத்தளத்துக்கும் வரணும். வருகிறேன். வரவுக்கும் கருத்துக்கும் அழைப்புக்கும் நன்றி.
DeleteGood review!
ReplyDeleteநன்றி.
DeleteSuper review !!! i followed and watched !!! nice movie :) next Badrinath ki dulhaniya
ReplyDeleteவாங்க நாஞ்சிலாரே, அங்கேருந்து வந்தாச்சு. அதனால் பத்ரிநாத் கி துலனியால்லாம் எப்போப் பார்ப்பேனோ தெரியாது! :)
Delete