எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 23, 2017

சொர்க்கத்துக்குத் திரும்பியாச்சு!

கடந்த பதினைந்து நாட்களாகவே தொடர்ந்து வேலை மும்முரம். நடுவில் குழந்தையுடன் பொழுதுபோக்கு என்று நாட்கள் கழிந்து விட்டன. ஞாயிறு அன்று 21 மே மாதம் அங்கிருந்து கிளம்பியாச்சு! இதோ இன்று காலை ஏழு மணி அளவில் ஶ்ரீரங்கம் வந்து சேர்ந்தாச்சு! வீட்டைச் சுத்தம் செய்ய ஆட்கள் வந்திருக்கின்றனர். இதுக்கு நடுவில் அலைபேசி இணைப்பு வேலை செய்யாமல் அங்கே அம்பேரிக்காவில் பையர், பெண்ணுக்கு நாங்க வந்து சேர்ந்துட்டோமானு கவலை. ட்ராவல்ஸ்காரரைத் தொடர்பு கொண்டு எங்களுடன் பேசினார்கள். குழந்தையை விட்டுட்டு வந்தது தான் கொஞ்சம் இல்லை, நிறையவே வருத்தம்! ஆனால் அங்கேயே உட்காரவும் முடியாது. இங்கே முக்கியமானதொரு கடமையை முடிக்கணும்.

இன்னிக்கு என்னுடைய பிறந்த தேதி! ஹிஹிஹி, வழக்கம்போல் ஏப்ரல் மாதத்தில் என்னுடைய சான்றிதழ்களில் இருக்கும் பிறந்த தேதி வந்துட்டுப் போயாச்சு. ஆனால் ஒரிஜினல் அக்மார்க் பிறந்த தினம் இன்று தான். கிழமையும் தேதியும் இந்த வருடம் சேர்ந்தே வந்திருக்கு! நக்ஷத்திரம் தனியாக வரும்! அப்போவும் கொண்டாடிடுவோம். முகநூல் மூலமும் வாட்ஸப் மூலமும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! யாருடைய பதிவையும் படிக்கவில்லை. மெதுவாக வருவேன். :) தப்பாய் எடுத்துக்காதீங்க! 

45 comments:

  1. இன்றைக்கு நிஜமான பிறந்ததேதியா? நக்ஷத,திர பிறந்தநாள் இல்லையே? என் ஹஸ்பண்டுக்கும் இன்றுதான் பிறந்தநாள். அதனால் இனி மறக்காது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் துணைவியாருக்கும் என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், ஸ்வாமீ. :)

      Delete
    2. இந்த நாள் (MAY-23) என்னாலும் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாததோர் நாள்தான்.

      Delete
    3. நன்றி கோபு சார். நீங்க இந்த நாளில் என்ன முக்கியத்துவம் என்று சொன்னால்தானே நாங்களும் நினைவு வைத்துக்கொள்ளலாம் (முதல் முதல் பணி கிடைத்த நாள், திருமண நாள், முதல் (அல்லது கடைசி) குழந்தை பிறந்த நாள், ஓய்வு பெற்ற நாள், மகனின் திருமண நாள் என்று எவ்வளவோ முக்கியமான நாட்கள் இருக்கின்றனவே.

      Delete
    4. நெல்லைத் தமிழன் 24 May, 2017

      நீங்க இந்த நாளில் என்ன முக்கியத்துவம் என்று சொன்னால்தானே நாங்களும் நினைவு வைத்துக்கொள்ளலாம்

      இதற்கான என் பதில் தங்களுக்குத் தனி மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது, ஸ்வாமீ. - vgk

      Delete
    5. மே 23 உண்மையான பிறந்த தேதி. ஆனால் பாஸ்போர்ட், ஆதார் கார்ட், ரேஷன் கார்ட் போன்றவற்றில் எஸ் எஸ் எல்சி, சான்றிதழில் கொடுத்திருக்கும் தேதி தான் இருக்கும். வருஷம், மாசம் தேதி எல்லாமே கூடப் போட்டிருப்பாங்க அந்தக்கால வழக்கப்படி! :))))

      Delete
    6. வைகோ சார், உங்களுடைய கல்யாண நாளா?

      நெ.த. உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துகள், ஆசிகள்.

      Delete
    7. கீதா சாம்பசிவம் மேடம். எனக்கும் அதேதான். உண்மையான பிறந்த நாள் வேறு. டாக்குமென்டில் இருப்பது வேறு. எல்லாம் 1ம் வகுப்பு சேர்ப்பதற்காகத்தான் இருக்கும் (5 வயது முடிஞ்சிருக்கணும் என்பதால்)

      Delete
  2. இவ்வளவு காதையில் பதிவும் போட்டாச்சு. பிறந்தநாள் வாழ்த்துகளையும்,ஆசிகளையும் உங்களுக்கு இடையே தெரிவித்துக் கொள்கிறேன். அடேடே. நெல்லைத்தமிழன் ஹஸ்பெண்டிற்கும் வாழ்த்துகள். ஸரி அமெரிக்காவில் பேரனா,பேத்தியா? விவரம் புரிந்து கொள்ளவே இல்லை. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் பிள்ளைக்குப் பதினோரு வருடங்கள் கழித்துப் பெண் குழந்தை பிறந்து ஒன்பது மாசம் ஆகிறது அம்மா. :)

      Delete
    2. இந்தமாதிரி செய்தியாக நீங்கள் எழுதவேண்டுமென்றுதான் பார்த்தேன். மிக்க ஸந்தோஷமான செய்தி. வாழ்த்துகள். அன்புடன்

      Delete
    3. நன்றி அம்மா. கிட்டத்தட்ட தவம் இருந்து பிறந்திருக்கும் குழந்தை! விட்டு விட்டு வர மனசே இல்லை! :(

      Delete
  3. நிஜமான பிறந்தநாளுக்கு நிஜமான வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  4. Replies
    1. என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  5. வாங்கோ வாங்கோ
    வெல்கம் டு இந்தியா,
    வெல்கம் டு திருச்சி,
    வெல்கம் டு ஸ்ரீரங்கம்,
    வெல்கம் டு மை ப்ளாக் ஆல்ஸோ

    தங்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகோ சார்! இங்கே வெயில் தான் தாங்க முடியலைனாலும், அதுவும் வேண்டித் தான் இருக்கு.

      Delete
    2. உங்க ப்ளாகுக்கு வரேன், வரணும்.

      Delete
  6. மனமார்ந்த வாழ்த்துகள் அம்மா...

    ReplyDelete
  7. இங்கேயும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் கொள்கிறேன். வெல்கம் பேக்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஶ்ரீராம், ஒவ்வொரு புடைவையாகக் கட்டிக்கணும்! :)

      Delete
  8. நல்வரவு மற்றும் பிறந்தநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்!

    ReplyDelete
  9. மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ/ கீதாக்கா. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட இறைவனை வேண்டிக் கொண்டு வாழ்த்துகள்!
    மெதுவாக வாருங்கள் அவசரமில்லை....உடல் நலத்தையும் பார்த்துக் கொண்டு வாருங்கள். ஜெட்லாக்??

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஜெட்லாக். அதோடு இல்லாமல் வீட்டில் சாமான்களை ஒதுங்க வைக்கும் வேலை நெட்டி வாங்குகிறது! :)

      Delete
  10. முகநூலில் வாழ்த்தி இருக்கிறேன் இப்போது இங்கும் நீடுழி வாழ்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. நமஸ்காரங்கள்.

      Delete
  11. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கீதா மாமி. சாவகாசமாக நேரம் கிடைக்கும் போது என் வலைத் தளத்துக்கு வாங்கோ.

    //குழந்தையை விட்டுட்டு வந்தது தான் கொஞ்சம் இல்லை, நிறையவே வருத்தம்! //

    இருக்காதா? 10 நாள் இங்க இருக்கற சிதம்பரத்துக்கு ரெண்டு பேத்தியும் போயிருக்கா. அதுவே கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் வரணும் ஜெயந்தி! கொஞ்சம் பொறுத்துக்குங்க.

      Delete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன்

      Delete
  13. மனமார்ந்த வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      Delete
  14. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. Replies
    1. நன்றி பானுமதி வருகைக்கும் வரவேற்புக்கும்.

      Delete
  16. Happy Birthday akka :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சலின்.

      Delete
  17. 22-லிருந்து 24 வரை நான் ஸ்ரீரங்கத்தில்தான் - வடக்கு அடையவளஞ்சான் தெருவில்-தான் இருந்தேன். நீங்கள் வந்துவிட்டது தெரிந்திருந்தால் வந்து பார்த்திருக்கலாம். இப்போதுதான் வலைப்பக்கங்களுக்குள் நுழைகிறேன். என்ன செய்வது.

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்து எப்போ வருவீங்கனு சொல்லுங்க! கட்டாயமாய்ப் பார்க்கலாம். நாங்க 23-ந்தேதி காலை வந்தோம். வந்த அன்னிக்கு வீட்டிற்குள் நுழையவே முடியலை! ஆகவே அன்றும் மறுநாளும் வீட்டைச் சுத்தம் செய்யும் வேலை. நடுவில் வாழ்த்துகள் தொடர்ந்து வரவே கணினிக்குக் கொஞ்ச நேரம் வந்தேன். அடுத்த முறை கட்டாயமாய்ச் சந்திக்கலாம்.

      Delete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை முகநூலில் சொன்னேன்.
    நலமா? குழந்தை துர்கா, அப்பு நினைவுகள் கொஞ்ச நாள் கஷ்டமாய் இருக்கும்.
    மறுபடியும் ஸ்கைப்பில் பேசினால் சரியாகிவிடும். ஓய்வு எடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, நிறையப் பேருக்குத் தனியாக நன்றி சொல்ல முடியலை! மன்னிக்கவும். குழந்தை நினைவு தான் வாட்டி எடுக்கிறது. அப்பு விட்டால் இங்கே எங்களோடு வந்து இருப்பாள்! ஆனால் பள்ளிக்கூடம் மட்டும் இந்தியாவில் வேண்டாம்னு சொல்றா! :)

      Delete