Dhanvanthri Homam Picture
மறுநாள் காலை எழுந்து கொண்டு ஓட்டலில் கொடுத்த காம்ப்ளிமென்ட்ரி காஃபியைக் குடித்தோம். எனக்கு மட்டும் ரூம் சர்வீஸ் அவங்களே செய்தாங்க. இஃகி,இஃகி,இஃகி! பின்னர் குளித்துவிட்டு அன்று வியாழக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழரை வரை எமகண்டம் என்பதால் மற்ற ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ஏழேகால் மணி வாக்கில் கோயிலுக்குக் கிளம்பினோம். ரெஸ்டாரன்டில் பத்து மணி வரை டிஃபன் உண்டு எனச் சொன்னார்கள். அதுக்குள்ளே வந்துடலாம் என்று கிளம்பிவிட்டோம். காரில் மேற்கு கோபுர வாசலுக்கு வந்தாச்சு. வண்டியிலிருந்து இறங்குவதற்குள்ளாக தரிசனத்துக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லிக் கொண்டு ஆட்கள் சூழ்ந்து கொள்ள அவங்களை விரட்டுவதற்குள் போதும் போதும்னு ஆயிடுத்து. எங்களுக்குக் கட்டளை குருக்கள் இருக்கார்னு சொல்லி அவர் பெயரையும் விலாசத்தையும் சொன்னதும் வேறே வழியில்லாமல் விலகிப் போனாங்க. அங்கிருந்து நேரே அம்மன் சந்நதி/அம்பிகை தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்க, நேர் எதிரே மேற்கைப் பார்த்த வண்ணம் வைத்தியநாத ஸ்வாமியின் தரிசனம். வண்டியிலிருந்து கீழே இறங்கி எல்லோரும் அம்மன் சந்நிதியை நோக்கி நடக்க ஆரம்பிக்க என்னால் பத்துத் தப்படி நடக்க முடியலை. அதுக்குள்ளே எங்க பெண், அப்பு மற்றும் நம்ம ரங்க்ஸ் முன்னால் போயிட்டாங்க. டிரைவரை என்னை இறக்கிவிட்டுட்டு வண்டியைக் கோயில் அனுமதி பெற்றுப் பார்க் பண்ண எடுத்துட்டுப் போயிட்டார். மாப்பிள்ளை மட்டும் என்னுடன் வந்தார். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு நடக்க முயன்றாலும் முடியலை. அங்கிருந்த கோயில் கடைக்காரர்கள் என்னிடம் ஏம்மா கஷ்டப்படறீங்க? வீல் சேர் இருக்கு. இலவசம் தான் வாங்கிட்டுப் போங்க சௌகரியமா. சேரை வெளி ஆட்கள் தள்ளினால் உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க என்றார்கள்.
எங்கே கிடைக்கும் எனக் கேட்டுக் கொண்டு மாப்பிள்ளை வீல் சேர் எடுத்துவரக் கிளம்பினார். அதுக்குள்ளே ரொம்ப தூரம் போயிட்ட நம்ம குழுவினர் அங்கிருந்து ஏன் தாமதம் பண்ணிண்டு உட்கார்ந்திருக்கே! வா! வா! எனக் கூப்பிட, அவங்கல்லாம் நம்மைப் பிடி.உஷானு நினைச்சுட்டு இருக்காங்க போலனு நினைச்சுண்டேன். அங்கே இருந்து உள்ளே போனவர் ஒருத்தரிடம் வீல் சேருக்கு உட்கார்ந்திருக்கேன்னு சொல்லி அனுப்பிச்சேன். வீல் சேருக்கு டெபாசிட் 100 ரூ. அதைக் கொடுத்துட்டு வீல் சேருடன் மாப்பிள்ளை வந்தார். வீல் சேரில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டேன். வேறே ஆட்கள் வீல் சேரைத் தள்ள வந்தார்கள். ஆனால் மாப்பிள்ளை விடலை. பின்னால் நிறையப் பணம் கொண்டான்னு கேட்டால் என்ன செய்வது என அவரே தள்ளினார். ஓரிரு இடங்களில் படிகள் வந்தப்போக் கூட வந்தவர்கள் உதவி செய்தார்கள். ஒரு வழியாக குழுவினர் காத்திருந்த இடத்துக்கு வந்து அங்கிருந்து உள்ளே அம்மன் சந்நிதிக்குப் போனோம். அபிஷேஹ அலங்காரங்கள் அபபோது தான் முடிந்திருந்தது. சந்நிதிக்கு நேரே சிலர் மாவிளக்குப் போட்டுவிட்டு உட்கார்ந்திருந்தனர். அங்கேயே ஓர் இடம் தேடிக் கோலம் போட்டுவிட்டு மாவிளக்கைத் தட்டில் பரத்தி விட்டு நடுவில் குழி ழெய்து நெய் ஊற்றித் திரியைப் போட்டுப் பெண்ணை விட்டு ஏற்றச் சொன்னேன். அவங்க வீட்டில் உதிராகத் தான் மாவிளக்கு இருக்கணும். அதே போல் ஒரே திரி தான். மாவிளக்கு எரியும்போது ஸ்வாமி சந்நிதியில் காலபூஜை தீபாராதனை மணி அடித்தது. மனம் மகிழ்ச்சி கொண்டது. அங்கே இருந்தே தரிசனம் செய்து கொண்டேன். சிலர் அங்கே போனார்கள். நம்ம குழுவினர் குருக்கள் வந்ததும் போகலாம்னு இருந்துட்டாங்க. சில நிமிஷங்களில் அம்பிகைக்கும் தீபாராதனை நடக்க ஏற்பாடுகள் செய்ய, கூட்டம் வந்துடும்னு மாவிளக்கை சமாதானம் செய்து தீபாராதனை காட்டி நிவேதனம் செய்து எடுத்துக் கொண்டோம். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் படங்கள் எதுவும் இல்லை.
மாவிளக்குப் போட்டு முடிஞ்சதும் நான் அங்கேயே வீல் சேரில் உட்காரந்து கொள்ளக் கட்டளை குருக்கள் வந்து இவங்களை எல்லாம் அழைத்துச் சென்றார். எனக்கு இதான் கவலையாக இருந்தது. அங்கே உட்கார மேடையோ நாற்காலியோ கிடைக்காதே/ நம்மால் நிற்க முடியாதே/எப்படி நிற்பேன்? என்றெல்லாம் யோசித்துக் கவலையில் இருந்த எனக்கு வைத்தீஸ்வரன் நல்வழி காட்டினார். அவங்கல்லாம் மற்ற சந்நிதிகளைப் பார்த்துக் கொண்டு குருக்களிடம் பிரசாதம் பெற்றுக் கொண்டு வந்தார்கள். அதுக்குள்ளே ஒரு மாமி எனக்கு வெற்றிலை, பாக்குக் கொடுக்க அந்த மாமிக்கு பெண்ணை விட்டு வெற்றிலை, பாக்குக் கொடுக்கச் சொன்னேன். பரஸ்பரம் இது முடிந்ததும், எல்லோரும் வண்டியைத் தேடிக் கிளம்பினோம். ஓட்டலில் இருந்து கிளம்புகையில் என்னோட செல்லை எடுத்துக்கணும்னு நான் சொல்ல, வேண்டாம், அதுக்குனு ஒரு பை வேறே வைச்சுக்கணும், பேசாம வைச்சுட்டு வா என்று விட்டார்.
இப்போ என்ன பிரச்னைன்னா டிரைவரின் நம்பர் என்னோட செல்லில் மட்டும் இருந்தது. ஆகவே அவரை எப்படிக் கூப்பிடுவது?
உச்சிப் பிள்ளையார் கோயில் எங்க வளாக மொட்டை மாடியில் இருந்து பெண் எடுத்தது.
காவிரி ஒரு பார்வை மொட்டை மாடியில் இருந்து! தெற்கு கோபுரமும் எடுத்திருக்காள். ஆனால் அது என்னமோ கணினியில் அப்லோட் ஆகலை.
பெரிய ஆன்மீக ஆகஸ்ட்டாகிவிட்டது உங்களுக்கு. மாவிளக்கோடு வா என்று மாதா சொன்னபிறகு, நீங்கள் எப்படித் தப்பிப்பது! வீல்சேர் வசதி அங்கே இருந்தது என்பது நல்ல விஷயம். கோவில் மிகப்பெரியதோ? ஸ்ரீரங்கம்போல் கூட்டமெல்லாம் பயமுறுத்துமோ!
ReplyDeleteகூட்டத்தை நினைத்தாலே இறைவன் இருக்கிற இடத்திலேயே இருக்கட்டும்.. நாம் நம்ப இடத்திலே இருப்போம் எனத் தோன்றுகிறது.
உங்கள் இரண்டு கட்டுரைகளையும் இப்போதுதான் படித்தேன். மேலும் எழுதுங்கள்.
வாங்க ஏகாந்தன், முதல் வருகைக்கு நன்னி
Deleteஇப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மருமகன் இல்லை. மகனே!
ReplyDeleteநாங்க இருவரும் ஒரே ராசி, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான குணாதிசயம்
Deleteஉங்கள் மொட்டை மாடி ஒரு ஸ்பெஷல் இடம். இந்தமுறை இருட்டியபிறகு வந்ததால் அங்கு சென்று பார்க்க முடியவில்லை.
ReplyDeleteநான் மொட்டை மாடிக்குப் போயே 2, 3 வருஷங்கள் ஆச்சு ;(
Deleteசெல்லை எடுத்துக் கொண்டே சென்றிருக்கலாம்! ஏதாவது ஒரு பிரச்னை வந்து விடுகிறது பாருங்கள்..
ReplyDeleteசில சமயங்கள் மாமாவுக்கு ஓர் அசட்டுப் பிடிவாதம்
DeleteSuper. தில்லையம்பல தரிசனம். குடுகுடு என் ஓடிய காலங்கள் நினைவில் வந்துபோயிருக்கும்
ReplyDeleteமுதல் முதல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்ததும் காளீயாகுடி ஓட்டலில் சாப்பிட்டதும் பாதிரி மாம்பழத்தை ருசித்ததும் நினைவில்
Deleteமாப்பிள்ளையின் உதவி நெகிழ்ச்சி
ReplyDeleteஆமாம். இல்லைனா மோசமா இருந்திருக்கும்.
Deleteதரிசனம் சிறப்பாக இருந்ததில் மகிழ்ச்சி.
ReplyDeleteநன்னி. புது மடிக்கணீனியில் தட்டச்சு செய்வதால் ஃபோனடிக் டைப்பிங்கில் சில எழுத்துப் பிழைகள் வருது.
Deleteகீதாக்கா, எப்பவுமே செல் ஃபோன் கைல இருக்கறது நல்லதுதான்...கூட ஒரு பேக் இருக்கும்தான் ஆனா இப்ப அதுதானே வேண்டியிருக்கு ஒரு கால் பண்ணனும்னா கூட ஒரு எமர்ஜென்சினா..
ReplyDeleteமாப்பிள்ளை!!! மாஆஆஆஅ பிள்ளை பெரிய பிள்ளை உங்களுக்கு! நல்ல விஷயம் கீதாக்கா.
கீதா
ஆமாம், ஆனால் சில சமயம் மாமா வேண்டாம்னு சொல்லிடுவார். ;(
Deleteகீதாக்கா மொபைலில் எடுக்கும் ஃபோட்டோக்கள் சில கணினியில் ஏற மாட்டேங்குது. அவ்வளவு நேரம் ஏற்றும் ஆனா திடீர்னு உன் ஃபார்மேட் ஏற்க முடியாதுன்னு சொல்லுகிறது. வீடியோக்களும் அப்படி ஆகின்றன. மீண்டும் முயற்சி செய்தா சிலது ஏறுகின்றன. சில மீண்டும் ஏறமாடா. கூகுள் ட்ரைவ் வழியா முயற்சி செஞ்சு பாருங்க.
ReplyDeleteபடங்கள் எல்லாம் அருமையா இருக்கு.
கீதா
இப்போ சமீபத்தில் படங்களே எடுக்கலையா, புரியலை
Deleteமொட்டை மாடிப் படங்கள் ஆஹா!!!
ReplyDeleteகீதா
ஹெஹெஹெஹெ
Deleteஅப்புறம் என்னாச்சு? எப்படி ட்ரைவரைத் தொடர்பு கொண்டீங்க? அடுத்த பதிவில் வருமா...
ReplyDeleteகீதா
அவரே பார்த்துட்டு வந்துட்டார்.
Deleteகோயில் பிரார்த்தனைகள்நல்லபடியாக நடந்து தரிசனம் நன்றாக அமைந்தது மகிழ்ச்சி.
ReplyDeleteகீதா
நன்னி
Deleteவைத்தீஸ்வரன் கோயிலில் மருந்துருண்டை வாங்கினீர்களா? நாடிஜோதிடம் பார்த்தீர்களா? ஜடாயு குண்டத்தில் காசு போடாமல் விட்டீர்களா?
ReplyDeleteமுன்போல் மருந்துருண்டை குருக்கள் தருவதில்லை. தனியாக வியாபாரம். முன்னெல்லாம் காசு கொடுத்ததும் இல்லை. நாடி ஜோதிடம் எல்லாம் எதுக்குப் பார்க்கணூம்? அதோடு நான் அம்மன் சந்நிதியிலேயே உட்கார்ந்துட்டேன் என எழுதி இருக்கேனே? பதிவைச் சரியாப் படிக்கலை.
Deleteகடைக்காரர் வீல் சேர் விவரம் சொன்னது நல்லதாக போய் விட்டது, இல்லையென்றால் கஷ்டப்பட்டு சாமி தரிசனம் செய்து இருக்க வேண்டும்.
ReplyDeleteஉஷாவாக இருந்த காலங்கள் உண்டுதானே!
மாப்பிள்ளை அவர்கள் வீல் சேரில் அழைத்து போனது மகிழ்ச்சி.
ஊரிலிருந்து வந்தது முதல் எனக்கும் நடக்கவே முடியவில்லை, கொஞ்சம் தூரம் நடந்தாலும் கால்களில் வலி அதிகமாக இருக்கிறது.
படங்கள் நன்றாக இருக்கிறது.
படங்கள் எல்லாம் பெண் எடுத்தாள். அவள் நன்கு படம் எடுப்பாள். ஆனால் சரிவரப் பயன்படுத்துவது கிடையாது.
Deleteவீல் சேர் விஷயம் அங்கே போய்த் தான் தெரியும். இங்கேயும் ஶ்ரீரங்கத்தில் இருந்தாலும் முன்னெல்லாம் 500ரூ. இப்போக் கூடி இருக்கும்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. முதல் படம் வீட்டில் நடைபெற்ற தன்வந்திரி ஹோமமா? நல்லவேளை.. கோவிலில் உங்கள் மாப்பிள்ளை நல்லவிதமாக உங்களுக்கு உதவியிருக்கிறார். மெள்ளவே கூட நடக்க முடியாவிட்டால் அவ்வளவு தூரத்தை கடப்பது மிக கஸ்டம். கோவிலில் தங்களுக்கு இறை தரிசனம் சிறப்பாக கிடைத்தமைக்கு மகிழ்ச்சி.
தங்கள் மகள் எடுத்த புகைப்படங்கள் அருமை. உச்சிப்பிள்ளையாரை தரிசித்து கொண்டேன். வீட்டில் மா விளக்கு மா போட்டதும் சிறப்பு. நீண்ட நாட்கள் கழித்து தங்கள் பதிவில் பச்சை கலர் பட்டாபிஷேக ராமரை தரிசித்து கொண்டேன்
சகோதரர் ஸ்ரீராம் தங்கள் வீட்டிற்கு வந்து சென்றது மிக்க மகிழ்ச்சி. அதைப்பற்றியும் ஒரு பதிவாக எழுதுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. முதல் படம் வீட்டில் நடந்த தன்வந்திரி ஹோமம் தான். அம்பிகையை மட்டும் பார்த்தாலும் திருப்தியாக இருந்தது. வலப்பக்கம் நேரே வைத்தியநாதரும் காட்சி கொடுத்தார். ஸ்ரீராம் வந்துட்டு அரை மணீ கூட உட்காரலை. அங்கே ஜபம் ஆரம்பிச்சிருப்பாங்கனு கிளம்பிட்டார்.
Deleteஅன்புள்ள மகனாக மருமகன்.
ReplyDeleteகோவில் தரிசனங்கள் சிறப்பு.