குட்டிக் குஞ்சுலு வந்திருக்கா? வீட்டில் ஒரே அமர்க்களம் தான். சாப்பிடப் படுத்தல் வழக்கம் போல். அது அவங்க அறையில் விளையாடும்போது வெளியே செர்வீஸ் வராந்தாவின் ஜன்னல் கதவைக் காற்றுக்காக அவ அம்மா திறந்து வைச்சிருக்கா! ஹாஹா! குரங்கார் வந்துட்டார். ஆனால் பாருங்க, இவங்க அம்மாவும் பெண்ணும் கத்தின கத்தலில் பயந்து ஓடிப் போய்விட்டது. குஞ்சுலு எங்களோட விளையாடும்போது என்னை ஓல்ட் லேடி எனவும் அவரை ஓல்ட் மேன் எனவும் கூப்பிடுகிறது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தாத்தா உட்கார்ந்தவாறே தொலைக்காட்சிப் பெட்டியைப் போட வைச்சிருக்கும் கம்பில் தேசியக் கொடியை ஒட்டி வைச்சுட்டு அதைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போச்சு. இன்டிபென்டென்ட்ஸ் டே என்னிக்குனு காலண்டரில் தேதி, கிழமையைக் காட்டச் சொல்லி அந்தக் கம்பை வைச்சுக் கொண்டு எங்களுக்குப் பாடம்.
அது பெயர் மிஸ் ஆன்னியாம். அவங்க வகுப்பு ஆசிரியை போல! நான் மிஸ் துர்கா என்றதற்கு ஒரே கோபம்! நோ வே! ஐ அம் மிஸ் ஆன்னி என்றது. பின்னர் பஞ்சாங்கத்தை வைச்சுக் கொண்டுக் கணக்குச் சொல்லிக் கொடுத்தது. கடிகாரத்தில் மணி பார்க்கச் சொல்லிக் கொடுத்தது. அவங்க அப்பா ஏதோ குறுக்கே பேசினதுக்கு ஒரே அதட்டல் தான். சுமார் ஒரு மணி நேரம் போல இப்படி விளையாடியதை டான்ஸ் க்ளாஸ் ஆன்லைனில் என அவங்க அம்மா கூட்டிச் சென்று விட்டதும் ஒரே கத்தல். பின்னர் தானே சமாதானம் ஆச்சு. இப்போ மைசூருக்குப் போயிருக்குச் சுத்திப் பார்க்க. புதன்/வியாழன் வரும்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தங்கள் பேத்தியுடன் ஒவ்வொரு நாட்களும் உங்களுக்கு சந்தோஷமாக போவது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இனி வரும் நாட்களும் அவளுடன் மகிழ்வோடிருங்கள்.அவள் சொல்லித் தரும் பாடங்களை நீங்கள் கவனமாக கேட்பதில் அவளுக்கும் மிகவும் மகிழ்வாக இருக்கும்
பாவம்..! குரங்கை பார்த்ததும் தங்கள் பேத்தி மிகவும் பயந்திருப்பாள். நல்லவேளை. அம்மா, பெண் இருவரும் சேர்ந்து கத்தியதும் அது பயந்து ஓடி விட்டது போலும். .. ஹா ஹா.
இங்கும் நாங்கள் எப்பவாவது மொட்டை மாடிக்குப் போனால், அதுவும் எப்போதாவது என இரண்டு மூன்றை சேர்த்துக் கொண்டு வந்து விடும்.
இப்போது அவர்கள் ஊருக்குப் போயிருப்பதில் உங்களுக்கு வீடு வெறிச்சென இருக்கும். வந்ததும் அவளுடன் மகிழ்வோடு பொழுதை கழியுங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இங்கே குரங்குகள் நடமாட்டம் அதிகமா இருக்கு. வளாகத்தில் வீடுகள் இருக்கும் தாழ்வாரங்களில் அன்ன நடை போடுகின்றன. ஒரு பெரிய ஜமா சேர்த்துக் கொண்டு வருகின்றன.நல்ல வேளையாக் குழந்தை இல்லை. இல்லைனா பயந்து போயிருப்பா!
Deleteபடிக்கவே சந்தோஷம். நல்ல நினைவுகள் மற்றும் அனுபவங்கள்.
ReplyDeleteசுருக்கமான கருத்துரைகள்? ஜமாய்ங்க!
Deleteஓ... குகு வருகையா? கொண்டாட்ட தினங்கள் அஹெட்....கொண்டாடுங்கள்.
ReplyDeleteஹாஹா! இன்னிக்குக் காலம்பர மைசூரில் ஓட்டலில் படுத்துக் கொண்டே என்னைப் பார்த்துவிட்டு வெட்கத்தால் முகத்தை மூடிக் கொண்டது. வியாழன் அன்று வருவார்கள். அப்புறமா ஓர் நாலைந்து நாட்கள் தான். :(
Deleteஉட்கார்ந்தவாக்கில் கம்பால் டிவி ஆன் செய்வது.... அடடே.. அப்படியா? நான் பார்க்கவில்லையே... கம்பால் டிவி சுவிட்ச் ஆன் செய்தால் டிவி பட்டன் ஒருமாதிரி ஆகிவிடாதோ...
ReplyDeleteஅதைப் படம் எடுத்துப் போடறேன் ஸ்ரீராம், மாமா இங்கே உட்கார்ந்த வாறே எல்லாமும் செய்து கொள்வார்.
Deleteகம்பில் தேசியக்கொடி, அதை வைத்து பாடம் நடத்தியது எல்லாம் ரசனை. நன்றாய் என்ஜாய் செய்யுங்கள்.
ReplyDeleteஅதுக்குப் படம் வரையவும் இம்மாதிரி ஒட்டிப் படங்களைச் சேர்ப்பது எல்லாம் பிடிக்கும். படிப்பை விட வரைவதில் தான் ரசனை அதிகம்.
Deleteமகிழ்ச்சியாக குஞ்சுலுவோடு இருங்கள்.
ReplyDeleteவிரைவில் உங்களுக்கும் கிட்டப் பிரார்த்தனைகள் கில்லர்ஜி.
Deleteநானே கேட்க வேண்டும்னு நினைத்தேன் என்னாச்சு குட்டிக் குஞ்சுலு பத்தி எதுவும் காணலையேனு...
ReplyDeleteஇப்பதான் மனசுக்கு சமாதானம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ரசித்து வாசித்தேன் கீதாக்கா. அட! பஞ்சாங்கம் வைச்சு கணக்கு சொல்லித்தருகிறதா குழந்தை! இந்த வயதிற்கே உரிய விளையாட்டுகள் டீச்சர் விளையாட்டு பாடம் சொல்லித் தருதல் என்று.
கீதா
அதிலே நெளிந்து நெளிந்து பாம்புப் படம் இருக்கா, அதைப் பார்த்து அளந்து சொல்லச் சொல்லும். ஏதோ அதுக்குத் தோணினது எல்லாம்.
Deleteடிவி ஆன் செய்ய எதுக்குக் கம்பு? ரிமோட் போதுமேன்னு முதல்ல நினைச்சு அப்புறம்தான் உரைத்தது....பவர் ஸ்விட்ச் ஆன் பண்ணனுமே சுவற்றில் அதுக்குக் கம்பு புரிந்தது.
ReplyDeleteதேசியக்கொடியைக் கம்பில் ஒட்டி அந்தத் தேதியில் குழந்தை சுற்றி வந்து பாடம் சொல்லியது மகிழ்வான விஷயம்
தாத்தா பாட்டி பேத்தியோடு எஞ்சாய்! பின்னாடி நினைச்சுப் பார்த்து சந்தோஷப்பட உதவும் தருணங்கள்.
கீதா
நீங்கள் சொல்வது போல் தான். பவர் ப்ளக்கை ஆன் செய்தால் டிவி ஆன் ஆகும். அதுக்குத் தான் உட்கார்ந்தவாறே கம்பால் போடுவார்.
Deleteகுட்டிக் குஞ்சுலு மிகவும் சுட்டி.
ReplyDeleteஅவளின் விளையாட்டுக்கள் இனிமை.மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
எனது பேரனும் மாண்டசரி போகிறான்.இங்கும் ரீச்சர் விளையாட்டு உண்டு "டோண்ட் சேக் யுவர் கெட் ' :) ) எல்லாம் நடக்கும்.