29 ஆம் தேதியன்று மாலை பெண்ணும், அவள் கணவர், அப்பு ஆகியோரும் வந்தனர். ஏற்கெனவே பயணச்சீட்டு வாங்கிப் பயணம் உறுதியானாலும் அவங்க வந்து இறங்கும் மும்பையில் நல்ல மழைக்காலம். விமான நிலையத்தை மூடாமல் இருக்கணும்னு ஏகப்பட்ட கவலைகள்/பிரார்த்தனைகள். அதனாலேயே ஒருத்தருக்கும் சொல்லவும் இல்லை. அதற்கு முன்னாடியே பையர் வந்துட்டார். குஞ்சுலு அவ அம்மாவுடன் வழக்கம் போல் மடிப்பாக்கம் தாத்தா/பாட்டி வீட்டில் இருக்கப் பையர் மட்டும் வந்துட்டார். {குஞ்சுலு முந்தாநாள் வந்து விட்டது. கொட்டம் தான்} பையர். இங்கே வந்ததிலிருந்து காதில் மாட்டிய இயர் ஃபோனைக் கழட்ட நேரம் இல்லை. பெண்ணின் உடல் நிலை கருதி தன்வந்தரி ஹோமம் ஏற்பாடு செய்திருந்தோம். அது 31 ஆம் தேதி திங்களன்று காலை ஏழு மணி அளவில் ஆரம்பித்துப் பத்தரை/பதினோரு மணி அளவில் முடிந்தது. சாப்பாடு நாங்க தற்சமயம் வாங்கும் காடரரிடம் ஏற்பாடு செய்து அவங்களும் கொண்டு வைச்சுட்டாங்க. சர்க்கரைப் பொங்கலும், அவிசும் மட்டும் ஹோமத்திற்காக வீட்டிலேயே பண்ணினேன். இதுக்கு நடுவிலே ஸ்ரீராம் ஒரு சஷ்டி அப்த பூர்த்திக்காக ஸ்ரீரங்கத்துக்கு பாஸுடன் வரப் போவதாகச் சொல்லி இருந்தாரா? வந்துட்டுப் போயிருப்பாரோ என நினைத்து அவரைத் தொடர்பு கொண்டு கேட்டேன். அவர் ஆகஸ்ட் ஆறாம் தேதி தான் என்றார். நல்ல வேளை என நினைத்துக் கொண்டேன். அந்த வாரம் தான் பெண் குடும்பத்துடன் கோயில்களுக்குச் செல்வதாக இருந்தோம்.
ஆகஸ்ட் ஆறாம் தேதி தான் பெண் திரும்ப மும்பை செல்கிறாள். அதுக்குள்ளாக எங்க குலதெய்வம் கோயில், அவங்க குலதெய்வம் கோயில் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டு பெண்ணின் குலதெய்வம் கோயிலான வைத்தீஸ்வரன் கோயிலில் மாவிளக்கும் போட வேண்டும் என்றாள். எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு வரலாம் என்று ஆகஸ்ட் 2 ஆம் தேதி புதன் கிழமை காலையில் கிளம்பினோம். பெண்ணின் உடல் நிலை கருதிக் கஞ்சியைக் காலில் கொட்டிக்கொண்டாற்போல் ஓட்ட/பாட்டம் இல்லாமல் இம்முறை சாவகாசமான பயணம். பையர் அலுவலக வேலை இருப்பதால் வீட்டில் தங்கி விட்டார்.
நாங்க அன்று மதியம் சுமார் பதினோரு மணி அளவில் பரவாக்கரை போய் மாரியம்மனைப் பார்த்துக் கொண்டு அர்ச்சனைகள் செய்து கொண்டோம். ஊர் ஜனங்களுக்கு அன்னதானத்திற்குப் பெண் ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்ததால் சாப்பாடு வகைகள் வந்து இறங்கின. ஏழெட்டு நபர்களை முதலில் உட்கார வைத்துப் பெண்ணும் மாப்பிள்ளையும் அவங்களே சாப்பாடு பரிமாறினாங்க. அவங்க சாப்பிட்டு முடிச்சதும் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினோம். முதலிலேயே எங்க ஊர்ப் பெருமாள் கோயிலுக்குப் போயிட்டு வந்திருந்தோம் என்பதால் நேரே வைத்தீஸ்வரன் கோயில் தான் போக வேண்டி இருந்தது. பெருமாள் கோயிலிலேயே பட்டாசாரியாரிடம் சொல்லிப் புளியஞ்சாதமும்/தயிர் சாதமும் வாங்கிப் போயிருந்தோம். வைத்தீஸ்வரன் கோயில் போனதும் அதைச் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்துக் கொண்டோம்.
அக்ஷர்தாம் என்னும் ஓட்டலில் (புதிதாக வந்திருக்கு) பையர் முன் பதிவு செய்திருந்தார். அங்கே போனால் அறைகள் எல்லாம் மாடியில். தரைத்தளத்துக்கே 3,4 படிகள் ஏறிப் போக வேண்டி இருந்தது. எங்களுக்கான அறைகள் முதல் தளம். லிஃப்ட் இல்லை. ஆகவே அவங்களே அங்கே கீழேயே ரெஸ்டாரன்ட் பக்கம் இருந்த ஒரு பெரிய குடும்ப அறையைக் காட்டினாங்க. 2 குளியலறை/கழிவறை கொண்டது. இரண்டு பெரிய கட்டில்கள். நான்கு பேர் படுக்கலாம். அதிகப்படி தேவைக்கு மேலும் ஒரு படுக்கை கொடுத்தார்கள். சரினு அங்கேயே தங்கி விட்டோம். காலை உணவு ஓட்டல்காரங்களோடதாம். ஆனால் பஃபே இல்லை. combo breakfast என்றார்கள்.
இதுக்குள்ளே என்னை இணையத்தில் காணோம் எனத் தி/கீதா, கோமதி அரசு, மற்றும் பலர் வாட்சப்பில் தொடர்பு கொள்ள, நல்லவேளையாகக் காணாமல் போனவர்னு அறிவிப்புக் கொடுக்கலையேனு சந்தோஷத்தில் விபரங்களைச் சொன்னேன்.
தொடரும்!
மனம் மகிழ்ச்சியாக இருக்கின்றது..
ReplyDeleteஎங்கும் நல்லற்மும் மகிழ்ட்சியும் நிலவட்டும்..
நலம் கொண்டு வாழ்க..
நன்றி தம்பி துரை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்கள் மகள், மகன் வருகைக்கும், நீங்கள் அவர்களுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்ததற்கும் மிக்க மகிழ்ச்சி.
உங்களை காணவில்லையே என நானும் தினமும் நினைத்தபடி இருந்தேன். நேற்று பதிவுக்கு நீங்கள் வந்ததும் மகிழ்ச்சி தெரிவித்தும், ஏன் உங்களை காணவில்லையே என விசாரித்தும் பதில் கருத்து எழுதினேன். இன்று விபரமாக தங்கள் பதிவை கண்டதும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தங்கள் மகள் நலமாக உள்ளாரா? அனைவரிடமும் மிகவும் விசாரித்ததாக கூறவும். பேத்தி எப்படி இருக்கிறார்? நல்லபடியாக கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை முடித்தமைக்கு மகிழ்ச்சி. இனி உங்கள் அனைவரையும், எந்த வொரு உடல்நலப் பிணிகளின்றி நல்லபடியாக இறைவன் காத்தருள நானும் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறேன்.
மீதி ஊருக்கெல்லாம் சென்று வந்த விபரங்களை அடுத்தப் பதிவோடு எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. கருத்துரைக்கு நன்றி. மகள் குடும்பத்தினருக்கு மட்டும் கோயில் விஜயம் முடிந்துள்ளது. இனிப் பிள்ளை, மருமகள், குழந்தையுடன் குலதெய்வம் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அநேகமாக அடுத்த வாரம் போகலாம். மற்றபடி வேறெங்கும் செல்லவில்லை. என்னைக் கூட்டிக்கொண்டு காரில் செல்வதாக இருந்தாலும் கூட ஏற்றி/இறக்குவது மற்றவர்களுக்குச் சிரமமாக உள்ளது. ஆகவே நான் எங்கேயும் கிளம்பும் முன்னர் ஆயிரம் முறை யோசிக்கிறேன்.
Deleteஉங்கள் மகளின் உடல்நிலை முற்றிலும் சரியாக ப்ரார்த்தனைகள். உடல் நிலை சரியில்லைனா அது ஒரு பெரிய பிரச்சனை. குலதெய்வம் கோவில் விசிட் போன்றவை எல்லோருக்கும் தெம்பு ஊட்டியிருக்கும்.
ReplyDeleteநன்றி நெல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. குலதெய்வம் தான் காப்பாற்ற வேண்டும்.
Deleteகுடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி! உங்கள் பதிவுக்கு வர நினைச்சால் நேற்றுத் திறக்கவே இல்லை. ஒரே அடம்! :(
Deleteஉங்கள் மகளின் உடல் நிலை பூரண நலபெற இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
ReplyDeleteகுலதெய்வம் காப்பார். வைத்திய நாதன் நலம் அருள்வார். அங்கு தன்வந்திரி இருக்கிறார் அவரை தரிசனம் செய்து இருப்பீர்கள்.
துர்கா குட்டி வந்து விட்டதால் பாட்டி, தாத்தாவிற்கு நேரம் போவதே தெரியாதே!
வாங்க கோமதி! குழந்தை வளர்ந்து விட்டாள் இல்லையா? அந்த வயதுக்குரிய விளையாட்டுகள் வந்திருக்கிறது. லூடோ, பரமபதம் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளது. பார்க்கணும். எங்கே, இன்னும் பத்துப் பனிரண்டு நாட்கள் தான் இருக்கப் போகிறார்கள். உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.
Deleteவெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வருகிறார்கள் என்றால் நாம் கோடிப்பது அதிகம்,ஆனால் லீவு திரும்பி பார்பதற்குள் முடிந்து விடும். உங்கள் மகள் ஆரோக்கியம் சிறக்க பிரார்த்திக்கிறேன். நிற்க, நானும் உங்களை காணவில்லையே என கவலைப்பட்டேன். தி.கீதாவிடமும் விசாரித்தேன்.
ReplyDeleteவாங்க பானுமதி, உங்க வீட்டிலேயும் உங்கள் மகள் குடும்பம் வந்திருப்பதை முகநூல் மூலம் அறிந்தேன். பொழுது இனிமையாகக் கழிந்திருக்கும் என நம்புகிறேன். என்னால் முன்போல் ஓடியாட முடியாததால் இங்கே எல்லோருக்குமே கொஞ்சம் மனக்கஷ்டம்.
Deleteவைத்தீஸ்வரன் கோவில் பார்த்ததில்லை. சீக்கிரம் பார்க்க வேண்டும். உங்களுக்கு இந்த முறை ரொம்ப சிரமப்படாமல் அந்த ஹோட்டலில் கீழே ஏ அறை கொடுத்து உதவியது பாராட்டுக்குரியது.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு முதல் முறையாகப் பெண்ணுக்கு மொட்டை அடிக்கவேண்டிப் போனோம். அதன் பின்னர் பலமுறை போயிட்டு வந்தாச்சு. அதுக்கு முன்னால் அந்தத் திருச்சாந்துருண்டை யார் மூலமாவது கிடைக்கும். கோயில் பற்றிக் கேள்வி ஞானம் தான் போகும் முன்னரெல்லாம். மிகவும் பக்தியுடனும், பரவசத்துடனும் அவற்றைச் சாப்பிட்டிருக்கோம். இப்போவும் கிடைத்தாலும் முன்னைப் போலெல்லாம் தெய்வீக சக்தி இருப்பதாய்த் தெரியலை. இம்முறை பெண் மாவிளக்குப் போட்டாள். ஆகவே தான் கோயில் பயணத்துக்குச் சென்றேன்.
Deleteநீங்க இடைவெளிக்குப் பின்னர் உங்களிடமிருந்து ஒரு பதிவு. ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம், எழுத விஷயங்கள் இருந்தாலும் உட்கார்ந்து எழுத முடியாமல் ஏதோ மனத்தடை, உடல் நோவு எனப் படுத்தல். சில விஷயங்கள் எழுத நினைச்சாலும் எழுத முடியாத சூழ்நிலை.
Deleteமகளின் உடல்நிலை சீக்கிரம் முற்றிலும் குணமாகவேண்டும் என்று நானும் பிரார்தித்துக் கொள்கிறேன். அலோபதி ஹோமியோபதிகளால் தீர்க்க முடியாத பிரச்னையை ஆண்டவனும், ஹோமங்களும் தீர்த்து வைக்க வேண்டும்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம், வெங்கடாசலபதியைத் தான் நாங்களும் சரண் அடைந்திருக்கோம். அவர் தான் காப்பாற்ற வேண்டும். குறைந்த பக்ஷமாக இட்லி, தோசையானும் சாப்பிட முடிந்ததால் இந்த வருஷம் பெண்ணால் வர முடிந்தது. அதுக்கும் தொட்டுக்க சாம்பார் மட்டும் தான். விமானத்தில் வீகன் சாப்பாடு எனக் கேட்டு வாங்கி ஒப்பேத்தி இருக்கா. என்னமோ போங்க.
Deleteஎனது கருத்துரை... ?
ReplyDeleteஒண்ணு வந்திருக்கு கில்லர்ஜி! அதைப் போட்டுட்டேன்.
Deleteஆ!! அக்கா எப்படியோ மிஸ் பண்ணிவிட்டேன் பதிவை...சிலப்போ காலைல மட்டுமே வரேண். சிலப்போ மதியம் மேல் வந்துவிட்டு ஓடிடறேன்..
ReplyDeleteஅன்றே சொன்னீங்க. மகளுக்கு உடல் நலத்திற்காக ஹோமம், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் என்று, மகளின் உடல் நலம் சீக்கிரம் சரியாகிவிடும் கீதாக்கா. சக்தி துணை இருக்கும் கூடவே! எப்படியோ உங்கள் பிரச்சனைகளுக்கு நடுவில் பல நாட்களுக்குப் பிறகு பதிவும் போட்டாச்சு!
கீதா
அட! குஞ்சுலு வந்திருக்கா!!!! அப்படினா குஞ்சுலுவின் கொட்டம் வருமே!! இனி!!
ReplyDeleteமகள் குடும்பம் ஊருக்குப் போயாச்சா...அட ரொம்ப கம்மிதான் ஆனா என்ன செய்ய. வெளிநாட்டிலிருந்து வரவங்களுக்கு இப்படித்தான் ஆகும்...
மகன் மகள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
கீதா
மகள்,மகன் பேரன் பேத்தி வந்து சென்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.
ReplyDeleteமகள் நலம் பெற வேண்டுகின்றோம்.