எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 21, 2023

ஒரு வழியா எல்லாம் சரியாச்சு!

 டிரைவர் அங்கேயே தான் இருந்திருக்கார், இது போல் முதல் நாள் ஆனப்போ ட்ராவல்ஸ்காரர் நம்பர் ரங்க்ஸிடம் இருந்ததால் அவரைக் கூப்பிட்டு டிரைவரை அழைத்துவிட்டார். இப்போ அந்த நம்பரும் அம்பேல் அம்பேல், அம்பேல்! ஆகவே அவர் ஒரு பக்கம், மாப்பிள்ளை ஒரு பக்கம்னு தேடிக் கொண்டு போக டிரைவர் அங்கே இருந்ததைப் பார்த்துட்டு அப்பாடானு ஆச்சு. பின்னர் அங்கேயே ட்ராஃபிக் ஜாம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு நான் வண்டியில் ஏறிக்கொண்டேன்.ஏற்றப்பட்டேன். பின்னர் எல்லோரும் ஏறினதும் ஓட்டலுக்குப் போனோம். பெண், மாப்பிள்ளை உடை மாற்ற வேண்டி (மடிசார், பஞ்சகச்சம்) அறைக்குப் போக நான், ரங்க்ஸ், அப்பு மூவரும் டிஃபன் சாப்பிடச் சென்றோம். எங்களைப் போல் தாமதமாக வந்தவங்க சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தாங்க. நாங்க கை,கால் சுத்தம் செய்து கொண்டு உட்கார்ந்ததும் இட்லி ஒன்று, ஒரு கரண்டி பொங்கல், ஒரு உளுந்து வடை, சட்னி, சாம்பார், கிழங்கு, காரச் சட்னி ஆகியவற்றோடு டிஃபன் வந்தது. அது சாப்பிடும்போதே சுடச் சுட பூரி (பெரிதாக இருந்தது) வந்தது. பின்னர் கடைசியாக தோசை வர நாங்க சாப்பிட்டு முடித்தோம். பெண்ணும் வந்து கலந்து கொண்டு ஒரு இட்லியும், கொஞ்சம் பொங்கலும் மட்டும் சாப்பிட்டாள். அதுவே சட்னி எல்லாம் தொட்டுக்க முடியலை. பயம் வேறே!

பின்னர் அறைக்குப் போய் சாமான்களைக் கட்டி வைத்துவிட்டு ஓட்டல் அறை செட்டிலெ செய்யப் போனாங்க. அது முடிஞ்சதும் எல்லோரும் கிளம்பி ஸ்ரீரங்கம் நோக்கி வந்தோம்.  நாங்க ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பும்போது எப்போவும் போல் கல்லணை வழியில் டிரைவரைப் போகச் சொன்னோம். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பின்னர் அந்த வழியிலேயே போனார். இங்கே திருச்சி/தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கல்லணைப் பக்கம் கிழக்கே திரும்ப வேண்டிச் சென்றால் அம்மாடியோவ்1 வரிசையாக நூற்றுக் கணக்கான லாரிகள் அணி வகுத்து இருபக்கமும் நின்றன, நாங்க ஸ்ரீரங்கம் வந்த புதுசில் ஊர்ப்பக்கம் போனப்போக் கல்லணை வழி போயிட்டுப் போகும்போது அதிகாலை என்பதால் பிரச்னை இல்லாமல் போயிட்டோம். திரும்பி வரச்சே மாட்டிக் கொண்டோம் வண்டியே போக வழி இல்லை. மதியம் இரண்டரை மணிக்குத் திருவையாறைக் கடந்தவர்கள் ஸ்ரீரங்கம் போய்ச் சேர நாலரை ஐந்து மணி ஆச்சு. அன்று மதியச் சாப்பாடு இல்லை. :( இப்போவோ போகும்போதே அதே மாதிரி பிரச்னை. இரு பக்கமும் வண்டிகள் அணி வகுத்து நிற்க வழி கண்டு பிடிச்சுப் போகவே முடியலை.

நீதிமன்ற உத்தரவு இருந்ததால் சென்ற ஆட்சியில் மணல் அள்ளுவது முற்றிலும் தடுக்கப் பட்டிருந்தது. ஆகவே பிரயாணம் செய்வது வசதியாக இருந்தது இப்போதுள்ள விடியா ஆட்சியில் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் மணல் அள்ள லாரிகள் அணி வகுத்து நின்றன. ஒரு வழியாக நாங்க கல்லணைப் பகுதியைக் கடக்கவே காலை ஒன்பது மணி கிட்டத்தட்ட ஆகிவிட்டது. அதை மனதில் கொண்டு இப்போது திரும்பும்போது தஞ்சை வழியாக பை பாஸில் போகலாம்னு முடிவு செய்து அப்படியே சென்றோம். ஒரு சில கிலோ மீட்டர்கள் அதிகம். ஆனாலும் வண்டி தடங்கல் இல்லாமல் போகலாமே. என்ன ஒரு பிரச்னை எனில் கல்லணை வழியில் ஷெல் கம்பெனியின் பெட்ரோல் பங்கில் WE CARE  கழிவறைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கும். இந்த வழியில் அது வராது. :( டிரைவர் வேறே எங்கேயோ ஒரு பங்கில் நிறுத்தியதில் பார்க்கவே சகிக்கலை. வந்துட்டோம்.

சுமார் இரண்டரை மணி அளவில் அம்மாமண்டபம் சாலை வந்தால் சாலையை அடைத்து விட்டார்கள் அப்போத் தான் நினைவுக்கு வந்தது அன்று பதினெட்டாம் பெருக்கு என்பது. சாதாரணமாகவே அம்மா மண்டபத்தில் கூட்டம் நெரியும் எனில் இப்போப் பெருமாள் வேறே வந்துட்டாராம். இந்த வருஷம் ஆடிப் பதினெட்டுக்கே காவிரிக்குச் சீர் கொடுக்கிறார் போல. தெருவெங்கும் மக்கள் வெள்ளம். ஒரு வழியாகச் சந்து, பொந்துகளில் புகுந்து சுற்றிக் கொண்டு எங்க வளாகத்தை வந்து அடைந்தோம். ரங்க்ஸ் அங்கேயே இறங்கி சாப்பாடு வாங்கச் செல்ல, நாங்க வீட்டுக்குள் போனோம். சாப்பாடு வந்து நாங்க சாப்பிடும்போது மணி மூன்று ஆகிவிட்டது. ஒரு வழியாகப் பெண்ணின் பிரார்த்தனைகள் நிறைவேறின. இரண்டு நாட்களில் அவள் ஊருக்கும் கிளம்பி விட்டாள்.


பரவாக்கரை அக்ரஹாரத்தில் பூர்விக வீடு. இங்கே தான் நம்ம ரங்க்ஸ் பிறந்தாராம்.  ஏற்கெனவே முன்னர் ஒரு தரமும் போட்டேன். 


பையர் புது மடிக்கணினி வாங்கி வந்திருக்கார். பழசு (இரண்டு இருக்கு. தோஷிபா தான் என்னோட முதல் மடிக்கணினி! பிடிச்சதும் கூட) அது இப்போ வேலை செய்யலை, 12 வருஷங்கள் உழைத்தது. அடுத்து டெல் மடிக்கணினி. குஞ்சுலுவின் வயசு ஆகுது. அதுவும் ஓரளவு உழைச்சது. தோஷிபா இல்லைனு ஆனதும் முழுக்க முழுக்க அதில் தான் வேலை செய்தேன். நன்றாகவே இருக்கு. இன்னும் சில வருஷங்கள் இருக்கும். ஆனால் பையருக்கு அம்பேரிக்க வழக்கப்படி நாலைந்து வருஷம் ஆனதும் பழசைத் தூக்கிப் போடணும்னு! இப்போதைக்கு அதை டிசேபிள் பண்ண வேண்டாம்னு சொல்லி வைச்சிருக்கேன். பார்ப்போம். :(  இ கலப்பை செட்டிங்கில் புதுக்கணினியில் பிரச்னை வந்ததால் அதை எடுக்க மனசு வராமல் இருந்தது. இப்போ இன்னிக்கு அதெல்லாமும் சரியாச்சு.

புதுக்கணினியிலும் எல்லாம் சரியாச்சு. இ கலப்பை சரியா வரலை, சுரதா மூலம் தான் தட்டச்சு செய்யறேன். இ கலப்பையில் குறில்/நெடில், ழ, ள, ல பிரச்னை மற்றும் ந, நு போட்டால் நூ என ஆகிக் கொண்டிருந்தது. ஸ் ஸா வரவே வராது. அதெல்லாம் சுரதாவில் இல்லை என்பதால் இனிமேல் சுரதா மூலம் தான் தட்டச்சணும் போல!

24 comments:

  1. சம்பந்தமே இல்லாமல் பதிவு ஆரம்பிக்குது. பரவாக்கரை பயணம் போலிருக்கு. எல்லாம் நல்லபடியா முடிந்ததில் சந்தோஷம்

    ReplyDelete
    Replies
    1. முந்தைய டிரைவர் எங்கே பதிவைப் படிச்சிருந்தால் புரிஞ்சிருக்கும். படிச்சவங்களுக்குப் புரியவும் புரியும். :)

      Delete
  2. இதேபோல நாங்கள் மாட்டிக்கொண்ட கதையை நான் எழுதுகிறேன் -விரைவில்! எங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டது - வேறுவகையில்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கெனவே திருமலையில் மாட்டிக் கொண்டீங்க போல! படிச்ச நினைவு இருக்கே!

      Delete
    2. இல்லை. இது புதுசு. வேறு. விரைவில் வெளிவரும்!

      Delete
  3. இ கலப்பை சுரதா என்று பயமுறுத்துகிறீர்கள். நான் கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேஷனும், அழகியும்தான். அழகி கூட அதிகம் உபயோகிப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், கூகிள் டிரான்சிலிடரேஷன் சரியா வரலை. அழகியும். ஆகவே தான் இ கலப்பை. இப்போ அதிலும் எழுத்துப் பிழைகள் நிறைய வரதாலே சுரதா மட்டுமே. இணையத்துக்கு வந்த புதுசில் எல்லாம் இ கலப்பை மட்டுமே!

      Delete
    2. கூகுள் ட்ரான்ஸ்லிட்டரேஷன் அழகா டைப் அடிச்சு வார்த்தை வந்தபின்பு கூட திருத்தங்கள் எல்லாம் கொடுக்குது.  என்ன அக்ஷ்ட்டம்?

      Delete
  4. இந்த மணல் திருட்டுக்கெல்லாம் விடிவே கிடையாதா? எதிர்கால சந்ததியருக்கு என்னதான் விட்டுச் செல்லப்போகிறோம்?

    ReplyDelete
    Replies
    1. அரசு மாறினால் தவிர விடிவு என்பதே இல்லை.

      Delete
    2. 5 வருடங்களுக்கொருமுறை மாறிக்கொண்டுதான் இருக்கிறது!

      Delete
  5. பழைய திண்ணை வீடுகள் பொக்கிஷம் போல் ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. கிராமங்களில் பார்க்கலாம் கில்லர்ஜி. ஆனால் அங்கேயும் மாற்றங்கள். விரும்பத்தகாத வகையில்.

      Delete
  6. // இரு பக்கமும் வண்டிகள் அணி வகுத்து நிற்க,//

    திருவையாற்றில் இருந்து கபிஸ்தலம் பக்கம் செல்வதோ கல்லணை பக்கம் செல்வதோ தற்போதைய சூழலில் சிரமம்..
    திருக்காட்டுப்பள்ளி வழியிலும் பயங்கரமான தோற்றத்துடன் நூற்றுக் கணக்கான மணல் லாரிகள்..

    எங்கள் குடியிருப்பு புறவழிச் சாலையில் பல லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன...

    நிஜமான விடிவு காலம் எப்போதோ...

    ReplyDelete
    Replies
    1. இப்போதைக்கு விடிவே இல்லை தம்பி.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஒரு வழியாக டிரைவரை தேடி கண்டு பிடித்தது நல்லது. உங்களிடமே இருக்கும் கைபேசியை கொண்டு போயிருந்தால், எந்த பிரச்சினையின்றிம் அவரை அழைத்திருக்கலாம். நீங்கள் கையில் வைத்துக் கொள்ள சிரமமாக இருப்பினும், கூட வந்தவர்கள் அதை சுமந்து வந்திருக்கலாம். என்ன செய்வது? சில சமயங்களில் நடக்க வேண்டியது நடந்து விடுகிறது.

    கோவில் பிராத்தனைகளை சுபமாக முடித்து நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி. மணல் கொள்ளை அது பாட்டுக்கு நடந்து கொண்டேதான் இருக்கும். நீரின் தேவையை முழுதாக நாம் உணரும் காலம் எப்போது வரப்போகிறதோ? இப்படியே போனால் நிலைமை கஸ்டந்தான்..

    ஹோட்டலில் தந்த டிபன் சாப்பாட்டு மெனு நன்றாக இருக்கிறது. சில ஹோட்டல்களில் என்னவோ சொதப்பி விடுகின்றனர்.

    ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்வதற்குள் வாகன நெரிசல் அதிகமாகி விட்டது. மக்கள் இப்போது வாழும் தனித்தனி குடும்பத்திற்கேற்ப தனித்தனி வண்டிகள் வைத்திருந்தால், தினமும் ஒவ்வொருவருக்கும் ஜானவாச ஊர்வலந்தான். ஒன்றும் சொல்ல முடியாது.

    தங்கள் மகள் இனி வரும் நாட்களில் நல்ல ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. பொதுவாக ஓட்டல்களில் காம்ப்லிமென்ட்ரி ப்ரெக் ஃபாஸ்ட் உண்டு என்றாலும் அநேகமாக அது பஃபே முறையில் இருக்கும். நமக்குச் சூடாக ஏதேனும் வேண்டுமெனில் பூரி.கிழங்கோ, மசால் தோசையோ, ஆனியன் ஊத்தப்பமோ ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதுவும் அந்த பஃபே சாப்பாட்டில் சேர்ந்தது தான். ஆனால் இந்த ஓட்டலில் பஃபே முறை இல்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான கோம்போ ப்ரெக் ஃபாஸ்ட். மகளின் உடல் நலத்துக்குப் பிரார்த்தித்துக் கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.

      Delete
  8. டிரைவரை தேடி கண்டுபிடித்தது அப்பாடா என்று எனக்கும் இருந்தது.
    கஷ்டப்பட்டு போஉ சாமி தரிசனம் நல்லபடியாக நடந்தது மகிழ்ச்சி.
    பூர்வீக வீடு நன்றாக இருக்கிறது. உங்கள் மகள் இறைவன் அருளால் நலமுடன் இருப்பார்.
    புதுக்கணினிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! பூர்விக வீடு ஏற்கெனவே இரண்டு, மூன்று தரம் போட்டேன். மகளுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டது சந்தோஷம். குஞ்சுலு மைசூருக்குப் போயிருக்கு. நாளைக்கு வரும்.

      Delete
  9. மீ லேட்டு லேட்டு!

    ஹப்பா ஒரு வழியா ட்ரைவரை சீக்கிரமா கண்டுபிடிச்சு ஊர் வந்து சேர்ந்து எல்லாம் நல்லபடியா முடிஞ்சு மனசுக்கு நிறைவுதான்.

    மாமா பிறங்க பூர்வீக வீடு அழகு.

    பெண்ணிற்கு விரைவில் உடல் நலம் தேறி நன்றாகிவிடுவார் கீதாக்கா

    ஆஹா! புதுக்கணினி! ஆமா அன்னிக்கே சொல்லிருந்தீங்களே புதுசுலதான் எழுதறேன்னு.

    நான் அழகி மட்டுமே! பதிவு , கருத்துகள் எலலமே அழகிதான்! ஃபான்ட் லதா அல்லது சாரதா. அழகி பெரும்பான்மை தமிழ் ஃபான்டுமே சப்போர்ட் செய்யுது.

    புது மடிக்கணினி எஞ்சாய்!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அழகி என்னிடமும் இருந்தாலும் அதிகம் அவளைத் தொந்திரவு செய்ததில்லை. ஆரம்பத்திலிருந்தே இ கலப்பையால் தான் உழுது கொண்டிருந்தேன். இப்போத் தான் சுரதா!

      Delete
  10. பூர்வீக வீட்டின் படம் அந்தக்கால சமூக சூழலை நினைவுபடுத்துகிறது. திண்ணையுள்ள வீட்டை இந்தக்காலத்தில் கற்பனை செய்வதே கடினமா இருக்கு

    தமிழ் எழுத்துரு - NHM Writer தான் நான் பயன்படுத்துகிறேன் ஆரம்பத்திலிருந்தே.. சரியாகத்தான் செல்கிறது வண்டி.

    ReplyDelete
    Replies
    1. வீடு இன்னமும் நல்ல நிலைமையிலேயே இருக்கிறது. பத்து வருஷங்கள் முன்னாடி அது விலைக்கு வருவதைக் கேள்விப் பட்டு வாங்கப் போனால் ஏற்கெனவே ஒருத்தர் வாங்கிட்டாராம். ரொம்ப வருத்தமாய் இருந்தது. ஆனால் சிலர் இருந்த வீட்டை வாங்கக் கூடாதுனு வேறே சொல்றாங்க. எப்படியோ வாங்க முடியலை.

      Delete
  11. திண்ணையுள்ள குடும்ப வீடு அற்புதம்.

    ReplyDelete