கிச்சாப்பயலுக்குப் பண்ணின வடை மாவு கொஞ்சம் மிச்சமாக இருந்தது. ரங்க்ஸ் இம்முறை வடை நல்லா இருக்கு, தயிர் வடை பண்ணுனு தான் சொன்னார். ஆனால் அத்தனை மாவும் இல்லை. குழந்தைகளும் கிளம்பிப் போயிட்டாங்க. நின்னுண்டு வடை பண்ணுவதில ஆர்வமெல்லாம் இல்லை. ஆகவே அத்துடன் ஒரு ஆழாக்கு அரிசியை இட்லி+பச்சரிசி தான், ஊற வைச்சு அரைச்சுச் சேர்த்துத் தோசையாக வார்த்தேன். மெத்து மெத்தான தோசைகள். அருமையா இருந்தது. இதுவும் ஒரு திப்பிசம் தானே! இப்படித் தான் கொஞ்ச நாட்கள் முன்னர் அடை மாவு மிஞ்சி இருந்தது. என்ன பண்ணலாம்னு மண்டை காய்ந்தது. அன்னிக்குனு அரிசி உப்புமா பண்ணவே அதுக்கு அரைச்சு விடத் தனியா ஊற வைக்கலை. இதையே போட்டுக் கலந்து விட்டேன். மீனாக்ஷி அம்மாள் புத்தகத்தில் வ்ந்திருக்கும் தவலை உப்புமா மாதிரி வாசனை அடித்துக் கொண்டு நன்றாக இருந்தது. ரங்க்ஸோ உப்புமா வாசனையா இருக்கே இன்னிக்குனு சொன்னார். பழைய சாதம் மிஞ்சினால் கூட அதோடு அவலை ஊற வைத்துக்கலந்து கொண்டு தேங்காய் சேர்த்து அரைத்து நீர் தோசை மாதிரி மெலிசாகப் பண்ணிடலாம். ஒரே ஒரு time பண்ணினேன். அப்புறமாக் குட்டு வெளிப்பட்டு விட்டது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மக்கள் எப்படி எல்லாம் .ஏமாத்தறாங்க! நான் மட்டும் என்னமோ ஏமாறவே பிறந்திருக்கேன் போல. ஒரு பலி ஆடு மாதிரி மாட்டிக் கொண்டு பல சாயங்கள் முழிக்கிறேன். ரங்க்ஸ் முடியாமல் படுத்து அவரைப் பார்த்துக்கன்னே ஆள் போட்டாலும் போட்டோம். விதம் விதமான அனுபவங்கள். ஆரம்பத்தில் வந்த இருவரும் சாப்பாடு, தொலைபேசிப் பேச்சு இவற்றுக்கிடையில் ரங்க்ஸைப் பார்த்துக் கொண்டனர். நாம் ஒண்ணும் பேச முடியாது. இப்போ என்னாங்கறீங்கனு மிராட்டிக் கொண்டே 3 மாசம் இருந்தாங்க. சம்பளமும் அதிகம். ரங்க்ஸைக் க்ளீனாக வைச்சுண்டாங்களோ இல்லையோ தினம் ஒரு க்ள்வுஸ் டப்பா, வைப்ஸ் அடங்கிய பாக்கெட்டுகள் 2 அல்லது 3 செலவாகும். சில சமயம் அவங்க கை, கால், முகம் துடைத்துக் கொண்ட வைப்ஸாலேயே ரங்க்ஸுக்கும் துடைச்சுடுவாங்க. நாம கவனிச்சதாக் காட்டிக்கக் கூடாது. காட்டிக் கொண்டால் போச்சு. உடனேயே இனிமே நீங்களே பார்த்துக்குங்க, வைப்ஸே உபயோகிக்காமல் க்ளவுஸே உபயோகிக்காமல் வருவாங்கனு கிளம்பிடுவாங்க. ஒரு தரம் எனக்கும் கொஞ்சம் கோபம் எட்டிப் பார்த்துப் போங்கனு சொல்லிட்டேன். அம்புடுதேன். கிளம்பிட்டாங்க. அடுத்து வரவங்க வேறே வகை.
ஹோம்கேர் மூலமா வந்தாங்க. முதலில் இருந்தவங்களை நேரடியாகப் பேசிச் சம்பளமும் அதிகம் கொடுத்துத் தாஜா பண்ணி வைச்சுக் கொண்டிருந்தார் பையர். ஆனால் அவங்களுக்கு எங்க ரெண்டு பேரையும் பிடிக்கலை. முக்கியமாய் ரங்க்ஸை இஷ்டத்துக்கு மிரட்டினாங்க. நான் பார்க்கையில் ஒரு மாதிரி இல்லைனா வேறே மாதிரினு இருந்தாங்க. அதுக்காகவே நேரம் கிடைச்சால் ரங்க்ஸ் பக்கத்தை விட்டு நகராமல் இருந்தேன். இப்போ ஹோம்கேர் மூலமா வரதாலே ஒரு கண்டிப்பு இருக்கும். லீவ் போட்டால் வேறே ஆள் மாத்தி அனுப்புவாங்கனு நினைச்சோம். எல்லாம் சரி தான். ஆனால் ராத்திரி வர பெண்மணிக்குப் பகலில் வரவங்களைத் தெரியாது. பகலில் வரும் பெண்ணிற்கு ராத்திரி யார்னு தெரியாது. அப்படி இருந்தும் ரெண்டு பேரும் போட்டி. பகலில் வர பெண் சரியா ஆறுமணின்னா கன் டைம் ஆறுக்குக் கிளம்பிடுவாங்க. ராத்திரி வரவங்களோ என்னோட நேரம் ராத்திரி எட்டு மணி தான்னு சொல்லிட்டு எட்டு/எட்டேகாலுக்குள்ளே வருவாங்க. இந்த இடைப்பட்ட நேரத்திலே தான் ரங்க்ஸ் பாத்ரூம் வந்தால் போகணும். அப்போல்லாம் கதீட்டர் இருந்ததால் படுக்க யில் தான் எல்லாம். பணம் கொடுத்து 2 ஆள் வைச்சும் சுத்தம் செய்தது என்னமோ நான் தான். அந்த முடியாத நிலையிலும் ரங்க்ஸுக்குக் கோபம் வரும். பகலில் வரும் பெண்ணைக் கொஞ்சம் ஏழு மணி வரை இருனு சொன்னால் குழந்தைங்க தனியா இருக்காங்கனு கிளம்பிடுவா. ராத்திரி வரவங்க எட்டு மணிக்கு வேணால் வரேன்னு சொல்லிட்டு எட்டு மணிக்கு வருவாங்க. காலை ஏழரைக்குக் கிளம்பிடுவாங்க. காலை ஏழரையிலிருந்து ஒன்பது/ஒன்பதே கால் வரை இரவு மாலை ஆறு மணியிலிருந்து எட்டேகால் வரை ரங்க்ஸை நான் தான் பார்த்துக்கணும்.
பிரச்னை என்னன்னா அவரைச் சுத்தம் செய்வதிலோ, மாற்று உடைகள் அணிவிப்பதிலேயோ இருக்காது. கட்டிலில் படுக்கை இறங்கி விடும். அதைக் கூடச் சரி பண்ணிடலாம். அவரைத் தூக்கி மேலே போடணும். அது என்னால் முடியாது. இந்தப் பெண்கள் எல்லாம் இதில் கை தேர்ந்தவார்களாக இருந்ததால் அவங்க வரும்வரை அவர் கால்களைக் கட்டிலுக்கு வெளியே நீட்டிக் கொண்டு படுத்திருப்பார். அதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். தூக்கம் வந்தால் தூங்க முடியாது. அடுத்து கதீடரில் யூரோ பாக் மாத்துவாது. பலரும் அதைச் சரியாக் கவனிக்க மாட்டாங்க. நாம அதில் ஒரு கண் வைச்சுக்கொண்டு அவங்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கணும். குறைந்த பக்ஷமாக இரண்டு மணிக்கொரு தரம் பையைச் சுத்தம் செய்து விடவேண்டும். இதுக்காக நள்ளிரவு 12 மணிக்கு, பின்னர் 2 மணி, காலை நாலு, நாலரை மணினு வந்து பார்த்துக் கொண்டே இருப்பேன். இல்லைனா பை நிரம்பி யூரின் எல்லாம் திரும்ப ப்ளாடருக்கே போயிடும். ஒரு முறை அப்படியும் ஆகி இன்ஃபெக்ஷன் ஆகி ரொம்பச் சிரமப் பட்டார். ஆகவே இதில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டி இருக்கு.
படிக்கும் போது மிகவும் வருத்தமாய் இருக்கிறது.
ReplyDeleteவிரைவில் நலம்பெற்று சார் எழுந்து நடமாடி அவர்கள் வேலையை அவர்கள் செய்கிற நிலமை வர வேண்டும்.
இறைவன் அருள வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இதைப் பற்றி மத்யமரிலும் ஒரு பெண்மணி எழுதி இருந்தார். அவருடைய யோசனை பார்த்துக்கொள்வது பெண்மணியாகவே இருக்கணும், ஆண் கூடாது. அதோடு பார்த்துக் கொள்பவருக்கு 40 இல் இருந்து 50/60 வயசுக்குள் இருக்கணும்னு சொல்கிறார். அந்த வயதுப் பெண்களுக்குத் தான் குடும்பப் பொறுப்பு அதிகம் இருப்பதால் தாமதமாய் வருவதும் சீக்கிரமாய்க் கிளம்புவதுமாய் இருக்காங்க.
Deleteஒவ்வொன்றிலும் எத்தனை சிரமங்கள்? கூலிக்கு வேலை செய்கிறார்கள். இது மாதிரி வேலைகளில் கொஞ்சமாவது அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும். அது இந்தக் காலத்தில் கிடைப்பது சிரமம்தான்.
ReplyDeleteஇதிலே ஒரு பெண் இரவு வரும் பெண்மணி குலதெய்வக் கோயிலுக்குப் போனதால் லீவில் மாற்றாக வந்தவர் பிடிவாதமாக இனிமேல் ராத்திரி நான் தான் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வீட்டில் ஒவ்வொருத்தருக்காகத் தொலைபேசியில் அழைத்து இங்கே கட்டில், மெத்தை எல்லாம் போட்டிருக்காங்க, ஏசியும் ஓடுது. சௌகரையமா இருக்கு. நான் இனிமேல் இங்கே தான் இரவுக்கு இருக்கப் போறேன் என அறிவிப்புச் செய்து கொண்டிருந்தாங்க. அவங்களைக் காலை கிளப்ப ரொம்பப் பாடு பட்டேன்.
Deleteதிப்பிச வேலைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் உங்கள் கற்பனை வளம் ரொம்பவே ஜாஸ்தி.
ReplyDeletehehehehehe No waste. that is my principle.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களின் திப்பிசங்களுக்கு கேட்கவா வேண்டும்? நானும் வடை மாவு மிச்சமானால் மறுநாள் அடுத்த நாளோ அதை தோசையாக்கி விடுவேன். பச்சை மிளகாய் வாசத்துடன் தோசை நன்றாக இருக்கும்.
அரிசி உப்புமாவுக்கு அடை மாவை சேர்த்தது நல்ல ஐடியா.!! ஒரு நாள் அப்படியே அரைத்து சேர்த்துப் பார்க்கிறேன். நீர் தோசை முறையும் நன்றாக உள்ளது.
உங்கள் கணவரை கவனித்துக் கொள்ள நீங்கள் பட்ட சிரமங்களை படிக்கையில் மனது மிகவும் வருத்தப்பட்டது. உங்களின் மன தைரியத்தால் , இராப்பகல் கண் விழித்து தாங்கள் கவனமாக அவரை கவனித்து கொண்டதால்தான் அவர் உடல் நிலை சற்று தேறியுள்ளது. முன்பு போல விரைவில் நன்றாக, முழுதுமாக குணமாகி அவர் வெளி வாசலுக்கு தானே நடந்து சென்று, வீட்டுக்குத் தேவையான சாமான்கள், காய்கறிகள், வாங்கி வந்து தங்களை சந்தோஷபடுத்த வேண்டுமென இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். விரைவில் குணமாகி விடுவார். கவலை வேண்டாம் சகோதரி. .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, உங்கள் வேலைகளுக்கு நடுவில் இங்கேயும் வந்து படித்துக் கருத்துச் சொல்லுவதற்கு மிக்க நன்றி. இன்னும் நிறையத் திப்பிசங்கள் உள்ளன. மோர்க்குழம்பு மிஞ்சினால் தஹி பிண்டியோ தஹி ஆலுவோ பண்ணிடுவேன். ரொம்பச் சொன்னேன்னு வைங்க, அப்புறமா எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போயிடும். இஃகி இஃகி இஃகி
Deleteகதீட்டர் எடுத்தாச்சே. அடல்ட் டயப்பர் போட்டுவிடுங்கள்.
ReplyDeleteJayakumar
He is not accustomed to the diapers. There are 10 hours 12 hours, and 16 hours diapers are at home. But he wants to go to the bathroom only. By God;s Grace the night watching lady is suitable for this type of work and is experienced also
Deleteகடினமான காலங்கள்.... எல்லாம் விரைவில் சரியாக எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteThank You Venkat.
Deleteபல பேர் இப்படி உடம்பு முடியாமல் இருப்பவர்களை பார்த்துக் கொள்ள வருபவர்கள் படுத்தும் பாட்டை பற்றி பல பேர் சொல்லி விட்டார்கள். உங்கள் அனுபவம் படிக்க மனது கஷ்டமாக இருந்தது. இன்று சாமோ உபாகர்மா. நீங்கள் சாம வேதம்தானே? உங்களை காலை முதல் நினைத்து கொண்டே இருந்தேன். மாமா பூணூல் மாற்றிக் கொண்டாரா?
ReplyDeleteஇது கொஞ்சம் கஷ்டமான நேரம்தான். உங்களுக்கு என் பிரார்த்தனைகள் கீசா மேடம். உங்கள் உற்சாகம் மீண்டும் திரும்பணும்.
ReplyDeleteநன்றி நெல்லை, பக்ஷணம் சாப்பிட வரலை போலிருகே! உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும். வீட்டுக்குள்ளாக நடந்தாலே போதுமானது.
Deleteகிட்டத்தட்ட நானும் அதே வகைப் பிரச்சனைகளை கடந்த ஆறு வருடங்களாக எதிர்கொண்டு சமாளித்து வருகிறேன் என்றாலும், உங்களுடைய பிரச்சனைகள் மனதை வேதனைப்பட வைக்கின்றன. விரைவில் எல்லாம் சரியாகவேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
ReplyDelete