நாயகர் தாம் தம்மைத் தோற்ற பின் - என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை - புலைத்
தாயத்திலே விலைப்பட்ட பின் - என்ன
சாத்திரத்தால் எனைத் தோற்றிட்டார்? - அவர்
தாயத்திலே விலைப்பட்டவர் - புவி
தாங்கும் துருபதன் கன்னி நான் - நிலை
சாயப் புலைத் தொண்டு சார்ந்திட்டால் - பின்பு
தாரமுடைமை அவர்க்குண்டோ?
போச்சுது போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்!
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்!
அன்னை பாஞ்சாலி - பாண்டவர்களின் காதலி - துரியோதனனால், அவமதிக்கப்பட்ட பொழுது, பெண்ணாக மட்டுமல்ல, அடிமைத்தனத்தில் அவமதிக்கப்படும் நமது பாரத தேவியைப் போலவே காணப்படுகிறாள். இறுதியில் அவளது பெண்மை வெற்றி கொண்ட வேகத்தில் - சபதம் செய்யும் பொழுது, - பராசக்தியின் ஸ்வரூபமாகிறாள். இக்காவியப் பகுதியை பொறுக்கியெடுத்ததிலேயே, பாரதியின் ரசிகத்தன்மையும், நுட்பமான ஆராய்ச்சி சக்தியும் நன்கு வெளியாகிறதல்லவா? தன் கொள்கைக்கேற்ற ஒரு கதையை எடுத்துப் பட்டை தீட்டிப் புது வைரமாக்கியிருக்கிறார்".தனைத் தடுத்தல் அரிதோ!
நன்றி விக்கி பீடியா மூலம் தமிழ்ப்பல்கலைக்கழகத்துக் கட்டுரையின் வடிவம்.
முதலில் தலைப்பைப் பார்த்து தவறான தலைப்பாச்சே என்று நினைத்தேன்.
ReplyDeleteபதிவில் பாரதியின் பாடலைப் படித்ததும் நினைவுக்கு வந்துவிட்டது. எப்படிச் சிந்தித்திருக்கிறார் பாரதி என்று தோன்றிற்று. மிக அருமையான பகுதியை நினைவுக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி கீசா மேடம்.
கலிகாலம் பிறக்க இருப்பதை கடைசி வரிகள் சொல்கின்றன!
ReplyDeleteமனப்பாடப்பகுதி காரணமாக இன்னும் நினைவில் இருக்கும் பகுதி 'தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்' மற்றும் 'ஓம் ஓமென்று உறுமிற்று வானம்'
ReplyDeleteகீதாக்கா இப்பகுதி எனக்கு மிகவும் பிடித்த பகுதி! கல்லூரியில் பேசியது எல்லாம் நினைவுக்கு வருகிறது!
ReplyDeleteகீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteபாரதியின் பாடல் அருமை. அதற்கான விளக்கங்களும் நன்றாக உள்ளது. பாரதியாரின் நினைவை போற்றும்படிக்கு நீங்கள் விடாமல் பதிவுகள் போட்டு வருவது பாராட்டுக்குரியது. நான்தான் தாமதமாக பதிவுக்கு வந்துள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
ReplyDelete