குட்டிக்குஞ்சுலுவிடம் ஏற்கெனவே பிள்ளையார் சதுர்த்தி பற்றிச் சொல்லி யாச்சு என்பதோடு அவ அப்பாவும் சொல்லி இருக்கார். ஆகவே பிள்ளையார் சதுர்த்தி அன்னிக்குக் காலையில் (அவங்க நேரம் காலை எட்டு மணி)கூப்பிட்டாங்க. நான் அப்போத் தான் பூஜை முடிச்சுட்டு ரங்க்ஸுக்குச் சாப்பாடு போட்டுட்டு அதிரசம் ஒண்ணை எடுத்துத் தின்று பார்த்துக் கொண்டிருந்தேன். குஞ்சுலு வந்ததும் எனக்கு/தாத்தாவுக்கு எல்லாம் ஹாப்பி பிள்ளையார் சதுர்த்தி சொன்னது. பின்னர் பிள்ளையாரைக் காட்டச் சொல்லியது. எனக்குச்சரியா வரலை. உதவிக்கு வரும் பெண் மொபைலை அட்ஜஸ்ட் செய்து காட்டினார். குஞ்சுலு பார்த்துட்டு ஹாப்பி பர்த்டே பிள்ளையார் உம்மாச்சி எனப் பாட ஆரம்பித்தது. பாடி முடிச்சதும் நிவேதனங்களைக் காட்டினால். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதுக்கு லட்சியமே இல்லை. எல்லாம் அம்பேரிக்க வாழ்க்கையினால் வந்த விளைவு. இப்போத்தான் கொஞ்சம் கொஞ்சம் கடலை மிட்டாயும் எள்ளுருண்டையும் சாப்பிட ஆரம்பிச்சிருக்கு. மற்றபடி முறுக்கு, தட்டை, ஓலை பக்கோடா எல்லாம் சாப்பிடும்.முன்னால் வீட்டில் பண்ணி வைத்துக் கொண்டு கொடுப்பேன். பின்னர் பிள்ளை கண்டிப்பாக வீட்டில் பண்ணுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே வாங்கி வைக்கிறேன். அதையும் மனசு இருந்தால் சாப்பிடும்.
எப்படியோ ஒரு வழியாப் பிள்ளையார் சதுர்த்தியும் ஆச்சு. எனக்குத் தான் அன்று ஒரே தடுமாற்றம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ரங்க்ஸைப் பார்த்துக்க வேண்டி வந்ததால் சாப்பிடும்போது பனிரண்டு மணி ஆயிடுச்சு. பாவம் ரங்க்ஸ்! பசி முத்திப் போச்சு. சரியாச் சப்பிடலை. கொழுக்கட்டை எல்லாம் நிவேதத்துக்குப் பண்ணிக் கொண்டு மிச்சத்தை மத்தியானமாப் பண்ணி விநியோகம் செய்தேன்.
பூரணக் கொழுக்க்ட்டை அம்மா வீட்டில் ஐந்த் விதம் பண்ணுவாங்க. இங்கே தேங்காய்ப் பூரணமும் உளுந்துப் பூரணமும் தான். வ்டை, அதிரசம்,, பாய்சம் தான் கூடுதலாக. பச்சரிசியில் இட்லி செய்யணும். நன்றாக வந்திருந்தது. இன்னிக்குக் காலையில் கூட அதான் சாப்பிட்டோம். இந்த முறை மிச்சம் வடை மாவை வடையாகவே தட்டித் தயிரில் போட்டு விட்டேன். இன்னிக்கு மத்தியானமாத் தான் பண்ணினேன். இன்னும் சாப்பிடலை. நோ திப்பிசம்.
வணக்கம்..
ReplyDeleteஎங்கள் பேத்தியும் இப்படித்தான்...
சதுர்த்தி அன்று சின்னவள் அவளே வீட்டில் இருக்கின்ற பிள்ளையாருக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து இருக்கின்றாள்..
வளரட்டும்..
குழந்தை ஆர்வமாகச் செய்திருப்பது பாராட்டத்தக்கது. ப்ரிபூர்ண ஆசிகள்.
Deleteகுழந்தை அமெரிக்க்க வாழ்க்கை முறைக்கு பழகப்பழக இதில் எல்லாம் சுவாரஸ்யம் விட்டுப் போகிறது போல... இருங்கள்,, இங்கேயே வளரும் குழந்தைகள் மட்டும் இதில் சுவாரஸ்யம் காட்டுகிறார்களா என்ன!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், இங்கே வளரும் குழந்தைகளில் சிலருக்கு ஆர்வம் இருக்கிறது. பலருக்கு இல்லை. எல்லாம் வளர்ப்பில் இருக்குனு நினைக்கிறேன்.
Deleteவிட்டுக்கொடுக்காமல் அழகாக எல்லாம் செய்து கொழுக்கட்டை தினத்தை கொண்டாடி விட்டீர்கள். தட்டிலிருந்து இரண்டு கொழுக்கட்டைகள் எடுத்துக் கொள்கிறேன்!
ReplyDeleteநைவேத்தியத்துக்குப் பனிரண்டு, பணிரண்டு எல்லாம் பண்ணினேன். மிச்சத்தைக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மூணு மணிக்கு மேல் உட்கார்ந்து பண்ணிட்டு விநியோகம் செய்தேன். பனிரண்டில் நீங்க இரண்டு தானே எடுத்துண்டிருக்கீங்க ? மிச்சம் இருக்கே/
Delete?
எங்கள் வீட்டில் இரண்டே வகை கொழுக்கட்டைகள்தான். தேங்காய் பூரண கொழுக்கட்டை. காரவகைக்கு உளுத்தம் கொழுக்கட்டை. மாவு மிச்சமிருந்தால் அம்மிணி கொழுக்கட்டை. அது பெரும்பாலும் இருபப்தில்லை!
ReplyDeleteஆமாம், இங்கே புக்ககத்திலும் இரண்டே வகை தான். அம்பத்தூரில் இருந்தவரை மன்னி எள்ளுக் கொழுக்கட்டை எனக்குத் தனியாக் கொடுத்து அனுப்புவா.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. விநாயக சதுர்த்தி வாழ்த்துகளை. தாமதமாக கூறிக் கொள்கிறேன். தங்கள் வீட்டில் நல்லபடியாக விநாயக சதுர்த்தி விரதம் நடைபெற்றது குறித்து மிகவும் சந்தோஷம்.
தங்கள் பேத்தி சதுர்த்தி பூஜை அலங்காரங்கள் ரசித்தது குறித்தும் மிக்க மகிழ்ச்சி. குழந்தைக்கு போட்டோவில் பார்த்தவுடன் எதுவும் சாப்பிட பிடித்தமில்லால் போயிருக்காது. மேலும் அன்று ஏதோ விளையாட்டு மூடில் இருந்திருப்பாள் . ஆனாலும் சில குழந்தைகள் இப்படித்தான் இருப்பார்கள் போலும். இங்கு எங்கள் மகள் வயிற்றுப் பேத்தியும் அப்படித்தான் என்றுமே சாப்பிடுவதில் எந்த விருப்பமும் கிடையாது. விநாயக சதுர்த்தியன்று இனிப்பு கொழுக்கட்டை ஒன்றுக்கு மேல் சாப்பிடவில்லை. ஆனால் மகன் வயிற்று குழந்தைகள் இஷ்டத்துடன் வாங்கி அவர்களுக்கு வேண்டியதை சாப்பிட்டார்கள். அவர்கள் கேட்டு சாப்பிடும் போது எனக்கு மகிழ்வாக இருந்தது.
உங்கள் பிரசாத படங்களிலிருந்து (அதில் வடையை மட்டும் காணோமே:)) அதை தயிரில் போட்டு விட்டீர்களோ ? ) நானும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு விநாயகப் பெருமானை வணங்கி அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தித்துக் கொண்டேன். தங்கள் கண் பிரச்சனை எப்படி உள்ளது.? நிறைய பிரச்சனைகளுக்கு நடுவில் எல்லாம் நல்லபடியாக நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா! குழந்தைக்கு இன்னிக்குப் பிறந்த நாள். கொஞ்சம் முன்னாடி தான் தூக்கத்தில் எழுப்பிக் காட்டினார் பையர். அப்புறமா அது ஸ்கூல் போயிடும். வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கு. நானும் வாய்ஸ் மெசேஜிலேயே பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னேன். மற்றபடி கொழுக்கட்டை எல்லாம் அதுக்குப் பழக்கமில்லை. சாப்பாடு விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லை. பசி நேரத்தில் வாழைப்பழத்தைக் கொடுத்தால் கூடச் சாப்பிட்டுவிட்டுப் பேசாமல் இருப்பாள். அது சாப்பிடவென்றே நாங்க குலதெய்வத்திடமெல்லாம் வேண்டிக் கொண்டிருக்கோம். அடுத்து படிப்பு/எழுத்து. வரைவதில் உள்ள ஆர்வம், கலரை அழகாகச் சேர்த்துப் படம் வரைத்தல் இதில் உள்ள ஆர்வம் படிப்பில் இன்னும் வரலை. ப்ரஷும் கலர் பாக்ஸும் இருந்தால் போதும். குழந்தை இருக்குமிடமே தெரியாது.
Deleteஉங்கள் வீட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நன்று
ReplyDeleteபட்சணம் கம்மியா இருக்கேன்னு கேட்கும் முன்னால் நீங்களே சொல்லிட்டீங்க அப்புறமா மீதியைப் பண்ணிட்டேன் என்று
உங்களைப் போல் அ.கு.வுக்காகத் தான் முன்கூட்டியே சொல்லிட்டேன். மாவு மொத்தமாய்க் கிளறிட்டுப் பின்னர் போய்ப் பண்ணினேன்.
Deleteஸ்ரீஜெயந்திக்கு திதிப்பு சீடை வெல்லச் சீடை பண்ணி மாமாவைக் கஷ்டப்படுத்தினீர்களா?
ReplyDeleteவாங்க நெல்லை, ஸ்ரீஜயந்திக்கு வரலை. பக்ஷணம் எல்லாம் இம்முறையும் வாங்கத் தான் செய்தேன். நான் போய் மணிக்கணக்காக அடுப்படியில் உட்கார்ந்தால் மாமாவைப் பார்த்துக்கறது எப்படி?
Deleteவயது ஏற ஏற வெளிநாட்டு வாழ் குழந்தைளின் ஆர்வமும் கொஞ்சம்
ReplyDeletemmmmmmmmmm இமாலயத்தவறுகள் நடக்கின்றன. ஆனால் நாம் திருந்துவ்தாக இல்லை.
Deleteஇங்க உள்ளவங்கள்ல பல குழந்தைகளுக்கே ஓடிடி தயவால் நம்ம கலாச்சாரங்களிலிருந்தே அந்நியப்பட்டுப் போயிடறாங்க. இதுல வெளிநாட்டு குழந்தையைப் பற்றி என்ன சொல்ல?
ReplyDeleteஉண்மை. ஆனால் இங்கே திருச்சியில் பல குழந்தைகளும் கிருஷ்ணன் வேஷத்தோடு போவதைக் காணலாம். இன்னும் கொஞ்சம் ஒட்டிண்டு இருக்குப் போல!
Deleteபதிவு அருமை. நீங்க்கள் மாறவே இல்லை. அந்தக் கால எழுத்து அப்படியே இருக்கு இந்தக் காலத்திலும்.
ReplyDeleteவாங்க ஜீவி சார், எழுதணும் என்பதற்காகக் கோடித்துக் கொள்ளாமல் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவதால் இருக்குமோ? பொதுவாக அலங்காரப் பேச்சு/எழுத்து என்னிடம் கிடையாது. வரவே மாட்டேன் என்கிறது. இதுவே நமக்குப் போதும். :)
Deleteஇப்போது பலருக்கும் நம் பாரம்பரிய பூஜை நாள் பலகாரங்கள், பக்ஷணங்கள் பிடிப்பதில்லை. செய்து விட்டு, சாப்பிட யார் கிடைப்பார்கள் என்று பார்க்கும் படி ஆகிவிடுகிறது பல நேரங்களில் என்று சொல்கிறார்கள் பல வீடுகளில்.
ReplyDeleteபிள்ளையார் சதுர்த்தி நிகழ்வுகள் நன்று.
வாங்க வெங்கட், கலாசாரங்கள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றன. இதன் விளைவுகள் வருங்காலத்தில் தான் நமக்குத் தெரியும்/ப்புரியும். நல்லவேளையா நாங்கல்லாம் இருக்க மாட்டோம்.
Deleteபண்டிகை விவரம் , பிரசாதங்கள் அருமை.
ReplyDeleteமுடிந்தவரை விழாக்களை செய்வது மகிழ்ச்சி.
பேத்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன்
நன்றி கோமதி அரசு. அரிசோனாவில் தான் இருக்கீங்கனு நினைக்கிறேன்.
Deleteஅக்கா குட்டி குஞ்சுலு வந்து ஹாப்பி பர்த்டே பிள்ளையார் சொல்லிருக்கே சந்தோஷம்.
ReplyDeleteபரவால்லக்கா முறுக்கு, தட்டை ஓலைபக்கோடா எல்லாம் சாப்பிடுகிறதே!!!
அக்கா அம்பேரிக்காவில் இருக்கும் குழந்தைகளும் நம்ம விழாக்கள் எலலம் ஆர்வமாகக் கொண்டாடுகிறார்கள். பாடுகிறார்கள், பூஜை செய்கிறார்கள் வீட்டில் வளர்ப்பும் பெற்றோரும் எப்படியோ அப்படியே குழந்தைகள். என் உறவினர் குழந்தைகள் எல்லோரும் ஆங்கிலத்தில் பேசினாலும் கூட இதை எல்லாம் ரொம்ப ஆர்வமாகச் செய்யறாங்க அதுவும் எதிர்பார்த்து! அதுவும் இந்தியக் குடும்பங்கள் சேரும் இடங்களில் இவர்கள் தங்கள் பங்கையும் நல்லா செய்யறாங்க.
கீதா
குட்டிக்குஞ்சுலுவைப் பொறுத்தவரை பண்டிகைகள் எப்படிக் கொண்டாடணும்னு கேட்டுத் தெரிந்து கொண்டு அம்மா, அப்பாவை உசுப்பி விட்டுக் கொண்டாட வைக்கிறது. இந்த வருஷம் நவராத்திரிக்குக் கொலு இல்லைனு அது கிட்டே சொல்லி இருந்தேன். ஆனால் பொம்மையை அடைச்சு வைக்கக் கூடாதுனு சொல்வதால் சும்ம்ம்ம்ம்ம்ம்மா பத்து பொம்மைகளை எடுத்து வைக்கணும். விஸ்தாரமாகவெல்லாம் பண்ணப் போவதில்லை.
Deleteஎல்லாமே செஞ்சு அசத்திட்டீங்க கீதாக்கா.. நான் காரக் கொழுக்கட்டை மட்டுமே செய்தேன்! இருக்கவே இருக்கு பழங்கள்! தித்திப்பு யாரும் சாப்பிடுவதில்லை. இங்கு அருகில் கொடுக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை பழைய வீட்டருகில் குழந்தைகள் அதுவும் ஏழைக் குழந்தைகள் நிறைய உண்டு. எனவே செய்து கொடுத்ததுண்டு. இங்கு பின்னாடி வீடு கட்டும் பணியாளர்களுக்குக் கொடுத்தேன் கொழுக்கட்டை.
ReplyDeleteகீதா
ஒரு மூடித் தேங்காயில் தித்திப்புக் கொழுக்கட்டை பண்ணுவேன். மிஞ்சிப் போனால் 30,40 கொழுக்கட்டைகள் தான் வரும். மற்றபடி இன்னொரு மூடித் தேங்காய் பாயசம், அதிரசம், உளுத்தம்பூரணத்தில் சேர்த்துடுவேன். சரியாகிடும். என் மாமியார், மாமனார் காலத்தில் எட்டுத் தேங்காய் கூடப் பத்தாது. உனக்கு மனசாகலை என என்னைக் குறை சொல்லுவாங்க. அவங்க கிராமத்தில் இருந்தவரை தென்னந்தோப்பில் இருந்து தேங்காய்கள் வண்டி வண்டியாய் வரும். ஒரு நாளைக்கே ஏழெட்டுத் தேங்காய்கள் செலவாகும். வாங்கிச் சாப்பிடும் நிலையில் நான் பிள்ளையார் சதுர்த்திக்கு எட்டுத் தேங்காய்க்குக் கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் வாங்கி இருக்கேன்.
Delete