எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Friday, November 29, 2013
Thursday, November 28, 2013
சித்திரவதையுடன் சித்திரகூடத்தில் --தொடர்ச்சி!
முன் பதிவு
அந்த ஆட்டோக்கள் எல்லாமே ஷேர் ஆட்டோக்கள் தான். நாங்க அதிலே போய்க் கடைத்தெருவிலே இறங்கிக்கலாம்னு தெரியாம ஒவ்வொருத்தரையாக் கூப்பிட்டோம். கடைசியிலே ஒருத்தர் கடைத்தெருப்பக்கம் போன ஒரு ஆட்டோவை நிறுத்தி எங்களுக்கு ஏற்பாடு பண்ணிப் பேசிக்கொள்ளச் சொன்னார். ரங்க்ஸ் சர்க்கரை நோய்க்காக மாத்திரைகள் சாப்பிடணும்ங்கறதாலே முதல்லே நாங்க காலை உணவு எடுத்துக்க வேண்டி ஒரு ஹோட்டலுக்குக்கூட்டிப் போகச் சொன்னோம். அங்கிருந்து சித்திரகூடத்தின் சார் தாம் என அழைக்கப்படும் நான்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்லச் சொன்னோம்.
சித்திரகூடத்து மலையடிவாரத்தையே கிரி வலமும் வருகின்றனர். அதைப் பரிக்ரமா என்று சொல்கிறார்கள். நாங்கள் இருந்த பகுதியும் சித்திரகூடத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களும் மத்தியப் பிரதேசப் பகுதியில் இருந்தன. சார்தாமில் முதலில் அனுமான் தாரா என்னும் மலை. 600 படிகளுக்கு மேல் ஏறிப் போய் அனுமனைப் பார்க்கணும். துளசி இங்கே தான் ராம் சரித மானஸ் எழுதினதாகவும் சொல்கிறார்கள். ஆனால் எங்களைப் பார்த்ததுமே அனைவரும் அனுமான் தாராவுக்கு நீங்க போக முடியாது. மலைப்படிகள். ஏறுவதும் கஷ்டம்; இறங்குவதும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார்கள். சரினு மத்த மூணு இடங்களுக்கு ஆட்டோக்காரரிடம் பேசினோம். வழக்கம் போல் "ரிஜர்வ்ட்" என்று கேட்டு ஆட்டோவை அவங்க சட்டப்படி எங்களுக்கு மட்டுமே பேசிக் கொண்டோம். ஆட்டோக்காரப் பையருக்கு 20 வயதுக்குள் தான் இருக்கும். எல்லா இடமும் கூட்டிப் போய் விட்டு மதியம் சாப்பாட்டுக்கும் ஹோட்டலுக்குப் போய்ப் பின்னர் அங்கிருந்து மறுநாள் கிளம்புவதற்கு ரயிலில் முன்பதிவு செய்யணும்னு அதையும் கேட்டுக் கொண்டோம். எல்லாவற்றுக்கும் அழைத்துச் செல்வதாய்ச் சொன்னார் அந்தப் பையர். நாங்களும் நம்பியதால் வேறு யாரிடமும் இதைப் பத்திக் கேட்கவே இல்லை.
அவர் அழைத்துச் சென்ற ஹோட்டலில் காலை ஆகாரம் எடுத்துக் கொண்டோம். நான் வழக்கம் போல் சாப்பிடப் படுத்த, ரங்க்ஸோ, சாப்பிட்டால் தான் எல்லாத்தையும் பார்க்கத் தெம்பு வரும். ஒழுங்கா சாப்பிடுனு மிரட்ட, நாஷ்டா தட்டில் சூடான ஜிலேபிகளோடு பூரி, சப்ஜி, தயிர், ஊறுகாய் இத்தனையும் வர, ஜிலேபிகளைப் பார்த்த பரவசத்தில் நானும் நாஷ்டானு கூவ. நாஷ்டாவும் வந்தது. சாப்பிட்டுவிட்டுக் காஃபி இங்கே சாப்பிட்டுப் பார்க்கலாம்னு (கொழுப்புத் தானே னு என் ம.சா. கேட்குது) காஃபி ஆர்டர் பண்ணினோம். சகிக்காத காஃபி வர, அவர் எனக்கு உபசாரம் பண்ண, நான் அவருக்கு உபசாரம் பண்ண கொடுத்த காசுக்குக் காஃபியைக் கொட்டாமல் (பின்னே? காலம்பர காஃபி, டீ கிடைக்காமல் தவிச்ச தவிப்பு பாடம் கத்துக் கொடுத்துடுச்சே) குடிச்சு வைச்சுட்டு ஆட்டோவில் ஏறினோம். அப்போவானும் ஹோட்டல்காரரிடம் சார்தாமுக்கு ஆட்டோவுக்கு எவ்வளவு கொடுக்கணும், நாலும் ஒரே ஆட்டோவில் பேசிய பணத்துக்குத் தானே போகணும்னு எல்லாம் கேட்டிருக்கணும். என்னமோ ஒரு அலுப்பு, சலிப்பு. இங்கெல்லாம் ஏமாத்த மாட்டாங்க அப்படினு ஒரு நினைப்பு. ஆட்டோவில் ஏறிக் கொண்டு டிக்கெட் பார்க்கப்போனால் திறக்கவே இல்லை.
முதலில் அனுமான் தாரா தான் இல்லையே; அடுத்து என்னனு பார்த்தால் சதி அநசூயா ஆசிரமம். அங்கே செல்லும் வழியில் ஒரு கோயிலையும், ஒரு பாறையையும் காட்டினார்கள். அங்கே தான் ஶ்ரீராமரும், சீதையும் தனித்திருந்தபோது காகாசுரன் வந்து சீதையைத் தொந்திரவு செய்த இடமாம். அங்கே ஒரு கோயிலும் இருக்கிறது இப்போது. பாறையில் சிந்தூரப் பொடிகளைத் தூவி ஒரு பண்டிட் உட்கார்ந்து காசு பண்ணிக் கொண்டிருக்கிறார். கொஞ்சம் மேலே ஏறிப் போகணும். போனோம்.
மந்தாகினி நதிக்கரையில் அமர்ந்திருக்கும் ஒரு தொழிலாளி.

இந்தப் பாறை தான், ஶ்ரீராமர், சீதை அமர்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருப்பவர் தான் பண்டிட். பின்னால் தெரிவது மந்தாகினி நதி.
அதே காட்சி
Tuesday, November 26, 2013
பெண்கள், இந்நாட்டின் கண்கள்? அல்லது புண்கள்?? :(
சூரி சார்,
நீங்க இன்னமும் அறுபது, எழுபதுகளின் மாமியார்த்தனங்களை விட்டு வெளியே வரலையோனு நினைக்கிறேன். ஏனெனில் கடந்த இருபது வருடங்களாகவே எந்தப் பிள்ளையின் அம்மாவும், ஸ்டேடஸோ, சீர் வரிசைகளோ, பெண் வீட்டில் மரியாதை செய்யலைனோ சொல்லிக் கொண்டு கல்யாணத்தை நிறுத்துவதில்லை; மருமகள்களை அந்தக் காரணத்துக்காகப் படுத்துவதாகவும் தெரியவில்லை. அதிலெல்லாம் மாறித் தான் வருகிறது. ஆகவே நீங்க சொன்ன மாதிரி சீர் வரிசை இல்லைனோ, ஸ்ப்ளிட் ஏசி இல்லைனோ பிள்ளையின் அம்மா நிறுத்தலை.
சொல்லப் போனால் பிள்ளை வீட்டினருக்கு இருக்கும் வசதிக்கு மூணு பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தும் இந்தப் பிள்ளைக்குச் சொத்து மிஞ்சும். ஆகவே நிச்சயமாய் இம்மாதிரி அல்பக் காரணத்துக்காக நிறுத்தறவங்க அவங்க இல்லை. அது சர்வ நிச்சயம்.
முதல் பிள்ளையின் கல்யாணம் எவ்வளவு ஆசையும்,ஆவலும் கொண்டு எதிர்பார்த்தாங்க என்பதையும் கல்யாணத்துக்கு அப்புறம் மருமகள் வேலைக்குப் போக இஷ்டப்பட்டால் போகட்டும் என்றும் அது பிள்ளையும், பெண்ணும் பேசி முடிவு செய்துக்கட்டும் என்றும் விலகி இருந்தவங்க. பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொண்டு தங்கள் சம்மதத்தைத் தெரிவித்த பின்னரே பிள்ளையின் அப்பா, அம்மா, பெண்ணின் அப்பா, அம்மாவிடம் பேசித் திருமணத்தை நிச்சயம் செய்தனர். அதுவே ஒரு சின்னக் கல்யாணம் போல் கோலாகலமாக நடந்தது. :(
எங்க பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கையில் எங்க சம்பந்தி வீட்டில் ஏசி எல்லாம் கிடையாது. அதுக்காக நாங்க கல்யாணத்தை நிச்சயம் செய்யாமல் இல்லை; நிறுத்தவும் இல்லை. இந்தக் காலத்தில் பெண்ணும், பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்பே பேசிக்கிறது, முடிவு செய்துக்கறதுனு ஆன பின்னால், பிள்ளையின் அப்பா, அம்மாவோ, பெண்ணின் அப்பா, அம்மாவோ இதை எல்லாம் முக்கியமான குறைகளா நினைப்பதும் இல்லை.
இந்தக் காலத்துக்கு வாங்க சார், எப்போதும் போல் வழக்கப்படி பிள்ளையைப் பெத்தவங்களையே குறை சொல்லக் கூடாது. இந்தக் காலம் பெண்களின் காலம் என்பதை நீங்க ஒத்துக்கறீங்க தானே! அப்படி இருக்கையில் இப்போது பெண்கள் கல்யாணத்துக்குப் போடும் கண்டிஷன்களை எல்லாம் பற்றித் தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் (சிலநாட்கள் முன்னர் கல்கியில் கூட வந்தது. எங்கள் ப்ளாகிலும் பதிவாய்ப் போட்டிருந்தாங்க) வரதை எல்லாம் நீங்க பார்க்கிறது இல்லையா? 25 வயதுக்கு மேல் கல்யாணம் செய்துக்கும் பெண்ணால் நிச்சயமாய் வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பது கஷ்டமே. வளைந்து கொடுப்பதே கேவலம் என இக்காலப் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் நினைக்கின்றனர். மேலும் இந்தப் பெண் திருமணத்தின் அர்த்தத்தையே கொச்சைப்படுத்துவது உங்களில் எவருக்கும் புரியவே இல்லையே என நினைக்கவும் ஆச்சரியமா இருக்கு! :(
தி.வா. சொன்னதும் தான் மறுபடி அப்பாதுரையோட கமென்டைப் பார்த்தேன். ஏன் நல்ல கர்ப்பமா வேண்டும்னு பிரார்த்திச்சுக்கக் கூடாது? கர்பம் நல்ல கர்பமாக இருந்தால் தானே வருங்கால சந்ததிகளுக்கும் நல்லது. இது ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது புரியலையா? நம் சந்ததிகள் நல்லா இருக்கணும்னு நினைப்பதில் என்ன தப்பு இருக்கு? இப்படி ஒவ்வொரு குடும்பமும் நினைச்சுப் பிரார்த்திச்சுக் கொண்டால் வருங்காலமும் நன்றாக இருக்குமே! குடும்பம் சேர்ந்து தானே சமூகம், சமூகம் சேர்ந்து நகரம், நாடு! நகரமும், நாடும் இப்போது இந்த அளவுக்கு மோசமாக் கெட்டுப் போயிருக்குனா சரியான நெறிமுறைகள் இல்லாமல் போனதே காரணம் என்பதோடு முப்பது வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்தில் பெற்றோர் ஒரே குழந்தை போதும்னு முடிவெடுத்ததும் இன்னொரு முக்கியக் காரணம். பல பெண்குழந்தைகள் அழிக்கப்பட்டன.
விளைவு?? இன்னிக்குப் பெண்கள் கிடைப்பதே கஷ்டமாய் இருக்கிறது. கிடைத்தாலும் இப்படிப் பல நிபந்தனைகள். கல்யாணத்தைப் புனிதமாக நினைப்பதே கேவலம் என்றொரு எண்ணம். ஆனால் இத்தனைக்கும் நடுவில் இன்னமும் சில பெண்கள் தங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டும், வேலைக்குச் செல்வதும், ஒன்றுக்கும் மேல் இரண்டாவது குழந்தையும் பெற்றுக் கொண்டிருப்பதும், குடும்பத்துக்காகக் குழந்தைகளுக்காக வேலையை விட்டு விட்டுப் பார்த்துக் கொள்வதும் ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கிறது. இதில் நவநாகரிக, நவீனப் பெண்களும் அடக்கம். யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பது மட்டுமில்லாமல் தன் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு தனக்குத் தான் என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையா! அதற்கே அவங்களுக்கு ஒரு சல்யூட்!!!
அதோட இன்னொரு விஷயம், முதல்முறையா இந்தப் பொண்ணு தான் குழந்தையைப் பாத்துக்க முடியாதுனு சொல்லலை. என் உறவினர் பையருக்குப் பார்த்த இன்னொரு பெண்ணும் இதே கண்டிஷன் போட்டிருக்கார். பெண்ணின் அப்பா, அம்மா எங்களுக்கு வயசாச்சு, எங்களால் பார்த்துக்க முடியாது. உங்க வம்சத்து வாரிசு தான், அதனால் நீங்க தான் பார்த்துக்கணும்னு சொல்லிட்டாங்களாம். ஆக இது ஒண்ணும் இப்போப் புதுசா நடக்கலை தான். ஆனால் பெண்கள் இதைத் தான் சுதந்திரம், விடுதலைனு நினைச்சுக்கிறது தான் சரியா வரலை. அதுவும் இப்போதெல்லாம் பெரும்பாலான ஆண்கள் வீட்டு வேலைகள் மட்டுமின்றிக் குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலும் மனைவிக்கு உதவியாகத் தான் இருக்கிறார்கள்.
ஜிஎம்பி சார் சொல்வது ஒரு விதத்தில் சரி. இங்கே பெண்ணுக்குப் பிள்ளையைப் பிடிக்கலைனோ, பிள்ளைக்குப் பெண்ணைப் பிடிக்கலைனோ, சீர் வரிசைகள் விஷயத்திலோ கல்யாணம் நிக்கலை. பெண் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பையரைத் தன் வழிக்கு மாற்ற வேண்டி முயற்சிக்கையில் அவங்க இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவு! அதன் மூலம் ஏற்பட்ட எதிர்பாரா விளைவு என்ற அளவிலே நான் புரிஞ்சுட்டு இருக்கேன். ஒரே பெண். கூடப் பிறந்தவங்க யாருமே இல்லை. ஆகையால் அந்தப் பெண் நினைச்சதை நடத்திடணும்னு நினைச்சிருக்கலாம்.
பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும் இக்காலப் பெண்களைப் பற்றிய ஒரு தகவல்: இப்போது பெண்கள் எத்தகைய கொடூரத்துக்கும் போவாங்க, அதற்கு எல்லையே இல்லை என்பதற்கு உதாரணம் திருவானைக்காவல் வைர வியாபாரி, அவர் மகன், மகள் அனைவரையும் கொலைசெய்த பெண்மணியும், அவருடைய கள்ளக் காதலும் சாட்சி! சினிமாவை விடக் கொடூரம் இது. கொலை செய்துட்டு அந்தப் பாவத்தைக் கழுவ ஷிர்டி போனாங்களாம். போன உயிர் திரும்பியா வரும்? :(

Sunday, November 24, 2013
பெண்களே, இந்நாட்டின் கண்களே, என்ன எண்ணம் உங்களுக்கு??
சில நாட்களாகவே மனம் சஞ்சலம் அடையும் நிகழ்வுகளாகத் தொடர்ந்து! ரேவதியின் இழப்புக்குப் பின்னர் மீண்டும் ஒரு மனம் வருந்தும் செய்தியைக் கேட்க நேர்ந்தது. அதிலே என்ன முக்கியம்னா நிச்சயம் ஆகித் தேதி குறித்துப் பத்திரிகைகள் எல்லாம் அடித்து, பத்திரிகைகள் விநியோகமும் ஆனதும் கல்யாணத்துக்கு இன்னும் ஒரே மாசம் இருக்கையிலே பெண் வீட்டினர் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள். பெண்ணுக்கு அவங்களோட career முக்கியமாம். ஆகவே வெளிநாடு போவாங்களாம். அப்படிப் போகையில் கணவனின் விசாவில் dependent visa வில் செல்ல மாட்டாங்களாம். அவங்களோட தனி விசாவில் தான் செல்வாங்களாம்.
அவங்க இருக்கும் இடத்துக்குக் கணவனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லையாம். ஐந்து வருஷத்துக்குக் குழந்தை பெத்துக்க மாட்டாங்களாம். ஐந்து வருஷத்துக்குப் பின்னர் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை பையரின் பெற்றோரோ அல்லது பையரோ பொறுப்பு எடுத்துக்கணுமாம். இவங்க தாய்நாட்டுக்கு வரமாட்டாங்களாம். அதுக்குச் சம்மதிச்சால் பையர், தன்னோடு குடும்பம் நடத்த (அதுவும் பத்து வருஷங்களுக்கு மட்டும்) ஒத்துப்பாங்களாம். இல்லைனா அவங்க வழி, அவர் வழி தனினு இருக்கலாமாம். பத்து வருஷத்துக்குப் பின்னர் குடும்பம், குழந்தைனு எல்லாம் அவங்களாலே பொறுப்பு ஏத்துக்க முடியாதாம். ஆகவே தனித்தனி வாழ்க்கை தான் நல்லதுனு நினைக்கிறாங்களாம். அவங்க சேர்ந்து இருக்கும் ஐந்து வருடங்களிலும் பிள்ளையின் அம்மா, அப்பா அங்கே வரக் கூடாது. எங்களுக்கு முடிஞ்சால், நேரம் இருந்தால் நாங்க அவங்களை வந்து பார்ப்போம். அப்பா, அம்மாவுக்குப் பிள்ளையோடு எந்தவிதத் தொடர்பும் கூடாது னு திட்டவட்டமாக அறிவிப்பு.
இதுக்குப் பெண்ணின் அம்மாவும் துணை போறாங்க. பெண் சொல்வதில் தப்பே இல்லைனு அவங்க கட்சி. நிச்சயம் ஆகும் முன்னரே சொல்லி இருக்கலாமேனு கேட்டதுக்கு, உங்க பிள்ளை கல்யாணம் ஆனால் தன்னால் வழிக்கு வந்துடுவார்னு நினைச்சோம். கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க பொண்ணோட ஒத்துப்போகலைனா கல்யாணம் ஆனப்புறமா எங்க பொண்ணு கஷ்டப்படுவா! அதனால் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம். எங்க பொண்ணைப் படிக்க வைச்சுட்டு அவள் இஷ்டத்துக்கு வேலை பார்க்க முடியாமல் கல்யாணம் பண்ணிட்டு உங்க பிள்ளைக்குச் சமைச்சுப் போட்டுட்டு வீட்டிலா உட்கார முடியும்னு அவங்க கேள்வி!
பிள்ளை வீட்டிலே எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தும், பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தமே பெண்ணின் அப்பாவின் கடைசி வேண்டுகோள்னு தான் ஒத்துண்டோம். அதுக்கப்புறமா உங்க பிள்ளை கிட்டே எல்லாத்தையும் சொல்லி ஒத்துக்க வைக்க நினைச்சோம். அவர் ஒத்துக்கலை. இப்படிப் பிடிவாதமா இருக்கும் பிள்ளை எங்களுக்கு வேண்டாம். னு சொல்லி இருக்காங்க. நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் பெண்ணின் அப்பா காலமாகி விட்டார். :(
அழுவதா, சிரிப்பதானு தெரியலை! கல்யாணத்தை ஒரு வியாபார ஒப்பந்தமாக மாற்றி வருகின்றனர் இன்றைய நவநாகரிகப் பெண்மணிகள். அவங்க எதிர்பார்ப்புகள் தான் என்ன? எனக்குத் தெரிஞ்சு பல பெண்கள் நல்லாப் படிச்சும், குழந்தைக்காக வேலையை விட்டுட்டு இருக்காங்க தான். அதே சமயம் பல பெண்களும் வேலையையும் விடாமல், குழந்தையையும் பார்த்துக்க ஆள் போட்டுக் கொண்டோ, அல்லது மாற்றி, மாற்றி, மாமியார், அம்மா இவங்களைத் துணைக்கு வைத்துக் கொண்டோ இரட்டைக்குதிரை சவாரி செய்யறாங்க. அப்படி இருக்கையில் இப்போது இப்படியும் சில பெண்கள் சொல்றாங்க.
ஒரு பக்கம் மருத்துவ ரீதியாக 25 அல்லது 27 வயதுக்குள்ளாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். இன்னொரு பக்கம் பெண்ணின் திருமண வயது குறைந்த பக்ஷமாக இப்போது 30 -க்கு வந்திருக்கிறது. அப்படி இருக்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஐந்து வருஷம் தள்ளிப் போட்டால் 35 வயதுக்குப் பிறக்கும் குழந்தையை வளர்க்கும் பொறுமையும், கனிவும், உடல் நலமும், ஆரோக்கியமும் இவங்களிடம் இருக்குமா? குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்குமா? மன நலம் சிறப்பாக இருக்குமா?
படித்த படிப்பை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்த வண்ணம் சம்பாதிக்கப் பல வழிகள் இப்போது ஏற்பட்டிருக்கின்றன. அது ஏன் இவங்களுக்குத் தெரிவதில்லை. பல பெண்களும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தொழிலும் ஆரம்பித்து முன்னேறி இருக்காங்க. நிச்சயமாய்ப் பின்பலம்/பக்கபலம் வேண்டும் தான். ஏன் அப்படிச் செய்யக் கூடாது? கல்யாணத்தை வியாபாரமாக ஆக்காமல் இருக்கலாமே? இவங்க கல்யாணம் என்பதை என்னனு புரிஞ்சுட்டு இருக்காங்க? ஒரு ஆணும், பெண்ணும் உடல் உணர்வுகளைத் தீர்க்க மட்டும் தான் கல்யாணம் என்ற எண்ணமா? அதையும் தாண்டிய ஒண்ணு கல்யாணத்திலே இருக்குங்கற செய்தியை இக்காலப் பெண்களுக்குச் சொல்லப் போவது யார்?

Friday, November 22, 2013
சித்திரவதையுடன் சித்திரகூடத்தில்! தொடர்ச்சி!
மடிக்கணினிக்கு என்னமோ உடம்பு. நேத்திக்குப் பூராவும் ஓய்வு எடுத்துண்டதும், இன்னிக்கு டாக்டரைப் பார்த்ததும், தானே சரியாயிடுத்து. அது கிட்டே ரொம்பக் கோபமா வந்தது. ஆனால் கடந்த இரு நாட்களும் எதுவுமே சரியில்லை. ஒரே பிரச்னை மேல் பிரச்னை. நேத்திக்குக் கோவிலுக்குப் போய்ப் பெருமாளைப் பார்த்து "ஹெலோ" சொன்னதும் கொஞ்சம் மனம் லேசாச்சு. இம்முறை ஒரு நிமிஷம் நிக்க முடிஞ்சது. நம்பெருமாளும் எப்போவும் போல நமுட்டுச் சிரிப்புச் சிரிச்சிண்டார். இப்போ நம்ம சித்ரகூடப் பயணத்தைத் தொடருவோமா?
*******************************************************************************
சித்ரகூடம் பாதி நகரம் உத்தரப் பிரதேசத்திலும், பாதி நகரம் மத்தியப் பிரதேசத்திலும் உள்ளது. உத்தரப் பிரதேசப் பகுதி தாண்டினதுமே நல்ல வெளிச்சம் இருக்கு. அதாவது மின் விநியோகம் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் எங்களால் ஹோட்டல்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. முதலில் சொன்ன ஹோட்டலில் இருந்து கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் போயிருப்போமோ என்னமோ! ஒரே ஒரு ஹோட்டல் திறந்திருந்தது. படிகள் ஏறிப் போகணும். ஆனால் நானும் வந்து அறையைப்பார்க்கணும்னு எங்க இரண்டு பேருக்குமிடையே பேசப்படாத ஒரு ஒப்பந்தம். ஆகவே வேறே வழியில்லாமல் இறங்கினேன். இந்த ஆட்டோக்களே தனிப்பட்ட முறையில் இருக்கின்றன. உயரக் காலைத் தூக்கி வைச்சு ஏறணும். மடிக்க முடியாத முழங்காலோடு ஏறவும், இறங்கவும் கஷ்டம். ஹோட்டலுக்கு வேறே பத்துப் படிகள் ஏறணும். ஏறி அங்கே போனால் அங்கே இருந்தவரை எழுப்பினோம்.
முதலில் அறை இல்லைனு சொன்னவர், என்னைப் பார்த்ததும் இரவு தங்கிப் படுத்துக்க இடம் வேணும்னா தரேன்னு சொன்னார். அது ஏதானும் அறையிலிருக்கும்னு நினைச்சால், கடவுளே, அங்கேயே ஒரு ஒதுக்குப்புறமான ஹாலில் கிட்டத்தட்டப் பத்துப் பேர் படுத்து உறங்கினார்கள். அவங்களைக் கொஞ்சம் ஒதுங்கச் சொல்லிட்டு நமக்கு இடம் கொடுப்பாங்களாம். இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு திரும்ப நினைச்சோம். அதுக்குள்ளே எங்க முகத்தைப் பார்த்த அந்த நபர், "இதெல்லாம் ராயல் குடும்பம் போலிருக்கு"னு நினைச்சிருப்பார் போல! உங்களுக்கெல்லாம் சரியா வராதும்மானு சொல்லிட்டு, தேவி பகவதி ஹோட்டல் என்னும் பெயரை ஆட்டோக்காரரிடம் சொல்லி, வழியையும் சொல்லி அங்கே கட்டாயம் அறை கிடைக்கும் என்றும், ரொம்ப ரொம்ப வசதியாய் இருக்கும்னு சொன்னார்.
ஆஹானு மகிழ்ந்து போய் ஆட்டோவில் மறுபடி ஏறினோம். கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டருக்கும் மேலே போனதும் அந்த தேவி பகவதி ஹோட்டல் வந்தது. ஆட்டோ அறிவிப்புப் பலகையைப் பார்த்ததும் நின்றது. நின்றது ஒரு மேடான இடம். அங்கிருந்து இறங்கிப் பள்ளத்தில் போய் மலைச்சாரலில் இன்னும் பள்ளத்தில் கொஞ்ச தூரத்தில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அது தான் தேவி பகவதி ஹோட்டல். பகவானே! இப்போத் தானே கட்டிட்டு இருக்காங்க. அதோடு போற பாதையே சரியில்லையே! இங்கே எப்படிப் போறது? நான் வரமாட்டேன்னு அடம் பிடிக்க, அந்த ஹோட்டல் கதவு திறந்து விளக்குப் போடப்பட்டது. ஆட்டோக்காரரும் அவருடைய உதவியாளும் போய்ப் பேசினாங்க. அறை இருப்பதாகச் சொல்லி இருக்காங்க. ஆகவே ஆட்டோக்காரர், பிரச்னை தீர்ந்ததுனு நிம்மதியா சாமானைத் தூக்க ஆரம்பிச்சார். நான் ஆக்ஷேபிக்க, ரங்க்ஸோ இந்த நேரத்தில் வேறே எங்கே போய்த் தேடுவோம், பேசாமல் வா, என்று அதட்ட அரை மனசாப் போனேன்.
அங்கே மாடியில் (லிஃப்டெல்லாம் இல்லை) படிகள். ஒவ்வொன்றுக்கும் குறைந்தது முக்காலடி இருக்கும். :( படி ஏறிப் போனதும் கடைசியில் இருந்த அறை ஒன்றைக் காட்டினார். பத்துக்குப் பத்து அறைக்குள்ளேயே குளியல், கழிவறை போக மீதம் இருந்த இடத்தில் கட்டிலைப் போட்டு அழுக்கான படுக்கை. அதிலே எப்படிப் படுக்கிறது? அதுக்குள்ளே ஆட்டோக்காரங்க சாமானைக் கொண்டு அங்கே வைச்சாச்சு. அந்த விடுதிக் காப்பாளர்னு சொல்லக் கூடிய ஒரு நபர் (இளைஞன்) அங்கே வந்தார். வாடகை 450 ரூ என்றார். இந்த அறைக்கா? என நான் கேட்க, இப்போ இந்த வாடகை, நவம்பரில் ஆயிரம் ரூபாய் வாங்குவோம்னு சொன்னார். அந்த ஹோட்டலில் கீழ்த்தளம் மிகப் பெரிய ஒரு கூடம் (கிட்டத்தட்ட நூறு பேர் சாப்பிடலாம்) ஒன்றோடும், அதைத் தாண்டி சமையலறை, வெளியே கழிவறை, தண்ணீர்க் குழாய்கள் என்றும் ஹாலில் நுழையும் இடத்துக்கு அருகிருந்து மாடிப்படிகளோடும் காணப்பட்டது. மாடியில் ஒரு தளம் தான் கட்டி முடிஞ்சிருந்தது. இரண்டாம் தளம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். முழுதும் கட்டி முடிச்சதும், கீழே சாப்பாடும், மேலே தங்குமிடமாகவும் இருக்குமாம்.
அதெல்லாம் சரி, இப்போ சாப்பாடுக்கு என்ன செய்யறது? முக்கியமாக் காலைத் தேநீர் கிடைக்குமானு கேட்டதுக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுனு சொல்லிட்டார் அந்த வாலிபர். கடவுளே! எங்கே போய்க் குடிக்கிறதுனா? நீங்க போய்ப் பாருங்க ஏதேனும் டீக்கடை இருந்தால் குடிச்சுக்கலாம்னு பதில் வருது. சாப்பாடும் அப்படியேனு சொல்லிட்டார். இங்கே இன்னும் இரண்டு நாள் தங்கணுமா? மாடி ஏறி, ஏறி இறங்கி ரோடுக்குப் போய், அங்கிருந்து ஆட்டோ ஏதும் கிடைச்சால் கடைத்தெருக்குப் போய் அப்புறமாத் தான் சாப்பிட ஏதானும் கிடைக்கும். இங்கே நீங்க போட்டுத் தர மாட்டீங்களா, குறைந்த பக்ஷம் தேநீர் மட்டும் என்று கேட்டதுக்குப் பிடிவாதமாக அந்த இளைஞர் மறுத்துவிட்டார்.
விதியேனு ஒருத்தரை பார்த்து விழித்த வண்ணம் விளக்கை அணைச்சுட்டுப் படுத்தோம். இதுக்குள்ளாக மணி நாலு ஆகி இருந்தது. எங்கே இருந்து தூங்க? ஶ்ரீராமர் சித்திரகூடம் வந்து கஷ்டப்பட்டாரோ இல்லையோ, தெரியலை, நாம் கஷ்டப்படறோம். இங்கேருந்து எப்போத் திரும்பிப் போறது? திடீர்னு எனக்குக் கவலை வர, நாளைக்கு மதியம் ரயிலிலேயே திரும்பிடலாம்னு சொல்ல, லக்னோவோ, கான்பூரோ போய் இருந்தாலும் அங்கே எல்லாம் பார்க்க இரண்டு நாளைக்குள் தான் ஆகும். நம்ம டிக்கெட் புதன் கிழமைக்குத் தான் அதுவரை அங்கே சும்மா உட்கார முடியுமானு அவர் திரும்பக் கேட்க இரண்டு பேருக்கும் விடியும் வரை விவாதம். விடிஞ்சதும், பல் தேய்த்து விட்டுக் கீழே இறங்கினோம். அருகில் டீக்கடை இருக்கானு கேட்டுக் கொண்டே போய்க் கொஞ்ச தூரத்தில் தென்பட்ட ஒரு டீக்கடையில் தேநீர் குடிச்சோம். சகிக்கவில்லை. திரும்பி ஹோட்டலுக்கு வந்து துணி துவைக்க முடியுமானு கேட்டதுக்கு! அப்பாடா, அந்த இளைஞன் தோய்த்து உலர்த்தக் கொடி கூடக் கட்டி இருக்கோம். உங்க அறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தில் பாருங்கனு உதவியாக ஒரு வார்த்தை சொல்ல, நான் என் துணி, அவர் துணினு எல்லாத்தையும் தோய்த்து உலர்த்திப் பின் குளித்தேன்.
நல்லவேளையா( என்னனு எங்களுக்கே தெரியலை) வெந்நீர் ஒரு பக்கெட் கொடுத்தான். ஆனால் அது வெந்நீர்னு சத்தியம் பண்ணணும். பரவாயில்லைனு அதிலே நான் மட்டும் குளிச்சேன். இரண்டு பேரும் டிபன் எங்கேயானும் சாப்பிட்டுட்டுச் சுத்திப் பார்க்கக் கிளம்பினோம். வெளியே வந்து ரோடில் நின்று ஒவ்வொரு ஆட்டோவாகக் கூப்பிட்டோம்.

Thursday, November 21, 2013
என்ன செய்யலாம் சொல்லுங்க! :(
மின்சார விநியோகம் மிக மோசமா இருக்கு. :( காலை ஆறு மணிக்குப் போனால் ஒன்பதுக்கோ, ஒன்பதரைக்கோ வந்தால் மறுபடி பனிரண்டுக்குப் போயிடும். திரும்ப மூணுக்கோ, (இன்னிக்கு மூணு மணிக்கு வந்திருக்கு) அல்லது மூணரைக்கோ வருது. மடிக்கணினி வேறே உடம்பு சரியில்லாமல் இருக்கு. அது இருந்தால் மின்சாரம் இல்லாத சமயம் ஏதேனும் எழுதியானும் வைச்சுக்கலாம். அப்புறமா மின்சாரம் வந்தப்புறம் பதிவைப் போடலாம். இப்போ அதுக்கும் வழியில்லை. மூணுக்கு வந்தால் மறுபடி ஆறு மணிக்குப் போயிடும். அப்புறமா ஏழுக்கோ ஏழரைக்கோ வந்து திரும்ப ஒன்பதுக்குப்போயிடும். மொத்தம் ஆறு மணி நேரம் பகல் நேரத்தில் இருந்தால் பெரிய விஷயம்.
இந்த நேரத்துக்குள்ளேயே வீட்டு வேலைகளை எல்லாம் பண்ணிக்கணும்; முட்டி மோதிக்க வேண்டி இருக்கு. மின்சாரம் இல்லாத நேரம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா உட்காரணும். :( ஒண்ணுமே சரியில்லை!

Tuesday, November 19, 2013
ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்!
என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா? சந்தேகமே! "தங்க மங்கை" பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லாரும் அவரவர் வேலையிலே கவனமாக இருந்தார்கள். ஆனால் ரங்க்ஸ்? கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன். அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, "இரு, வரேன்!" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று. உடனே வந்தது பாருங்க ஒரு கோபம். சாமான் எங்கே இருக்கு? அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார்? வரட்டும், இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்.
சற்று நேரத்தில் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ரங்க்ஸ் வந்து சேர்ந்தார். "எங்கே போனீங்க?" "தண்ணியே இல்லை! வாங்கப் போனேன்!" "அது சரி, என்னோட ஹான்ட் பாக் எங்கே?" "ஹான்ட் பாகா?" திரு திரு திரு திரு!
நான், "க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களை நம்பிப் பையைக் கொடுத்துட்டுப் போனா வீசி எறிஞ்சுட்டுப் போயிருக்கீங்க!" குற்றம் சாட்டியாச்சு. அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் "இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை. நானே வைச்சுக்கறேன்."என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, "எந்த நடைமேடை?" என்று கேட்டேன். ஆறாவது நடைமேடையாம். அங்கே போனோம். இந்த மாதிரி ஒரு கூட்டத்தை என் ஜன்மத்தில் பார்த்தது இல்லை. அதோடு நடைமேடை அந்தக் கால எழும்பூர் நடைமேடையை ஒத்திருந்தது. அருகே கார், வண்டிகள் வந்து நிற்கும் பாதை. அங்கே நடை மேடையின் ஒரு ஆரம்பத்திலிருந்து இன்னொரு பக்க முடிவையும் தாண்டி பெட்டி, படுக்கையோடு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தனர். படம் எடுக்க முடியவில்லை. காமிராவை உள்ளே வைச்சுட்டேன். செல்லைக் "கு" ரங்கார் கேட்டுட்டு இருந்தார். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது. முன் பதிவும் இல்லாமல் எப்படி ஏறப் போறோம்?
சிறிது நேரத்தில் பின்னால் வரிசை கட்டி நின்றவர்கள் இரவு ஒன்பது மணிக்கு லக்னோவிலிருந்து மும்பை செல்லும் வண்டிக்குக் காத்திருந்தவர்கள்(முன் பதிவில்லாமல் ஏறுவதற்கு) என்பது புரிந்தாலும் இந்த நடைமேடையில் எக்கச் சக்கக் கூட்டம். அதோடு உட்கார எங்கேயும் பெஞ்சோ, உட்காரும் மேடைகளோ இல்லை. நிற்க வேண்டி வந்தது. சும்மாவே வீங்கிக்கும் என்னோட கால் நிற்க ஆரம்பிச்சதும் தள்ளாட ஆரம்பிச்சது. ஏற்கெனவே முதல் நாள் அலைச்சல் வேறே. போர்ட்டர் ஒருத்தர் வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு அந்த வண்டியிலேயே உட்கார அவரிடம் கேட்டுக் கொண்டு நானும் போய் உட்கார்ந்தேன். ஐந்தரைக்கு வண்டி வந்தது. லக்னோவிலிருந்து தான் கிளம்புகிறது. ஆனால் சித்ரகூடம் வரை மட்டும் சென்று கொண்டிருந்த வண்டியை ஜபல்பூர் வரைக்கும் நீட்டித்திருப்பதால் கூட்டம் தாங்கவில்லை.
பொதுப்பெட்டியில் ஏறக் கும்பல். அந்தக் கும்பலில் என்னால் ஏறவே முடியவில்லை. ரங்க்ஸ் மட்டும் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு எப்படியோ ஏறிவிட்டார். அங்கே எனக்கும், அவருக்கும் அந்தப் பையை வைத்து உட்கார இடம் போட்டுவிட்டு, என்னை அழைக்க வந்தார். சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு. கீழே விழ இருந்தேன். தள்ளிவிட்டு எல்லாரும் அவரவர் காரியத்தில் கண்ணாக ஏற ஆரம்பிக்கின்றனர். ரங்க்ஸ் எப்படியோ முண்டி அடிச்சுண்டு வந்து என்னிடம் இருந்து சாமானை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு என்னையும் அழைத்துச் சென்றார். ஒடுங்கிய வண்ணம் உட்கார இடம் கிடைச்சது. உட்கார்ந்தோம். சாதாரணமாக ஸ்லீப்பர் க்ளாஸ் எனில் மூன்று பேர் உட்காரும் இடம். ஆறு பேர் அமர்ந்திருந்தோம். மேலும், மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர். ஒரே குட்கா வாசனை, சிகரெட், பீடி வாசனை.
சொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் நடுவில் யார் ஏறினாங்க, யார் ஏறலைனு கவலையே இல்லாமல் வண்டி கிளம்பி வேகம் எடுத்தது. ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று நின்று போச்சு. ஒவ்வொன்றிலும் பதினைந்து பேர் இறங்கினால் முப்பது பேர் ஏறினார்கள். மேலும் நெரிசல். பாத்ரூம் போகக் கூட வழியில்லை. கான்பூரில் சாப்பிட ஏதேனும் வாங்கலாம் என்றால் தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியலை. வண்டிக்குள்ளேயே சமோசா கொண்டு வந்ததை ரங்க்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டார். அவருக்கு மாத்திரை சாப்பிட ஏதேனும் உணவு எடுத்துக் கொண்டாகணுமே! வேறே வழியில்லை.
மதியம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்ட தவா ரொட்டியெல்லாம் ஜீரணம் ஆகிவிட்டது. வயிறு கூவியது. தேநீர் வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு. தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர். என்ன இருந்தாலும், என்ன அவசரம்னாலும் ராஜஸ்தான், குஜராத்தில் இந்தத் தேநீர் விஷயத்தில் ஏமாத்தவே மாட்டாங்க. வண்டியோட ஓடி வந்து கொடுப்பாங்க என்பதோடு நல்ல தேநீராகவும் கிடைக்கும். அடுத்து மஹாராஷ்ட்ரா! இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன். தண்ணீர் குடிக்கவும் பயம். நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை. மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன்? இறங்கணும்னாக் கூடக் கஷ்டம். ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும். கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை. காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே!
இரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை. அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள். அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது. ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா? ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை. ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது. ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில். அவருக்கோ போயாகணும்!
மறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது! நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ!

Subscribe to:
Posts (Atom)