மின்சார விநியோகம் மிக மோசமா இருக்கு. :( காலை ஆறு மணிக்குப் போனால் ஒன்பதுக்கோ, ஒன்பதரைக்கோ வந்தால் மறுபடி பனிரண்டுக்குப் போயிடும். திரும்ப மூணுக்கோ, (இன்னிக்கு மூணு மணிக்கு வந்திருக்கு) அல்லது மூணரைக்கோ வருது. மடிக்கணினி வேறே உடம்பு சரியில்லாமல் இருக்கு. அது இருந்தால் மின்சாரம் இல்லாத சமயம் ஏதேனும் எழுதியானும் வைச்சுக்கலாம். அப்புறமா மின்சாரம் வந்தப்புறம் பதிவைப் போடலாம். இப்போ அதுக்கும் வழியில்லை. மூணுக்கு வந்தால் மறுபடி ஆறு மணிக்குப் போயிடும். அப்புறமா ஏழுக்கோ ஏழரைக்கோ வந்து திரும்ப ஒன்பதுக்குப்போயிடும். மொத்தம் ஆறு மணி நேரம் பகல் நேரத்தில் இருந்தால் பெரிய விஷயம்.
இந்த நேரத்துக்குள்ளேயே வீட்டு வேலைகளை எல்லாம் பண்ணிக்கணும்; முட்டி மோதிக்க வேண்டி இருக்கு. மின்சாரம் இல்லாத நேரம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா உட்காரணும். :( ஒண்ணுமே சரியில்லை!
இந்த நேரத்துக்குள்ளேயே வீட்டு வேலைகளை எல்லாம் பண்ணிக்கணும்; முட்டி மோதிக்க வேண்டி இருக்கு. மின்சாரம் இல்லாத நேரம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா உட்காரணும். :( ஒண்ணுமே சரியில்லை!
முதலமைச்சரின் தொகுதியிலேயே வசிக்கும் தங்களுக்கே இப்படி என்றால் எங்கள் நிலமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கோ. ;(
ReplyDeleteஇங்கு நிலமை அதைவிட மோசமாக உள்ளது.
பேசாமல் விசிறிக்கிட்டே படுக்கலாம் என்றால் தூக்கமும் வராமல் கஷ்டப்படுத்துகிறது. ;(
எல்லாமே இந்த வலைப்பதிவினில் எழுத ஆரம்பித்தபின் வந்துள்ள புதுத்தொல்லைகள்.;(
சோலார் பவருக்கு போங்கன்னு சொல்லி ஒரு வருஷம் ஆச்சு!
ReplyDeleteஎன்ன செய்ய முடியும். பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் ஆறுதலுக்காக நம் முன்னோர்கள் இருந்த காலத்தை நினைவு கொள்ளலாம் கணினியும் பதிவுகளும் இல்லாமல் நாமே வாழ்ந்ததில்லையா.?
ReplyDeleteஇங்கும் (எங்கும்) அப்படித்தான்... ம்...
ReplyDeleteporuthar boomi aalvaaraam. ha ha ha intha kodumaya enga poyi solla?
ReplyDeleteவாங்க வைகோ சார், தென்மாவட்டங்கள் அனைத்திலுமே பிரச்னை தான். :(( சென்னை மட்டும் ஒளிர்கிறது. :)))
ReplyDeleteவாங்க வா.தி. வீடு சொந்த வீடு இல்லை. வாடகை வீடு. இங்கே போட்டுட்டு அப்புறமா வீடு மாறுகையில் கழட்டிட்டு இருக்கணும். :( வீட்டுக்காரரே யார் வந்தாலும் இருக்கட்டும்னு போட்டுக்கொடுத்தாரானால் அது தனி! எங்கே! சான்சே இல்லை. :)
ReplyDeleteவாங்க ஜிஎம்பிசார், அதான் அடிக்கடி வெளி ஊர் போறச்சே, வீட்டுக்கு விருந்தினர் வரச்சே எல்லாம் இணையத்துக்கே வர முடியாமல் தானே இருக்கோம்! :))) இப்போக் கொஞ்சம் வேலை முக்கியமா இருக்கிறதாலே இணையம் இல்லையேனு தோணுது! :)))
ReplyDeleteவாங்க டிடி, எல்லாருக்கும் அதான்! :(
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, ஒரு வருடத்துக்கு மேல் ஆச்சு போல நீங்க இணையம் வந்து, இல்லையா?
ReplyDeleteநல்வரவு லக்ஷ்மி.
ReplyDeleteகஷ்டம்தான். இந்த நிலைக்கு ஒரு நிரந்தரத் தீர்வே வராதா?
ReplyDeleteஶ்ரீராம், சரியான திட்டமிடுதலும் அதை நிறைவேற்றும் திறமையும் வேண்டும். எங்கே, கொஞ்சம் காற்றடிச்சாலே காற்றாலை கிடைக்குதுனு அனல் மின் நிலையங்களில் பராமரிப்பே சரியா நடக்கிறதில்லை. தூத்துக்குடி தன் காலம் முடிஞ்சும் ஏதோ போனாப் போறதுனு கை கொடுக்குது. அதையும் படுத்தி எடுக்கறாங்க. தேவைக்கு மேல் மின் உற்பத்தி செய்தால்?
ReplyDeleteஇன்வெர்டர் வைத்துக் கொள்ளலாமே.
ReplyDeleteவாங்க ரா.ல. வரவுக்கு முதலில் நன்றி. இன்வெர்டர் இருக்கு. ஆனால் கணினிக்குக் கொடுத்துக்கலை. வேண்டாம்னு தான்! :))) மின்சாரம் இல்லாத சமயமாவது கணினியை விட்டு விலகி இருக்க முடியும் இல்லையா? என்னோட பிரச்னையே தினசரி நடவடிக்கைகளுக்குத் தேவையான மின்சாரமே கிடைக்கிறதில்லை என்பது. வாஷிங் மெஷின் போடுவது கஷ்டமா இருக்கு! கிரைண்டரில் மாவு அரைப்பது, :))) இங்கே நாலாவது மாடி என்பதால் அம்மி, ஆட்டுக்கல்லுக்குத் தடா! :))))
ReplyDeleteமின்சாரம் பெரிய பிரச்சனையாகத் தான் இருக்கிறது அங்கே.......
ReplyDeleteலக்ஷ்மிம்மா - நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் கருத்துரை கண்டேன்.... மிக்க மகிழ்ச்சி. விரைவில் உங்கள் பக்கத்தில் பதிவுகள் வரும் என எதிர்பார்க்கிறேன்...
சிரமம்தான். கிரைண்டர், மிக்ஸிக்கு இணைப்புக் கொடுக்கிற அளவிலான இன்வெர்டர்கள் இருந்தாலும் இப்படி அடிக்கடி கட் ஆகிற இடத்தில் அதை சார்ஜ் செய்யவும் முடியாது. மக்களின் அடிப்படைத் தேவையான மின்சாரத்தை சீராக வழங்க எந்த அரசும் கவனம் எடுப்பதாகத் தெரியவில்லை.
ReplyDelete