எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 24, 2013

பெண்களே, இந்நாட்டின் கண்களே, என்ன எண்ணம் உங்களுக்கு??

சில நாட்களாகவே மனம் சஞ்சலம் அடையும் நிகழ்வுகளாகத் தொடர்ந்து! ரேவதியின் இழப்புக்குப் பின்னர் மீண்டும் ஒரு மனம் வருந்தும் செய்தியைக் கேட்க நேர்ந்தது.  அதிலே என்ன முக்கியம்னா நிச்சயம் ஆகித் தேதி குறித்துப் பத்திரிகைகள் எல்லாம் அடித்து, பத்திரிகைகள் விநியோகமும் ஆனதும் கல்யாணத்துக்கு இன்னும் ஒரே மாசம் இருக்கையிலே பெண் வீட்டினர் கல்யாணத்தை நிறுத்தி விட்டார்கள்.  பெண்ணுக்கு அவங்களோட career முக்கியமாம். ஆகவே வெளிநாடு போவாங்களாம்.  அப்படிப் போகையில் கணவனின் விசாவில் dependent visa வில் செல்ல மாட்டாங்களாம். அவங்களோட தனி விசாவில் தான் செல்வாங்களாம்.

அவங்க இருக்கும் இடத்துக்குக் கணவனுக்கு வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லையாம்.  ஐந்து வருஷத்துக்குக் குழந்தை பெத்துக்க மாட்டாங்களாம். ஐந்து வருஷத்துக்குப் பின்னர் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை பையரின் பெற்றோரோ அல்லது பையரோ பொறுப்பு எடுத்துக்கணுமாம்.  இவங்க தாய்நாட்டுக்கு வரமாட்டாங்களாம்.  அதுக்குச் சம்மதிச்சால் பையர், தன்னோடு குடும்பம் நடத்த (அதுவும் பத்து வருஷங்களுக்கு மட்டும்) ஒத்துப்பாங்களாம். இல்லைனா அவங்க வழி, அவர் வழி தனினு இருக்கலாமாம். பத்து வருஷத்துக்குப் பின்னர் குடும்பம், குழந்தைனு எல்லாம் அவங்களாலே பொறுப்பு ஏத்துக்க முடியாதாம்.  ஆகவே தனித்தனி வாழ்க்கை தான் நல்லதுனு நினைக்கிறாங்களாம். அவங்க சேர்ந்து இருக்கும் ஐந்து வருடங்களிலும் பிள்ளையின் அம்மா, அப்பா அங்கே வரக் கூடாது.  எங்களுக்கு முடிஞ்சால், நேரம் இருந்தால் நாங்க அவங்களை வந்து பார்ப்போம்.  அப்பா, அம்மாவுக்குப் பிள்ளையோடு எந்தவிதத் தொடர்பும் கூடாது னு திட்டவட்டமாக அறிவிப்பு.

இதுக்குப் பெண்ணின் அம்மாவும் துணை போறாங்க.  பெண் சொல்வதில் தப்பே இல்லைனு அவங்க கட்சி.  நிச்சயம் ஆகும் முன்னரே சொல்லி இருக்கலாமேனு கேட்டதுக்கு, உங்க பிள்ளை கல்யாணம் ஆனால் தன்னால் வழிக்கு வந்துடுவார்னு நினைச்சோம்.  கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க பொண்ணோட ஒத்துப்போகலைனா கல்யாணம் ஆனப்புறமா எங்க பொண்ணு கஷ்டப்படுவா!  அதனால் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம்.  எங்க பொண்ணைப் படிக்க வைச்சுட்டு அவள் இஷ்டத்துக்கு வேலை பார்க்க முடியாமல் கல்யாணம் பண்ணிட்டு உங்க பிள்ளைக்குச் சமைச்சுப் போட்டுட்டு வீட்டிலா உட்கார முடியும்னு அவங்க கேள்வி!


பிள்ளை வீட்டிலே எவ்வளவோ புரிய வைக்க முயற்சி செய்தும், பெண்ணின் அம்மா நிச்சயதார்த்தமே பெண்ணின் அப்பாவின் கடைசி வேண்டுகோள்னு தான் ஒத்துண்டோம்.  அதுக்கப்புறமா உங்க பிள்ளை கிட்டே எல்லாத்தையும் சொல்லி ஒத்துக்க வைக்க நினைச்சோம்.  அவர் ஒத்துக்கலை.  இப்படிப் பிடிவாதமா இருக்கும் பிள்ளை எங்களுக்கு வேண்டாம். னு சொல்லி இருக்காங்க.  நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் பெண்ணின் அப்பா காலமாகி விட்டார். :(

அழுவதா, சிரிப்பதானு தெரியலை!  கல்யாணத்தை ஒரு வியாபார ஒப்பந்தமாக மாற்றி வருகின்றனர் இன்றைய நவநாகரிகப் பெண்மணிகள். அவங்க எதிர்பார்ப்புகள் தான் என்ன?  எனக்குத் தெரிஞ்சு பல பெண்கள் நல்லாப் படிச்சும், குழந்தைக்காக வேலையை விட்டுட்டு இருக்காங்க தான். அதே சமயம் பல பெண்களும் வேலையையும் விடாமல், குழந்தையையும் பார்த்துக்க ஆள் போட்டுக் கொண்டோ, அல்லது மாற்றி, மாற்றி, மாமியார், அம்மா இவங்களைத் துணைக்கு வைத்துக் கொண்டோ இரட்டைக்குதிரை சவாரி செய்யறாங்க.  அப்படி இருக்கையில் இப்போது இப்படியும் சில பெண்கள் சொல்றாங்க.

ஒரு பக்கம் மருத்துவ ரீதியாக 25 அல்லது 27 வயதுக்குள்ளாகக் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர்.  இன்னொரு பக்கம் பெண்ணின் திருமண வயது குறைந்த பக்ஷமாக இப்போது 30 -க்கு வந்திருக்கிறது.  அப்படி இருக்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதை ஐந்து வருஷம் தள்ளிப் போட்டால் 35 வயதுக்குப் பிறக்கும் குழந்தையை வளர்க்கும் பொறுமையும், கனிவும், உடல் நலமும், ஆரோக்கியமும் இவங்களிடம் இருக்குமா?  குழந்தைதான் ஆரோக்கியமாக இருக்குமா?  மன நலம் சிறப்பாக இருக்குமா?

படித்த படிப்பை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்த வண்ணம் சம்பாதிக்கப் பல வழிகள் இப்போது ஏற்பட்டிருக்கின்றன.  அது ஏன் இவங்களுக்குத் தெரிவதில்லை.  பல பெண்களும் குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு தொழிலும் ஆரம்பித்து முன்னேறி இருக்காங்க. நிச்சயமாய்ப் பின்பலம்/பக்கபலம் வேண்டும் தான்.  ஏன் அப்படிச் செய்யக் கூடாது? கல்யாணத்தை வியாபாரமாக ஆக்காமல் இருக்கலாமே?  இவங்க கல்யாணம் என்பதை என்னனு புரிஞ்சுட்டு இருக்காங்க?   ஒரு ஆணும், பெண்ணும் உடல் உணர்வுகளைத் தீர்க்க மட்டும் தான் கல்யாணம் என்ற எண்ணமா? அதையும் தாண்டிய ஒண்ணு கல்யாணத்திலே இருக்குங்கற செய்தியை இக்காலப் பெண்களுக்குச் சொல்லப் போவது யார்?

84 comments:

  1. கல்யாணம் ஆனால் தன்னால் வழிக்கு வந்துடுவார்னு நினைச்சோம்//
    கடவுளே! இப்பவாவது சொல்லித்தொலைச்சாளே மகராசி! நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கட்டும்.
    some boy has been really saved from life long torture!

    ReplyDelete
  2. //கல்யாணத்தை ஒரு வியாபார ஒப்பந்தமாக மாற்றி வருகின்றனர் இன்றைய நவநாகரிகப் பெண்மணிகள். அவங்க எதிர்பார்ப்புகள் தான் என்ன?//

    இதெல்லாம் இப்போ ரொம்ப சகஜமாப்போச்சு.

    திருமணத்திற்கு பெண் கிடைப்பதே மிகவும் கஷ்டமாகி வருகிறது. அதனால் இதுபோன்ற பல கண்டிஷன்ஸ் போடுவதாகக் கேள்விப்படுகிறோம்.

    வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்.

    ReplyDelete
  3. இக்காலப் பெண்களுக்குச் சொல்லப் போவது யார்? என்று வருந்தும் அளவுக்கு இது பொது பிரச்னை ஆகாது என்று நினைக்கிறேன். கட்டுரை விவரங்களை பார்த்தால் அந்த பையர் அதிருஷ்டவசமாக தப்பித்து விட்டார் என நினைக்கிறேன். பெண்ணின் தந்தையும் தாயும் கருத்தால் ஒத்துப்போனவர்கள் அல்ல என்று தோன்றுகிறது. விஸா விஷயம் பெரிது அல்ல. அணுகுமுறை மோசம். ஆமாம், அந்த கன்யாப்பொண்ணுக்கு கல்யாணம் எதுக்குத்தேவையாக இருந்தது?

    ReplyDelete
  4. உங்களின் கடைசி கேள்வி வலுவானது. வாழ்க்கையின் மதிப்புகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.

    ReplyDelete
  5. வாங்க வா.தி. பிள்ளையின் பெற்றோரிடம் அதைத் தான் சொல்லி சமாதானம் செய்துட்டு இருக்கோம். :( இத்தனைக்கும் அந்தப் பையர் 3 வருஷம் கான்ட்ராக்டில் தான் வெளிநாடு போயிருப்பதாகவும் கான்ட்ராக்ட் முடிஞ்சதும் இந்தியா திரும்பிடுவேன் என்றும் பெண் பார்க்கையிலேயே பெண்ணிடம் சொல்லி இருக்கார். :(

    ReplyDelete
  6. வைகோ சார், பெண் வீட்டினரின் கண்டிஷன்கள் இதை விட மோசமாக இருக்கிறது. சிலவற்றை எழுத முடியவில்லை. :(

    ReplyDelete
  7. ஆனால் இப்போது கேள்விப்படும் பல திருமண சம்பவங்களில் இது மாதிரி கண்டிஷன்கள் நிறைய காணக் கிடைக்கின்றன. சாதரணமான ஒரு மாட்ரிமோனியல் 'சைட்' திறந்து அங்கு காத்திருக்கும் மணப்பெண்களின் எதிர்பார்ப்புகளைப் படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  8. வாங்க "இ" சார், நல்லவேளையா உங்களுக்குச் சொந்தத்தில் பிள்ளை கல்யாணத்துக்கு இல்லைனு நினைக்கிறேன். :)))

    பிள்ளை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இது பொதுப் பிரச்னையாகவே ஆகி வருகிறது. ஆமாம், அந்தப் பையர் அதிர்ஷ்டவசமாகத் தப்பித் தான் விட்டார். இன்னும் சிலதும் சொன்னாங்க. நாகரிகம் கருதி எழுதவில்லை. :(

    ReplyDelete
  9. "இ" சார், அந்தப்பெண் தன் அப்பாவின் கட்டாயத்தினால் தான் நிச்சயதார்த்தத்துக்கே ஒத்துக் கொண்டாளாம். இப்போ திடீர்னு கல்யாணப் பத்திரிகை விநியோகம் எல்லாமும் ஆகிவிட்டது. இப்போதைய வழக்கப்படி பத்திரிகை கொடுக்கையிலேயே எல்லாருக்கும் புடைவை, வேஷ்டி எல்லாம் வைச்சுக் கொடுத்துட்டாங்க. கல்யாணம் நடக்க வேண்டியது தான் பாக்கி. டிசம்பரில் நடக்கணும். அதுக்குள்ளே அம்மாவும், பெண்ணும் கல்யாணத்தை ஒத்திப்போடுங்க, இல்லைனா கான்சல் பண்ணுங்கனு பிடிவாதம்! :((((

    ReplyDelete
  10. வாங்க ஶ்ரீராம், இப்போதைய மாட்ரிமோனியல் விளம்பரங்களையும் பார்க்கிறேன். என் அண்ணா பிள்ளைக்காகப் பார்த்தோம், இப்போ தம்பி பிள்ளைக்கும் இன்னொருத்தருக்குமாகப் பார்க்கிறோம். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் ஆரம்பிச்சுக் குறைந்தது பத்து வருடங்கள் இருக்கும். ஏனெனில் எங்க பையர் கல்யாணத்திலேயே நாங்க படாத பாடு பட்டோம்!

    ReplyDelete
  11. ஹூஸ்டனில் இருக்கும் எங்க பையர் வேலையை விட்டுப் பெண் வேலை பார்க்கும் வாஷிங்டனுக்குப் போயிடணும்னு ஒரு அம்மா நிபந்தனை! இவர் படிச்சிருக்கும் படிப்புக்கு அங்கே வேலை கிடைக்காது என்றோம். அதனால் என்ன, உங்க பிள்ளையை ஐடிக்கு மாறச் சொல்லுங்கனு சொன்னாங்க. என் பிள்ளை அந்தப் பெண்ணே வேண்டாம்னுட்டார்.

    இன்னொருத்தர் பெண்ணின் தாத்தா, பெண்ணுக்கு ஆடத்தெரியும், பாடத்தெரியும் கச்சேரி பண்ணுவா, அதோட எம் எஸ் முடிச்சுட்டா, சிங்கையிலே இருக்கா, உங்க பிள்ளையை அங்கே வேலை மாத்திண்டு வரச்சொல்லுங்கோனு என் கிட்டே சொல்ல, நானும், அப்படியே சொல்றேன். என் பிள்ளைக்குத் தலையைக் காலை வலிச்சால், உங்க பேத்தி வெந்நீராவது வைச்சுத் தருவாளானு கேட்டேன். போனைப் பட்டுனு வைச்சுட்டார்.

    இது உண்மையா நடந்தது. :(

    ReplyDelete
  12. ஆமாம், ஶ்ரீராம், குடும்பம் என்ற அமைப்பே சிதறிப் போகாமல் காக்கும் பொறுப்பு பெண்ணிடம் தான் இருக்கிறது. எனக்குத் தெரிந்து படித்த சில பெண்கள் அதை உணர்ந்து இருக்கிறார்கள். அப்படியான பெண்களே நம்பிக்கை ஒளி தருகின்றனர்.

    ReplyDelete
  13. Nenju porukkudillaiye-nnu varuththappada vaikkirathu. Innum 7,8 varushathile enakkum intha experience varumo ennamo!!

    ReplyDelete
  14. இக்காலப் பெண்களுக்கு சொல்லவா முடிகிறது....? ம்...

    ReplyDelete
  15. இந்தப் பெண் பிள்ளையின் விசாவில் வெளி நாடு செல்ல விருப்பம் இல்லை எனத் தெரிவிக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு இடத்தில் பெண் திருமணம் செய்து கொண்டு கணவனின் விசாவில் வெளிநாட்டுக்குப்போய் விமான நிலையத்தை அடைந்ததும் அங்கு இவளுக்காகவே காத்திருந்த காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு பெப்பே சொல்லியிருக்கிறார்.....!

    ReplyDelete
  16. எல்லோரும் ஒரேயடியா ( வாசுதேவன் சார் உட்பட) பொண்ணை குத்தம் சொல்றது சரியாக எனக்குப் படலை.

    ஒரு பக்கம் இந்த ஸ்டேஜிலே நின்னுபோனது நல்லதுக்குத்தான்.

    பொண்ணோட மனசு எப்படி இருக்குன்னு தெரியாம பொன்னைப் பெத்த அம்மாவும் அப்பாவும் ஒரு தினுசா கட்டாயப்படுத்தி, நிச்சயம் செய்து விடுகிறார்கள் . பிறகு நிச்சயம் ஆகிவிட்டது என்று சால்ஜாப்பு சொல்லி பெண்ணை கட்டாய படுத்துவதையும் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் திருமணம் முறிந்து போன ஒரு சில கேஸ் என்னுடைய பார்வைக்கு வந்தன.

    இந்த பர்டிகுலர் கேசுலே கீதா மாமி தயவு செய்து பெண்ணை சந்தித்து எந்த ஒரு சந்தர்ப்பத்திலே இந்த கல்யாணத்திற்கு ஒப்புகொண்டார்கள், அவள் நிச்சயதார்த்தம் நடந்தபோது இருந்தார்களா, ( பெண் ஒரு பூர்வாங்கமாக நிச்சயம் அல்லது வெற்றிலை பாக்கு மாற்றிக்கொள்ளும்போது பிரசன்ட் ஆக இருக்கணும் அப்படிங்கறது நம்ப சம்ப்ரதா யத்திலே கட்டாயம் இல்லை) என விசாரித்து பார்க்கவும்.

    ஒரு கல்யாணத்தை அஷ்டபதி நடந்து முடியறவரைக்கும் நிச்சயம் என்று கிடையாது. எப்போது வேணாலும் அதை நிறுத்தி விடலாம்.
    நான் சொல்றது சாஸ்திர சம்மதம். தாலி கட்டியபின்னும் அஷ்டபதிக்கு முன்னாடி நிறுத்தலாம். அப்பொழுதுதான் திருமணம் பைனல் ஆகிறது.

    வெறும் நிச்சயம் ஆயிடுத்து,பத்திரிக்கை அடிச்சாச்சு, என்பதெல்லாம் வெச்சுண்டு, ஒரு பொண்ணோட வாழ்க்கையை நிச்சயிக்க கூடாது.

    இன்னும் ஒன்று சொல்லவேண்டும். அந்த காலத்து சம்ப்ரதாயத்துலே நடந்தது எல்லாம் இந்த காலத்துக்கு சரிப்பட்டு வராது.

    எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண் கலியாணத்துக்கு முன்னாடி, மாப்பிள்ளை எல்லாம் ஒ.கே. ஆனால், ஒரு ப்ளட் ரிபோர்ட் ஹெச்.ஐ.வி.க்கு எடுத்து கொடுத்து விடுங்கள். என்றாள்.

    என்னை பொறுத்த அளவிற்கு அந்த பெண் ப்ராக்மாடிக் .

    அதெல்லாமே இருக்கட்டும். திருமனங்கள் சொர்க்கத்தில் அல்லவா நிச்சயிக்கப்படுகின்றன. அதை ஒரு அச்சாபீஸ் சமாசாரம் என்று எப்படி முடிவு செய்வது ?

    தாத்தா அதிக பிரசங்கி ஆகிவிட்டார் போல் இருக்கிறது.

    பாட்டி வந்து என்ன சமாசாரம் அப்படின்னு கேட்பதற்குள் முடிச்சுடறேன்.

    சுப்பு தாத்தா.
    dont be angry geetha mami.
    pl visit here.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  17. கடைசி கேள்வி இப்போது என் மனதிலும்.... பதில் தான் தெரியவில்லை.....

    ReplyDelete
  18. கடைசி கேள்வி இப்போது என் மனதிலும்.... பதில் தான் தெரியவில்லை.....

    ReplyDelete
  19. கீதா! இரண்டு பதில்லையும் பார்த்தேன். எனக்குத்தான் தெரியவில்லை போல. அதிர்ஷ்ட வசமாக. எங்காத்து கல்யாணங்கள் எல்லாமே நன்னா நடந்தது. வரதக்ஷிணை பிரச்னையே இல்லை எனலாம். Extended familiyயில் கொஞ்சம் ஜாடை மாடை, அதுவும் நாங்கள் பொண்ணு குடுத்த பார்ட்டி. ஒரு வேடிக்கை கேளுங்கோ. நிச்சயதாம்பூலபத்திரிகை எழுத அவள் அப்பா வரமுடியவில்லை. தொழிற்சாலை ஸ்ட் ரைக். நானே எனக்கு எழுதிக்கொண்டேன். என் மருமகளுக்கு ஒரு ஐரோப்பிய நாட்டு வீசா கிடைக்கவில்லை. நான் டில்லியிலிருந்து அதற்கு முஸ்தீபு செய்து விட்டு, கல்யாணத்துக்கு முதல் நாள் இரவில் தான் சென்னை வந்தேன். பொண் கல்யாணம் காதல் கல்யாணம் என்பதால் அவர்கள் வந்து பெண் கேட்டார்கள். நானும் பவ்யமாக அவனுக்கு ஒரு சாக்லெட் டிப்பா கொடுத்தேன். நிச்சியதாம்பூலம் போது புரோகிதர் ஷுல்கம் ஷுல்கம் என்று குரலெடுக்க ஒரு மொட்டைத்தலை ராஜா காசு வச்சேன். ஆனால் ஒன்று ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டு சைடிலும் இளஞ்ஜோடிகளின் விருப்பம் தான் மதிக்கப்பட்டது. நேர பாக்கச்சச் சொல்றேன். ஒரு தகிடுதத்தம் பண்ணி எல்லாரையும் கைலெபோட்டுண்டேன். சம்பந்தி போன மாதம் கூட கேலி செய்தார்.

    பசங்களா! விவேகமா இருங்கடா.

    ReplyDelete
  20. interesting.
    இதை ஆண்கள் சொல்லும் பொழுது ஏதாவது வருத்தப்படுக்கிறோமா? இயல்பாக எடுத்துக் கொள்கிறோமா?

    ReplyDelete
  21. ஒரு வாதத்துக்காகச் சொல்லவில்லை. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தை நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. எனினும், ஆயிரக்கணக்கான வருடங்களாக ஒடுக்கப்பட்ட பெண்கள் இப்போது தான் விழிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இந்தக் குறிப்பிட்ட சம்பவம் தனிப்பார்வையில் சற்று ஆபத்தாகத் தோன்றினாலும், ஒட்டு ஒத்த சமூகப் பார்வையில் இன்னும் தேவையென்றே நினைக்கிறேன். பத்து பைசாவுக்கு புருஷனை நம்பி இருப்பவர்கள் தான் இன்னும் அதிகம். நானும் இந்த அடக்குமுறைக்கு அறிந்தோ அறியாமலோ பல நேரம் காரணமாக இருந்திருக்கிறேன்.

    இன்னம்பூரார் கேட்டிருப்பது யோசிக்க வைக்கிறது. ஒரு வேளை பொதுப் பிரச்சினை ஆனபின் தானாகவே balanced view கிடைக்கலாம் என்று தோன்றுகிறது. சற்று வலித்தாலும், இந்தப் பெண்ணுக்கு ஒரு ஜே போட்டுக் கொள்கிறேன். விடுதலை என்பது ரத்தம் சிந்தாமல் வந்ததாகச் சரித்திரம் இல்லை.

    ReplyDelete
  22. //உங்க பேத்தி வெந்நீராவது வைச்சுத் தருவாளா

    :)))

    ReplyDelete
  23. இந்தக் குறிப்பிட்ட நிகழ்வில் பெண்ணின் விருப்பம் என்னவென்று தெரியவில்லை; ஒரே பெண்ணை தன் விருப்பத்துக்கேற்ப அடக்கி ஒடுக்கி சீரழித்த தாயையும் அறிவேன். சில நேரம் தன் வாழ்வின் கொடுமைகளை மனதில் வைத்து பிள்ளைகளின் வாழ்வை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று முட்டாள்தனமாக நடக்கும் பெற்றோர்கள் அதிகம். இந்தப் பெண் நிலை அப்படியில்லை என்று நம்ப விரும்புகிறேன்.

    ReplyDelete
  24. சுவாரசியமான பதிவு.

    ReplyDelete
  25. மிடில் க்ளாஸ் மாதவி, பல பெண்களும் தனி மடலில் இதையே சொல்லி இருக்காங்க. :)))) அதனால் நாம பெண்ணுக்குப் பெண்ணே எதிரிங்கற க்ரூப்போ? :)))))

    ReplyDelete
  26. வாங்க டிடி, பொண்ணுங்க எல்லாம் விவரமாத் தான் இருக்காங்க, இல்லையா? :))))

    ReplyDelete
  27. ஜிஎம்பி சார், எங்க குடும்பத்திலேயும் ஒரு கல்யாணம் இப்படி நடந்திருக்கு! :((( அந்தப் பொண்ணு அங்கே படிச்சுட்டு இருந்தா. படிப்பு முடியும் வரைக்கும் கணவனுடைய செலவில் இருந்து, படிச்சு, முடிச்சு அப்புறமா குட்பை சொல்லிட்டுப் போயிட்டா! இத்தனைக்கும் காதல் கல்யாணம்! :))))

    ReplyDelete
  28. சூரி சார்,

    வரவுக்கு நன்றி. முக்கியமா அடிப்படைக் காரணத்தைப் புரிஞ்சுக்கணும். இதிலே பெண்ணுடைய விருப்பத்தைக் கட்டாயமாய் மதிக்கணும்தான். ஆனால் அந்தப் பொண்ணு முதல்லேயே அந்தப் பையர் கிட்டே சொல்லி இருக்கலாம். கிட்டத்தட்ட ஆறு மாசமாப் பேசிக் கொண்டிருக்காங்க. முதல்லே சாட்டிங் செய்து பின்னர் ஜூன், ஜூலையிலே பெண்ணைப் பார்த்துப் பேசி, பையர், பெண் இருவரும் பிடிச்சிருக்குனு சொன்னதுக்கப்புறம் தான் பெற்றோர் சந்தித்துக் கொண்டார்கள். அதுக்கப்புறமாத் தான் ஆகஸ்டில் நிச்சயம் நடந்தது. அப்போவானும் சொல்லி இருக்கலாம். அல்லது நிச்சயம் முடிந்து ஒரே மாசத்தில் பெண்ணின் அப்பா இறந்ததுமாவது விஷயத்தைச் சொல்லி அப்பாவுக்காக ஒத்துண்டேன். இனி மேலே தொடர வேண்டாம்னு சொல்லி இருக்கலாம். அப்போல்லாம் பேசாம இருந்துட்டு, இப்போ சரியா கல்யாணம் நெருங்கி வரச்சே சொல்வது சரியா?

    கல்யாணம் அச்சிலே இல்லைங்கறதாலே தான் இழப்பை விட அதன் தாக்கம் பெரிசாத் தெரியறது.

    ReplyDelete
  29. //கல்யாணத்தை அஷ்டபதி//

    சூரி சார், சப்தபதியை, அஷ்டபதினு அஷ்டபதி படிச்சுண்டே எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  30. //எனக்குத் தெரிஞ்ச ஒரு பொண் கலியாணத்துக்கு முன்னாடி, மாப்பிள்ளை எல்லாம் ஒ.கே. ஆனால், ஒரு ப்ளட் ரிபோர்ட் ஹெச்.ஐ.வி.க்கு எடுத்து கொடுத்து விடுங்கள். என்றாள்.//

    இது தப்பே இல்லை. நிச்சயமா, நானும் இதுக்கு ஒத்துக்கறேன். முப்பது வருடங்கள் முன்னாடியே எங்க வீட்டுக் கல்யாணங்களிலே ஆர் எச் பாசிடிவா, நெகடிவானு பார்த்துட்டுக் கல்யாணம் பண்ணறதுனு ஆரம்பிச்சாச்சு. உபயம், நான் தான், எனக்கு ஆர் எச் நெகடிவ். அது தெரியாமல்/ சரியாக் கண்டு பிடிக்காமல் இரண்டு குழந்தைகளோடும் நான் பட்ட கஷ்டம் மத்தவங்களுக்கு வழிகாட்டியது.

    ReplyDelete
  31. ஒரே பெண்ணை தன் விருப்பத்துக்கேற்ப அடக்கி ஒடுக்கி சீரழித்த தாயையும் அறிவேன். சில நேரம் தன் வாழ்வின் கொடுமைகளை மனதில் வைத்து பிள்ளைகளின் வாழ்வை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று முட்டாள்தனமாக நடக்கும் பெற்றோர்கள் அதிகம். //


    அப்படி போடுங்க அருவாளை...

    சபாஷ் அப்பாதுரை சாரே.

    ஒரு சின்ன ஸேஞ்ச் .

    பெற்றோகள் அப்படின்னு பொதுவா போடாம,
    பெற்றவள் என்று போட்டு இருக்கலாம்.

    பையனோட தகப்பனார் இருக்காரே...பாவம்..
    அவருக்கு எங்கேயுமே வாய்ஸ் இருக்கறதா இருந்ததா சரித்திரமே இல்ல.

    எத்தனை பசங்களை அம்மாக்கள் ரிமோட் கண்ட்ரோல் செய்யறா ?

    கீதா மாமி உங்களுக்கு ஸ்டாடிஸ்டிக்ஸ் வேணுமா சொல்லுங்கோ.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  32. வாங்க வெங்கட், கல்யாணத்தின் தாத்பரியம் புரியாமல் வியாபார ஒப்பந்தமாக அந்தப் பெண் நினைப்பது தான் இங்கே முக்கியக் கருத்து. அதை யாருமே புரிஞ்சுக்கலையோனு சந்தேகமா இருக்கு. எனக்குச் சரியாய்ச் சொல்லத் தெரியலைனு நினைக்கிறேன். ஆனால் நீங்க, தி.வா. வைகோ சார், ஶ்ரீராம் ஆகியோருக்குப் புரியுது. கொஞ்சம் பெரியவங்களுக்குப் புரியலை அல்லது காலத்தோடு ஒன்றிப் போக நினைக்கின்றனர்! :))))))

    ReplyDelete
  33. "இ"சார், மறு வரவுக்கு நன்றி. இப்போ நான் கொடுத்திருக்கும் பின்னூட்டங்களில் இருந்து என்னோட கருத்து ஓரளவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். கல்யாணம், காதலோ, நிச்சயம் செய்ததோ ஒப்பந்தமாய்க் கருதாமல் கல்யாணத்தின் மகத்துவத்தை/ முக்கியத்துவத்தைப் புரிஞ்சுக்கணும் என்பதே என் கோரிக்கை.

    ReplyDelete
  34. மற்றபடி எங்க வீட்டிலே ஜாதகப் பொருத்தம் பார்த்து வரனைத் தேர்ந்தெடுத்தாலும் எங்க பொண்ணு, பிள்ளை இருவரின் முழுச் சம்மதத்தின் பேரிலேயே கல்யாணங்கள் நடந்தன. இத்தனைக்கும் எங்க பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கையில் பிள்ளை யு.எஸ்ஸில் தான் இருந்தார். நாங்க தான் நிச்சயம் செய்தோம். :))))

    ReplyDelete
  35. அப்பாதுரை, உங்களைக் காணோமேனு நேத்துக் கூட நினைச்சேன். :))) ஆண்கள் இப்படி வியாபார ஒப்பந்தம் போடுவதில்லைனே நினைக்கிறேன். அப்படிப் போட்டால் அதை இயல்பாக எந்தப் பெண்ணும் எடுத்துக்க மாட்டாள். சுயமரியாதையை விட்டுக் கொடுத்துட்டுக் கல்யாணம் பண்ணிக்க நான் உட்பட எந்தப் பெண்ணும் தயாராக இருக்க மாட்டாள். :)))))

    ReplyDelete
  36. சூரி சார், சப்தபதியை, அஷ்டபதினு அஷ்டபதி படிச்சுண்டே எழுதி இருக்கீங்கனு நினைக்கிறேன்.//

    எஸ்.எஸ்.

    சப்த பதி தான் . அதை சரியா புரிஞ்சுகல்லேன்னா, (அந்த மந்திரத்திலே என்ன சொல்லி இருக்குன்னு வாசுதேவன் சார் ஒரு தரம் சரியா விளக்கி சொல்லட்டும்.) அப்பறம் எல்லாமே சத்தம் தான் வாழ்க்கையிலே.

    உங்க வாதம் சரியில்லே கீதா மாமி.

    என்னை பொருத்தவரைக்கும் அப்பாதுரைக்கு ஜே.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  37. அப்பாதுரை, பெண்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்பது முழுக்கச் சரியில்லை. படிப்பு மறுக்கப்பட்டதும் கிட்டத்தட்ட பாரதியார் காலத்துக்கு முன்பிருந்து தான். எனினும் அப்போது கூட பிரபலமான பல குடும்பங்களின் பெண்கள் வீட்டிலேயே படித்திருக்கின்றனர். பெண்ணுக்குச் சம உரிமை
    இந்தச் சுட்டியில் போய்ப் படித்துப் பார்க்கவும். இம்மாதிரிக் காரணங்களுக்காகவே பெண்களை வீட்டை விட்டு வெளியேற்றாமல் வீட்டுக்குள்ளேயே வைத்தனர். ஆனால் பாரதி பாடியது இன்றைய பெண்கள் இருக்கும் நிலைக்குப் பொருந்தாது. நிச்சயமாய் இன்றைய பெண்களின் நிலையைப் பார்த்தால் பாரதி ரத்தக்க் கண்ணீர் விடுவான்.

    நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும், திமிர்ந்த ஞானச் செருக்கும் தான் பாரதி சொன்னது. ஞானச் செருக்கு இன்றைய நாட்களில் வெறும் செருக்காக மாறிவிட்டது.

    ReplyDelete
  38. //பத்து பைசாவுக்கு புருஷனை நம்பி இருப்பவர்கள் தான் இன்னும் அதிகம். நானும் இந்த அடக்குமுறைக்கு அறிந்தோ அறியாமலோ பல நேரம் காரணமாக இருந்திருக்கிறேன். //

    பெண்ணுக்கு மஞ்சக்காணி, ஸ்த்ரீதனம் என்றெல்லாம் கொடுப்பது அவளுக்குப்பொருளாதார ரீதியான பாதுகாப்புக்காகவே. பெண்கள் அதையும் தங்கள் முழு மனதோடேயே குடும்பத்துக்குச் செலவழித்து நான் பார்த்திருக்கேன். உதாரணம் என் தாய் வழிப் பாட்டி.

    ReplyDelete
  39. வியாபார ஒப்பந்தம் அப்படின்னு பேசறது சரியாக படல்லே.

    இது ஒரு சமூக ஒப்பந்தம். பையனும் பொண்ணும் மனசு ஒத்துண்டு பண்றது தான் கலியாணம். மற்றதெல்லாம், சம்பந்திகளுக்குள்ளே நடக்கிற ஒப்பந்தம்.

    நான் என்ன செய்யட்டும். என்ற கேசுலே தான் பெரும்பாலான பையன்கள் இருக்கிறார்கள். பையனோட அப்பா ஒதுங்கி போய் விடுகிறார். அம்மா பண்ர தாங்க முடியலடா சாமி.

    அப்படி இருக்கற கால கட்டத்திலே தனியா தான் நாங்க இருப்போம், அப்படின்னு பொன் சொன்னா என்ன தப்பு அப்படின்னு நான் கேட்க,
    நீங்க அதுக்கு உடனே இன்னொன்னு சொல்ல, அதுக்கு நான் ஒன்னு சொல்ல, நீங்க ஒன்னு சொல்ல,

    இன்னும் ஒரு நூறு பின்னூட்டம் போட்டாலும் இந்த மாதிரி பிரச்னைக்கு முடிவு வராது.

    பொன்னை பெத்தவாளோ, பையனை பெத்தவாளோ, என்னிக்கு ஒதுங்கி போகிறாரோ அன்னிக்கு தான் இந்த கால பெண்களுக்கு மோட்சம்.

    இன்னிக்கு தேதியிலே வெகு பெண்கள் தனக்குத் தானே ஒரு முடிவு எடுப்பதற்கும் இந்த நிலைமை தான் காரணம்.

    நான் பொண் கட்சி.

    நூறு பின்னூட்டம் ஆயிடுத்தா..?
    ஏன் இன்னும் எக்ஸ்பர்ட் ஒபினியன் வாசுதேவன் சார் சொல்ல இல்லை ?

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  40. //விடுதலை என்பது ரத்தம் சிந்தாமல் வந்ததாகச் சரித்திரம் இல்லை.//

    @அப்பாதுரை, இதுக்குப் பேர் விடுதலை என்றா சொல்கிறீர்கள்? இல்லை.. அந்தப் பெண்ணுக்கு எதிர்காலம் எப்படி இருக்கணும் என்பது புரியலை. இப்போ இளமைத் துடிப்பில் (அப்படி ஒண்ணும் இருபது வயதுக்குட்பட்ட பெண் இல்லை, 27 வயது ஆகிவிட்டது) தனியாக இருக்கிறேன் என்று சொல்லலாம். குழந்தையையும் வேண்டாம்னு சொல்லலாம். பின்னர் சம்பாதிப்பது எதுக்கு? என்ன காரணம்?? யாருக்குக் கொடுக்க? அந்தப் பெண் அதை வைத்து என்ன அனுபவிப்பாள்? எத்தனை நாட்கள் தனியாகச் சமைத்துச்சாப்பிட்டோ, அல்லது ஆள் போட்டுச் செய்யச் சொல்லியோ, அல்லது ஹோட்டல்களில் வாங்கிச் சாப்பிட்டோ இருப்பாள்? மாறுதலுக்கு மனம் ஏங்கும்! ஒரு ஆண் துணைக்கும், பேச்சு, வார்த்தைக்கும் மனமும், உடலும் ஏங்கும், தவிக்கும். குழந்தையைக் கொஞ்ச நினைக்கும். வயது ஆக, ஆக, கவனிக்க யாரும் இல்லாமல் தனிமை வாட்டி வதைக்கும்! :((((

    ReplyDelete
  41. குடும்பத்தை பாரம் என்பவர்களுக்கு அது பாரமே. சுகமான சுமை என நினைப்பவர்களுக்கு அப்படியே!

    ReplyDelete
  42. வீட்டையும் பார்த்துக் கொண்டு, குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு ஜெயித்த பெண்கள் பலரை எனக்குத் தெரியும். மிக நன்கறிந்த ஒரு சிநேகிதி தன் குழந்தைக்காகத் தன் வேலையைத் தியாகம் செய்து விட்டுக் குழந்தை பெரியவன் ஆனதும், மீண்டும் தொடர்ந்தார். ஏனெனில் இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம். நாளைய நாட்டின் குடிமக்கள். குழந்தைகளின் ஆரம்ப காலம் சிறப்பாக அமைந்தால் தான் நல்லதொரு குடிமகனாக வளர முடியும்.

    ReplyDelete
  43. இப்போ தினசரியைப் பிரித்தால் கள்ளக்காதலுக்காகப் பெற்ற பெண்ணையும், பெற்ற பிள்ளையையும், அதுவும் சம்பாதிக்கும் குழந்தைகள், கொன்ற தாயைப் பற்றித் தான் படிக்க முடிகிறது. இதிலே என்ன இருக்கிறது என்று எண்ணி அந்தத் தாய் தன் குழந்தைகளையே கொன்றார்? இதற்குக் காரணம் Ethics இல்லாதது தான். நேற்றுக் கூட மாதங்கி அப்பாவோடு இதைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தோம். :((((

    ReplyDelete
  44. சப்தபதி மந்திரம்

    சூரி சார், இங்கே பார்க்கவும், சப்தபதி மந்திரங்களுக்கான அர்த்தம் எழுதி இருக்கேன். நான் சொல்வதே ஒப்பந்தப் பாணியில் கல்யாணத்தை முடிப்பதோ, நினைப்பதோ தவறு என்று தான்.

    ReplyDelete
  45. //பையனோட தகப்பனார் இருக்காரே...பாவம்..
    அவருக்கு எங்கேயுமே வாய்ஸ் இருக்கறதா இருந்ததா சரித்திரமே இல்ல.//

    என் பிறந்த வீட்டிலே அப்பாவுக்குத் தான் வாய்ஸ்! கடைசி வரை! 2002 ஆம் வருடம் இறந்தார். அதுவரை அவரை மீறி ஒரு வத்தக் குழம்பு வைக்க முடியாது! :))) ஆகவே எல்லா வீட்டிலும் ஒரே மாதிரி இல்லை.

    //எத்தனை பசங்களை அம்மாக்கள் ரிமோட் கண்ட்ரோல் செய்யறா ? //

    ரிமோட் கன்ட்ரோல் செய்யறாங்களோ இல்லையோ, தெரியலை, பல பெண்களும் பெற்ற பிள்ளை சம்பாதிக்க ஆரம்பிச்சதுமே அத்தனை நாட்கள் சம்பாதித்துக் கொடுத்த கணவனை அலக்ஷியமாக நினைத்துத் துச்சமாக நடத்துவது தான்! இன்று வரை எனக்கு இது புரிந்ததில்லை. அதே பெண் பிள்ளைக்குக் கல்யாணம் ஆனதும், பிள்ளையால் ஓரம் கட்டப்படுவது ஆரம்பிச்சதும் பிள்ளை மாறிவிட்டான் என்று புலம்புவாள். :)))))

    //கீதா மாமி உங்களுக்கு ஸ்டாடிஸ்டிக்ஸ் வேணுமா சொல்லுங்கோ.//

    கை வசம் நிறைய ஸ்டாக் இருக்கு. விஸ்தாரமான சொந்த, பந்தங்கள், நண்பர்கள். அதனால் எல்லாவிதமான அனுபவங்களும் ஏற்படுகிறது. :))))

    ReplyDelete
  46. //என்னை பொருத்தவரைக்கும் அப்பாதுரைக்கு ஜே.//

    அப்பாதுரை இப்படிச் சொல்லலைனாத் தான் ஆச்சரியப் படணும். :))) என்னைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்பதெல்லாம் சரியல்ல. பெண் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளணும் என்பதே சரி. பெண் மனதளவில் நிறைய மாறவேண்டும். அடிமையாக இருக்க நினைப்பதும், பெண்ணின் மனமே, ஆள நினைப்பதும் பெண்ணின் மனமே. ஆகவே எப்போ அடங்கணுமோ அப்போ அடங்கி, அடக்க வேண்டிய நேரத்தில் அடக்கி ஆண்டாலே போதும். பெண்கள் தங்கள் சுயத்தை உள்ளே புகுந்து பார்க்க ஆரம்பிக்கணும்.

    அவங்க பார்க்கிற வேலையிலோ, வாங்கும் சம்பளத்திலோ, அவங்க தொழில் முன்னேற்றத்திலோ வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. பொருளாதார ரீதியாக வேண்டுமானால் ஜெயிக்கலாம். வாழ்க்கை???

    ReplyDelete
  47. //அப்படி இருக்கற கால கட்டத்திலே தனியா தான் நாங்க இருப்போம், அப்படின்னு பொன் சொன்னா என்ன தப்பு அப்படின்னு நான் கேட்க,
    நீங்க அதுக்கு உடனே இன்னொன்னு சொல்ல, அதுக்கு நான் ஒன்னு சொல்ல, நீங்க ஒன்னு சொல்ல, //

    நீங்க சொல்வது தனிக்குடித்தனம் என்றால் நானும் ஒத்துப்பேன். என்னைக் கேட்டால் குஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் செட்டி நாட்டில் நடப்பது போலக் கல்யாணம் ஆனதுமே தனியா வைச்சுடணும், பெரியவங்க கண்காணிப்பிலே. அதற்கு என் முதல் ஓட்டைப் போடறேன்.

    ReplyDelete
  48. //ஏன் இன்னும் எக்ஸ்பர்ட் ஒபினியன் வாசுதேவன் சார் சொல்ல இல்லை ?//

    தி.வா.(வாசுதேவன் திருமூர்த்தி) இப்போ ஆஸ்பத்திரியிலே இருக்கலாம். அதோடு அவர் விவாதம்னா ஒதுங்கிடுவார்னு நினைக்கிறேன். மற்றபடி ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தை தான்! :))))

    //நூறு பின்னூட்டம் ஆயிடுத்தா..?//

    நூறு பின்னூட்டம் போகணும்னு எல்லாம் ஆசை இல்லை சார். இந்தப் பதிவின் ஹிட்லிஸ்டே போதும். எங்க மானசிக குருநாதர் பின்னூட்டத்துக்காக எழுதாதேனு என்னிக்குச் சொன்னாரோ அன்னிக்கே அந்த ஆசையை விட்டுட்டேன். :))) படிக்கிறவங்க படிச்சால் போதும்.

    ReplyDelete
  49. அவங்க பார்க்கிற வேலையிலோ, வாங்கும் சம்பளத்திலோ, அவங்க தொழில் முன்னேற்றத்திலோ வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை. பொருளாதார ரீதியாக வேண்டுமானால் ஜெயிக்கலாம். வாழ்க்கை???
    //

    விட மாட்டேள் போல இருக்கு.
    வாழ்க்கை என்பதற்கு எங்க அம்மா அதாவது 1920 லே வாக்கப்பட்டு புக்காத்துக்கு வந்தவா புரிஞ்சுண்டு இருக்கற அர்த்தம் ஒன்னு.

    1960,70 லே அப்பா அம்மா பார்க்கல்லே அப்படின்னால்லும் ஒரு விதமா அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்ணி கொண்டு வந்த திருமணம் செய்து கொண்டு வந்த பெண்மணிகள் புரிஞ்சுன்ட் விதம் ஒன்னு.

    2000 க்கு பிறகு, இன்னிக்கு தேதியிலே பி.இ.முடிச்சுட்டு அமேரிக்கா விலே வேலை பார்த்து இருக்கும் பெண்கள் வாழ்க்கை அப்படிங்கற வார்த்தைக்கு என்ன அர்த்தம் சொல்ரார்களொ அது வேற.

    எப்படி இருந்தாலும், ஒரு பெண் தான் திருமணம் ஆன பிறகு தான் விரும்பும் வாழ்க்கை வாழ விரும்புவது அதுவும் தன காலில் நிற்கும் ஒரு பெண் எதிர்பார்ப்பில் என்ன தவறு இருக்கிறது ?

    வாழ்க்கை என்றால் என்ன அர்த்தம் என்று அவர்களுக்கு போதிக்ககூடிய அளவில் அவர்கள் இல்லை.

    காலை 7 மணிக்கு போயி, இரவு 10 மணிக்குத் திரும்புகிறார்கள். ஹோட்டலில் கடைகளில் என்றோ வாங்கி வந்த சப்பாத்தி பிஸ்ஸாவை பிரிட்ஜில், டீப் ப்ரீசரில் வைத்ததை, சூடு பண்ணி சாப்பிட்டு விட்டு, சாரி, முழுங்கி விட்டு,

    அரை மணிக்கு ஒரு தரம் காபி சாப்பிட்டு விட்டு, அடுத்த நாளைக்கு என்ன மீட்டிங் என்று லாப் டாப்பில் யோசனை டிஸ்கசன் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு,

    மடிசார் புடவை இலக்கணங்கள் அன் ரியலிஸ்டிக் மட்டுமல்ல, நாய்சி இன்டரப்பன்ஸ் இன் எ ப்ரீ டொமைன்.

    சப்தபதிக்கு நீங்க வேர அர்த்த போட்டு இருக்கேளா...
    நானே அந்தக்காலத்துலே சம்ஸ்க்ருத வாத்யாரா ரிடையர்மேண்ட்க்கு அப்பறம் என்று யோசனை பண்ணிண்டு இருந்தபோது நானும் எழுதி இருக்கிறேன்.

    அது இருக்கட்டும். சேஷ ஹோமம் என்று உண்டு. அந்த காலத்துலே.
    அதற்கப்பறம் ஒரு முஹூர்த்தம் அப்படின்னு ராத்திரிக்கு உண்டு இல்லையா..

    அந்த சமயத்திலே என்ன மந்திராதிகள் சொல்றா... அத கவனிச்சு பார்த்து அதுக்கெல்லாம் என்ன அர்த்தம் ( அப் கோர்ஸ் மேலாக கேட்கும்போது ) என்று எழுதுங்களேன்.

    மேலும் அதை இந்தக்காலத்து பெண்கள் ஒத்துக்குமா என்று சிந்திச்சு பாருங்களேன்.

    வாழ்க்கை என்பது அவரவர் புரிந்து கொண்ட விதம்.

    எனக்கு இது தான் சுகம் என்று ஒரு பெண் நினைத்தால் அது தப்பு, இது தான் சரி என்று சொல்வதெல்லாம் அசாத்தியம். அநாகரீகம்.
    அப்படின்னு பையனைப் பெத்தவா சாரி, பையரைப் பெத்தவா புரிஞ்சுண்டு போறதுதான் காலத்துக்கு நல்லது.

    இன்னிக்கு போதும். கிழவிக்கு பெட் ரோஸ்ட் பண்ணி டீ போட்டுக்கொடுக்கணும். கணவன் எந்தக்காலத்திலும் கடமை தவறக்கூடாது பாருங்கோ...

    அதனாலே இன்னிக்கு பை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  50. யாரும் தன்னை ஒதுக்குவதற்கு முன்பே தானே ஒதுங்குவது நல்லது இல்லையா ?

    பெரியவர்களுக்கு புரியவில்லை. அல்லது காலத்தோடு ஒத்துப்போக நினைக்கிறார்கள் என்று சூசகமாக எழுதி இருக்கிறீர்கள்.

    1930 லே பெண்ணின் உள்ளம் அழுதது. அதை கவனிப்பார் யாருமில்லை.

    1960 லே பெண் உள்ளம் பொங்கியது. அதை ஆதரிப்பார் யாருமில்லை.

    1980 லே பெண் உள்ளம் குமுறியது. அதற்கு மருந்து போடுவார் யாருமில்லை.

    2000 லே பெண் உள்ளம் வெடிக்கிறது.

    இப்ப என்னவோ அவளை தீவிர வாதி மாதிரி சித்தரிப்பது
    சரியோ ??

    இன்னும் வருவேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  51. வியாபார ஒப்பந்தம் போடுவதில்லையா? பெண் மட்டுமில்லாமல் பெண் வீட்டின் அத்தனை வசதி சலுகை உபசரிப்புக்கான ஒட்டு மொத்த எதிர்பார்ப்பையும் ஆயுள் கால ஒப்பந்தம் போடுறதை வியாபாரமனு சொல்லக் கூடாது தான். கொத்தடிமை ஒப்பந்தம்.

    ஆமா.. நீங்க கடந்த அம்பது வருஷமா வெளில எங்கயும் போகலியா? (அடிக்க வராதீங்க :)

    ReplyDelete
  52. பதியே கோளாறுனு ஆகுறப்போ சப்தவா இருந்தா என்ன அஷ்டவா இருந்தா என்ன? :)

    ReplyDelete
  53. //தகிடுதத்தம் பண்ணி எல்லாரையும் கைலெபோட்டுண்டேன்
    :)

    ஷூல்கம்னா?

    ReplyDelete
  54. //தகப்பனார் இருக்காரே...பாவம்..

    ஆமாங்கோ.. அட ஆமாங்கோ.

    ReplyDelete
  55. //அந்த பெண் ப்ராக்மாடிக்

    100% agreeable statement.

    முன்னாடியே சொல்லாட்டா என்ன இப்போ? சொன்னது தான் முக்கியம். அதைவிட சொல்ல தைரியம் வந்தது இன்னும் முக்கியம்.

    படிப்பு வேலை கலையார்வம் விற்பன்னம் எல்லாத்தையும் மூட்டை கட்டிப் போட்டு, சமைச்சு போடுறதுலயும் பீத்துணி மாத்துறதுலயும் ஸ்கூல் கொண்டு விடுறதுலயும் புருஷன் + புருஷன் குடும்ப சேவையிலும் கழித்து, பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு திடீர்னு விழிச்சுக்கிட்டு ஐயோ பெண்பார்க்க வந்தப்பவே சொல்லி இருக்கலாமேனு சுவத்துல முட்டிப் புலம்பறதிலும் கல்யாணம் செஞ்சு வச்ச அப்பா அம்மாவை திட்டித் தீக்குறதிலும் செலவழிக்குறதைக் காட்டிலும் இந்த பாணி மேல்.

    திருமண வாழ்வெனில் இவையெல்லாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும் இருவரும் மனமொத்து வாழ வேண்டும் என்றாலும் நான் பார்த்தவரை எல்லாமே ஒருதலையாகவே இருக்கிறது - இந்தத் தரப்பு என்றில்லை. அப்படிப்பட்ட சூழலில், i have to admit that this woman is only pragmatic. அந்தப் பையன் இந்தப் பெண்ணை உண்மையிலேயே விரும்பினால் இதை tactfulஆ handle செய்திருக்கலாம். relationship is a mutual investment, not entitlement இல்லையா? அந்த நம்பிக்கை இங்கே இருவரிடத்தும் சிதைந்திருப்பதாகவே தெரிகிறது. அதைப் புரிந்து கொண்டு இந்தப் பெண் செயல் பட்டிருப்பார் என்றே நம்புவோம்.

    still, இந்தப் பெண்ணுக்கு எத்தனை துணிச்சல்! ஏதோ காரணமாத்தான் இப்படி சொல்லியிருப்பார் என்று நம்புகிறேன். என்ன காரணமாக இருந்தாலும் காலம் தான் இவருக்கு தன் முடிவின் விளைவைச் சொல்ல முடியும். ஆனால் அது நல்ல விளைவாக இருக்குமென்றே எனக்குத் தோன்றுகிறது. நைசா இன்னொரு ஜே போட்டுக்குறேன்.

    இது போன்ற தனிப்பட்ட நிகழ்வுகள் ஒரு அலையை உண்டாக்கப் போவதில்லை. காரணம், நாம் இந்தப பெண்ணின் தீர்மானத்தை பெண்ணின் தீர்மானமாகப் பார்க்காமல் ஒரு சமூகச் சடங்கின் அடிமைத்தன எருமை மாட்டுத்தனத்தின் எதிர்ப்பாகப் பார்க்கிறோம். (திருச்சி இங்கருந்து ரொம்ப தூரம்ன்றது தெம்பாகவே இருக்கு).

    இதில் ஆண்களுக்கும் பாடம் இருக்கிறது. அதை விட முக்கியமாக பெற்றோர்களுக்கு (ஓகே.. பெற்றவளுக்கு) பெரிய பாடம் இருப்பதாகவே நினைக்கிறேன்.

    ReplyDelete
  56. //பொன்னை பெத்தவாளோ, பையனை பெத்தவாளோ, என்னிக்கு ஒதுங்கி போகிறாரோ அன்னிக்கு தான் இந்த கால பெண்களுக்கு மோட்சம்.

    true. the roots go deep. we feel that we own our children because we were responsible for their birth.

    'dad, was i planned?' என்று சமீபத்தில் என் பெண் என்னைக் கேட்டாள். என் பதில் இங்கே முக்கியமில்லை. the spirit of question, however, is relevant.

    இப்படி ஒரு பெண் இப்படி ஒரு ஆண் பிறக்கும் என்றா இணைகிறோம்? இல்லையே? 'ஏதோ செயல் ஏதோ விளைவு' என்ற ரீதியில் தான் பிள்ளைப் பேறும் நடக்கிறது. போதாமல்.. கலந்து முடிந்த கணத்தில் 'நல்ல கர்ப்பமா கொடுப்பா கடவுளே' என்று அந்த நிலையிலும் கும்பிடும் அசிங்கம் வேறே - இப்படி இருக்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை என்னமோ தங்கள் கடும் உழைப்பின் விளைவாகவே பார்க்கும் அநாகரீகம் தொடர்ந்து கொண்டே இருக்கும். பெத்து, வளர்த்து, டிரஸ் வாங்கிக் கொடுத்து, செருப்பு வாங்கிக் கொடுத்து, பீஸ் கட்டிப் படிக்க வச்சு.. என்று வரிசையாக லிஸ்ட் போட்டுப் புலம்ப வேண்டாமா?

    ஒரு காலக் கட்டத்துக்கு மேல் பிள்ளைகளின் தினசரி வாழ்வில் தலையிட்டு குழப்புவதை பெற்றவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதைவிட்டு பெற்றவர் சொற்படி நடக்க வேண்டும் இல்லையெனில் மரியாதை இல்லை அது இது என்று படுத்தி எடுத்து விடுகிறோம்.

    ReplyDelete
  57. //பொருளாதார ரீதியாக வேண்டுமானால் ஜெயிக்கலாம்.

    பொ ரீதியாக மட்டும் சொல்லவில்லை. ஆனால் சுயமரியாதை என்று வருகையில் அத்தனையும் விட்டு வந்த பெண்ணுக்கு பொ முக்கியம் இல்லையா?

    திருமண வாழ்வு என்றால் பொருளாதாரத்திலிருந்து பொறுப்புகள் எத்தனையோ அத்தனையும் பொதுவில் வைத்துப் பார்க்கும் வழக்கம் நம் சமூகத்தில் மிகச் சிறுபான்மை. இங்கே அங்கே என்று ஒன்றிரண்டு உதாரனங்கள் இருக்கலாம்.. ஆனால் அவை வழிகாட்டிகளாக அமையவில்லை என்பதே வருந்த வைக்கும் உண்மை. 'கம்யூடர் சயன்ஸ் படி இல்லேன்னா கல்யாணம் ஆகறது கஷ்டம்' என்று பெண்ணை வற்புறுத்தும் பெற்றோர்கள் அதிகம். இதில் தவறு சரி என்று பார்க்கவில்லை - தான் பெற்ற குழ்ந்தை என்பதால் அந்த உரிமை மீறலை மிகச் சாதாரணமாகப பெற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறேன்.

    ReplyDelete
  58. //மாறுதலுக்கு மனம் ஏங்கும்! ஒரு ஆண் துணைக்கும், பேச்சு, வார்த்தைக்கும் மனமும், உடலும் ஏங்கும், தவிக்கும். குழந்தையைக் கொஞ்ச நினைக்கும். வயது ஆக, ஆக, கவனிக்க யாரும் இல்லாமல் தனிமை வாட்டி வதைக்கும்!

    சத்தியமான வார்த்தை.
    ஆனால் அதை தகுதியான துணையுடன் பெற நினைப்பதில் தவறில்லையே? இங்கே தகுதி குறைவை அந்தப் பெண் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டாள் என்று வைத்துக் கொள்வோம், சரியா? :)

    ReplyDelete
  59. //1930 லே பெண்ணின் உள்ளம் அழுதது. அதை கவனிப்பார் யாருமில்லை.

    1960 லே பெண் உள்ளம் பொங்கியது. அதை ஆதரிப்பார் யாருமில்லை.

    1980 லே பெண் உள்ளம் குமுறியது. அதற்கு மருந்து போடுவார் யாருமில்லை.

    2000 லே பெண் உள்ளம் வெடிக்கிறது.


    beautiful சூரி சார்!
    comment of this year.

    ReplyDelete
  60. Really?? நிஜம்மா? வயித்த கலைக்கிங் , வயித்த கலக்கிங்.
    இது கொஞ்சம் over ஆ தெரியல்ல? கொஞ்சம் Chinese whisperஆவும் இருக்குமோ? அந்த பொண்ணு என்ன சொன்னாளோ இவா என்னத்த புரிஞ்சுண்டாளோநு நினைக்கத் தோணறது. sometimes ego behind the hurt distorts the story as well . முழுசாலுமே அப்படி அந்தப் பொண்ணு சொல்லிருக்காம இருந்தா அனாவசியமா blame பண்ணறதாயிடாதா? sometimes சுக்குமி ளகுதி ப்பிலி தான் வெளில வரும். ரெண்டு பக்கமும் ஏதாவது விஷயம் இருந்திருக்கும். ஒவ்வொருத்தர் side of the story யும் different ஆ இருக்கும். In a way frank ஆ சொல்லி முன்னையே ஒதுங்கிக்கறத்துக்கும் appreciate பண்ணனும் . ரெண்டு பேருக்கும் மனசுக்கு பிடிச்ச இடத்தில் கல்யாணம் ஆகி நன்னா இருக்க வேண்டிக்கறேன்

    ReplyDelete
  61. //ஆமா.. நீங்க கடந்த அம்பது வருஷமா வெளில எங்கயும் போகலியா? (அடிக்க வராதீங்க :)//

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அநியாயமா இல்லையா? :))))

    அந்தப் பெண் ப்ராக்மாடிக் னு ஒத்துக்க முடியலை. :( மண வாழ்க்கையின் நெளிவு, சுளுவுகளை எதிர்கொள்ள தைரியமில்லாப் பெண் என்று தான் என் கோணத்தில் இருந்து மதிப்பீடு!

    படிப்பு, கலையார்வம், விற்பன்னம் எல்லாத்தையும் மூட்டை கட்டி வைக்க வேண்டாமே! குடும்ப வாழ்க்கையோடு அதையும் சேர்த்துச் செய்யும் அளவுக்கு மனோதிடத்தையும், திறமையையும் வளர்த்துக்கலாமே! அந்தப் பையர் எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கார். திருமணத்தைக் கான்சல் பண்ண வேண்டாம்னு சொன்னது பிள்ளை வீட்டுக்காரங்களே. ஆனால் பெண்ணும், பெண்ணின் அம்மாவும் உறுதியாக இருக்கவே தான், இரு தரப்பு உறவினரையும் வைத்துக் கொண்டு கான்சல் செய்திருக்கின்றனர். அப்போதும் பேச்சு வார்த்தைக்குப் பிள்ளை வீட்டில் தயாராகவே இருந்திருக்கிறார்கள்.

    என்ன காரணம்னு புரியலை. எதாக இருந்திருந்தாலும் இந்தப் பையர் பார்க்க வந்தப்போவே சொல்லி இருக்கலாமே. இருவருமே அப்போ வெளிநாட்டில் தான் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போ யாரும் இல்லை. இவங்க இரண்டு பேரும் தான் சந்திச்சிருக்காங்க. அப்போவே பேச வேண்டியதை ஏன் பேசவில்லை?

    ReplyDelete
  62. ////பொன்னை பெத்தவாளோ, பையனை பெத்தவாளோ, என்னிக்கு ஒதுங்கி போகிறாரோ அன்னிக்கு தான் இந்த கால பெண்களுக்கு மோட்சம். ////

    நிச்சயமா! கல்யாணம் பண்ணிக் கொடுத்துத் தனிக் குடித்தனம்னு வைச்சாலும் சரி, சேர்ந்து இருந்தாலும் சரி, தம்பதிகளுக்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளிலும் மற்றவர் தலையிடக் கூடாது. இது இருதரப்புப் பெற்றோருக்கு மட்டுமில்லாமல் சுற்றத்தார்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  63. பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தப்புறமும் பிள்ளையைப் பெற்றவள், "என் பிள்ளைக்கு என்ன வேணும்னு எனக்குத் தான் தெரியும்! நான் தான் அவனைக் கவனிச்சுப்பேன்!" அப்படினு பிடிவாதம் பிடிக்கக் கூடாது. மருமகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவளைச் செய்ய வைக்கணும். இம்மாதிரிச் சின்னச் சின்ன விஷயங்களில் விட்டுக் கொடுத்தல் ஆரம்பித்தாலே போதும்.

    பல வீடுகளிலும் பிள்ளையைப் பெற்றவளும் சரி, பிள்ளையின் சகோதரிகளும் சரி அவங்களுக்குத் தான் முன்னுரிமைனு நினைச்சுட்டு அவங்க தான் செய்யணும்னு செய்வாங்க. அது முழுத் தப்பு!

    ReplyDelete
  64. இது செய்யறதிலே மட்டுமில்லாமல் அவங்களோட வாழ்க்கையின் எல்லா சம்பவங்களிலும் அவங்க விலகி இருந்து ஒத்துழைப்புக் கொடுக்கணும்.

    ReplyDelete
  65. ஷுல்கம்னா நேரடி அர்த்தம்= மணமகளின் விலை னு வரும் அப்பாதுரை. ஆனால் இங்கே "இ"சார் வரதக்ஷணையைச் சொல்றார்னு நினைக்கிறேன். கன்யா ஷுல்கம்னு பிரபலமான புத்தகம். தெலுங்கு ஒரிஜினல், தமிழாக்கத்தில் படிச்சிருப்பீங்க தானே?

    ReplyDelete
  66. //காலை 7 மணிக்கு போயி, இரவு 10 மணிக்குத் திரும்புகிறார்கள். ஹோட்டலில் கடைகளில் என்றோ வாங்கி வந்த சப்பாத்தி பிஸ்ஸாவை பிரிட்ஜில், டீப் ப்ரீசரில் வைத்ததை, சூடு பண்ணி சாப்பிட்டு விட்டு, சாரி, முழுங்கி விட்டு,

    அரை மணிக்கு ஒரு தரம் காபி சாப்பிட்டு விட்டு, அடுத்த நாளைக்கு என்ன மீட்டிங் என்று லாப் டாப்பில் யோசனை டிஸ்கசன் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு,

    மடிசார் புடவை இலக்கணங்கள் அன் ரியலிஸ்டிக் மட்டுமல்ல, நாய்சி இன்டரப்பன்ஸ் இன் எ ப்ரீ டொமைன்.//

    எல்லாப் பெண்களும் இப்படிப் படிச்சுட்டுக் கணினியிலேயே வேலை பார்ப்பதில்லை. அதிலும் இந்தப் பெண் நிச்சயமா இம்மாதிரி ஐடி வேலை இல்லை. :( ஐடியிலே வேலை பார்க்கும் பெண்களிலும் பலர் திருமணத்தின் பின்னர் வேலையை விட்டதை நான் அறிவேன். இரட்டைக் குதிரைச் சவாரி செய்யும் பெண்களையும் பார்க்கிறேன். பலரும் மன அழுத்தத்தில் தவிக்கின்றனர். :(

    ReplyDelete
  67. //சத்தியமான வார்த்தை.
    ஆனால் அதை தகுதியான துணையுடன் பெற நினைப்பதில் தவறில்லையே? இங்கே தகுதி குறைவை அந்தப் பெண் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டாள் என்று வைத்துக் கொள்வோம், சரியா? :)//

    அப்பாதுரை, தகுதிக் குறைவு என்பது எது? அந்தப் பையர் தன் பெற்றோருடன் திருமணத்துக்குப் பின்னரும் தொடர்பில் இருக்கணும்னு நினைச்சதா?

    அல்லது தாங்கள் பெற்ற குழந்தையைக் கூடக் கவனிக்க மாட்டேன்னு சொன்னதை சரினு ஒத்துக் கொண்டிருக்கணுமா?

    என் பெற்றோரே கவனிச்சுப்பாங்க, நீ பாட்டுக்கு எங்கே வேணாலும் போய்க்கோனு சொல்லி இருக்கணுமா?

    அல்லது பத்து வருஷம் தான் சேர்ந்து வாழ்வேன்னு சொன்னதை ஒத்துண்டிருக்கணுமா?

    இதைத் தானே இனி மணக்கப் போகும் ஆணிடமும் அந்தப் பெண் சொல்ல வேண்டி இருக்கும்?

    எத்தனை பேர் ஒத்துப்பாங்க?

    பொதுவாகவே ஆண் சார்புடையவன். பெண்ணின் துணை எவ்விதத்திலாவது வேணும். அதுவும் மனைவி என்றால் அருகிலே இருக்கணும்னு தான் எல்லா ஆண்களுக்கும் எதிர்பார்ப்பு இருக்கும்.

    என்னிடம் எத்தனை இளைஞர்கள் இந்தக் காலப் பெண்களின் இத்தகைய மனோபாவத்தால் திருமணம் செய்து கொள்ளவே அச்சமாயிருக்கிறதுனு சொல்லி இருக்காங்கனு தெரியுமா?

    பலரும் சொல்வது இது தான்! இப்படிக் கண்டிஷன் போடுகிறார்களே, இவங்களோட எப்படிக் குடும்பம் நடத்தறது? னு கேட்கும் இளைஞர்களே அதிகம்.

    பெயர்களை வெளியிட முடியாததுக்கு வருந்துகிறேன். :(((

    குடும்ப அமைப்புச் சிதறாமல் இருப்பதாலேயே நம் நாட்டுப் பொருளாதாரம் ஆட்டம் கண்டாலும் இன்னமும் கவிழாமல் இருக்கிறது. இதற்குக் காரணம் பெண்கள், அவங்க திறமையுடன் கொண்டு செல்லும் குடும்ப அமைப்புகள், அதற்கான சேமிப்புகள் என்று பட்டியல் நீளும். ஆகக் குடும்ப அமைப்பின் மூலம் தேசத்துக்கு நல்ல குடிமகன்களைத் தர முடியும் என்பதோடு தேசப் பொருளாதாரத்தையும் சிறக்கச் செய்ய முடியுமே! குடும்பத்தின் சிறப்புக்களை உணராத பெண்களே தான், தன் சுகம் என்று நினைக்கின்றனர்.

    ReplyDelete
  68. வாங்க ஜெயஶ்ரீ, உண்மையாக நடந்தது தான் நான் எழுதி இருப்பது. பிள்ளை வீட்டினர் தரப்பில் ஏதும் தவறுனு தெரியலை. ஏனெனில் அவங்க மனசு ரொம்ப உடைஞ்சு போயிருக்காங்க. அதே பெண் வீட்டில் பெண்ணும், அவங்க அம்மாவும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்காங்க. போகப்போகத் தெரியும், வேறு காரணம் இருக்கானு! பிள்ளை வீட்டினரைக் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாகத் தெரியும். பிள்ளையைப் பிறந்ததிலிருந்து தெரியும். ஒழுக்கத்தில் சிறந்தவர்.

    ReplyDelete
  69. // sometimes ego behind the hurt distorts the story as well . //

    Say this in CAPITAL LETTERS.
    Well said, Jayashree Madam.
    Yours is a unbiased balanced comment.

    ஒரு கல்யாணம் நிச்சயம் நடக்கும் போல இருந்தது. நடக்க இல்லை.

    என்னிடம் பையனப் பெற்றவர்கள் வேறு ஒரு ஜாதகத்தைக் கொண்டு வந்து காட்டினார்கள். இது பொருத்தமா பார்த்து சொல்லுங்கள். என்றார்கள்.

    ஏன் அன்னிக்கு அந்தப்பொண்ணு நிச்சயம் பண்றதா முடிவு ஆயிடுத்து.பண்ணப்போறோம் என்று சொன்னீர்களே...என்று சுப்பு தாத்தா வெகுளித் தனமாக கேட்க,

    அது சரிதான், அது நாங்க நிச்சயம் அப்படின்னு செய்யலாம் னு போன போது இவளுக்கு புடிக்கவில்லை என்று பார்யாளைக் கை காட்டினார் பையனின் தந்தை.

    அது என்ன என்று தொடர்ந்து கேட்பதில் எனக்கு உற்சாகம் இல்லை. அதனால், அவர்கள் வந்த காரியம் சம்பந்தமாக பேசினோம்.

    இரண்டு நாட்கள் கழித்து, ஒரு ந்யூஸ் கிடைச்சது.
    பொண் வீட்டுக்கு நிச்சயம் செய்ய போனபோது பையனைப் பெற்ற அம்மாவுக்கு ரொம்ப புழுக்கமா இருந்ததாம். விசிறி போட்டு இருக்கிரார்கள். இருந்தாலும் அந்த டி.நகர் பிளாட் களுக்குள்ளே காற்று காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். கொசு வொண்ணு தான் காசில்லாமல் கிடைக்கும்.

    ஏ .சி. கூட இல்லையே இவங்க வீட்டிலே...இங்க போய் சம்பந்தம் பண்ணினா சரியா இருக்குமா என்று,

    அப்பவே கட் என்று சினிமா டைரக்டர் சொல்றமாதிரி கட் பண்ணிட்டு வந்து விட்டார் அம்மாக்காரி.

    பையனுக்கும் பெண்ணைப் பிடித்திருந்தது. இருந்தாலும் அம்மாக்கோண்டு.

    ஆனா, இத வெளிலே சொல்ல முடியுமா ? எதோ சகுனம் சரியாக இல்லை. அப்படின்னு எங்கிட்ட சொல்றா.

    சுவாமி, உங்களுக்கு நல்ல பொண்ணூ , நல்ல குடும்பம் வேணுமா, ஸ்ப்ளிட் எ.சி. வேணுமா அப்படின்னு முடிவு பன்னினப்பறம் ஜாதகம் பாருங்கோ. என்று சொல்லவேண்டும் என நினைத்தேன்.

    சொல்லவில்லை.

    பையனோட அம்மா அப்பா கல்யாணம் என் நின்னு போயிடுத்து அப்படின்னு ஆயிரம் காரணம் சொல்வா ...அத எல்லாம் அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.

    எங்கிட்ட, கீதா மாமி, யாருன்னு சொல்லுங்கோ.. நான் போய் விசாரிச்சு என்ன சமாசாரம் அப்படின்னு விலா வாரியா விசாரிச்சு சொல்றேன். துணைக்கு அப்பாதுரை சாரையும் கூட்டிண்டு பொறேன்.

    ( அடி வாங்கினா தாங்கிக்கணும் இல்லையா )

    சுப்பு தாத்தா.

    .

    ReplyDelete
  70. //ஐந்து வருஷத்துக்குக் குழந்தை பெத்துக்க மாட்டாங்களாம். ஐந்து வருஷத்துக்குப் பின்னர் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை பையரின் பெற்றோரோ அல்லது பையரோ பொறுப்பு எடுத்துக்கணுமாம்.//
    பொறுப்பில்லாத பெண் ந்னு சொல்லலாமா கூடாதா?
    குழந்தையை தன்னால் பாத்துக்க முடியாதுன்னு ஏன் பெத்துக்கணும்? அப்படி செய்யறது அந்த குழந்தைக்கு எப்பேர்பட்ட அநீதி?

    // தேதி குறித்துப் பத்திரிகைகள் எல்லாம் அடித்து, பத்திரிகைகள் விநியோகமும் ஆனதும் //
    மோஸ்ட் இன்சென்சிடிவ்! இவங்களுக்கு எப்பேர்பட்ட அவமானம்ன்னு புரியுதா இல்லையா? அது சரி, இங்கேயே சிலர் அதை அவமானமா நினைக்கலே! அப்புறம் யாரை சொல்லறது?
    மான நஷ்ட வழக்கு போட்டா தப்பே இல்லே!
    // பத்து வருஷத்துக்குப் பின்னர் குடும்பம், குழந்தைனு எல்லாம் அவங்களாலே பொறுப்பு ஏத்துக்க முடியாதாம். ஆகவே தனித்தனி வாழ்க்கை தான் நல்லதுனு நினைக்கிறாங்களாம்.//
    கரீர் தான் முக்கியம்ன்னு ஒரு பெண் நினைக்கிறதை நான் தப்பா நினைக்கலை! எனக்கு கரீர் முக்கியம் அதனால் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிடலாமே? நான் என் தொப்பியை தூக்கி வணக்கம் சொல்லி இருப்பேன்! எங்கள் துறையில்தான் எல்லாத்துறைகளையும் விட இப்படி வாழ்கையை செலுத்துபவர்களிருக்கிறார்கள்!
    நிச்சயம் ஆகும் முன்னரே சொல்லி இருக்கலாமேனு கேட்டதுக்கு, உங்க பிள்ளை கல்யாணம் ஆனால் தன்னால் வழிக்கு வந்துடுவார்னு நினைச்சோம்.
    இதை விட - முட்டாள்தனம் ந்னு சொல்லலாமா, இல்லை அயோக்கியத்தனம்ன்னு சொல்லலாமா? – இருக்க முடியாது. பலரோட வாழ்கையே இந்த “அப்படின்னு நினைச்சோம்” லதான் இருக்கு. இத்தனைக்கும் பல தரம் பல மாதங்கள் பேசிக்கொண்டு இருந்திருக்காங்க! சொல்லித்தொலைக்கறதுக்கு என்ன?
    ரொம்ப கோவமா இருக்கேன். வரேன்!

    ReplyDelete
  71. எனக்கென்னவோ கருத்துக்கள் பதிவைச் சார்ந்து இல்லைஎன்றே தோன்றுகிறது. திருமண விஷயங்களில் இருவருடைய கருத்துக்கும் முக்கியத்துவம் வேண்டுமானால் அந்தக் கருத்து சுதந்திரம் உபயோகிக்கும்போது எவருக்கும் வருத்தமில்லாமல் செய்வதே அழகு. திருமணம் நிச்சயம் வரைப் போய் இருக்க வேண்டாம். இதில் எப்போது நிச்சயம் என்று கருதுவது எல்லாம் besides the content in the posting. and if I take the liberty, they are irrelevant...!

    ReplyDelete
  72. கலந்து முடிந்த கணத்தில் 'நல்ல கர்ப்பமா கொடுப்பா கடவுளே' என்று அந்த நிலையிலும் கும்பிடும் அசிங்கம் வேறே //
    என்ன அசிங்கம் அதில்? இறைவன் எங்கும் நிறைந்து இருப்பவன். எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கிறான். அவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. நல்ல கர்பம் கொடு என்று வேண்டுவதில் என்ன தப்பு? கலவி அசிங்கமான விஷயமா?

    ReplyDelete
  73. சமுதாயத்தில் இரு சாரார் இடையே ஒரு ஏற்றத்தாழ்வு இருக்கிறது. இது அநியாயம் என்று சிலர் குரல் கொடுக்கின்றனர். காலப்போக்கில் மெதுவாக அது மாறுகிறது. பின் ஏற்றம் இறக்கம் ஆகிறது இறக்கம் ஏற்றம் ஆகிறது. இது சரியா? அறிவு ஜீவிகள் சமநிலை வேண்டும் என்று நினைக்காமல் மாறும் ஏற்றத்தாழ்வை ஆதரிப்பது ஏன்?
    ஓநாய் ஆட்டுக்குட்டி நினைவுக்கு வருகிறது!

    ReplyDelete
  74. வணக்கம்
    அருமையாக எழுதியுள்ளிர்கள் யதார்த்தம் புரிந்து மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  75. //எப்போது நிச்சயம் என்று கருதுவது எல்லாம் besides the content in the posting. and if I take the liberty, they are irrelevant...! //

    நிச்சயதார்த்தம் என்று அதாவது பாக்கு வெற்றிலை மாற்றி, ஒரு பத்திரிக்கை அடித்துவிட்டால் திருமணம் முடிந்து போக வில்லை. அது சப்தபதி என்னும் நிகழ்வு முடிந்தபின்பு தான் திருமணம் என்பது ஒரு பைனாலிடி அடைகிறது. சட்டப்படி, ஒரு திருமணம் ரிஜிஸ்தர் செய்யப்பட்ட பின்பு தான் செல்லும். வாழ்க்கை சமாசாரம், நிச்சயதார்த்தம் என்ன sale agreement ஆ ? அது என்ன பிளாட் வாங்கற விக்கற சமாச்சாரமா ?

    இது சாச்திரத்தினால் மட்டும் அல்ல, சட்டத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அதனாலே இதெல்லாம் இரேலவாண்ட் என்று சொல்ல முடியாது. அந்த பெண் தாலி முன்பாகவே சொல்லி இருக்கிரார்கள்.

    ஹெல்ப் லைனில் கேட்டு பாருங்கள். இந்த பதிவை மொத்தமாக அவர்கள் பார்வைக்கு நான் அனுப்புகிறேன். அவர்கள், சட்ட பூர்வமாக இந்த பெண் செய்தது தவறா, சரியா என்று சொல்லட்டும். என்ன உடனே அவர்கள் விலாசம் என்ன என்றெல்லாம் விசாரிப்பார்கள். அவ்வளவு தான்.

    அந்த பெண் என்ன சொன்னாள் ? யாரிடம் சொன்னாள்? என்ன காரணத்தைச் சொன்னாள் ? There appears to be a lot of communication gap. பிள்ளை வீட்டுக்காரர் சொல்வதெல்லாம் எதோ சத்யம் என்று பெண் மேலே குற்றம் சொல்வது சரியாக இல்லை. இது தான் என் வாதம். ஒரு அளவிற்கு மற்றது எல்லாம் obiter dicta.

    இதற்கு மேலே சொல்லப்போனால் நாம் பெண்ணையோ பிள்ளையோ செர்ந்தவர்கள், உறவுகள், இல்லை. நாமே இந்த கேசுக்கு இரலவண்ட் தான் ஒரு நோக்கிலே. உனக்கு என்ன லோகஸ் ஸ்டாண்டி இருக்கு அப்படின்னு இங்க்லிஷுலே கேட்டுடுவாங்க ..

    இது ஒரு கேஸ் ஸ்டடி . அம்புட்டுதான்.

    லாஸ்ட் பட் நாட் த லீஸ்ட்

    பெண் பாவம் பொல்லாது. பத்து ஜென்மத்துக்கு பல் வலி மாதிரி தொடரும்.

    தட்ஸ் ஆல் யுவர் ஆனர்

    விசாரணையை ஒத்தி வைக்குமாறு தாழ்மையுடன் நீதிபதி கீதா அம்மாவை கேட்டுக்கொள்கிறேன். எனது கட்சி சீனியர் வக்கீல் அப்பாதுரை அவர்கள் வந்து தன கட்சியை எடுத்துரைப்பார் என நம்புகிறேன். . அவர் செவ்வாய் கிருஹத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறார்.அவர் வரும் வரை இந்த கேசை அட்ஜர்ன் செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  76. //ஹெல்ப் லைனில் கேட்டு பாருங்கள். இந்த பதிவை மொத்தமாக அவர்கள் பார்வைக்கு நான் அனுப்புகிறேன். அவர்கள், சட்ட பூர்வமாக இந்த பெண் செய்தது தவறா, சரியா என்று சொல்லட்டும். என்ன உடனே அவர்கள் விலாசம் என்ன என்றெல்லாம் விசாரிப்பார்கள். அவ்வளவு தான். //

    எங்கும் அனுப்ப வேண்டியதில்லை. நிச்சயமாய் அந்தப் பெண்ணுக்குத் தான் சாதகமாகப் பேசுவார்கள் அனைவரும். இப்படியான சலுகைகளைப் பெண்கள் பலரும் துஷ் பிரயோகம் செய்வது யாருக்கும் கண்களில் படுவதில்லை என்பது தான் சோகமும் கூட! :(

    //அந்த பெண் என்ன சொன்னாள் ? யாரிடம் சொன்னாள்? என்ன காரணத்தைச் சொன்னாள் ? There appears to be a lot of communication gap.//

    நிச்சயமாய் இல்லைனு சொல்லலாம். அதற்கு மேல் சொல்ல முடியலை.


    // பிள்ளை வீட்டுக்காரர் சொல்வதெல்லாம் எதோ சத்யம் என்று பெண் மேலே குற்றம் சொல்வது சரியாக இல்லை. இது தான் என் வாதம். ஒரு அளவிற்கு மற்றது எல்லாம் obiter dicta. //

    காலம் பதில் சொல்லும். மற்றபடி இப்போதைக்குப் பேசாமல் இருக்கிறேன். உண்மையிலேயே கோபம் ரொம்ப வருகிறது. அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர் யாருமே இல்லையேனு கவலையாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  77. உங்கள் நெருங்கிய சொந்தத்தில் கல்யாணத்துக்குப் பிள்ளை இருக்கிறவங்க கிட்டே கேட்டுப் பாருங்க. புரியும். :((((

    ReplyDelete
  78. //உங்கள் நெருங்கிய சொந்தத்தில் கல்யாணத்துக்குப் பிள்ளை இருக்கிறவங்க கிட்டே கேட்டுப் பாருங்க. புரியும். :((((

    I do not know whether this is addressed to me.
    Anyway I thought i should be replying to this.
    சொந்தத்திலே தான் இருக்கணும் அப்படின்னு அவசியம் இல்லை. என்கிட்டே ஜாதகம் கொண்டுவந்து பரிகாரம் ஏதாவது இருக்கா, என்ன தசை நடக்கிறது, என்று எல்லாம் பார்க்கசொல்ற நபர்கள் வாயிலேந்து அவரவர்கள் வீட்டுலே நடக்கிற மாமியார், ஹஸ்பன்ட் ரிலேடட் க்ரீவன்ஸஸ் எல்லாம் கேட்டுண்டு தான் இருக்கேன்.

    பலருக்கு முக்கியமாக பெண்களுக்கு, பொறுத்துக்கொண்டு போங்கோ. என்று கௌன்செலிங்க் செஞ்சுண்டு தான் இருக்கேன். இன்னிக்கு தேதியிலே பையர்களை பெற்ற அம்மாக்கள் ஆதிபத்தியம் தான் கண்டின்யூ ஆகிட்டு இருக்கு.

    சந்திர கிருஹனம், சூரிய கிருஹனம் எல்லாம் விட்டுடும். பாணிக் கிருஹனம் மட்டும் புடிச்சுண்டே இருக்கும். அதனாலே கையை பிடிக்கணும் சாமி, என்று பாடுவதற்கு முன்னாடி கவனமா இருங்க பொண்ணுங்களா ..


    I have enough data with detailed particulars. Who is " more sinned than sinned against" என்பதெல்லாம் அவர்கவர்கள் பர்செப்ஷன்.

    இரண்டாவது விஷயம்.

    வாசுதேவன் சார் வந்து ஏதோ மான நஷ்ட வழக்கு பற்றி சொல்லி இருக்கிறார்.

    இந்த கேசுலே அதற்கான ஸ்கோப் அதிகம் இல்லை. பைனான்ஸியல் ஆக தான் நஷ்டப்பட்டுடேன் என்று வேணா பையனைப் பெற்றவர் ஒரு வழக்கு தொடரலாம்.அனால், அதற்கு பெண் வீட்டுக்காரர்கள் , திருமணம் நின்று போனதற்கு வேறு ஏதேனும் காரணம் சொன்னார்கள் என்றால் அந்த கேசே வேறு ரூட்டிலே போயிடும்.

    அதனாலே நிதானமாக செயல் படச் சொல்லவும். எல்லாமே அவன் செய்யறான். அவன் ஆட்டிபடைக்கிறான். நம்ம ஆடுறோம் என்ற மனப்பாங்கில் இருப்பது விவேகம்.

    உடல் அசாத்தியமா வலிச்சா ஒரு திராமடால் , லிக்னோகைன் , டைக்ளொபென், மாதிரி கொடுத்து மரத்து போக வைக்கலாம். இல்ல, மார்பைன் கொடுத்து வலியை மறக்க தூங்க வைக்கலாம்.

    மனசு வலிச்சா என்ன பண்றது ? அதுக்கு பைன் கில்லர் என்ன இருக்கு ?
    அந்த அம்ருத கலச ஹஸ்தாய, வாசுதேவாய
    தன்வந்திரி ஹோமம் மனசு ரணத்தை தீர்க்குமா ??

    சுப்பு தாத்தா.




    ReplyDelete
  79. //இன்னிக்கு தேதியிலே பையர்களை பெற்ற அம்மாக்கள் ஆதிபத்தியம் தான் கண்டின்யூ ஆகிட்டு இருக்கு. //

    எங்க வீட்டிலேயே பார்க்கிறேன். பெண் ஜாதகம் பொருந்தி இருக்குனு பெண் வீட்டுக்குத் தொலைபேசித் தெரிவிச்சால், எங்களுக்கு நேரம் இருக்கிறச்சே பார்த்துச் சொல்லறோம். அவசரப் பட்டால் முடியுமானு சொல்லும் பெண்ணின் பெற்றோர்களே அதிகம். இத்தனைக்கும் பெண்ணுக்கு 25 வயதுக்கு மேல் ஆகி இருக்கும். ஆனாலும் அவசரம் இல்லை என்பதே அவர்கள் கட்சி.

    பிள்ளையைப் பெற்றவர்களின் ஆதிக்கம் இருந்தால் பேப்பரிலோ, பத்திரிகைகளிலோ வரும் மாட்ரிமோனியல் விளம்பரங்களைப் பாருங்கள். 50 வயதிலிருந்து பிள்ளைகள் கல்யாணத்துக்கு இருப்பதையும், பெண்கள் குறித்த விபரங்கள் குறைவாகவே வருவதையும் பார்க்கலாம். பெண்கள் கிடைச்சால் போதும்னு பிள்ளையைப் பெத்தவங்க தவிக்கிறாங்க.

    ReplyDelete
  80. ரொம்ப நாள் கழித்து உங்கள் ப்ளாக் உலகத்தில் அடியெடுத்து வைத்தேன்...இந்த கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

    கீதாம்மா, இதான் கலி என்பது....பெண் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது தவறில்லை....ஆனால் அதற்கு அந்த பெண்ணும் அவளது தாயாரும் சொன்ன காரணங்கள் கிராதகத்தனம்..... .

    பெண்ணுக்கு கேடு பிறந்தகம் என்று அந்தக்காலத்தில் சொல்லியது இன்றும் சரியாகவே இருக்கிறது. பல இடங்களில் பெண்களை தவறாக வழிநடத்துவது அப்பெண்ணின் அம்மாவே....இக்கட்டுரையும் அதை ஊர்ஜிதம் செய்வதாகவே இருக்கிறது.


    இங்கே அந்த பெண்ண செய்ததை இதுவே அந்த பையன் செய்திருந்தால்?, பெண்வீட்டுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் தேவலை.

    சூரி சார் போன்ற பெரியவர்கள் இந்த நிகழ்வை சப்பைக்கட்டுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  81. ரொம்ப நாள் கழித்து உங்கள் ப்ளாக் உலகத்தில் அடியெடுத்து வைத்தேன்...இந்த கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.

    கீதாம்மா, இதான் கலி என்பது....பெண் கல்யாணம் வேண்டாம் என்று சொல்வது தவறில்லை....ஆனால் அதற்கு அந்த பெண்ணும் அவளது தாயாரும் சொன்ன காரணங்கள் கிராதகத்தனம்..... .

    பெண்ணுக்கு கேடு பிறந்தகம் என்று அந்தக்காலத்தில் சொல்லியது இன்றும் சரியாகவே இருக்கிறது. பல இடங்களில் பெண்களை தவறாக வழிநடத்துவது அப்பெண்ணின் அம்மாவே....இக்கட்டுரையும் அதை ஊர்ஜிதம் செய்வதாகவே இருக்கிறது.


    இங்கே அந்த பெண்ண செய்ததை இதுவே அந்த பையன் செய்திருந்தால்?, பெண்வீட்டுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் தேவலை.

    சூரி சார் போன்ற பெரியவர்கள் இந்த நிகழ்வை சப்பைக்கட்டுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

    ReplyDelete
  82. அட, என்ன இது?? பெரிய ஆளுங்கல்லாம் என்னோட பதிவுக்கு வர ஆரம்பிச்சுட்டாங்களே! மெளலியா இது?? ஆச்சரியமா இருக்கே!

    இது கலி என்பதெல்லாம் சரி. ஆனால் இந்தக் கலியிலும் சில பெண்கள் மனம் விரும்பி இல்வாழ்க்கை நடத்தவும் செய்கின்றனர். கல்யாணம் வேண்டாம்னு அந்தப் பெண் சொல்லி இருந்தால் நிம்மதியா இருந்திருக்கும். பத்து வருஷங்களுக்கு ஒரு ஒப்பந்தம் மாதிரிப் போட்டுக்கலாம்னு சொல்றா. அதுவும் சட்டபூர்வமா. பின்னால் பிரியலாம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கலை. நான் பாட்டுக்கு இருந்துக்கறேன். நீ உன் வேலையைப் பார்த்துக்கோனு நாசூக்காய்த் தான் சொல்கிறாள்.

    இப்போ நேற்று/முந்தாநாள் சுப்ரீம் கோர்ட்டும் கல்யாணம் இல்லாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழலாம்னு தீர்ப்புக் கொடுத்திருக்கு. இது எங்கே, எதிலே, எப்படிப்போய் முடியும்னு தெரியலை! பெண்ணுக்கு சுதந்திரம் என்பதன் அர்த்தமே இஷ்டப்படி கன்னாபின்னாவென்று கட்டுக்கோப்பு இல்லாமல் வாழலாம் என்பதற்கான லைசென்ஸ் என்று ஆக்கிவிடுவார்கள் போல் இருக்கிறது.

    ஒரு ஆணோ, பெண்ணோ நல்ல குடிமகனாக இருக்க வேண்டுமெனில் வளர்ப்பும் முக்கியக் காரணம். அந்த வளர்ப்பைப் பெற்றோர்தான் தர வேண்டும். சட்டபூர்வமான திருமணம் இல்லாமல் இது சாத்தியமா? தெரியலை. காலம் தான் பதில் சொல்லணும். இன்றைக்கு சமுதாயம் இவ்வளவு கெட்டுக் கிடப்பதன் காரணமே நெறிமுறைகள் இல்லாமல் தான். நெறிமுறைகள் குறித்த கல்வி இல்லாமை மட்டுமில்லாமல், தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாக்கள்னு எல்லாமும் ஒரு காரணம். உடல் உறவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இதற்கும் அப்பால் கல்யாணத்துக்கு ஒரு தனிப் பொருள் இருப்பதை யாரும் உணர்ந்து பார்க்கவில்லை.

    அந்தப் பையர் சொல்லி இருந்தால் கோர்ட்டில் கேஸ் நடந்திருக்கும். :(

    ReplyDelete
  83. எனக்குத் தெரிஞ்சு இது மூணாவது நிகழ்வு. :(

    ReplyDelete
  84. வியாபார ஒப்பந்தமாக மாற்றி வரும் காலமாகிவிட்டது.

    ReplyDelete